Wednesday 20 May 2020

VAACHCHATHI RAPE CASE HELD 1992 JUNE 20,21,22 - JUDGEMENT SEPTEMBER 29,2011



VAACHCHATHI RAPE CASE

வாச்சாத்தி வன்முறைக்கு முக்கிய காரணங்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும் தான். தேவர் சாதியை காவலர் வடிவில் உலவ விட்டவர்கள் பின்னாளில் இவர்களே பொதுமக்களிடம் கொள்ளை அடித்தபோது ஜெயலலிதாவே தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்தார். என்றாலும் இந்த வழக்கை வேண்டுமென்றே நீட்டித்து நீதி கிடைக்காமல் செய்தவர் சசிகலா .தேவர் ஓட்டை பெரும் நோக்கில் கருணாநிதியும் எந்த நடவடிக்கையையும் எடுக்க விடவில்லை .ஜெயலலிதா வந்தவுடன் இந்த வழக்கை நடத்தி முதல் சமூகநீதி காத்த வீராங்கனையாக நின்றார். கருணாநிதி கருணாநிதி குடும்பங்கள் இன்னும் பவர் க்கு வரமுடியவில்லை 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


வாச்சாத்தி வன்முறை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறை சம்பவம். சூன் 20-22, 1992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது.சம்பவம்
இந்தியாவின் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான குக்கிராமமே வாச்சாத்தி கிராமமாகும்.

1992 சூன் 20ம் தேதி அங்கு 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக புகுந்து சோதனை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர். பின்னர் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.


காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணை
கிராம மக்கள் சார்பில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை 1992-ம் ஆண்டு அரூர் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்தார்.ஆயினும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதநிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வாச்சாத்தி கிராமத்தில் முழுமையான விசாரணை நடத்தவும், விசாரணைக்கு பின் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டது.[1]

இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.[1]

இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து வற்புறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கூட்டுக்குழுவை சேர்ந்த அனைவரையும் கைது செய்து சேலம் சிறைக்கு கொண்டு சென்று அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.[1]

அதே ஆண்டில் இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு சனவரி மாதத்தில் சி.பி.ஐ. தரப்பு வழக்குரைஞர் வாதம் தொடங்கி நடந்தது.

2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வாச்சாத்தி பலாத்கார சம்பவத்தின் போது தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த 7 பேர் தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட்டது.[1]

இந்த வன்செயல் தொடர்பாக 269 பேர் மீது காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இவர்களில் 155 பேர் வனத்துறையினர், இவர்களில் 4 பேர் ஐஎப்எஸ் அதிகாரிகள். 108 பேர் காவல் துறையினர், இவர்களில் ஒரு துணை ஆய்வாளர்ரும் அடக்கம். வருவாய்த்துறையினர் 6 பேர். வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 107 பேர். இவர்களில் நால்வர் மட்டுமே ஆண்கள் ஆவர். வழக்கு விசாரணையில் இருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 54 பேர் உயிரிழந்து விட்டனர்.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டில் சூலை 5,2011 முதல் நடந்தது. இருதரப்பினரின் வாதமும் முடிவடைந்தநிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் 2011 செப்டெம்பர் 29 தேதி தீர்ப்பளிக்கப்பட்டது .[2]

215 பேர் குற்றவாளிகள்

வாச்சாத்தி பாலியல் வழக்கில் மொத்தம் உள்ள 269 குற்றவாளிகளில் உயிரோடு உள்ள 215 பேரும் குற்றவாளிகள் எனத் (2011 செப்டெம்பர் 29) தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பலாத்காரம் செய்ததாக 17 வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. .[3]

தண்டனை விவரம்
வனத்துறையினர் 17 பேர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவலும் விதிதக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் சில பிரிவுகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராம‌‌த்தில் 1992 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை, காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பாலியல் வன்முறை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்டிருந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கில் மொத்தம் 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். இந்தப் பின்னணியில், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இவர்களில் 126 பேர் தமிழக அரசின் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் தமிழக காவல்துறையினர். மீதமுள்ள ஐந்து பேர் தமிழக வருவாய்த் துறை ஊழியர்கள்.

சந்தனமரக்கடத்தல் வீரப்பன் நடமாடிவந்த தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் வாச்சாத்தி கிராம‌‌த்தைச் சேர்ந்தவர்கள் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக புகார் தெரிவித்த தமிழக வனத்துறையினர், இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பலமணி நேர தேடுதல் நடத்தினர். இதன் முடிவில், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 133 பேரை கைதுசெய்தனர். அவர்களில் 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள்.அதேசமயம், சந்தன கட்டை கடத்தலுக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வாச்சாத்தி கிராமத்தினர், இந்த விசாராணை மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வாச்சாத்தியைச் சேர்ந்த 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் அனைவரும் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினார்கள். இந்த புகார்களை அன்றைய மாநில அரசு ஆரம்பத்தில் மறுத்தது. அதே சமயம் இது தொடர்பாக 1992 ஆம் ஆண்டு ஜூன் 22 ‌ம் தேதி முறையான புகார் பதிவுசெய்யப்பட்டது.

இதன் மீதான விசாரணையை தமிழக காவல்துறை முறையாக நடத்தவில்லை என்கிற புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. 19 ஆண்டுகாலகாம் நடந்துவந்த இந்த வழக்கில் இன்று (செப்.29, 2011) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டிருக்கிறது பாலியல் வன்முறையி்ல் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஏனையோர் வாச்சாத்தி மக்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியதாகவும் அவர்கள் உடைமைகளை சூறையாடியதாகவும் தீர்ப்பளிக்க்ப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மு்தல் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.






.முதன்முதலில் வாச்சாத்தி கிராமத்துக்கு நாங்கள் சென்றது 1992, ஜுலை 14 அன்று. 25 ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்றன! பேச்சில்லாத கிராமமாகத்தான் அப்போது இருந்தது வாச்சாத்தி. வருவாய்த் துறை ஆவணங்களில் மனிதர்கள் வாழாத கிராமத்தை இப்படித்தான் குறிப்பிட்டிருப்பார்களாம். ஆம்! எந்த ஜீவராசிகளும் அந்த ஊரில் இல்லை. எல்லாம் அழிக்கப்பட்டிருந்தன. வீடு, வீட்டில் இருந்த பொருட்கள், வளர்த்த ஆடு, மாடு, கோழி, நாய்கள் என எல்லாம்! மனிதர்கள்? சிக்கியவர்கள் சிறையில், மற்றவர்கள் மலையில்! தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தப்படுத்தப்பட்டிருந்தது. இப்படி ஒரு கொடுமையை அதற்கு முன் நான் வாழ்நாளில் பார்த்ததில்லை.
இப்படியொரு கிராமத்தையே சூறையாடியது, வீடுகளை நொறுக்கியது, ஆடு, கோழிகளைச் சுட்டுத் தின்றது. அதன் கழிவுகளைக் கிணறுகளில் போட்டுத் தண்ணீரை அசுத்தப்படுத்தியது என எல்லாக் கொடுமைகளையும் செய்தது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை, வனத் துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என்பது அன்று நம்ப முடியாததாக இருந்தது. நேரில் சென்று பார்க்காத யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்தான். அப்போது பொதுநல வழக்குகளைக் கவனித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி பத்மினி ஜேசுதுரையும் நம்பவில்லை. படித்தவர்கள், அரசுப் பணியில் உள்ள உயர் அதிகாரிகள் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை என்று கூறி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் போடப்பட்ட பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார். பிறகுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் ஏ. நல்லசிவனின் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். 

தாமதிக்கப்பட்ட நீதி

அப்போது ஏ.நல்லசிவன் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். 1992 ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பியிருந்தார். இந்த நிலையில்தான், வழக்கை ஏற்று உச்ச நீதிமன்றம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இப்படி உத்தரவு போட்டது 1992 செப்டம்பர் 8-ம் தேதி. ஆனால், வழக்கில் தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது 2011 செப்டம்பர் 29. அதாவது 19 ஆண்டுகள் கழித்து தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், அதில் மாற்றத்தை ஏற்படுத்த நீதித் துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட எவரொருவரும் தயாராக இல்லை என்பதுதான் இப்போது வரை உள்ள நிலை. அதற்கு உதாரணமாக பல நூறு வழக்குகள் இன்றும் நடைபெற்றுவருகின்றன என்பதை நாமறிவோம்!

அதிமுக-திமுக: மௌனமான அநீதி
இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஆளும் அதிமுக மொத்தத்தையும் மூடி மறைத்தது. பிறகு, ஆட்சிக்கு வந்த திமுகவும் வாச்சாத்தி வழக்கைக் கண்டுகொள்ளாமல் மௌனம் சாதித்தது. நீதியை நிலைநாட்டவும், குற்றவாளிகளுக்குத் தண்டனையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் பெற்றுத்தர நடத்திய போராட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவற்றைப் பற்றி எழுதினால் பெரும் காவியமாகும். வாச்சாத்தி வன்கொடுமையை எதிர்த்த போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் உந்துவிசையாக விளங்கியவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அப்போதைய மாநிலப் பொதுச் செயலாளர் கே. வரதராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. வாச்சாத்தி பழங்குடி மக்கள்மீது அந்தக் கொடுமை நடந்ததோ 1992 ஜூன் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களும். நாங்கள் சென்றதோ ஜூலை 14-ம் தேதி. இடையில் 20 நாட்களுக்கு மேலாக அங்கு நடந்த தாக்குதல்கள், கொடுமைகள் குறித்து வெளி உலகத்துக்கே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டிருந்தது என்பது அதிர்ச்சிஅளிக்கக்கூடிய உண்மை.
பிறகு, எங்களுக்கு மட்டும் எப்படித் தெரியவந்தது என்று எல்லோரும் இப்போதும் கேட்கிறார்கள். ‘தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்குவதற்காக மலைகள்தோறும் மாநாடுகளை நடத்திக்கொண்டிருந்தோம். அப்படி ஒரு மாநாடு தருமபுரி மாவட்டம் சித்தேரி மலையில் 1992 ஜூலை 7-ம் தேதி நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில், அப்போது சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த கே. பாஷாஜான், மாநிலத் துணைச் செயலாளராக இருந்த என். கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசிகளும் கலந்துகொண்டனர். அதில் வாச்சாத்தி கிராமத்தில் இருந்து தப்பி, சித்தேரியில் உறவினர் வீடுகளில் நான்கு பேர் தங்கியிருந்துள்ளனர். ஆதிவாசி மக்கள்மீது வனத் துறையினர் நிகழ்த்தும் கொடுமைகள் குறித்தும், அதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியம் குறித்தும் தலைவர்கள் பேசியுள்ளனர். அதைக் கேட்டு, நம்பிக்கை பெற்ற வாச்சாத்தியைச் சேர்ந்த இரண்டு பேர், வாச்சாத்தியில் நடந்த கொடுமைகளையெல்லாம் அந்த மாநாட்டில் சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ளனர். இதுதான் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் தொடக்கப் புள்ளி.
மாநாடு முடிந்த பிறகு அந்த நால்வரிடமும், நடந்த விவரம் முழுவதையும் தலைவர்கள் தனியாகக் கேட்டறிந்தனர். கட்டாயம் உதவுகிறோம் என்று அவர்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் அளித்துள்ளனர். அப்போது நான் கொல்லிமலையில் இருந்தேன். தொலைபேசி வசதியெல்லாம் இல்லை. எனவே, 9-ம் தேதி நேரில் வந்து என்.கிருஷ்ணமூர்த்தி மேற்கண்ட விவரங்களை என்னிடத்தில் தெரிவித்தார். மறுநாள் நாங்கள் மூவரும் கள்ளக்குறிச்சியில் சந்தித்துப் பேசினோம். பாஷாஜான் அப்போது கள்ளக்குறிச்சி அருகிலுள்ள கிராமத்தில் வாழ்ந்துவந்தார். ஜூலை 13-ம் தேதி அரூரில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும், பிறகு கிராமத்துக்கு நேரில் செல்வதென்றும் முடிவெடுத்தோம். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தோம். எதையும் காட்டிக்கொள்ளாமல் அவர் மனுவைப் பெற்றுக்கொண்டார். அவர் முன்னிலையில்தான் அத்தனை கொடுமைகளும் நடந்துள்ளன என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டோம்.
பாலியல் கொடுமைகள்

மறுநாள் ஜூலை 14-ம் தேதி காலை சுமார் 11.00 மணியளவில் நாங்கள் வாச்சாத்தி கிராமத்தை அடைந்தோம். அதில், கே.பாஷாஜான், என். கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். அண்ணாமலை, சித்தேரி மலை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கச் செயலாளர் ஏ. பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரூர் வட்டச் செயலாளராக அப்போது செயல்பட்டுவந்த சி. விசுவநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டச் செயலாளராகச் செயல்பட்டுவந்த எச்.ஆர்.கணேசன், கூடவே நான் உட்பட ஏழு பேர். இந்தக் குழுதான் முதன்முதலில் வாச்சாத்திக்குச் சென்றது. வனத் துறையினரால் இளம் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமையை அன்றுதான் நாங்கள் கேட்டுப் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். அன்று மாலை சேலம் பெண்கள் சிறையில் நாங்கள் சந்தித்த வார்டனும் அதை உறுதிசெய்தார். என்னுடன் வந்தவர்களில் பாஷாஜான், அண்ணாமலை, பொன்னுசாமி, கணேசன் ஆகியோர் மறைந்துவிட்டனர். இப்போது வழக்கு, தண்டனை பெற்ற குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்யப்பட்டு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. பழங்குடியினர்தானே, பேச்சற்றவர்கள்தானே என்று காலம்காலமாக அதிகாரத் தரப்பினர் கொடுமைகள் நிகழ்த்திக்கொண்டிருந்தனர். அவை யாவும் இனியும் தொடர முடியாது என்பதற்கான நம்பிக்கையைத் தந்ததுதான் வாச்சாத்தி வழக்குக்கான எங்கள் போராட்டம். பழங்குடியினர் மீதான அத்துமீறல்கள் ஓயும் வரை எங்கள் போராட்டமும் ஓயாது!
- பெ.சண்முகம், துணைத் தலைவர்,
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்.

தொடர்புக்கு: pstribals@gmail.com


.

No comments:

Post a Comment