நீரும் நெருப்பும் படத்திற்கு எம்ஜிஆரால் தள்ளுபடி செய்யப்பட்ட எம் எஸ் வியின் சூப்பர் கம்போசிங் ,,,பாடல் ,,
காதல் விளையாட ஒரு பாடல்
_____________________________
தேவராஜ் - மோகன் இயக்கத்தில் 1974 ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் " கண்மணிராஜா " . இதில் சிவகுமார், லட்சுமி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். கண்ணதாசனின் அழகிய பாடல் வரிகளுக்கு M. S. விஸ்வநாதன் இசையமைத்தார்.
S. P. பாலசுப்ரமணியம், P. சுசீலா பாடும் இப்பாடல் ஒரு காலத்தில் வானொலியையும் ஒலிபெருக்கிகளையும் கட்டி ஆண்டது. இளமையான சிவகுமாரும் லட்சுமியும் தோன்றும் காட்சிகள் அழகானவை.
1974 ஆம் ஆண்டு வெளிவந்த "கண்மணி ராஜா" படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் ஓர் அற்புதமான மெலோடி பாடல் இது. இந்த காதல் விளையாட பாட்டில் சரணத்திற்கு பிறகு வரும் இந்த ஹம்மிங்...//ஹே ஹே ஹே ஹே ஆஹா அஹா ஹா ஹா... ஆ ஆ ஹா ஹா.. ஒஹோ ஆஹா ம்ஹும்.. லா லா ஆஹா ஆ.. ஆஹா ஹாஹ ஹேஹெ ஹேஹெ..// சுசீலம்மாவுடன் சேர்ந்து பாலு அவர்கள் முப்பாற்கடலை கடைந்து நமக்கு தேவாமிர்தமாக தருகிறார்கள். ஆஹா.. ஆஹா..கேட்க கேட்க காதுக்கு எவ்வளவு இனிமை. எனக்கு ஓர் ஆசை இருவரும் ஒரு பாடல் முழுவதும் வரிகளே இல்லாமல் ஹம்மிங்கிலே ஒர் பாட்டு பாடவேண்டும். இந்த ஜென்மத்தில் அது நடக்குமா?
படம்: கண்மணிராஜா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்,
பாடியவர்கள்: பாலும், பி.சுசீலா
வருடம்: 1974
பாடலாசிரியர்: கண்ணதாசன்
காதல் விளையாட கட்டிலிடு கண்ணே
தூயமகனாட தொட்டிலிடு கண்ணே
எண்ணங்களின் இன்ப நடனம்
கன்னங்களின் மீது அன்பு நிலை எழுதும்
காதல் விளையாட கட்டிலிடு கண்ணா
தூயமகனாட தொட்டிலிடு கண்ணா
ஹே ஹே ஹே ஹே
ஆஹா அஹா ஹா ஹா
ஆ ஆ ஹா ஹா
ஒஹோ ஆஹா ம்ஹும்
லா லா ஆஹா ஆ..
ஆஹா ஹாஹ ஹேஹெ ஹேஹெ
செந்தூர சிங்காரம் கொண்டாடும் பெண்ணுக்கு
என் உள்ளம் சொர்க்கம் தரும்
செவ்வாயின் மீது ஊரும் தேனாற்றில் நானாட
பொல்லாத வெட்கம் வரும்
கண்ணோடு கண்னோக்கி பண்பான பெண் கொண்ட
காளைக்கு மோகம் வரும்
அன்பான மாப்பிள்ளை ஒன்றாகும் நேரத்தில்
ஆசைக்குள் அச்சம் வரும்
மண்ணில் வரை தங்கமலர்கள்
பெண் கொண்ட காதல் பெருமை என எழுதும்
செவ்வாணக்கோலங்கள் சீராட்டும் மேகங்கள்
பொன்னூஞ்சல் போடட்டுமே
ஜில்லென்று பூங்காற்று பல்லாண்டு நாம் வாழ
தென்பாங்கு பாடட்டுமே
நீராட்டு தீராமல் தேரோட்டும் புஷ்பங்கள்
பாராட்டி பேசட்டுமே
நேராக கிள்ளைகள் ஆராத்தி தட்டோடு
தாலாட்டு பாடட்டுமே
என்றும் இது நின்று நிலவும்
என் வாழ்க்கை வாணம் இனிமையுடன் திகழும்
காதல் விளையாட கட்டிலிடு கண்ணா
தூயமகனாட தொட்டிலிடு கண்ணா
.
No comments:
Post a Comment