Thursday 21 May 2020

WIFE BURNT HUSBAND ON ACCOUNT OF MARTIAL REFUSE PAST 3 YEARS MAY 20,2015





WIFE BURNT HUSBAND ON ACCOUNT OF MARTIAL REFUSE PAST 3 YEARS
MAY 20,2015

மதுரை அருகே குடும்பம் நடத்த வர மறுத்த கணவரை, அவரது குடும்பத்தாருடன் எரித்துக் கொலை செய்த மனைவி கைது செய்யப் பட்டுள்ளார்.


மதுரை, சேடபட்டி அருகே உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பாண்டீஸ்வரி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் ஆனது. திருமணத்திற்குப் பிறகு பணி நிமித்தம் சென்னைக்கு சென்று விட்டார் கண்ணன். எனவே, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி கண்ணனை அழைத்து வந்தார் முருகேஸ்வரி. ஆனால், அதற்கு கண்ணன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று தனது பெற்றோருடன் கண்ணன் உறங்கி கொண்டிருந்தார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த முருகேஸ்வரி வீட்டின் கதவுகளை வெளிப்பக்கமாக பூட்டினார். பின்னர் உள்ளே படுத்திருந்தவர்கள் மீது பெட்ரோலை ஊற்றி வீட்டிற்கு தீ வைத்தார். இதில், வீட்டினுள் உறங்கி கொண்டிருந்த கண்ணன், அவரது தந்தை வேலு, தாய் பேச்சியம்மாள், சகோதரி மகள் சுகந்தி(35), சங்கீதா (17), வினித்(13), சங்கீத்(12), ஆகியோர் தீ விபத்தில் சிக்கினர்.

வினித் தவிர மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்த வினித் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரும் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மனைவி பாண்டீஸ்வரி, அவரது தாயார் மற்றும் தம்பி ஆகியோரைக் கைது செய்ததுள்ளனர்.


தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. போலீசாரிடம் பாண்டீஸ்வரி அளித்த வாக்குமூலத்தில், ‘தன்னுடன் சேர்ந்து வாழ சம்மதிக்காததால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை எரித்துக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் பேரையூர் போலீஸ் உயரதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் எரித்துக் கொலை செய்யப் பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





.

No comments:

Post a Comment