Wednesday, 20 May 2020

BALUMAHENDRA , DIRECTOR BORN 1939 MAY 20 - 2014 FEBRUARY 13



BALUMAHENDRA , DIRECTOR  BORN 
1939 MAY 20 - 2014 FEBRUARY 13


பாலு மகேந்திரா வை பற்றி சுருக்கமா சொல்லனும்னா பக்கா கலவனிப்பய .ஆனா பேச்சு பூராமே ஏமாத்து தான். ஷோபா அம்மா இவனை பத்தி புட்டு புட்டு வச்சாங்க .அப்போ எம்ஜியாரின் உருப்படாத ஆட்சி நடந்தது லஞ்ச லாவண்யம் மிகுந்ததால் ஷோபா வை தற்கொலைக்கு தூண்டியதை யாரும் கவனிக்கல ஷோபாவின் தற்கொலைக்கும் பாலு மஹேந்திராவின் மனைவிக்கும் நிறைய பங்கு இருக்கு. இதெல்லாம் விசாரிக்க நாதியில்லாம போச்சி. சட்டம் ஒழுங்கை சொதப்பியதில் கருணாநிதியை விட மோசம், எம்ஜியார் .விரக்தி அடைஞ்ச ஷோபா அம்மாவும் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க .பாலு மஹேந்திரா முதல் மனைவிஅகிலா ஷோபாவிடம் போய் நீலிக்கண்ணீர் வடிச்சதெல்லாம் மக்கள் மறந்து போயிட்டாங்க 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


பாலு மகேந்திரா (Balu Mahendra, 20 மே 1939 - 13 பெப்ரவரி 2014) இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்
பிறப்பு
1939 மே 20 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர்.தனது ஆரம்ப கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் பயின்றார். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969 ல் தங்கப்பதக்கம் பெற்றார்.

முதல் தாக்கம்
தான் பாடசாலையில் படித்த போது பார்த்த பதேர் பாஞ்சாலி திரைப்படம் தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறுகின்றார். பின்னர் ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய்(Bridge of river kwai) திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும் போது பாலகன் பாலு மகேந்திரா அதனை காண நேர்கின்றது. அந்த தாக்கமே அவரை திரைப்படத்துறையில் ஈடுபாடுடையவராக்குகின்றது.[1]

திரைப்பட நுழைவு
அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள
திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள். தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சின்னத்திரையில் பாலு மகேந்திரா
கதை நேரம் எனும் தொலைக்காட்சி தொடரினை சன் தொலைக்காட்சிக்காக பாலு மகேந்திரா இயக்கினார்.இத்தொடர்கள் 52 கதைகளை கொண்டிருந்தன அவற்றில் 10 கதைகள் எழுத்தாளர் சுஜாதாவினுடையதாகும்.[2]

நுண்ணுணர்வும் படைப்பாற்றலும்

பாலு மகேந்திரா தனது பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார் "ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக்கொண்டிருக்கும்.ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது."[3].

விருதுகளும் பாராட்டுக்களும்
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவராவார்.
பாராட்டாக கிடைத்த காட்சிக் காணி
பாலு மகேந்திராவின் திறமையை பாராட்டி சத்யஜித் ராயின் ஒளிப்பதிவாளரும், இந்திய சினிமாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளருமாக கருதப்படும் சுப்ரதா மித்ரா தனது காட்சிக் காணியை பரிசாக வழங்கியுள்ளார்.[4]

இயக்குனரான உதவியாளர்கள்
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். "சேது", "நந்தா", "பிதாமகன்" போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.சீனுராமசாமி, ராம், வெற்றி மாறன், சுகா போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. பாலு மகேந்திரா இயக்கிய 'கதைநேரம்' தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது.

உந்தப்பட்டவர்கள்
சந்தோஷ் சிவன்[5], ரவி கே.சந்திரன்[6] ஆகியோர் இவரால் உந்தப்பட்ட சில பிரபல ஒளிப்பதிவாளர்களாகும்.

இயக்கிய திரைப்படங்கள்
கோகிலா
அழியாத கோலங்கள்
மூடுபனி
மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்)
ஓலங்கள் (மலையாளம்)
நீரக்ஷ்னா (தெலுங்கு)
சத்மா (ஹிந்தி)
ஊமை குயில்
மூன்றாம் பிறை
நீங்கள் கேட்டவை
உன் கண்ணில் நீர் வழிந்தால்
யாத்ரா
ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)
ரெட்டை வால் குருவி
வீடு
சந்தியாராகம்
வண்ண வண்ண பூக்கள்
பூந்தேன் அருவி சுவன்னு
சக்ர வியூகம்
மறுபடியும்
சதி லீலாவதி
அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)
ராமன் அப்துல்லா
என் இனிய பொன் நிலாவே
ஜூலி கணபதி
அது ஒரு கனாக்காலம்
தலைமுறைகள்
மறைவு
பாலு மகேந்திரா பெப்ரவரி 13, 2014 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்[7][8].

துணுக்குகள்
பாலு மகேந்திரா இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர்.[சான்று தேவை]
இவர் புனேயில் திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு, இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி, தனது குறும்படமான "செங்கோட்டை" யை கொழும்பு "சவோய்" திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார்.[சான்று தேவை] சந்தர்ப்பம் கிடைக்காததினால் இந்தியா திரும்பினார்.




மறைந்த காமிரா கவிஞர், யதார்த்தத்துக்கு நெருக்கமாக தன் படைப்புகளைத் தந்த அமரர் பாலு மகேந்திராவின் வாழ்க்கை முழுவதும் பெண்களால் நிரப்பப்பட்டதுதான். பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா. இன்னொரு மனைவி பிரபல நடிகை ஷோபா. தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பெரும்பாலும் அவரை மனைவி என்று குறிப்பிடுவதில்லை பாலு மகேந்திரா. அவரை தன் தேவதை என்றே குறிப்பிடுவார். இன்னொரு மனைவி மௌனிகா. இப்போது பாலு மகேந்திரா உடலைப் பார்க்கப் போராடிக் கொண்டிருப்பவர்.தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா.

அகிலா பாலு மகேந்திராவின் மனைவி அகிலா. இவருக்கு ஷங்கி மகேந்திரா என்ற மகன் உள்ளார். மனைவி அகிலா குறித்து பாலு மகேந்திராவின் கருத்து என்ன... இதோ அவரது வார்த்தைகளில்.... "சினிமாவையும், இலக்கியத்தையும் அசுர வெறியோடு நேசிக்கும் எனக்கு, என் வாழ்க்கைத் துணையும் சினிமாவோடும், இலக்கியத் தோடும் சம்பந்தப்பட்டவளாக, என் அலைவரிசையில் இருப்பவளாக வேண்டும் என்று ஒரு பேராசை. இது அபத்தமான ஆசை, முட்டாள்தனமான எதிர்பார்ப்பு என்பதும் எனக்குத் தெரியும். அபத்தங்களும் முட்டாள் தனமும் நிறைந்ததுதான் என் வாழ்க்கை. ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்த என் வாழ்க்கையில் நேர்த்தியாக நான் வைத்திருக்கும் ஒரே விஷயம் சினிமாதான். இந்த உறவை (மௌனிகாவுடனான) ஆரம்பிப்பதற்கு முன், என் அகிலாவைப் பற்றி நான் யோசித்திருக்கவேண்டும். இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். வாழ்க்கையை அந்தந்த நொடிகளாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை. உள்ளும் புறமும் அழகானவள் அகிலா. எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் பதினெட்டு வயது. சரியாகப் புடவை கட்டக்கூடத் தெரியாத வெகுளிப்பெண். அகிலாவைப் போன்ற பத்தினிப் பெண்கள் | பரிசுத்தவதிகள் | புராணகாலத்தில்தான் இருந்திருக்கிறார்கள். இந்த யுகத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணல்ல அகிலா. என்னைப் போன்ற ஒரு பித்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அல்ல. கனவுகளைத் துரத்தியபடி சதா ஓடிக்கொண்டு இருக்கும் நாடோடி நான். எனக்கு மனைவியாக வந்ததுதான் அகிலாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனைவியைத்தவிர மற்றொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத, மனசால்கூட நினைக்காத ஒரு நல்ல ஆண்மகனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அகிலா. என்னை மாதிரி ஒரு கோணங்கிக்கு வாழ்க்கைப் பட்டது அவள் விதி. இந்தப் பத்தினிக்கு வலிகளையும் காயங்களையும் தவிர, வேறு என்ன தந்தேன் என்று நினைக்கும்போது எங்காவது கண்காணாமல் போய்விடத் தோன்றுகிறது! மௌனிகாவின் பேரன்பு... மௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! ஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை. ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை. அந்த அபலைப் பெண்ணின் கேள்விக்குப் பின்னே இருந்த வேதனை, அவமானம், வலி அனைத்தையும் நான் அறிவேன். புத்திபூர்வ மாக வாழாமல், உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்த என்னை அது வெகுவாகப் பாதித்தது. அதன் விளைவுதான் எனக்கும் மௌனிக்குமான உறவு. 'இவ்வளவு வேதனைப்படுகிற நீங்கள் ஏன் உங்கள் வாழ்வை இத்தனைச் சிக்கலாக்கிக் கொண்டீர்கள்?'' ''காரணம் மௌனியின் பேரன்புதான். 'நீங்க எனக்குத் தாலி கட்டவேண்டாம். உங்க காசு, பணம், சினிமா எதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் மூலமாக ஒரு குழந்தைகூட வேண்டாம். நீங்கள் என்னருகில் இருங்கள். அது போதும்!' என்று சொல்லும் ஒரு ஆத்மாவை நான் எப்படி உதறித் தள்ளுவது? தன் இளமைக் காலத்தை எனக்காக, என்னுடன் பகிர்ந்துகொண்ட வளை எப்படி உதற? என் உறவு காரணமாகப் பழிச்சொல், அவமானம் அடைந்தவள் அவள். நான் வேலை இன்றி இருந்த மாதங்களில், தான் மட்டும் மாங்கு மாங்கென்று உழைத்து, பொருளாதார ரீதியாகவும் என்னைத் தாங்கிப் பிடித்தவள். இந்த செவ்வாய்கூட எனக்காக மாங்காடு அம்மன் கோயிலுக்கு வீட்டிலிருந்தே நடந்து போய், அங்கப்பிரதட்சணம் செய்திருக் கிறாள். ஒரு பெண்ணின் பூரணமான அன்பையும் அழுத்தமான பக்தியையும் உணர்ந்தவர்களால் எங்கள் உறவைப் புரிந்துகொள்ள முடியும். இருபது வருடங்கள், தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்துவிட்டு இப்போது 35 வயதாகும் மௌனியை எப்படி நான் தூக்கிப் போடுவது? அதேசமயம், என்அகிலாவை நான் எந்தக் காலத்திலும் எவளுக்காகவும் விட்டு விலகியவன் அல்ல. அவளை நான் ஆத்மார்த்தமாக, ஆழமாக நேசிக்கிறேன். என்றாவது ஒரு நாள், என் நெஞ்சில் நிறைந்து வழியும் அன்பை, பொங்கிப் பிரவாகமெடுக்கும் பாசத்தை அகிலா புரிந்துகொண்டால் எனது இறுதி மூச்சு நிம்மதியாகப் பிரியும்! ''மௌனிகாவுக்கும் உங்களுக்குமான உறவில், உங்கள் மகன் ஷங்கியின் நிலை என்ன?'' ''ஷங்கி என் சிநேகிதன். என்னை அணுஅணுவாகப் புரிந்தவன். மௌனி மீது கோபப்படவோ அவளை அவமரியாதை செய்யவோ அவனால் இயலாது. அன்பும் கருணையும் மென்மையும் கொண்ட கம்பீரமான ஆண் ஷங்கி. எனக்கும் மௌனிக்குமான உறவை அவன் அங்கீகரிக்கிறானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக அவன் அதை முழுவதுமாகப் புரிந்துகொண்டு இருக்கிறான். என்னை என் பலங்களோடும் பலவீனங்களோடும் நேசிப்பவன் ஷங்கி.' ''மௌனிகாவைத் திருமணம் செய்துகொண்டீர்களா?'' ''என் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு நல்ல துணையாக, நல்ல சிநேகிதியாக, சமயங்களில் தாயாகக்கூட என்னைப் பாதுகாக்கிற பெண்ணை சினிமா வட்டாரத்தில், 'பாலுமகேந்திரா வெச்சுகிட்டிருக்கிற பொண்ணு' என்று கொச்சையாகக் குறிப்பிடுவதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனால் 98|ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவளுடன் நான் அடிக்கடி செல்லும் ஒரு சிவன் கோயிலில் வைத்துத் தாலி கட்டினேன். மௌனி கழுத்தில் இருப்பது நான் கட்டிய தாலிதான். ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் பிற்காலத்தில் என் குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் வருமோ என்ற ஒரே காரணத்துக்காக, தாயாகவேண்டும் என்ற ஆசையைக் கூடத் தவிர்த்தவள் அவள்.' நான் பாலு மகேந்திராவின் மனைவிதான்... ஆனால் திருமதி பாலுமகேந்திரா அல்ல!! நான் திருமதி பாலுமகேந்திரா அல்ல... என்னை திருமதி பாலுமகேந்திரா என்று அழைக்காதீர்கள் என்று பத்தாண்டுகளுக்கு முன்பே அறிவித்துவிட்டவர் மௌனிகா. ஏன் அப்படி? "பாலு மகேந்திரா எனக்குத் தாலி கட்டியிருப்பதும் அவரோடு பல வருடங்களாக நான் குடும்பம் நடத்தி வருவதும் உண்மைதான். ஆனால், திருமதி பாலுமகேந்திரா என்று என்னைக் குறிப்பிட்டால், அகிலாம்மா எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை என்னால் பூரணமாக உணர முடிகிறது. முதலில் பாலுமகேந்திரா என்ற பெயரைப் பற்றி பலருக்குத் தெரியாத ஒரு விஷயத்தை இங்கு சொல்லியாக வேண்டும். அவரது தகப்பனார் பெயர் பாலநாதன். நண்பர்களாலும் உறவினர்களாலும் அவர் 'பாலு' என்று அழைக்கப்பட்டு வந்தார். ஆக, பாலுமகேந்திரா என்ற பெயரில் அவருடைய தகப்பனாரது பெயரும் சேர்ந்திருக்கிறது. எனவே, பாலுமகேந்திரா என்ற பெயர் ஒரு தனி நபரின் பெயரல்ல. அது பாலுமகேந்திராவைத் தலைவராகக் கொண்ட அவரது நேரடிக் குடும்பத் தைச் சேர்ந்த அவருடைய முதல் மனைவி அகிலாம்மா, மகன் ஷங்கி, பேரன் ஷிறேயாஸ், மருமகள் ரேகா ஆகியோரது குடும்பப் பெயர். ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவலை இயற்கை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அழுத்தமாகவே வைத்திருக்கிறது | இனவிருத்தி வேண்டி. அந்த ஆசையும் அதற்கான வயசும் வளர்த்து ஆளாக்குவதற்கான சம்பாத்தியமும் ஆரோக்கியமும் எனக்கிருந்தும் குழந்தை வேண்டாம் என்று நான் முடிவு செய்தது, பிற்காலத்தில் அவரது குடும்பத்தில் இதனால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று நான் கருதிய தன் காரணமாக மட்டும்தான். அவர் மூலம் எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அந்தப் பையனுக்கோ பெண்ணுக்கோ நிச்சயமாக பாலுமகேந்திரா என்ற பெயர் சொந்தமாகி இருந்திருக்கும். காரணம், அந்தக் குழந்தை அவரது ரத்தம் என்பதால்! பாலுமகேந்திரா, எனக்குத் தாலி கட்டியதை முதன்முதலாக அவர் பகிரங்கப்படுத்தியதே, எனக்கும் அவருக்குமிடையே இருந்து வருகிற ஆத்மார்த்தமான உறவுக்கு, அவர் கொடுத்த சமூக அங்கீகாரம். எனக்கும் அவருக்குமான உறவில், எந்த எதிர்பார்ப்புகளும் எனக்கும் இல்லை. அவருக்கும் இல்லை. இனி இருக்கப்போவதும் இல்லை. நான் அவரை அவருக்காக மட்டுமே நேசிக்கிறேன். அவரும் அப்படித்தான். எனவேதான் அகிலாம்மாவின் முகவரியாகவும் அடையாளமாகவும் இருக்கும் திருமதி பாலுமகேந்திரா என்ற பெயரால் நான் குறிப்பிடப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. பாலு மகேந்திரா இருக்கும்போது மட்டுமல்ல, அவரது மறைவுக்குப் பின்பும்கூட, திருமதி பாலுமகேந்திரா என்றால் அது அகிலாம்மாவைத்தான் குறிக்கும். என்னை பாலு மகேந்திராவின் துணைவி என்றோ அல்லது திருமதி மௌனிகா என்றோ குறிப்பிடுங்கள். மனைவி என்பதும் துணைவி என்பதும் ஒரே ஸ்தானத்தைக் குறிக்கும் வார்த்தைகள்தான். இருப்பினும் ஒரு ஆண், இரண்டு சம்சாரங்களுடன் வாழும்போது, பிரித்தறிதல்
வேண்டி, மூத்த சம்சாரத்தை மனைவி என்றும் இளைய சம்சாரத்தை துணைவி என் றும் குறிப்பிடுதல் அவசியமாகிறது. இப்போது எனது பிரார்த்தனையெல்லாம், இந்த மனிதர் மறுபடியும் ஆஸ்பத்திரி அது இது என்று போகாமல், ஆரோக்கியமாக அவருக்குப் பிடித்த சினிமாவைச் செய்துகொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த வரத்தை இறைவன் நிச்சயம் எனக்குத் தருவார்! எனில்... ஷோபா யார்? அச்சாணி படத்தில் அறிமுகமாகி, கே பாலச்சந்தரின் நிழல் நிஜமாகிறது படத்தில் பிரபலமாகி, பசி படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் ஷோபா. ஊர்வசி என்ற விருதினை மத்திய அரசு அவருக்கு அளித்தது. அப்போது அவருக்கு வயது 17. அடுத்த சில தினங்களில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஷோபா பாலு மகேந்திராவின் இன்னொரு மனைவி!! ஷோபாவுக்கும் தனக்குமான உறவைப் பற்றி பாலு மகேந்திரா இப்படி வர்ணிக்கிறார்... "தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது? அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகை என்பதையா... நடிப்பில் மிகுந்த தனித்தன்மையையும் தனக்கே தனக்கென்று நிறையப் பிரத்தியேகதைகளையும் வைத்திருந்தவர் என்பதையா... குமரிப்பெண் உடலுக்குள் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசோடு சதா வியப்பும் பிரமிப்புமாக பறந்து திரிந்த அவரது சந்தோஷத்தையா...? அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போன அந்தச் சோகத்தையா..? எதை? எதை எழுதுவது? மிக அடர்த்தியான உணர்வுகள் முட்டி மோதும் சமயங்களில் வார்த்தைகள் காணாமல் போய் விடுகின்றன. நாம் தலையில் வைத்து கொண்டாடும் நமது தமிழ் நம்மை "அம்போ" என்று விட்டு விலகிக்கொள்கிறது. அந்த மனநிலையில் எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன். ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார். அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன். அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது. அதில் ஒரு கேள்வி: மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே... எப்படி இது...? ஷோபா சொல்லியிருந்த பதில்: "மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்." எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது. தேவலோகவாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா. ஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம். அந்தத் தேவதையின் வரவையும் மறைவையும், அவருக்கும் எனக்குமான உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்கு சொல்லியிருந்தேன். "மூன்றாம் பிறை" படம் மூலமாக. மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.! நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன். ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன. இது உங்களுக்கு.. எனக்கு... எல்லா இன்னல்களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்..


``நானும் இந்த 5 வருஷத்துல பல முறை அகிலாம்மாவைச் சந்திக்க முயற்சி பண்ணேன். ஆனா, இப்ப வரைக்கும் முடியலை. அம்மாவுக்கும் சரி, அவங்க மகன் சங்கிக்கும் சரி, என் மீது கோபம் இருக்கலாம். ஆனா அந்தப் புள்ளையாலதான் அன்னைக்கு கடைசி நிமிஷத்துல அவர் முகத்தை என்னாலப் பார்க்க முடிஞ்சது.''

மெளனிகா... ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் மறக்காத முகம். இயக்குநர் பாலு மகேந்திராவால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர், பின்னர் பாலுமகேந்திராவின் வாழ்க்கையில் இணைந்தார். சில காலம் சத்தமில்லாமல் இருந்த மெளனிகா இப்போது மீண்டும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரிடம் பேசினேன்.


``நானும் இந்த 5 வருஷத்துல பல முறை அகிலாம்மாவைச் சந்திக்க முயற்சி பண்ணேன். ஆனா, இப்ப வரைக்கும் முடியலை. அம்மாவுக்கும் சரி, அவங்க மகன் சங்கிக்கும் சரி, என் மீது கோபம் இருக்கலாம். ஆனா அந்தப் புள்ளையாலதான் அன்னைக்கு கடைசி நிமிஷத்துல அவர் முகத்தை என்னாலப் பார்க்க முடிஞ்சது.''

மெளனிகா... ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் மறக்காத முகம். இயக்குநர் பாலு மகேந்திராவால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர், பின்னர் பாலுமகேந்திராவின் வாழ்க்கையில் இணைந்தார். சில காலம் சத்தமில்லாமல் இருந்த மெளனிகா இப்போது மீண்டும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரிடம் பேசினேன்.

மௌனிகாவுடன் பாலு மகேந்திரா
மௌனிகாவுடன் பாலு மகேந்திரா
``கடைசியா ஏ.வி.எம். தயாரிச்ச `சொர்க்கம்’ சீரியல்ல நடிச்சிருந்தேன். சீரியல்கள்லயும் சரி, சினிமாக்கள்லயும் சரி, இதுவரைக்கும் சாஃப்ட்டான கேரக்டர்களே எனக்கு அமைஞ்சது. ஆயுத எழுத்து’ காளியம்மா டைப் கேரக்டரை முதல் தடவையா இப்பதான் பண்றேன். அந்த கெட்-அப், மிரட்டலான பார்வை, பாடி லாங்குவேஜ்... எனக்கே இப்ப காளியம்மாவை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. இந்தக் கேரக்டருக்குள் என்னைக் கொண்டு வந்தது ரமணகிரிவாசன். `இப்படித்தான் பார்க்கணும்', `இந்த மாதிரிதான் பேசணும்'னு சின்னச் சின்ன விஷயத்தையும் ரசிச்சுச் செதுக்கிய பெருமை அவருக்குத்தான் சேரும்’’ என்றவரிடம்,

``நடிப்புக்கு ஏன் இவ்ளோ பெரிய இடைவெளி?'’ என்று கேட்டேன்.


``ஒரு பிசினஸ்ல பிசியா இருந்தேன். அந்தப் பரபரப்பு, உற்சாகமெல்லாம் காலியாகிற மாதிரி அடுத்தடுத்து வாழ்க்கையில ரெண்டு சோகங்கள். இந்த நாள் வரையிலான என் வாழ்க்கையில் நான் அதிகமா நேசிச்சது ரெண்டு பேர். ஒருவர் என்னுடைய கணவர் பாலு மகேந்திரா. இன்னொரு ஜீவன் என் சகோதரி மகள் உதயா. ஒரு புள்ளைய வயித்துல சுமக்கிற பாக்கியத்தைத் தராத அந்த ஆண்டவன், நான் வளர்த்ததையும் என்கூட இருக்க விட்டு வைக்கலை.

உதயாவுக்கும் பாலுவுக்கும் ரொம்பவே கனெக்ட்டிவிட்டி இருந்தது. அவ என்னோட அக்கா வயித்துல உருவான நேரம்தான் என் வாழ்க்கையில இவர் வர்றார். அவ தவழ்ந்து, நடந்து, ஓடியாடி விளையாடிய நாள்கள்ல தோள்மேல தூக்கி வெச்சுக் கொஞ்சுவார். அவருக்குப் பொண்ணு இல்லாத குறையை இவதான் தீர்த்து வெச்சா. எல்லா விஷயத்துக்கும் `அங்கிள்கிட்ட கேட்கலாம்’னு சொல்லுவா. அவ கல்யாணம் உட்பட அவளோட எல்லா விஷயத்துலயும் முன்னாடி நின்னு இவர்தான் செஞ்சார்.

மௌனிகா, பாலு மகேந்திரா
மௌனிகா, பாலு மகேந்திரா
நான்தான் பாவி. எப்படி அவரோட கடைசி நாள்கள்ல பேசாம இருந்துட்டேனோ, அதேபோல விபத்துல உதயா இறக்கிற தருணத்துலயும் சில நாள்கள் அவளோட பேசலை. அம்மா பொண்ணுக்கிடையில வர்ற சின்னச் சின்ன சண்டைதான். ஆனா அவளுக்கு உள் மனசுல ஏதோ தெரிஞ்சிருக்கு. சாகறதுக்கு மூணு நாள் முன்னாடி `அங்கிள் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்’னு ஸ்டேட்டஸ் வச்சிருந்திருக்கா. எல்லாம் முடிஞ்சிடுச்சு. 2014-ல் அவர் விட்டுட்டுப்போன வலியில இருந்து மீள்வதற்குள்ளேயே 2018-ல் இந்தப் பொண்ணு...’’ - மௌனிகாவின் வார்த்தைகளில் வலி. சில நிமிட மௌனத்துக்குப் பின் தொடர்ந்தார்...


``எத்தனை நாளுக்கு வீட்டுக்குள்ளேயே அழுதுட்டு கிடக்கறது? அதுவும் போக, நான் பிசினஸ் பண்ணிகிட்டிருந்தப்ப `என் காலத்துக்குப் பிறகும் நீ நடிக்கணும்’னு சொல்லி என்கிட்ட சத்தியம் வேற வாங்கியிருந்தார். அதனால மெதுவா படங்கள்ல நடிக்கத் தொடங்கினேன். இப்ப ரெண்டு சீரியல்ல நடிக்கிறது அந்தச் சூழலைக் கொஞ்சம் மறக்கச் செய்யுது. சினிமாவுலயும் பாரதிராஜா இயக்கியிருக்கிற `ஓம்’ படத்துல நடிச்சிருக்கேன். 'அசுரன்’ படத்துலகூட நடிக்க வெற்றிமாறன் கூப்பிட்டிருந்தார். அந்த வாய்ப்பை என்னால பயன்படுத்திக்க முடியாமப் போயிடுச்சு. தொடர்ந்து பழையபடி நடிக்கலாம்னு இருக்கேன். அதேபோல என் வாழ்க்கையில் இன்னும் ஒரேயொரு ஆசை. அது மட்டும் நிறைவேறினா போதும்.

உதயாவுடன் மௌனிகா
உதயாவுடன் மௌனிகா
அவர் இருந்தப்ப ஒருமுறை என்கிட்ட இப்படிக் கேட்டார்...

`நான் போன பிறகு அகிலாகிட்ட (பாலு மகேந்திராவின் முதல் மனைவி) பேசுவியா, அவளைப் போய்ப் பார்ப்பியா?' - அவர் இப்படிக் கேட்டது மட்டும் என் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு.


நானும் இந்த 5 வருஷத்துல பல முறை அகிலாம்மாவைச் சந்திக்க முயற்சி பண்ணேன். ஆனா, இப்ப வரை அது முடியலை. அம்மாவுக்கும் சரி, அவங்க மகன் சங்கிக்கும் சரி; என் மீது கோபம் இருக்கலாம். ஆனா அந்தப் புள்ளையாலதான் அன்னைக்கு கடைசி நிமிஷத்துல அவர் முகத்தை என்னால பார்க்க முடிஞ்சது. இப்பவும் எங்காச்சும் பார்த்தா முகத்தைத் திருப்பிட்டுப் போறவர் இல்லை அவர். நாகரிகமானவர். உயிர்களோட வலி, ஈவு இரக்கம் தெரியற மாதிரிதான் பாலு மகேந்திரா தன்னோட புள்ளையை வளர்த்திருக்கார். ஆனாலும், ஏனோ இன்னும் அவங்க வீட்டு வாசலை மிதிக்கிற சந்தர்ப்பம் எனக்கு அமையலை.

பாலு மகேந்திரா
பாலு மகேந்திரா
ஒண்ணும் வேண்டாம், அவங்க முகம் பார்த்து `தப்புதான் பண்ணிட்டேன்... மன்னிக்க மாட்டீங்களா அகிலாம்மா’னு இந்த நாலு வார்த்தையைச் சொல்லிடணும், அவ்ளோதான். விகடன் மூலமா இப்ப நான் அகிலாம்மாகிட்ட பேசுறேன். `அவரோட சொத்துக்கோ, அவர் மீதான உரிமையில பங்கு கேட்டோ நான் உங்ககிட்ட வர விரும்பல. அதுவும் போக, அவர் அன்னைக்குக் கேட்ட அந்தக் கேள்விக்காக மட்டுமே நான் உங்களை சந்திக்கணும்னும் நினைக்கலை. எனக்கே உங்ககூட இருக்கணும்னு ஆசையா இருக்கு அகிலாம்மா. ஆரம்ப காலத்துல எப்படிப் பேசிச் சிரிச்சிட்டு இருந்தேனோ அதேபோல என் மிச்ச காலத்துலயும் அப்படி இருக்க ஆசைப்படறேன்.

என்னை மன்னிச்சு ஏத்துப்பீங்களா அகிலாம்மா..?''


பாலு மகேந்திரா வை பற்றி சுருக்கமா சொல்லனும்னா பக்கா கலவனிப்பய .ஆனா பேச்சு பூராமே ஏமாத்து தான். ஷோபா அம்மா இவனை பத்தி புட்டு புட்டு வச்சாங்க .அப்போ எம்ஜியாரின் உருப்படாத ஆட்சி நடந்தது லஞ்ச லாவண்யம் மிகுந்ததால் ஷோபா வை தற்கொலைக்கு தூண்டியதை யாரும் கவனிக்கல ஷோபாவின் தற்கொலைக்கும் பாலு மஹேந்திராவின் மனைவிக்கும் நிறைய பங்கு இருக்கு. இதெல்லாம் விசாரிக்க நாதியில்லாம போச்சி. சட்டம் ஒழுங்கை சொதப்பியதில் கருணாநிதியை விட மோசம், எம்ஜியார் .விரக்தி அடைஞ்ச ஷோபா அம்மாவும் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க .பாலு மஹேந்திரா முதல் மனைவிஅகிலா ஷோபாவிடம் போய் நீலிக்கண்ணீர் வடிச்சதெல்லாம் மக்கள் மறந்து போயிட்டாங்க 










.“நீங்க எனக்குத் தாலி கட்டவேண்டாம். உங்க காசு, பணம், சினிமா எதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் மூலமாக ஒரு குழந்தைகூட வேண்டாம். நீங்கள் என்னருகில் இருங்கள். அது போதும்!’ என்று சொன்னவள் மௌனிகா . என் உறவு காரணமாகப் பழிச்சொல், அவமானம் அடைந்தவள் அவள். நான் வேலை இன்றி இருந்த மாதங்களில், தான் மட்டும் மாங்கு மாங்கென்று உழைத்து, பொருளாதார ரீதியாகவும் என்னைத் தாங்கிப் பிடித்தவள். எனக்கு மூளை ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டபோது, எனக்காக மாங்காடு அம்மன் கோயிலுக்கு வீட்டிலிருந்தே நடந்து போய், அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறாள்.

என் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு நல்ல துணையாக, நல்ல சிநேகிதியாக, சமயங்களில் தாயாகக்கூட என்னைப் பாதுகாக்கிற பெண்ணை சினிமா வட்டாரத்தில், ‘பாலுமகேந்திரா வெச்சுகிட்டிருக்கிற பொண்ணு’ என்று கொச்சையாகக் குறிப்பிடுவதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனால் 1998ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவளுடன் நான் அடிக்கடி செல்லும் ஒரு சிவன் கோயிலில் வைத்துத் தாலி கட்டினேன்.மௌனி கழுத்தில் இருப்பது நான் கட்டிய தாலிதான்”

— ஒரு வார இதழில் நடிகை மவுனிகாவுடனான தனது குடும்ப வாழ்க்கை பற்றி மறைந்த மாபெரும் கலைஞன் பாலுமகேந்திரா சொன்ன வார்த்தைகள் இவை.

” நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமதி பாலுமகேந்திரா என்று என்னைக் குறிப்பிட்டால், அகிலாம்மா (பாலுமகேந்திராவின் முதல் மனைவி ) எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை என்னால் பூரணமாக உணர முடிகிறது.

இன விருத்திக்காக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவலை இயற்கை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அழுத்தமாகவே வைத்திருக்கிறது. அந்த ஆசையும் அதற்கான வயசும், குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்கான சம்பாத்தியமும் ஆரோக்கியமும் எனக்கிருந்தும் குழந்தை வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன். காரணம் பிற்காலத்தில் எனக்கும் அவருக்கும் பிறக்கும் குழந்தையால் அவரது குடும்பத்தில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று நான் கருதியதன் காரணமாக மட்டும்தான்.

எனக்கும் அவருக்குமான உறவில், எந்த எதிர்பார்ப்புகளும் எனக்கும் இல்லை. அவருக்கும் இல்லை. இனி இருக்கப்போவதும் இல்லை.

எனவேதான் அகிலாம்மாவின் முகவரியாகவும் அடையாளமாகவும் இருக்கும் திருமதி பாலுமகேந்திரா என்ற பெயரால் நான் குறிப்பிடப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. பாலுமகேந்திரா இருக்கும்போது மட்டுமல்ல, அவரது மறைவுக்குப் பின்பும்கூட, திருமதி பாலுமகேந்திரா என்றால் அது அகிலாம்மாவைத்தான் குறிக்கும்.என்னை பாலுமகேந்திராவின் துணைவி என்றோ அல்லது திருமதி மௌனிகா என்றோ குறிப்பிடுங்கள்”

—இதுதான் பாலு மகேந்திரா பற்றி மௌனிகா கூறியது.

இப்படி இருக்க, பாலு மகேந்திரா இறந்த நிலையில் , மௌனிகா வந்து இறந்து போன பாலு மகேந்திராவின் உடலைப் பார்க்கக் கூடாது என்று பாலுமகேந்திராவின் சிஷ்யரான அந்த இரண்டெழுத்து இயக்குனர் பிடிவாதமாக இருந்தார். பாலுமகேந்திரா மருத்துவமனையில் இறந்த உடனேயே மௌனிகாவின் பேரைக் குறிப்பிட்டு அவள் இவள் என்று பேசியதோடு “அவ வந்தான்னா வெட்டுவேன் குத்துவேன்” என்று வசை பாடினார் அந்த சிஷ்யர் . பாலு மகேந்திராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்துக்கும் மௌனிகா வரக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தார் .

ஒரு மூத்த இயக்குனர் அவரிடம் போய் “மௌனிகா வந்து ஒரு முறை பார்த்து விட்டாவது போய் விடட்டும் ” என்று கேட்டபோது கூட “நீங்க என்ன … நான் கடவுளே சொன்னாலும் கேட்கமாட்டேன் ” என்று கொந்தளித்தார்.

பாலு மகேந்திராவின் முதல் மனைவி அகிலா அம்மையாரே “அவள் வந்து பார்த்து விட்டுப் போகட்டும்” என்று சொன்னபோதும் பாலுமகேந்திராவின் மகன் ஷங்கியும் “அவங்க வரட்டும் ” என்று சம்மதித்த பிறகும் கூட அந்த சிஷ்ய இயக்குனர் பிடிவாதம் பிடித்ததுதான் விந்தையிலும் விந்தை.

கடைசியில் பாலு மகேந்திராவின் இறுதி ஊர்வலம் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு போலீஸ் பாதுக்காப்போடு கண்ணீரில் கரைந்தபடி வந்து, இரண்டு நிமிடம் பாலு மகேந்திராவின் உடலைப் பார்த்து விட்டு நடைப்பிணமாக வெளியேறினார் மௌனிகா . அவரது நிலைமை ரொம்பவே பரிதாபமாக இருந்தது.
SADIST -DIRECTOR BALA

மௌனிகா உடனான பாலுமகேந்திராவின் திருமணம் முதல் மனைவி அகிலா அம்மையாருக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்ற வகையில் அகிலா அம்மையார் மீது விசுவாசம் மிக்க அந்த சிஷ்யருக்கு மௌனிகா மீது கோபம் இருக்கிறது எனில் அவரது கோபம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல. இது உண்மை.

ஆனால் அகிலா அம்மையாரின் மனக் குமுறல் காரணமாக மேற்படி சிஷ்யருக்கும் பாலு மகேந்திராவுக்கும் முதன் முதலில் பிரச்னை வரக் காரணமான இன்னொரு நடிகை ஒரு நிமிடம் கூட விட்டு விலகாமல் அங்கேயேதான் இருந்தார். அவர் மீது சிஷ்ய இயக்குனருக்கு வராத
கோபம் மௌனிகா மீது மட்டும் வந்ததற்கு காரணம் புரியவில்லை

பாலு மகேந்திரா இறந்த மறுநாள் காலை அவரது உடல் அருகே அந்த சிஷ்ய இயக்குனர் கண் கலங்க , பாலு மகேந்திராவின் படங்களில் நடித்த வேறொரு நடிகை, சிஷ்ய இயக்குனரின் அருகில் வந்து தனது முந்தானையை எடுத்து சிஷ்ய இயக்குனரின் முகத்தை நிறுத்தி நிதானமாக அழகாக துடைத்து விட்டார் இரண்டு மூன்று முறை! சட்டென்று பத்திரிக்கையாளர்கள் இருப்பதை பார்த்த பிறகு அந்த சிஷ்ய இயக்குனர் கர்ச்சீப் கேட்க, அப்புறம் கர்ச்சீப் கொண்டு வந்து கொடுக்கிறார் அந்த நடிகை .

குருநாதரின் இறந்த உடல் முன்னால் குருநாதரின் படத்தில் நடித்த ஒரு நடிகையின் முந்தானைக்கு தனது முகத்தில் அனுமதி கொடுத்த அந்த சிஷ்ய இயக்குனர் “பாலு மகேந்திராவின் சொத்தில் பங்கு வேண்டாம் . அவர் மூலம் குழந்தை வேண்டாம். திருமதி பாலு மகேந்திரா என்று கூட என்னை சொல்ல வேண்டாம். எனக்கு அவர் அன்பு மட்டுமே போதும்” என்று வாழ்ந்த ஒரு காதல் துணைவியை, அவரது கணவரின் உடலை பார்க்கக் கூட அனுமதிக்காதது ஏன் என்பதுதான் புரியவில்லை .


– தின இதழில் சு.செந்தில்குமரன் எழுதியது




mounikaa

No comments:

Post a Comment