NATURAM GODSE ,MURDERED GANDHIJI
BORN 1910 MAY 19 - 1949 NOVEMBER 15
.நாத்தூராம் விநாயக் கோட்சே (மராத்தி: नथूराम विनायक गोडसे) (மே 19, 1910 – நவம்பர் 15, 1949) என்பவர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி. காந்தியைக் கொன்ற வழக்கில் மரணதண்டணை அளிக்கப்பட்டு, அம்பாலா சிறையில் நவம்பர் 15, 1949, அன்று இறக்கும் வரை தூக்கிலிடப்பட்டான்
இளமைக்காலம்
நிற்போர்: சங்கர் கிஸ்தையா, கோபால் கோட்சே, மதன்லால் பக்வா, திகம்பர் பட்சே (ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்). அமர்ந்திருப்போர்: நாராயண் ஆப்தே, வினாயக் தாமோதர் சாவர்க்கர், நாத்துராம் கோட்ஸே, விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே
நாத்துராம் கோட்சே புனே மாவட்டம் பாரமதியில் பிறந்தவர். இவருடைய தந்தை வினாயக் வாமன்ராவ் கோட்சே ஒரு தபால் அலுவலக ஊழியர்; இவருடைய தாயார் லட்சுமி (திருமணத்திற்கு முன் தாயாரின் பெயர் கோதாவரி). பிறந்தவுடன் இவருக்கு ராமச்சந்திரா என்ற பெயர் இடப்பட்டது. இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 1 மகள் பிறந்திருந்தனர். அதில் 3 மகன்கள் பிறந்த சில நாட்களில் குழந்தையிலேயே இறந்தனர். அதன் காரணமாக ஏற்பட்ட அச்சத்தால், அவனுக்கு மூக்குத்தி
அணிவித்து அவரை பெண்பிள்ளைப்போல அலங்கரித்து சிறிது காலம் வரை வளர்த்தனர். அதனால் அவருக்கு நாதுராம் என்றப் பட்டபெயர் ஏற்பட்டது. மராத்தியில் நாதுராம் என்பது மூக்குத்தியைக் குறிக்கும் சொல். இவருக்குப்பின் ஒரு தமையன் பிறந்தார் அவர் பெயர் கோபால் கோட்சே அவர் ஆண்பிள்ளைப் போல் வளர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாத்துராம் தன் ஐந்தாவது வகுப்பு வரை பாரமதியிலும் பின்பு ஆங்கில வழிக்கல்வி கற்கவேண்டி புணேயில் தன் மாமியின் வீட்டில் தங்கி படித்தார்.[2]
காந்தியை கொன்ற வழக்கு மற்றும் தண்டணை
கோட்சே மகாத்மா காந்தியை ஜனவரி 30, 1948 அன்று மாலை நேர காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தில் அவரை மண்டியிட்டு வணங்கியபின் பெரேட்டா என்னும் இத்தாலிய அரைத் தானியிங்கிக் கைத்துப்பாக்கியால் காந்தியின் நெருக்கத்தில் மூன்று முறை சுட்டுக் கொலை செய்தார். காந்தி இந்தியப் பிரிவினைக்கு ஆதரவாக செயல்படுவதை எதிர்த்து இக்கொலைச் செயல் புரிந்தார். உடனே காவல் துறையினரிடம் தானே சரணடைந்தார். மே 27, 1948 ல் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தன்தரப்பு வாதங்களுக்காக அவன் எதிர்த்து வாதாடவில்லை. அவன் தரப்பு வழக்குரைஞர்கள் மிகவும் தந்திரமாக அவனது மனநிலையை காரணம் காட்டி வாதாடினர். இருப்பினும் நவம்பர் 8, 1949 அன்று கோட்சேவுக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது. அவனுடன் சேர்த்து நாராயண் அப்தேவுக்கும் மரணதண்டணை வழங்கப்பட்டது. இருவரும் அம்பாலா சிறையில்நவம்பர் 15, 1949 அன்று இறக்கும் வரை தூக்கிலிடப்பட்டனர்.
கோட்சேயின் வாக்குமூலம்
.
கோட்சேயுடன் வேறு நபர்கள் இந்த வழக்கில் சதிகாரார்களாகக் குற்றம் சாட்டப்பட்டனர். அவர் செய்த செயலில் தனக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது எனக் கூறினார். அவருடைய செயலுக்கு அவர் மட்டுமே முழுப் பொறுப்பு என்றும் அவர்களை தன்னோடு குற்றம் சாட்டியிருக்காவிட்டால், எந்த எதிர்வாதமும் செய்திருக்க மாட்டார் என்றும் கோட்சே தனது வாக்குமூலத்தில் கூறினார்.[3]
கோட்சே காந்திஜியை பாராட்டியது
.
கோட்சேவின் வாக்குமூலம் காந்திஜியின் செயல்களை எதிர்க்கோணத்தில் இருந்து பார்ப்பதகவே இருந்தது. என்றாலும், கோட்சே கூறியது "நாட்டுக்காக காந்திஜி துன்பங்களை ஏற்றார் என்பதை அவர் ஏற்கத் தயாராக இருக்கிறார். அவர் மக்கள் மனதில் விழிப்புணர்வை கொண்டு வந்தார். அவர் தனது சொந்த ஆதாயத்திற்காக எதுவுமே செய்து கொள்ளவில்லை" என்று பாராட்டிக் கூறினார்.[4]
டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார். வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:-
"தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவில்லை. தீண்டாமை ஒழியவும்,சாதி ஒழியவும் பாடுபட்டேன். எல்லா இந்துக்களையும் சமமாக நடத்த வேண்டும், அவர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று வற்புறுத்தி வந்துள்ளேன். சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றோர் எழுதிய நூல்களை படித்திருக்கிறேன்.
1946_ல் முகமதியர்களின் கொடுமை சொல்லொணாத துயரத்தைத் தந்தது. அரசாங்கத்தின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. நவகாளியில் நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் ரத்தத்தைக் கொதிப்படையச் செய்தன. அத்தகைய கொடுமைகள் புரிந்த முஸ்லிம்களை மகாத்மா காந்தி ஆதரித்தார். அதுமட்டுமல்ல டெல்லியில் ஒரு இந்துக் கோவிலில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் "குர்ஆன்" வாசகங்களைப் படிக்கச் செய்தார்.
முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியில் பகவத் கீதையை மகாத்மா காந்தியால் படிக்க முடியுமா? 1947_ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்15_ந்தேதி விளக்குகள் அலங்காரத்துடன் நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில் பஞ்சாபில் இந்துக்கள் உடைமைகளை முஸ்லிம்கள் தீக்கு இரையாக்கினார்கள். இந்துக்களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று நீரில் கலந்தோடியது
மேற்கு பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அதேபோல கிழக்குப் பாகிஸ்தானில் இருந்த முகமதியர்களும் நடந்து கொண்டனர். 11 கோடி மக்கள் வீடு இழந்தனர். இவ்வளவு நடந்தும் மகாத்மா காந்தி, "முகமதியர்களின் செயலில் ஒரு களங்கமுமில்லை" என்று பரிந்து பேசினார். என் ரத்தம் கொதித்தது. இனிமேல் நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை உருவானது.
காந்தியடிகளை கடுமையான வார்த்தைகளால் நான் தாக்க விரும்பவில்லை. அவருடைய கொள்கையும், மார்க்கத்தையும் முழுவதாக நிராகரிப்பதாகச் சொல்ல விரும்பவில்லை. பிரிட்டிஷ்காரர்கள், நம்மிடையே பிரிவினையை உண்டாக்கி, சுகமாக நம் நாட்டை ஆண்டு வந்தபோது, மகாத்மா காந்தி அதை எதிர்த்துப் போராடி பெரும் வெற்றியை நமக்குத் தந்தவர் என்பதை நான் மறுக்கவில்லை;அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்தியா பிரிக்கப்படுவதற்குக் காரணமாகவும், துணையாகவும் இருந்தவர் அவர். அதனால் அவர் இன்னும் நாட்டில் இருந்தால், இந்தியாவிற்குத் துன்பமும், இழப்பும் ஏற்படும். முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கும்,அட்டூழியத்திற்கும் பக்கபலமாக இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டேன்.
நல்லதோ, கெட்டதோ அவர் எடுக்கும் முடிவினையே இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் காணப்பட்டது. இந்தியா அவருடைய தலைமையை நாடினால் அது நம் நாட்டை எங்கேயோ கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். அவரே இங்கு உள்ள எல்லாவற்றையும் இயக்குபவர்; ஒரு நீதிபதி என்றும் கூறலாம். "சத்தியாக்கிரகம்" என்றும் அழியாது என்பது அவர் அறிந்த சூத்திரம். காந்திஜியே தன் செயல்களுக்குத் தாமே வழக்கறிஞரும், நீதிபதியும் எனலாம். அவரது அரசியல், பகுத்தறிவு இல்லாதது எனப் பெரும்பாலானோர் நினைத்தனர். ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார் தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது. காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை. பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும். நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை. சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார். முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது. 15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம்,நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார். பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை. பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. "கொலைக்கு நானே பொறுப்பு" என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன். 1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினார்.
காந்தியை ஏன் கொன்றார்கள்?
Posted by: அ.மு.செய்யது in அரசியல், இந்தியா, சிறப்புக் கட்டுரைகள் February 20, 2015 4 Comments
“ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவை காந்தி மதச்சார்பற்ற நாடு என்று சொன்ன 53 ஆம் நாள், அதாவது 1948- சனவரி 30, நாதுராம் கோட்சேவினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தியா சுதந்திரமடைந்தவுடன் காந்தி, பார்ப்பனர்களின் நடத்தையைப் பார்த்து சுயமரியாதைக்காரர் ஆகி விட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி இருக்கக் கூடும்” என்று பெரியார் தனது நாட்குறிப்பில் எழுதுகிறார்.
காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர். அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசுமளவுக்கு இன்று அரசியல் சூழல் தலையெடுத்திருக்கின்றது. ”இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தியே முக்கியமானவர். காந்தி இந்துக்களைக் கைவிட்டு விட்டு, முசுலிம்களை ஆதரித்தார். பிரிவினையின் போது, இந்து ஏதிலியர்களின் (அகதிகளின்) துயரைப் பாராது, முசுலிம்களைக் காப்பாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.மேலும் பாகிஸ்தானுக்கு இழப்பீடாக 55 கோடி ரூபாய் தர வேண்டும் என்பதையே காந்தி வலியுறுத்திக் கொண்டிருந்தார். காந்தி உயிரோடிருந்தால், ”இந்து ராஷ்டிரத்துக்கு” பெரும் தடைக்கல்லாக இருந்திருப்பார். ஆகவே பாரத மாதாவைக் காப்பாற்ற வேண்டுமென்றால், காந்தியைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை” போன்ற பல காரணங்களை இந்து வெறியர்களும் கோட்சே ஆதரவாளர்களும் இன்றளவும் முன் வைக்கின்றனர்.
காந்தியைக் கொன்றதற்கு “பாகிஸ்தான்” பிரிவினையையும் அதனையொட்டிய விளைவுகளையும் காரணங்களாக அடுக்கும், இந்துத்துவாதிகள் ஒரு செய்தியை வசதியாக மறந்து விடுகின்றனர். கடைசியாக 1948 சனவரி 20 ஆம் திகதியும், 30 ஆம் திகதியும் காந்தி உயிர் மீது குறி வைக்கப்படுவதற்கு முன்பாகவே, பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சிகள் நான்குமுறை நடந்திருக்கின்றன. தோல்வியடைந்த ஐந்து கொலை முயற்சிகளில் நான்கு முயற்சிகள், முசுலிம்களின் கொள்கைத் திட்டங்களில் ”பாகிஸ்தான்” என்பது இடம் பெறாத காலத்தில் நடைபெற்றவை. அதாவது பாகிஸ்தான் பிரிவினை பேச்சு எழுமுன்பே, காந்தியின் உயிருக்கு தேதி குறிக்கப்பட்டிருக்கிறது. 1934 இல், காந்தி காரில் சென்று கொண்டிருந்த போது, பூனாவில் ஒரு கை வெடிகுண்டு அவர் வண்டி மீது வீசப்பட்டது. அது தான் முதல் முயற்சி. அன்றிலிருந்து சனவரி 30 வரை, பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சிகள் நான்கு. பதிவு செய்யப்படாத முயற்சிகளின் எண்ணிக்கை பத்து.
தோல்வியடைந்த நான்கு தாக்குதல்களும் பூனாவைச் சேர்ந்த உயர் சாதி இந்துக்களால் நடத்தப் பட்டவை. இந்த நான்கில் மூன்று முயற்சிகள் “நாராயண் ஆப்தே-கோட்சே” கும்பலால் மேற்கொள்ளப்பட்டவை. இதில் இரண்டு முறை நாதுராம் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறான்.
மேற்சொன்ன அனைத்து முயற்சிகளிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இச்சதியில் ஈடுபட்ட அனைவருமே சித்பாவன பார்ப்பனர்கள். அனைவரும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு தொடர்புடையவர்கள். அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கியவர்கள்.
காந்தி கொல்லப்பட்ட சனவரி 30, 1948 ஆம் நாளுக்கு, பத்து நாட்களுக்கு முன்பே ஒரு கொலை முயற்சி நடந்திருந்தது. சனவரி 20 ஆம் நாள், தில்லி பிர்லா மாளிகையில் நடைபெற்றுக் கொண்டிருந்த வழிபாட்டுக் கூட்டத்தில், மதன்லால் பெஹ்வா என்ற பாகிஸ்தானிலிருந்து வந்த ஏதிலி, பயங்கரமான வெடிகுண்டை வீசி வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் காந்தி உயிர் தப்பினார். அவன் கைது செய்யப்பட்ட பிறகு, நடந்த விசாரணையில், காந்தியைக் கொல்வதற்கு சதி செய்து கொண்டிருந்த ஒரு கும்பலில் தானும் ஒருவன் என்பதை ஒப்புக் கொண்டான். அந்த கும்பலின் தலைவர்கள் பூனாவைச் சேர்ந்தவர்கள் என்பதையும், அவர்களில் ஒருவன் “இந்து ராஷ்டிரா”, “அக்ரானி” ஆகிய செய்தி இதழ்களின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருப்பவன் என்பதையும் அவன் ஒப்புக் கொண்டான். இவ்விரண்டும் மராத்தி மொழிக் கிழமை இதழ்கள். இவ்விரண்டையும் அச்சிட்டு நடத்தி வந்தவர்கள், நாதுராம் கோட்சேவும், நாராயண் ஆப்தேவும்.
சனவரி 20 ஆம் தேதி “மதன்லால்” ஆல் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி தோல்வியடைந்த பின், பம்பாயிலிருந்த இந்தி மொழிப் பேராசிரியரான ஜே.சி.ஜெயின் என்பவர், பம்பாய் மாநிலத்தின் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த மொர்ராஜி தேசாயிடம் ஒரு தகவலைத் தெரிவித்தார். மதன்லால் கஷ்மீரிலால் பெஹ்வா எனும் ஒருவன் தில்லியில் காந்தியைக் கொல்வதற்குத் திட்டமிட்ட கும்பலில் தானும் ஒருவன் என்ற தற்பெருமையோடு தன்னிடம் கூறியதை ஜே.சி.ஜெயின், மொர்ராஜி தேசாயிடம் எடுத்துக் கூறினார். தேசாய் ஜெயினின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அகமதாபாத்தில் தேசாய், சர்தார் படேலைச் சந்தித்த போது இத்தகவலைச் சொல்லியிருக்கிறார். இச்சதித்திட்டம் நிலவுவதைப் பற்றி படேல் ஒப்புக் கொண்டிருந்தாலும், ஜெயின் சொல்லும் செய்தி கற்பனையானது என்று அதனை ஏற்க மறுத்து விட்டார்.
பூனா காவல்துறைக்கும் பம்பாய் காவல்துறைக்கும் “இந்து ராஷ்டிரா மற்றும் அக்ரானி” இதழ்களைப் பற்றியும் அதன் ஊழியர்கள், பின்னணியில் உள்ள மனிதர்கள் ஆகியோரைப் பற்றியும் நன்கு தெரியும். இதில் வேடிக்கை என்னவென்றால், பூனாவிலுள்ள காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படவேயில்லை. உதவிக்காகக் கூட அவர்கள் கேட்கப்படவில்லை. சனவரி 20 கொலை முயற்சிக்குப் பின் காவல்துறை, சிறிதளவு முயற்சி செய்திருந்தாலும் காந்தி கொலையைத் தடுத்திருக்க முடியும். ஆனால் சனவரி 20 முதல் 30 வரை, காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகள், அவரது கொலையைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டவை என்பதை விடக் கொலையாளிகளைக் காப்பாற்றுவதற்காகவும், அவர்கள் எளிதாகத் தங்கள் திட்டங்களை நோக்கி முன்னேறுவதற்குத் துணை செய்வதாகவுமே அமைந்திருந்தன.
p130(1)
உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட கமுக்கமான அறிக்கை ஒன்றில், பல காவல்துறை அதிகாரிகளும் அதிகார வர்க்கத்தினரும் ராஷ்ட்ரிய சுயம் சேவக் ( ஆர்.எஸ்.எஸ்) சங்கத்திலும், இந்து மகா சபையிலும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அனைவரும் இந்துத் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவும் உதவியும் அளித்து வந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. காந்தியைக் கொல்லும் முயற்சிகள் அனைத்திற்கும் அதிகார வர்க்கத்தினரும் காவல்துறையினரும் ஒட்டு மொத்தமாக உதவி செய்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் வெளிப்படையாகிறது. தன்னுடைய 22 ஆம் வயதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்ஸோடு இணைந்திருந்தவன் நாதுராம் கோட்சே. வி.டி.சாவர்க்கரை தெய்வத் தன்மை கொண்ட ஒரு குருவாக பின்பற்றி வாழ்ந்தவன்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, செய்ய ஒன்றும் இயலாத நிலையில், நாட்டையே நடுங்கச் செய்யக்கூடிய ஏதேனும் ஒன்றைச் செய்தாக வேண்டும் என கோட்சேவும் அவரது கூட்டாளிகளும் ஒன்றாக அமர்ந்து சிந்தித்தார்கள். மூளையை கசக்கிப் பிழிந்தார்கள். பாகிஸ்தானுக்குச் செல்லக்கூடிய ஆயுத இரயில் ஒன்றைப் பாகிஸ்தானிலேயே வெடிக்கச் செய்யலாமா? ஜின்னாவையும் அவரது சட்டசபையையும் ஒரே வீச்சில் அழித்து விடலாமா ? பாலங்களை வெடிக்கச் செய்யலாமா? அப்போதுவரை இந்தியாவுடன் இணையாதிருந்த ஹைதராபாத் மாகாணாத்தில் கொரில்லாத் தாக்குதல்கள் நடத்தலாமா ? இப்படியெல்லாம் சிந்தித்தார்கள். அதற்காக அதிக அளவு பணச் செலவு செய்து, ஆபத்துகளைப் பற்றி கவலைப் படாமல், வெடிபொருள்களையும் ஆயுதங்களையும் வாங்கிக் குவித்தார்கள். இந்தத் திட்டங்களையெல்லாம் விட ஆகச் சிறந்த திட்டம் ஒன்றை அவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். “தேசத் தந்தை” என்று கருதப்படும் காந்தியின் உயிரை முடிப்பது என்று வெளிப்படையான பெருமித்தோடு நாதுராம் கோட்சே பின்னர் வாக்குமூலம் அளித்தான்.
காந்தியை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கம், இந்தியாவை ஒரு முழுமையான இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற விபரீதக் கனவிலிருந்து பிறப்பெடுத்தது. பிரிவினை முழுமையாக அமைய வேண்டும். இந்தியாவில் ஒரு முஸ்லிம் கூட இருக்கக் கூடாது. அனைவரும் விரட்டியடிக்கப்பட வேண்டும். அல்லது கொடூரமாக கொல்லப்பட வேண்டும். இந்தத்திட்டத்தை காந்தி முறியடித்து விட்டார். பிரிவினையின் போது முசுலிம்கள் வட இந்தியப்பகுதிகளிலிருந்து முழுமையாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டும். இது நடந்து விட்டால், நாட்டின் எஞ்சிய பகுதிகளிலிருந்து முசுலிம்களை விரட்டுவது மிக எளிதாகி விடும். அதன் பிறகு, “உண்மையான இந்து நாடு” என்பது உருவாகி விடும். இதே முறையை முசுலிம் லீக்கும் மேற்கொண்டது. மேற்கு பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப்புற மாநிலங்கள் கிழக்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த இந்துக்களை பாகிஸ்தானை விட்டு வெளியேறாவிட்டால் கொன்று விடுவோம் என்று அச்சுறுத்தி வந்தார்கள்.
நாட்டை விட்டு ஓடும் நிலையிலிருந்து முசுலிம்கள் காந்தியின் முயற்சிகளால், மீண்டும் உறுதியளிக்கப்பட்ட மக்களாக இங்கே இருந்தார்கள். வெறி கொண்ட இந்துத் தீவிரவாதிகள், பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உருவான பின்பு, இந்தியாவில் வாழ்வதற்கான தகுதியை முசுலிம்கள் இழந்து விட்டார்கள் என்றும், தம்முடைய கனவுகளுக்கெல்லாம் காந்தி தடைக்கல்லாக இருக்கிறார் என்றும் கருதத் தொடங்கினர். இந்து முசுலிம் கலவரங்களில் எண்ணற்றோர் கொல்லப்பட்டனர். இக்கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வரவும், இந்து முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்தியும், பாகிஸ்தானுக்கு உறுதியளிக்கப்பட்ட 55 கோடி ரூபாய் ( பிரிவினையின் போது நான்கில் ஒரு பங்கு, அதாவது 220 கோடியில் ஒரு பங்கு) பணத்தை திருப்பித் தரவும் கோரி காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கலானார். காந்தி மவுண்ட் பேட்டனோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கும் போதே, இம்முடிவை எடுக்கலானார். இந்தியாவின் பதினான்கு மொழிகளில் இச்செய்தி வெளியானது. பூனாவில் “இந்து ராட்டிர” செய்தித்தாள் அலுவலகத்தில், ஒரு தொலையச்சுக் கருவியில் இதைப் படித்தார்கள் ஆப்தேவும் கோட்சேவும். காந்தியைக் கொல்ல வேண்டும் என முடிவெடுத்ததும் அப்போது தான்.
……………………………
67 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. மீண்டும் பழைய நிலைமைக்கே இந்த நாடு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் வாழ்வதாக இருந்தால் முசுலிம்கள் இந்துக்களாக மாற வேண்டும். அல்லது முசுலிம்கள் வெளியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அவர்கள் சொந்த நாட்டில் இரண்டாந்தர, மூன்றாந்தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என்ற கருத்தோட்டம் ஓங்கியிருக்கின்றது. இந்துத் தீவிரவாதிகளின் தலைவர்கள், அதிகார பீடத்துக்கு வந்து விட்டார்கள். அவர்களின் “இந்து ராஷ்டிர” கனவு புத்துயிர் பெற்றிருக்கின்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முசுலிம்களுக்கும் எதிரான கருத்தியல் வன்முறை, ஒரு அரசியல் வடிவத்தைப் பெற்றிருக்கின்றது.
ஒருவேளை காந்தி என்றொரு ஆளுமை அரசியல் அரங்கில் இல்லாமல் போயிருந்தால், இந்தியா ஒரு முழுமையான இந்து நாடாக மாறிப் போயிருந்திருக்கும். பாகிஸ்தானைப் போல இலங்கையைப் போல, மதவாத இனவாத நாடாக இந்தியா உருவாகியிருக்கும். அதனால் தான் காந்தியை எப்படியேனும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற இந்துத்துவ வெறியர்கள் தங்கள் செயல்திட்டங்களை வகுக்க வேண்டியிருந்தது. ஆனால் காந்தியின் மறைவு, அவர்களின் கனவுகளை தவிடு பொடியாக்கியது. “இசுமாயில்” என்று பச்சைக் குத்திக் கொண்ட கோட்சே, காந்தியைக் கொன்ற அடுத்த வினாடி, அவன் ஒரு முசுலிம், அவன் ஒரு முசுலிம் என்று திட்டமிட்டு, பிர்லா மாளிகையில் குரல் எழுப்பியவர்களும் பச்சைப் பார்ப்பன இந்து வெறியர்களே. ஆனால் அவன் ஒரு இந்து அப்பட்டமாக வெளிச்சமாகியது.
GODSE_2256046f
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும், காந்தி கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பா.ஜ.கவினர் வாதாடுகின்றனர். அவர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே, ஆர்.எஸ்.எஸ்.காரர்தான் என்று உறுதி செய்து, காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சே, பிரண்ட்லைன் இதழுக்கு 1994 ஆம் ஆண்டு அளித்த நேர்காணல் இதை உறுதி செய்கிறது.
“நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். சில் இருந்தவர்கள் தாம். நாதுராம் (கோட்சே) சத்பத்ரேயா, நான், கோவிந்த் ஆகிய நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களே. நாங்கள் எங்கள் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ்.சில்தான் அதிகமாக வளர்ந்தோம். நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.இல் (காரியவாஹ்) செயலாளராக இருந்தான். அவன் காந்தி கொலை வழக்கில் கொடுத்த வாக்குமூலத்தில்தான் ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகி விட்டதாகக் குறிப்பிடுகின்றார். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்.சின் அப்போதைய தலைவர் கோல்வால்கரும், ஆர்.எஸ்.எஸ்.சும், காந்திஜியின் கொலைக்குப் பின் பயங்கர கெடுபிடிகளுக்கு உள்ளானதுதான். ஆனால், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சை விட்டு வெளியேறவில்லை. அத்வானி, கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.விற்கும் சம்பந்தமில்லை என்று கூறி இருக்கின்றாரே? என்ற கேள்விக்கு, அதைத் தான் மறுப்பதாகவும், அத்வானி சொல்வது கோழைத்தனம் என்றும் பதிலளித்திருக்கிறான் கோபால் கோட்சே. 1944ஆம் ஆண்டு முதல் இந்து மகா சபைக்காகப் பணி செய்யத் தொடங்கிய நாதுராம் கோட்சே, அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பணி செய்யத் தொடங்கினான். ஆர்.எஸ்.எஸ் இல் காரியவாஹ் என்ற அறிவுத்துறை செயலாளராகவும் இருந்தததாகவும் கோபால் கோட்சேவின் நேர்காணல் தெரிவிக்கிறது.
காந்தியின் மரணம் என்பது ஆர்.எஸ்.எஸ் ஒரு வன்முறை இயக்கம் என்பதற்கான வெளிப்படையான, ஆதாரப்பூர்வமான சான்று. இப்படியான ஒரு கொடூரமான வன்முறைப் பின்னணி கொண்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் ஒரு அரசியல் முகமான பா.ஜ.க தற்போது ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கைககளை, இந்தியா முழுமைக்கும் செயல்படுத்துவதற்கு உறுதி பூண்டிருக்கும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் அத்தகைய அரசுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பா.ஜ.க அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையின் உயர் பொறுப்பில் இருக்கிறவர்கள் என்று அத்தனை பேரும் ஆர்.எஸ்.எஸ் எனும் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் தான் நாங்கள் என்பதை கூச்ச நாச்சமின்றி பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் கூட தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில், பா.ஜ.க உறுப்பினர்கள், தாங்கள் சிறுவயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதை வெட்கமின்றி, களிப்போடு அறிவித்து மகிழ்கின்றனர். இதை விட ஒரு ஆபத்தானச் சூழலை, இந்திய நாடு ஒரு போதும் சந்தித்திருக்க முடியாது.
அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பில் இருந்த “மதச்சார்பின்மை, சோசலிசம்” போன்ற சொற்கள் இன்று அடியோடு நீக்கப்படுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த சொல்லாடல்கள் தானே, மதச்சிறுபான்மையினரை பாதுகாக்கிறது. இந்தச் சொல்லாடல்களை வைத்துத் தானே, வாதங்களின் போது இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று இந்துத்துவாதிகளை நோக்கி, கேள்வி கேட்க முடிகிறது. இது தானே சனநாயகத்தைப் பாதுகாக்கிறது. இந்தியா முழுமையான இந்து நாடாக மாறாமலிருப்பதற்கு இந்தச் சொல்லாடல் தானே தடைக்கல்லாக இருக்கிறது. ஆகவே அதை நீக்கினால் என்ன தவறு? என்று கேட்கிறார் ஒரு பா.ஜ.க அமைச்சர். வாருங்களேன் விவாதிக்கலாம் என்கிறார் இன்னொரு அமைச்சர்.
இந்தியா இந்து நாடாக மாறுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்த காந்தி, அப்புறப்படுத்தப்பட்டார். அதைப் போலவே,மதச்சார்பின்மையைக் குறிக்கும் வாக்கியங்களும் இனி இந்திய அரசியல் சட்ட வரைவுகளிலிருந்து அப்புறப்படுத்தப்படும். ஆகவே காந்தியைக் கொன்றதும் படுகொலை தான்.
மதச்சார்பற்ற வாக்கியங்களை நீக்குவதும் படுகொலை தான்.
முதல் கொலையைச் செய்தது ஆர்.எஸ்.எஸ். இரண்டாவது கொலையைச் செய்யவிருப்பதும் ஆர்.எஸ்.எஸ். முதல் கொலையை வேடிக்கை பார்த்தோம். இரண்டாவது கொலையையும் வேடிக்கை பார்க்கப் போகிறோமா?
அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்
`கோட்சே ஒரு இந்து தீவிரவாதி' என்று எதார்த்தமாகக் கமலின் வார்த்தைகளால் தொடங்கிய பிரச்னை இன்று தீவிரமாக உருவெடுத்து, நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்னை ஒருபடி மேலேசென்று காந்தியைக் கோட்சே சுட்டது சரியா, தவறா என்ற விவாதமாக இப்போது தடம்மாறிவிட்டது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பி.ஜே.பி. வேட்பாளர் சாத்வி பிரக்யா, மன்னார்குடி ஜீயர் என இந்துத்துவவாதிகள் அனைவரும் கோட்சே-வின் செயலுக்கு நியாயம் கற்பித்து வருகின்றனர். இந்த நிலையில், கோட்சே உறுப்பினராக இருந்த, கோட்சேவுக்கு இன்றளவும் வீரவணக்கம் செலுத்திவரும் அகில பாரத இந்து மகா சபையின் தமிழகத் தலைவர் தா.பாலசுப்ரமணியனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
காந்தியின் படுகொலைக்குக் காரணமான கோட்சேவை தேச பக்தர் என்று பி.ஜே.பி. வேட்பாளர் சாத்வி பிரக்யா கூறியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
``இந்த நாடு நல்லா இருக்க வேண்டும், நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று நினைத்த மிகப்பெரிய மகான் நாதுராம் கோட்சே. அவர் தேசத்தின் மீது வைத்திருந்த மிகப்பெரிய பற்றின் வெளிப்பாடுதான் காந்தியின் கொலை. எங்களைப் பொறுத்தவரையில் உடல்முழுவதும் தேச பக்தி நிறைந்த ஒரு மனிதன் கோட்சே".
``காந்தியும் ஒரு தேச பக்தர்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவரால் இந்த நாட்டுக்கு நடந்த நன்மையைவிடத் தீமைகள்தான் அதிகம். ஒரு நல்ல இந்துத்துவவாதியாக, ஒரு பழுத்த இந்துவாக இருந்துகொண்டு, முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார். நவகாளி சம்பவத்தின்போது, ஏராளமான இந்துக்கள் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டனர். பல இந்துப் பெண்களை முஸ்லிம்கள் தூக்கிச் சென்றனர். இதற்குச் சமாதானம் செய்யவந்த காந்தியின் நிலைப்பாடு முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே இருந்தது. இதில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குழந்தைகளை நாம் தத்தெடுத்து வளர்க்கவேண்டும் என்றார். தேசப்பிரிவினையின்போது பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக அடித்து விரட்டப்பட்டனர். இந்த நாடு கண்ணீர் சிந்தியதோ, இல்லையோ, ரத்தம் சிந்தியது. ஆனால், காந்தியோ பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தார். இவை இப்படியே தொடர்ந்தால், மேலும் 10 ஆண்டுகள் காந்தி உயிரோடு இருந்திருந்தால், பாரதநாடு இல்லாமல் போய்விடும் என்ற முன்யோசனையில்தான் காந்தியைக் கொன்றார் கோட்சே. ஆனால், கோட்சேவின் தேசப்பற்றைப் பொறுத்தவரை, அவர் தன் மரண வாக்குமூலத்தில், `நான் இறந்த பின் என் அஸ்தியைச் சாதாரண நதிநீரில் கரைக்கக் கூடாது, அகண்ட பாரதம் அமைத்து, சிந்து நதி என்றைக்கு நம் பாரதத்திற்கு வருகிறதோ, அதில்தான் கரைக்க வேண்டும்' என்றிருக்கிறார். இன்றுவரை இந்து மக்கள் அவரின் அஸ்தியை புனேவில் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அவர் தூக்கிலிடப்பட்ட நாளான நவம்பர் 15-ம் தேதி, அவரின் தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி, பாகிஸ்தானை இந்தியாவோடு இணைத்து, சிந்து நதியை மீட்டு, அகண்ட பாரதம் அமைப்பதற்காக சங்கல்பம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆக, கோட்சேவின் தியாகத்திற்கும், தேசபக்திக்கும் முன்னால், காந்தி ஒரு சின்ன புள்ளியாகிப் போய்விடுவார்”.
``காந்தியை கோட்சே சுட்டது சரிதான்!” - இந்து மகாசபைத் தலைவர் பேட்டி
.
``காந்தியை கோட்சே படுகொலை செய்ததை நியாயப்படுத்துவதுபோல உள்ளதே உங்களின் பேச்சு?"
``மகாபாரதப் போரானது, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கின்ற ஒரு யுத்தம். அதில் பீஷ்மர், துரியோதனன் பக்கம் நிற்கின்றார். அப்போது கிருஷ்ணர் சொல்கிறார், `பீஷ்மர் நல்லவர்தான். ஆனால் அதர்மத்தின் பக்கம் நிற்பதால், தர்மத்தை காப்பற்றவேண்டுமெனில் அவர் அழிக்கப்பட வேண்டும்' என்று. அதேபோலத்தான், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பார்வையில் காந்தி அழிக்கப்பட வேண்டியவர். அதுதான் சரி. ஒரு நல்ல இந்துத்துவவாதி காந்தியை சுடத்தான் செய்வான்!”
``நாடே தேசத் தந்தையாகப் பார்க்கின்ற மகாத்மா காந்தியை இப்படிச் சொல்லலாமா?"
``பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து காந்தி உண்ணாவிரதம் இருந்தார். பாகிஸ்தானின் விசுவாசியாக, ஜின்னாவின் ஆதரவாளராகவே செயல்பட்டார். இதை கோட்சே சொல்லும்போது, `காந்தி பாரதத்திற்காக உண்ணாவிரதம் இருந்தால், அவரைப் பாரதத்தின் தேசத்தந்தை எனலாம், ஆனால் அவரோ பாகிஸ்தானுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் தேசத்தந்தைதான், ஆனால் அது பாகிஸ்தானுக்கு' என்றார். காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் யாரால் கொடுக்கப்பட்டது, எப்போது கொடுக்கப்பட்டது? அரசாங்கம், நிர்வாகிகளால் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததா என்று மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். ஆனால், அப்படி ஒரு ஏற்பாடு எங்கும் நடக்கவில்லை என்று மத்திய அரசே கூறியது”.``ஆர்.எஸ்.எஸ். வேறு, இந்து மகா சபை வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான். ஆர்.எஸ்.எஸ்ஸின் இன்னொரு அரசியல் பிரிவுதான், இந்து மகாசபை. இந்து மகாசபையின் குழந்தைதான் ஆர்.எஸ்.எஸ். ஆரம்பகட்ட இந்து உணர்வை ஊட்டி, வளர்த்தெடுத்து பின் அவர்களுக்கான திசையில் அனுப்புவதுதான் ஆர்.எஸ்.எஸ். இதில்தான் கோட்சே கடைசிவரை இருந்தார். இந்து மகாசபையில்தான் செயல்பட்டார். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது".
``கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ் என்று அவரின் குடும்பமே ஏற்றுக்கொண்டது. ஆனால், அத்வானி உள்ளிட்ட பி.ஜே.பி. தலைவர்கள் இதை மறுக்கின்றனரே?"
``அப்படிச் சொல்வது, `எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை' என்று சொல்வதுபோல. கோட்சே சாகும்வரை ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபையில்தான் இருந்தார். அதைத் தோற்றுவித்த சாவர்க்கரின் உண்மையான, தீவிரமான விசுவாசியாக இருந்தார். அவர்களின் சிந்தனைகளைச் செய்துமுடிக்கும் தொண்டனாகவே இறுதிவரை இருந்தார்”.
.
No comments:
Post a Comment