BASHYAM IYENGAR HOISTED
INDIAN FLAG 1932 JANUARY 26
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து
விட்டால்...
நமது சுதந்திரத்திற்கு எதிராக செயல் பட்டவர்க்கு தியாகி பட்டம் சூட்டப்பட்டு இன்று தியாகிகள் பட்டியலில் உள்ளனர். நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு ஒப்பற்றவரின் சாகஸ வரலாற்றினை தெரிந்துகொள்வோம் .
1932ஆம் ஆண்டு ஜனவரி 26 நள்ளிரவு வேளையில் இன்று சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் புனித ஜார்ஜ்க் கோட்டையில் யூனியன் ஜாக் கொடி பறந்து கொண்டிருந்தது.
சிப்பாயைப் போல் காக்கி உடையணிந்த ஒரு உருவம் ராணுவப் பாதுகாப்பு மிகுந்த புனித ஜார்ஜ்க் கோட்டையில் தந்திரமாக உள்ளே நுழைந்தது. இடுப்பில் தானே தயாரித்து வைத்திருந்த மூவர்ணக் கொடி, அதில் "இன்று முதல் பாரதம் சுதந்திரம் அடைந்து விட்டது" என்ற கொட்டை எழுத்துக்கள்.
சுமார் இருநூறு அடி உயரம் கொண்ட அந்த கொடிக்கம்பின் உச்சியினை அடைந்து யூனியன் ஜாக் கொடியினை வீசி எறிந்து தான் தயாரித்த மூவர்ணக் கொடியினை கட்டிப் பறக்க விட்டு, மெல்ல மெல்ல இறங்கி மறைந்து விட்டது அவ்வுருவம்.
மறுநாள் காலை சென்னை நகரமே அல்லோலகல் பட்டது. சூரிய ஒளியில் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்க, அதனைக் கண்டு ஊர்க்கார்கள் உணர்ச்சி வசத்தில் சிலிர்க்க, அனைவரும் வந்தேமாதரம்! பாரத் மாதா கீ ஜெய்! என்று முழங்க,
இதனைக் கண்டு பிரிட்டீஷார் கோபத்தில் துடிக்க, அப்பப்பா! இறுதி வரை அதை செய்தவரை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்தான் கே. பாஷ்யம் ஐயங்கார்.
இன்றைய திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சேரன்குளத்தை சேர்ந்த ஆர்யா என்கிற பாஷ்யம் அய்யங்கார் தனது, 25 ஆவது வயதில் இதை செய்தார்.
நிஜமான, மாவீரச் செயலைப் புரிந்த ஒரு மாவீரன் நம்முடன், நம் காலத்தில் வாழ்ந்து மறைந்தார் என்பது நமக்குப் பெருமை.
ஆனால் இவரையும் இவரைப் போன்ற பல உண்மையான
தியாகிகளின் தியாகங்களை மறைத்து விட்டு, இன்று யார் யாரை எல்லாமோ விடுதலை போராட்ட வீரர் என்று ஊர்தியில் ஊர்வலம் வர வைக்கின்றனர். நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து
விட்டால்.
இன்று நாம் பார்க்கும் பாரதமாதா உருவத்திற்கு முதன்முதலில் வடிவம் கொடுத்தவர் பாஷ்யம் அய்யங்கார்,இவர் நம் காலத்தில் வாழ்ந்து மறைந்தார் என்பது நமக்குப் பெருமை. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு உண்மையான தமிழர்..
இந்த மாமனிதரை முகநூல் மூலமாக இன்று நினைவு கூர்வதில் நான் பெருமை அடைகிறேன்..
No comments:
Post a Comment