Wednesday 10 August 2016

பெர்டினென்ட் மகலன் உலகை சுற்றி வர புறப்பட்ட நாள் ஆகஸ்ட் 10,1519



பெர்டினென்ட் மகலன் உலகை சுற்றி வர 
புறப்பட்ட நாள் ஆகஸ்ட் 10,1519 




பெர்டினென்ட் மகலன் அல்லது பெர்டினண்டு மகாலன் (Fernando de Magallanes) (1480 - ஏப்ரல் 27, 1521) போர்த்துக்கேய மாலுமி. உலகைச் சுற்றிவந்த முதல் மனிதராக அறியப்படுகிறார். 

1519 இல் உலகைக் கப்பல் மூலம் சுற்றிவந்து நிறைவு செய்தார். பசுபிக் கடலுக்கு அப்பெயரை இவர் இட்டார்.
பெர்டினென்ட் மகலன்
Ferdinand Magellan
பிறப்புபெர்னாவோ டெ மகெலாஸ்
1480
சப்ரோசா, போர்த்துகல்
இறப்புஏப்ரல் 27, 1521 (அகவை 40–41)
மக்தான், பிலிப்பீன்சு
தேசியம்போத்துக்கீசர்
அறியப்படுவதுஉலகைச் சுற்றிவந்த முதல் கப்பலின் கப்டன்
கையொப்பம்

குடும்பச்சூழல்]

போர்ச்சுக்கல்லின் வடக்குப் பகுதியிலுள்ள பொன்ரே டே பாரா எனும் பகுதியில் மகலன் பிறந்தார். இவருக்கு பன்னிரண்டு வயது இருக்கும்போதே 1492 இல் அவனது அப்பா இரண்டாம் ஜோன் மன்னனின் அரசிக்கு எடுபிடி வேலை செய்ய அரண்மனைக்கு அனுப்பினார். இருப்பினும் அவனது படிப்பு தடைப்படவில்லை. அவனது படிப்புச் செலவினை இரண்டாம் ஜோன் மன்னன் ஏற்றுக் கொண்டார். 

மகலனின் அண்ணாவின் பெயர் டியோகோ. அவனும் இரண்டாம் ஜோன் மன்னனின் ராணியான லியொனாராவிடம் பணி செய்து கொண்டிருந்தான். எதையும் ஆர்வத்துடன் செய்யும் மகலனை ஜோன்னுக்குப் பிடித்திருந்தது. அதனால் அவர் மகலனுக்கு இசை, நடனம், வேட்டையாடுதல் ,குதிரையேற்றம், குதிரைச்சண்டை, வாள்பயிற்சி, வானவியல், வரைபடம் தயாரித்தல் ஆகியவற்றையும் கற்றுக்கொடுத்தார். 

மகலன் படித்துக்கொண்டிருக்கும்போதே கொலம்பஸ் அதாவது 1492 அக்டோபர்  12 அன்று அமெரிக்காவில் கால்பதித்தார். இதனைக் கேட்ட மகலன் தானும் நாடுகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வங்காட்டினான். மகலனின் கடல் ஆர்வத்தைத் தூண்டும்
 முன்னோடி நபராக வாஸ்கோ ட காமா விளங்கினார்.

மகலனின் சாதனைகளின் ஆரம்பம்[தொகு]


மெகல்லன் சென்ற பாதை

1505 இல் வாஸ்கோடகாமா கீழைத்தேசம் நோக்கிய பயணத்தில் ஈடுபட்டார். இதில் இருபத்தொரு பயணக்கப்பல்கள் பயணித்தன. ஒரு கப்பலின் தளபதியாக மகலனும் திகழ்ந்தார். இதுவே மகலனின் முதல் கடல் பயணம் ஆகும். 

இதன்போது மொரோக்கோவின் பழங்குடியினரான மூர்ஸ் இன மக்களுடன் போர்புரிந்தபோது மகலனின் இடதுகளில் படுகாயம் ஏற்பட்டது. மகலனின் முதல் வரைபடம் போர்ச்சுக்கல்லில் இருந்து ஸ்பைஸ் தீவுகளுக்குச் செல்லும் வழி. மகலனை மன்னர் மானுவேல் அவமானப்படுத்தியாதல் மனமுடைந்து ஸ்பானியாவில் இருந்து வெளியேறி போல்டோர்க்குச் சென்றார். 

இவரை ஸ்பெயினுக்குச் செல்லும்படி வானவியல் நிபுணரான டை டி பிலேரியா, கப்பலோட்டி ஜான், அரசசவை அதிகாரியான பார்போசா கூறினர். இவர்கள் கூறியது சரியா என்று யோசித்துக் கொண்டிருந்தார் மகலன். பின் ஸ்பெயின் நாட்டு மன்னர் மகலனிடம் ஸ்பைஸ் தீவுக்கான வழி உள்ளது எனத் தெரிந்ததும் ஸ்பெயின்னுக்குக் கூப்பிட்டார். 

மகலன் மன்னர் மானுவேலைப் பழிவாங்கும் நோக்கில் 1512 ஆக்டோபர் 12 அன்று போர்ச்சுக்கல்லை விட்டு வெளியேறினார். மகலன் 1519 செப்டெம்பர் 21 அன்று 
ஹான்செப்சன், 
சாண்டியாகோ, 
சான் அந்தோனியா, 
டிரினியாட், 
விக்டோரியா எனும் ஐந்து கப்பல்கள் உட்பட 241 ஆண்களுடன் அடுத்த இரண்டு வருடங்களுக்குத் தேவையான உணவுகளும், ஆயுதங்களும், விற்கும் பண்டங்களும் ஏற்றிக் கொண்டு செவல்லே துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார்.

5 கப்பல்களும் அவற்றின் தளபதிகளும்

சான் அந்தோனியா-கார்டஜெனா மற்றும் டிகொகா
ஹான் செப்சன்-கொஸாடா
விக்டோரியா-மென்போசா
டிரினிடாட்-மெகல்லன்
சாண்டியோகோ- ---

பிற்காலச் சாதனைகள்[தொகு]

1519 டிசம்பர் 13 அன்று மகலனின் விசுவாசமான வேலைக்கரனான ஹென்றி ஒரு தீவை மகலனிடம் காட்டினான். அதற்கு ஜான் அதுதான் டியோ டி ஜெனரோ என்றார். இதன் அடிப்படையில் மகலனும் மகலனின் மற்றக் கப்பல்களும் கால் பதித்த முதல் இடம் டியோ டி ஜெனரோ. 


இத்தீவின் பழங்குடி மக்களான கொரானி மகலனையும் மற்றவர்களையும் சுற்றி நின்று கடவுளாக வழிபடத்தொடங்கினர். மகலனின் குழுவில் அத்தீவுக்கு முதலில் வந்தது ஜான் மட்டுமே. 1519 டிசம்பர் 25 அதாவது கிறிஸ்மஸ் அன்று இத்தீவை விட்டு வெளியேறினர்.

மகலனின் கப்பல்கள் சராசரியாகத் தினமும் 16 கிமீ வீதம் பயணித்தன. 1520 சனவரி 10 அன்று இரண்டாவதாக டியோ டி பிளாட்டா எனும் இடத்தில் நங்கூரம் இட்டனர். மூன்றவதாக 1520 மார்ச்சு இறுதியில் பாட்டகொனியா அதாவது இன்றைய தெற்கு ஆர்ஜென்டினா பகுதியிலுள்ள செயின்ட் ஜுலியன் துறைமுகத்தை அடைந்தனர்.

 ஒருமுறை மகலன் 6௦௦ KM நீளம் கொண்ட கால்வாயை 1520 நவம்பர் 1 அன்று கடந்து முடித்தார்.அது ஆல் செயின்ட்ஸ் டே (ALL SAINTS' DAY) என்றழைக்கப்படும் புனிதர்கள் தினம் அதனால் மகலன் அக்கால்வாய்க்கு ஆல் செயன்ட்ஸ் டே (ALL SAINTS' CHANNEL) எனப் பெயர் சூட்டினார். பின் அது மகலன் ஜலசந்தி ஆனது. 

1520 நவம்பர் 28 அன்று மகலனின் மூன்று கப்பல்களும் பசுபிக் பெருங்கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. 


மகலன் நான்காவதாக 1521 சனவரி 25 அன்று செயின்ட் பால் தீவுகளில் இறங்கினான். அதன் இன்றைய பெயர் புகாபுகா ஆகும். இது பசுபிகின் தென்முனையில் உள்ளது.மகலன் ஐந்தாவதாக செப்டம்பர் 1521 06 அன்று மரியனாத்தீவின் பழங்குடியினரான சமோரா போராடி அத்தீவில் கால் பதித்தனர்.

மகலன் ஆறாவதாக 1522 மார்ச்சு 16 அன்று கிட்டத்தட்ட 15௦ பேருடன் பிலிப்பைன்ஸின் ஹோமொன்ஹான் தீவை அடைந்தனர்.இதன்மூலம் பிலிப்பைன்ஸில் காலடி எடுத்து வைத்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமை மகலனுக்குக் கிடைத்தது. 


மகலன் 1522 ஏப்ரல் 02 அன்று பிலிப்பைன்ஸின் இன்னொரு தீவான செர்பூவுக்கும் சென்று அதனை ஸ்பெயினின் அதிகாரத்துக்குள் கொண்டுவர நினைத்து கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பினார்

துயரங்கள் 

அட்லான் டிக் சீற்றம் 

‘அவ்வளவுதான். இனி நம்மிடம் இருப்பது இரண்டே கப்பல்கள்தான். சான் அண்டோனியாவும் கான்செப்ஷனும் நிச்சயமாக சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அவற்றை நான் தொலைத்துவிட்டேன். இழந்துவிட்டேன்’ – மனத்தளவில் அந்த முடிவுக்கு வந்திருந்தார் மெகல்லன்.


இருக்கும் இரண்டு கப்பல்களையாவது காப்பாற்றியாக வேண்டிய சூழல். ஆனால் அதற்கும் சோதனை தொடங்கியது. அடுத்ததாக ஒரு சூறாவளி வீச ஆரம்பித்தது. டிரினாடாடையும் விக்டோரியாவையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதேதோ திசைகளில் எல்லாம் அவை கொண்டு செல்லப்பட்டன.

அந்தச் சூறாவளியும் ஓரளவுக்கு ஓய்ந்தது. டிரினிடாடில் இருந்தபடி கடலைப் பார்த்தார் மெகல்லன். கண்பார்வை தூரத்தில்தான் விக்டோரியா இருந்தது. மனத்துக்குள் மெல்லியதாக ஒரு நிம்மதி படர்ந்தது. ஆனால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியாதபடி விக்டோரியாவின் பாய்மரத் துணிகள் கிழிந்து தொங்கின. சூறாவளி கொடுத்துவிட்டுப் போன பரிசு.

சில மணி நேரங்கள்கூட மெகல்லனின் நிம்மதி நீடிக்கவில்லை. அடுத்த சூறாவளி தாக்க ஆரம்பித்தது. கப்பல்களைப் புரட்டிப் போடும் அளவுக்குப் பேரலைகல் அட்டகாசம் செய்ய ஆரம்பித்தன.

கடல், பேரலைகளால் அந்த இரண்டு கப்பல்களையும் பந்துகள் போல எடுத்து, தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பித்தது. எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் ஏதாவது ஒரு பாறையில் மோதி கப்பல் துண்டு துண்டாகிப் போகலாம் என்ற நிலை.

கப்பல்களில் இருந்த எல்லோரும் இறுக்கமாக எதையாவது பிடித்துக் கொண்டு இருந்தார்கள். இருந்தாலும் அலைகளில் ருத்ர தாண்டவம், சிலரை கடலுக்குள் விழ வைத்தது. கடலுக்குள் விழுந்தவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தவர்களும் தவறி விழுந்தார்கள். அவர்களை மீட்பதற்குள் பெரும்பாடாகப் போய்விட்டது.

ஒவ்வொரு நொடியையும் மரண பயமின்றிக் கழிக்க முடியவில்லை. இந்த நிலை இரண்டு நாள்கள் தொடர்ந்தது.

அதுவரை ஆடிய ஆட்டத்துக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்பதுபோல அமைதியாக இருந்தது கடல்.

‘இந்த நிமிடம் வரை உயிரோடு இருப்பதே ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கிறது. எப்படியோ விக்டோரியாவும் தப்பித்து விட்டது. ஆனால் சான் அண்டோனியாவும்  கான்செப்ஷனும் இதற்கு மேலும் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. அவை நிச்சயமாக ஏதாவது ஒரு பாறையிலோ, குன்றிலோ மோதி சிதைந்து போயிருக்கும். யாராவது உயிர் பிழைத்திருப்பார்களா? சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.’

உடலெல்லாம் வலி. மனத்தில் அதைவிட. கடல் அமைதியடைந்திருந்தாலும் மெகல்லனால் அந்த இரவில் தூங்க முடியவில்லை.

இருளை தின்றபடியே மெள்ள மெள்ள ஒளி ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்த அதிகாலை நேரம். யாரோ தன்னைக் கூப்பிடுவது போல உணர்ந்த மெகல்லன் படாரென எழுந்து உட்கார்ந்தார்.

‘கேப்டன்.. கேப்டன்..’


வெளியே ஹென்றியின் குரல் கேட்டது. அவசர அவசரமாக எழுந்து நொண்டியபடியே வெளியே சென்றார். முகம் முழுக்க உற்சாகம் வழிய நின்று கொண்டிருந்தான் ஹென்றி. அவன் வாயிலிருந்து வேறு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. அவன் கைகாட்டிய திசையில் மெகல்லனின் பார்வை சென்றது.

நம்பவே முடியாத ஆச்சரியம். தன் கண்களை மீண்டும் ஒருமுறை துடைத்துவிட்டு அதே திசையில் நோக்கினார். மெகல்லனின் முகத்தில் புன்னகை, சூரியன் போல உதயமானது. கைகள் கூப்பி ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.

தூரத்தில் சான் அண்டோனியாவும் கான்செப்ஷனும் வந்து கொண்டிருந்தன.




 , பசிபிக் மகா சமுத்திரம் அமைதியாய் இருந்தது .எனவே அதற்க்கு peace என பொருள் விளங்குமாறு பசிபிக் என்று பெயர் இட்டோம் .3 மாதமாய் எந்த தீவும் தென் படவில்லை .பார்த்ததெல்லாம் எவரும் குடிவராத தீவுகள் தான் -எனவே சாப்பாடு 
குடிநீர் எல்லாவற்றிற்கும் திண்டாட்டம் தான்  

நிறையா பேர் பசியால் இறந்தார்கள் .
நோயினாலும் ,ஊட்ட சத்து இல்லாததாலும் இறந்தனர் 

பிகாபட்டா தன் நினைவுக்குறிப்பில் இருந்து 

நாங்கள் கொண்டு வந்த பிஸ்கட் ,பவுடர் போல் ஆயிருந்தது -
துர்நாற்றம் வீசியது .

நாங்கள் மாட்டு சாண வறாட்டி,
தானிய தவிடுகள் ,மற்றும் 

எலிகளை பிடித்து உண்டோம்  

இறப்புக்கு காரணங்கள் 

மெக்கல்லன் எல்லா தீவு களிலும் இறங்கி ஸ்பெயின் அரசருக்கு ஆட்சிக்கு கட்டுப்படுவதாக உறுதி மொழி வாங்கினான் .அவர்கள் கிறிஸ்தவத்திற்கு மத மாற்றமும் செய்யப்பட்டனர் -


ஆனால் பிலிப்பைன்ஸின் மக்டன் பகுதியின் தலைவனான லாபுலாபுவிடம் இவ்வரசு வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது . இதை தொடர்ந்து மெக்கல்லனின் ஆட்கள் அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்தனர் .எனவே அப்பகுதி மக்கள் ஈட்டி ,அம்புகள் ,மூங்கில் வேல் கம்புகள் கொண்டு தாக்க வந்தனர்.இவ்வாறான கலவரத்தில் மெகல்லன் கொல்லப்பட்டார் 

.இவர் இறந்தபின் அவரது கூட்டத்தில் ஒருவரான கார்வால்ஹோ என்பவன் அவர்களது கப்பல்களில் ஒன்றான ஹான்செப்சனுக்குத் தீ வைத்தான் .



மகலனின் விசுவாசியான ஹென்றி புதிதாகத் தலைமைதாங்கிய சிலரைக் கொன்றான்.பின் எல்போன்சா என்பவர் தலைமை என்பவர் ஸ்பைஸ் தீவுக்குக் 108 பேருடன் கிளம்பினார்.
சிலி நாட்டின் பண்டாரா எரினாசு பகுதியில் 
உள்ள பெர்டினென்ட் மகலனின் சிலை.

கடைசிக்கப்பலான விக்டோரியா 6 பேருடன் 1522 மே 06 அன்று ஆபிரிக்காக் கண்டத்தின் தென்முனையிலுள்ள கேப் குட் ஹோப்பையும்,யூலை 09 இல் கேப் வேர்டேவையும்,செப்டெம்பர் 06 இல் ஸ்பெயினையும் அடைந்தது.மொத்தப் பயணத்தூரம் 69800 KM.ஸ்பெயினுக்குத் திரும்பியவர்கள் செபெச்டியன் உட்பட பதினெட்டுப்பேர்.மகலனின் கனவு அவரையும் பலிகொடுத்து நிறைவுக்கு வந்தது.



No comments:

Post a Comment