டெலஸ்கோப் உருவாகிய வரலாறு
1608 செப்டம்பர் 2
1608-ம் ஆண்டு ஒரு முறை ஹாலந்து நாட்டில் ஹான்ஸ் லிப்பன்ஷி (ஜேன் லிப்பர்ஷை.) என்பவர் ஒரு கண்ணாடிக் கடை வைத்து நடத்தி வந்தார். அப்பொழுது அங்கு தனது எடுபிடி வேலைகளுக்காக ஒரு சிறுவனை பணியில் அமர்த்தி வேலை வாங்கி வந்தார் .
ஒரு நாள் ஒரு அவசர வேலை காரணமாக அந்த ஹான்ஸ் லிப்பன்ஷி என்பவருக்கு வெளியில் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. அப்பொழுது அந்த சிறுவனிடம் Jacob Metius
கடையை, தான் வரும்வரை பார்த்து க்கொள்ளும்படி சொல்லி விட்டு சென்று விட்டார்.
ஹான்ஸ் லிப்பன்ஷி சென்ற பின்பு அங்கு பணி செய்த சிறுவன் வேலைகளை நிறுத்திவிட்டு குறும்புகள் செய்து இன்றையப் பொழுதை கழிக்க திட்டமிட்டான். சிறிது நேரத்திற்குள் எல்லாம் அந்த குறும்புகளும் சலிப்புத் தட்டிப் போகவே, கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த சில கண்ணாடி வில்லைகளை எடுத்து ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ஒரு உட்குவிந்த கண்ணாடி வில்லை ஒன்றை எடுத்து சற்று தூரத்தில் வைத்து தான் பணிபுரியும் கடையின் அருகில் இருக்கும் ஒரு மாதா கோவிலை உற்று நோக்க தொடங்கினான். அப்பொழுது அவன் கண்டக் காட்சி அவனை மிகவும் வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. சந்தோசத்தின் மகிழ்ச்சியில் வார்த்தைகள் எதுவும் பேசாமல் துள்ளிக் குதிக்கத் தொடங்கினான். காரணம் அவன் பார்த்த அந்த மாதக் கோவிலின் கோபுரம் அவனின் கண்ணின் பக்கத்தில் வந்து நிற்பதைப் போல் அந்தக் குவிந்தக் கண்ணாடி வில்லைகள் காட்டியது . அப்பொழுது யதார்த்தமாக ஹான்ஸ் லிப்பன்ஷி சென்ற பணி முடிந்து திரும்பி வந்துவிட்டார்.
galileo_telescope_320அப்பொழுது சிறுவன் தான் கண்ட அதிசயத்தை அவரிடம் விளக்கி சொல்லவே அவரும் அந்த குவிந்தக் கண்ணாடியை வைத்து தினமும் தூரத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் அருகில் பார்த்து ரசித்து வந்தார். இந்த விஷயம் நாளடைவில் இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோவின் காதிற்கு எட்டியது. உடனே கலிலியோ (Galileo)அந்தக் கடைக்கு சென்று அந்தக் கண்ணாடி வில்லையை வாங்கி அந்த தத்துவத்தை அறிந்துகொண்டார். பின்பு ஒரு உருண்டை வடிவிலான சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கி அந்தக் குவிந்த கண்ணாடி வில்லைகளை முன்னும் பின்னும் ஒவ்வொன்றாகப் பொருத்தி அவற்றை சற்று மேலும் கீழும் நகர்த்தி நகர்த்தி வித்தியாசமான மாற்றங்களைக் கண்டு வியந்தார். பின்பு அவற்றிற்கு ஒரு மாதிரி வடிவம் அமைத்து இறுதியாக டெலஸ்கோப் என்று பெயரிட்டார் அதுவே உலகில் தோன்றிய முதல் தொலை நோக்கியாகும்.
28-inch telescope and 40-foot telescope in Greenwich in 2015. |
அதன் பின் தான் உருவாக்கிய அந்த தொலைநோக்கி மூலம் கடலில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு கப்பலை பார்க்கத் தொடங்கினார். அந்தக் கப்பல் அவர் கண்களுக்கு மிகவும் அருகில் தெரியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒரு பெரிய டெலஸ் கோப் (telescope) ஒன்றை உருவாக்கி தற்செயலாக அந்த டெலஸ் கோப்பை சந்திரன் பக்கமாகத் திருப்பினார். அந்த நொடி முதல் வானவியல் ஆராய்ச்சியில் டெலஸ் கோப்பின் (telescope) பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போனது என்று சொல்லலாம். சந்திரனை தான் உருவாக்கிய டெலஸ் கோப்பின் மூலம் பார்த்த கலிலியோ அதிர்ந்து போனார் காரணம் அதுநாள் வரை சந்திரன் மிகவும் மென்மையான பிரகாசம் நிறைந்த கோள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது இந்த உலகம். அதற்கு மாறாக சந்திரன் கரடுமுரடான மலைகள் நிறைந்த கோள் என்று அன்றுதான் முதன் முதலாக இந்த உலகிற்கு தெரியவந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியில் சில குறைபாடுகள் இருந்தது. புறம் குவிந்த கண்ணாடிகளை தொலைநோக்கியில் பயன்படுத்தி பார்க்கும் பொழுது காட்சியில் தெரியும், உருவங்களின் பக்கத்தில் பல வண்ணங்கள் காணப்பட்டது அதனால் காட்சிகள் தெளிவாக தெரியாமல் இருந்தன.
telescope_320இந்தக் குறையை சரி செய்ய கலிலியோவிற்கு பின்பு இங்கிலாந்து விஞ்ஞானியான சர் ஐசக் நியுட்டன் முயற்சி செய்தார். அப்பொழுது இந்தக் புறம் குவிந்த கண்ணாடியை பயன்படுத்தினால் இந்த குறைபாடுகள் தொடரத் தான் செய்யும் என்பதை உணர்ந்த நியுட்டன் அதற்கு மாறாக ஒரு கண்ணாடியை கண்டுபிடிக்க முயற்சி செய்தார் இறுதியில் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற மாதிரி ரசம் பூசப்பட்டக் கண்ணாடியை பயன்படுத்தி வெற்றி கண்டார். அதன் பின்புதான் இந்த உலகிற்கு குறைகள் எதுவும் இல்லாத முதல் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. இத்தொலை நோக்கிகளுக்கு பிரதிபலிக்கும் தொலைநோக்கிகள் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதன் அடிப்படையில்தான் இன்றைய அனைத்து டெலஸ்கோப்புகளும் செயல்படுகிறது.
இது வரை உருவாக்கப்பட்டுள்ள டெலஸ்கோப்புகளில் அதிக சக்தி வாய்ந்தது பூமியில் இல்லை. அது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அது தான் ஹப்பிள் டெலஸ்கோப். பூமியில் உள்ள டெலஸ்கோப்புகளை விட அளவில் சிறியதாக இருந்தாலும் அவை அனைத்தையும் விட அதிக சக்திவாய்ந்ததாகும். உலகிலேயே மிகப்பெரிய இராட்சத தொலைநோக்கியான இது 18 மாடிக் கட்டிட உயர அளவில் ஆயிரம் டன் எடையுள்ளதாக இருக்கும். அதனால் தான் இதற்கு தி ஜெயன்ட் மெகல்லன் டெலஸ்கோப் என்று பெயரிட்டுள்ளனர்.
Name | Telescope | Astronomy | Wavelength |
---|---|---|---|
Radio | Radio telescope | Radio astronomy (Radar astronomy) | more than 1 mm |
Submillimetre | Submillimetre telescopes* | Submillimetre astronomy | 0.1 mm – 1 mm |
Far Infrared | – | Far-infrared astronomy | 30 µm – 450 µm |
Infrared | Infrared telescope | Infrared astronomy | 700 nm – 1 mm |
Visible | Visible spectrum telescopes | Visible-light astronomy | 400 nm – 700 nm |
Ultraviolet | Ultraviolet telescopes* | Ultraviolet astronomy | 10 nm – 400 nm |
X-ray | X-ray telescope | X-ray astronomy | 0.01 nm – 10 nm |
Gamma-ray | – | Gamma-ray astronomy | less than 0.01 nm |
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகம் உட்பட 9 ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து இதை வடிவமைத்துள்ளன. இதன் மூலம் பிரபஞ்சம் மற்றும் கறுப்பு துவாரத்தையும் நாம் காண முடியும்.
No comments:
Post a Comment