MADHUBALA BIOGRAPHY

 


MADHUBALA BIOGRAPHY

சில நடிக நடிகையர் அவங்க நடிச்ச சினிமாக்கதை போலவே அவங்க வாழ்க்கை அமையும்னு முன்பே சொல்லி இருக்கேன்.


#மதுபாலா

அப்படி ஒரு பொண்ணு தான் நடிகை மதுபாலா. ரோஜா படத்து சின்ன சின்ன ஆசை மதுபாலா. டெர்ரரிஸ்ட் குரூப்கிட்ட மாட்டிக்கிட்ட அர்விந்த்சாமியை காப்பாத்தற ரோஜாவா நடிச்சாங்க மது.

ஸ்ரீரங்கத்திலிருந்து பாலிவுட்டுக்கு கிளம்பிப்போன ஹேமமாலினிக்கு ஒரு ஒன்றுவிட்ட சகோதரர் இருந்தார். அவர் பெயர் ரகுநாத். மனைவி ரேணுகா. இவங்க மகள் பிறந்ததும் பத்மமாலினினு பெயர் வச்சாங்க. அவங்க அப்பா மட்டும் மதுமாலினின்னு கூப்பிடுவார். மதுமாலினி சிறிய வயதிஅம்மா ரேணுகா இறந்துடறாங்க. அப்பா தனியே மதுவையும், சகோதரரையும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார்.

மது ஒரு வயது ஆனதும் பாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் வீரு தேவ்கன் தன் மகனை அறிமுகப்படுத்தும் பூல் அவுர் கான்டே படத்தில் Madhooவா அறிமுகமாகிறார். அதிரடி ஆக்ஷன், நதீம்-ஷ்ராவன் இசையால் படம் செம ஹிட். அதே நேரம் தமிழில் மதுபாலான்னு அழகன் படத்திலும், மலையாளத்தில் ஒற்றயாள் பட்டாளம் படத்திலும் நடிச்சாங்க. அறிமுகப்படமே தமிழில் பாலச்சந்தர், சங்கரின் ஜென்டில்மேன், ஐ.வி.சசியின் நீலகிரி, மணிரத்னத்தின் ரோஜான்னு நல்ல நல்ல வாய்ப்புகள். ஆனா ஹிந்தியில் தான் மது நிறைய படங்களில் நடிச்சாங்க. இருவர் படத்தில் மோகன்லாலோடு 'நறுமுகையே நறுமுகையே'வெல்லாம் மறக்க முடியுமா?

அழகன் படத்தில் அந்த டிக்கெட் கிழிப்பவரை அப்பான்னும், பேராசிரியை மேடத்தை அம்மான்னும் மம்முட்டியிடம் சொல்லி ஏமாத்துற சீன்ஸ் செம காமெடி நடிப்பு.

மது ஸ்பெஷல் என்னன்னா கோபமானா விடைச்சிட்டு முன்னால வர்ற அந்த மூக்கு. 

1999ல திடீர்னு ஆனந்த் ஷான்னு ஒரு கம்பெனி முதலாளியை திருமணம் செய்து மதுபாலா மதுஷா ஆகிட்டாங்க. இவங்களுக்கு இரண்டு மகள்கள். ஆனந்த் ஷா யாருன்னா ஜூஹி சாவ்லாவோட கணவர் ஜெய் மேத்தாவோட அதாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓனர் ஜெய்மேத்தாவோட கஸின் பிரதர். அப்படி மது ஜூஹிக்கும் உறவினர். ஆனந்த் குஜராத்தில் MTZ Polygilmsனு ஒரு கம்பெனி வச்சிருந்தாரு. ஒரு ஸ்டேஜ்ல வெளில இருந்து வரவேண்டிய பணம் லாக் ஆனதால கம்பெனி திடீர்னு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுச்சு. ஆனந்த் மேல யும், அவர் அப்பா மேலயும் கேஸ் பதிவானது. இன்வெஸ்டார், பாங்க்னு, வேலை செய்றவங்க பேமெண்ட்னு நூறு கோடி கடன்.



மதுபாலா ஆபத்பாந்தவியா உடனே செயலில் இறங்கியது தான் ஹைலைட்டே. உடனே மும்பையிலிருக்கும் மிக விலைமதிப்புள்ள தன் பூர்வீக வீட்டை விற்று கடனை செட்டில்செய்தார். மேலும் உடனே திரும்பவும் நடிக்க வந்து 'ஆரம்ப்' அப்படிங்கிற மெகா தொடருக்கும் கையெழுத்து போட்டார். தொடர்ந்து ரீஎன்ட்ரியில் தமிழிலும் நடித்தார்.

பொண்ணுங்களுக்கு கணவருக்கு பிரச்சினைன்னா தாங்காது. அதுவும் மது தமிழ்ப்பொண்ணாச்சே. ரோஜா படத்தில் தனியே தன் கணவனை மீட்டது போல இங்கும் தன் கணவனை மீட்டார் மதுஷா.

தமிழ் பொண்ணு மதுமாலினி என்கிற மதுபாலா என்கிற மதுஷா....

#செல்வன்


Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER