P.K.SARASWATHI ,FREEDOM FIGHTER / ACTRESS




P.K.SARASWATHI ,FREEDOM FIGHTER  / ACTRESS

பி.கே.சரஸ்வதி – பழம்பெரும் தமிழ் நடிகை



1949-இல் வெளிவந்த ”ராஜாம்பாள்” என்ற படத்திலும்,  இதே ஆண்டில் வெளியான மற்றொரு சித்திரமான “இன்பவல்லி”யிலும் நடித்திருந்தவர்,  1952-இல் வெளிவந்த “அந்தமான் கைதி” படத்தில் இவர் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்திருந்தார்.

இதே ஆண்டு வெளிவந்த மற்றொரு படமான “மாப்பிள்ளை” என்ற படத்தில் 1953-இல் வெளிவந்த படங்களான “இன்ஸ்பெக்டர்” மற்றும் “நாம்” போன்ற படங்களிலும், 1966-இல் திருமலை-மகாலிங்கம் இயக்கத்தில் வெளியான மாபெரும் வெற்றிப்படமான “மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி” , இதே ஆண்டில் வெளியான தேவர் பிலிம்ஸின் வெற்றிப்படங்களான “தனிப்பிறவி”, முகராசி போன்ற படங்களிலும், எம்.ஜி.ஆரின் “நாடோடி” [1966] படத்திலும்,  1967-இல் வெளிவந்த ரவிச்சந்திரனின் வெற்றிச்சித்திரமான “மாடி வீட்டு  மாப்பிள்ளை”, 1973-இல் வெளிவந்த “நல்ல முடிவு” போன்ற பல படங்களில் இவர் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.




பி.கே.சரஸ்வதி 1997-இல் காலமானார்.

பி. கே. சரஸ்வதி தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பரதநாட்டியக் கலைஞரும் ஆவார்.
திரையுலக வாழ்க்கை
கேரள மாநிலத்தைச் சேர்ந்த எர்ணாகுளத்தை அடுத்த திருப்புணித்துறை என்ற ஊரைச் சேர்ந்தவர்.[1] பரவேலி என்பது இவரது இயற்பெயர். தந்தை குமாரன் நாயர் கொச்சி சமத்தானப் பட்டாளத்தில் பணியாற்றியவர்.[2] சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் தாயார் நாராயணி அம்மையாரின் பொறுப்பில் வளர்ந்தார்.[2] சிறுமியாக இருந்தபோது இவர் கொச்சி சமத்தான காங்கிரசு ஊர்வலத்தில் ஈடுபட்டதால் பள்ளியில் படிக்க சமத்தான அரசு அப்போது அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் ராஜநர்த்தகி என்ற இந்தித் திரைப்படத்திற்கு உலகப் புகழ் தேடித்தந்த பிரபல நடன ஆசிரியர் மாதவ மேனனிடம் சரசுவதியும் அவரது சகோதரி கமலாவும் கதகளி பயின்றனர். அப்போது அவருக்கு ஏழு வயது.[1]



பழசி ராஜா அல்லது வீர கேரளம், சாகுந்தலம் ஆகிய நாடிய நாடகங்களில் நடனமாடிப் புகழ் பெற்றார்.[1] இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று நடனமாடியுள்ளார். பம்பாயில் பிரசித்தமான 'சவன் ஆர்ட் சென்டர்' என்ற கலைக்கழகத்தில் பயின்று வெளியேறினார். உதயசங்கரின் கல்பனா மூலம் திரையுலகில் புகுந்த இவர் திருமழிசை ஆழ்வார், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி போன்ற பல படங்களில் நடனமாடியும், உப பாத்திரங்களில் நடித்தும் வந்தார்.[1] வேலைக்காரி, இன்பவல்லி போன்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். ராஜாம்பாள் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நிலைக்கு முன்னேறினார்.[3] சகோதரி கமலாவும் சில படங்களில் உப பாத்திரங்களில் நடித்து வந்தார்.[1]

குடும்பம்
எழுத்தாளரும் நடிகருமான வி. என். சம்பந்தம், இவரின் கணவராவார். சரஸ்வதி நடித்த மாப்பிள்ளை எனும் திரைப்படத்திற்கு சம்பந்தம் திரைக்கதையும், வசனமும் எழுதியிருந்தார்.[6]

நடித்த திரைப்படங்களின் பட்டியல்
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (1947)
போஜன் (1948)
திருமழிசை ஆழ்வார் (1948) (ஆதாரம் உள்ளது)
இன்பவல்லி (1949)
ராஜாம்பாள் (1951)
அந்தமான் கைதி (1951)[4]
மாணாவதி (1952)
மாப்பிள்ளை (1952)
அமரகவி (1952)
உலகம் (1953)
நாம் (1953)[5]
இன்ஸ்பெக்டர் (1953)
துளி விசம் (1954)
நண்பன் (1954)
நல்லவன் (1955)
மூன்று பெண்கள் (1956)

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER