உலக ஓரினச்சேர்க்கை,மற்றும் Transphobia Biphobia -நாள் ,MAY 17
.‘ஓரினச்சேர்க்கை என்பது நோயல்ல’ - இந்திய உளவியலாளர்கள் குழு
சித்தாநாத் கானு
.
.
"ஓரினச்சேர்க்கையை ஒரு நோயாக கருதும் மனபோக்கிற்கு எதிராக இந்திய உளவியலாளர்கள் சங்கம் தீவிரமான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும்." ஃபேஸ்புக் காணொளியாக வழியாக இப்படி ஒரு செய்தியை இந்தியாவின் தலைமை உளவியலாளர்கள் குழு வெளியிட்டு இருக்கிறது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
'ஓரினச்சேர்க்கை என்பது நோயல்ல'
இந்தியன் உளவியலாளர்கள் சங்கம் ஓரினச்சேர்க்கையை எப்போதும் நோயாக கருதியது இல்லை என்று அந்த சங்கத்தின் தலைவர் அஜித் பிடே பிபிசியிடம் தெரிவித்தார்.
ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள காணொளியானது ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் முதல்முறையாக தெளிவான நிலைப்பாட்டினை இச்சங்கம் எடுத்திருப்பதாக பலர் கருத வழிவகுத்திருக்கிறது. மருத்துவர் அஜித் பிடே, "என்னிடம் பல பெற்றோர்கள் ஓரின சேர்க்கை பழக்கமுடைய தங்களது பிள்ளைகளை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். ஆனால், 'ஓரினச்சேர்க்கை என்பது நோயல்ல' என்று நான் அந்த பெற்றோர்களுக்குதான் ஆலோசனை வழங்குகிறேன். ஹூம், தன் பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று வருபவர்கள்தான் ஆலோசனை பெற்று செல்கிறார்கள்" என்கிறார்.இந்த சங்கத்தின் தலைவராக இருந்தவர் 2014ஆம் ஆண்டு, ஓரினச்சேர்க்கை 'இயற்கைக்கு முரணானது' என் கூறிய ஒரு கருத்து சர்ச்சைக்கு வித்திட்டது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அஜித், "கடந்த 30, 40 ஆண்டுகளாக திரட்டிய அறிவியல் ஆதாரங்கள், ஒரினச்சேர்க்கை ஒரு நோய் என்று வலியுறுத்தவில்லை. இதனை ஒரு நோயாக கருத எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை" என்கிறார்.
அனைத்து உளவியலாளர்களும் ஒப்புக் கொள்கிறார்களா?
"பெரும்பாலான உளவியலாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அவர்கள் ஓரினச் சேர்க்கை என்பது நோயல்ல என்று நம்புகிறார்கள். ஆம், சிலர் இதிலிருந்து முரண்படதான் செய்கிறார்கள். ஆனால், அனைவரும் ஒப்புக் கொள்வது உடனே நடக்காதுதானே. அதற்கு சிறிதுகாலம் எடுக்கத்தான் செய்யும்" என்கிறார் அஜித்.
உலகம் முழுவதும் உள்ள உளவியலாளர்கள் சங்கங்கள் இதுபோன்ற அனுபவங்களை எதிர்கொள்ளதான் செய்கின்றன என்கிறார் அஜித். "அமெரிக்க உளவியலாளர்கள் சங்கம் ஓரினச் சேர்க்கை தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வாக்கெடுப்பு நடத்திய போது, மூன்றில் ஒரு பகுதியினர் அதற்கு எதிராகவே வாக்களித்தனர்" என்கிறார்.
ஓரினச் சேர்க்கையும், சட்டமும்
இந்தியாவில் ஓரினச் சேர்க்கை குறித்து விவாதிக்கும் போது, இந்திய தண்டனைச் சட்டம் பகுதி 377 குறித்து விவாதிப்பது அத்யாவசியம் ஆகிறது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த விவகாரமானது பல திருப்பங்களை கொண்டது. உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில், ஆகஸ்ட் 2017ல், "பாலின பண்பின் அடிப்படையில் ஒருவரை பாகுபாடுடன் நடத்துவது குற்றம்." என்றது.இது குறித்து ஓரினச் சேர்க்கை செயற்பாட்டாளர் ஆதித்யா பண்டோபாத்யாய், "மனதளவில் நீங்கள் ஓரினச் சேர்கையாளராக இருப்பது எந்த தவறும் இல்லை. ஆனால், அந்த உணர்வோடு நீங்கள் நடந்துக் கொள்ள நினைக்கும்போது அது சட்டவிரோதமாக கருதப்படுகிறது" என்கிறார்
இந்த பிரச்சனை பாலியல் குறித்தானது அல்ல. செயற்பாட்டாளர் நக்ஷத்ரா பாக்வே , "நாங்கள் பாலியல் இச்சைகளுக்காக போராடவில்லை. எங்கள் அடையாளத்திற்காக போராடுகிறோம்" என்கிறார்.எல்.ஜி.பி.டி உரிமைக்காக போராடும் செயற்பாட்டாளர்கள், இந்திய தண்டனைச் சட்டம் பகுதி 377 மீது குற்றஞ்சாட்டுகிறார்கள். ஓரினச் சேர்க்கை சமூகத்திற்கு எதிராக இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக இவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தாங்கள் போராடுவதாக கூறுகிறார்கள்.
களத்தில் ஐஐடி
இந்தியா முழுவதிலும் உள்ள ஐ.ஐ.டியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 20 பேர் இந்த இந்திய தண்டனைச் சட்டம் பகுதி 377ற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள்.இதனை குற்றச் செயலாக கருதகூடாது என்றார்கள்.உளவியலாளர்கள் சமூகம் ஓரினச் சேர்க்கை சமூகத்தை ஏற்றுக் கொண்டாலும், மருத்துவ சமூகத்துக்கு இது குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சில மருத்துவர்கள்.புற்றுநோய் சிகிச்சை துறை மருத்துவர் பிரசாத் டண்டேகர், "ஓரினச் சேர்க்கை குறித்தும், அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் மருத்துவர்களுக்கு கற்பிக்கப்படுவதே இல்லை. எங்கள் பாடபுத்தகத்திலும் இதுகுறித்த எந்த தகவலும் இல்லை.அதனால் இந்த சமூகம் குறித்து ஒரு புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது அவசியமென நாங்கள் கருதுகிறோம்" என்கிறார்.
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான மருத்துவர்கள் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இவர் இருக்கிறார்.இந்த அமைப்பு இது தொடர்பான கருத்தரங்களையும், மாநாடுகளையும் இந்தியா முழுவதும் ஒருங்கிணைத்து வருகிறது.
'ஓரினச் சேர்க்கை' - உலகளாவிய நிலை என்ன?
ஐ.நா கணக்குப்படி, உலகெங்கும் 76-க்கும் மேலான நாடுகளில் ஒரினச் சேர்க்கையானது சட்டப்படி குற்றம்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஐந்து நாடுகள் இதற்கு மரண தண்டனை வழங்குகின்றன.
இந்த நாடுகளில் பெரும்பாலானவை முன்பு பிரிட்டனின் காலனியாக இருந்தவை.
ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்வது, அங்கீகரிப்பது உலகம் முழுவதும் மெல்ல அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக பெரும்பாலானோர் வாக்களித்தனர், ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு எதிரான தம் நாட்டு சட்டத்தை மாற்றியது பெர்முடா.
No comments:
Post a Comment