ERODE
சுட்ட பதிவு!
ஈர ஓடு=ஈரோடு
---------------------------
---------------------------
கொங்கு மண்டலத்திலிருக்கும் 'ஈரோடு என்ற பெருநகரின் பெயர்க் காரணம் என்ன: என்று தெரியுமா?' என்று தன்னைத் தரிசிக்க வந்த ஈரோட்டுப் பக்தரிடம் ஒரு முறை காஞ்சி மாமுனிவர் மகாப் பெரியவர் கேட்டார்.
ஈரோட்டுக்காரர் "திருதிரு' வென விழித்தார்.
அங்கிருந்த யாருக்கும் பெயர்க் காரணம் தெரியவில்லை.
பிறகு மகாப் பெரியவரே விளக்கம் சொன்னார்:
"ஈரோடு நகரில் எழுந்தருளியிருக்கும் 'ஆந்ர கபாலீஸ்வர'ரின் பெயர்தான் அந்த ஊருக்கு வழங்கப் பட்டிருக்கிறது"
பழமை வாய்ந்த அந்த ஈஸ்வரனின் பெயரின் தமிழ் அர்த்தமே 'ஈரோடு'தான்.
ஆந்ர என்றால் ஈரம்; கபாலி என்றால் கபாலம் அதாவது ஓடு; மண்டை ஓடு.
ஈரமுள்ள ஓடு என்பதன் சுருக்கமே ஈரோடு.
' காஞ்சிப் பெரியவரின் அற்புதங்கள்'பற்றி விரிவாக விளக்கும் Youtube பதிவுகளிலிருந்து
சுடாத பதிவு
பவானி ஆறு ஈரோட்டை ஒட்டி ஓடுவது நாம் அறிந்ததே .அவ்வப்போது நதிகளில் வெல்லாம் வந்து நிறைய பேர் அடித்து செல்லப்பட்டனர் . இந்த துயர் துடைக்க ஆங்கிலேயர் பிரப் முன் வந்தார் .உயரமான தடுப்பு சுவர் ஒன்றை கட்டி மக்களை காப்பது என்பதே .ஈரோடு தாழ்வான பகுதி என்பதால் இரண்டு நீளமான தடுப்பு சுவர் கட்டி மக்களை அதற்கு இடையில் குடிவைப்பதே இதன் நோக்கம் .அதன் படி தற்போது பஸ் நிலையத்தை ஒட்டி கட்டப்பட்ட ரோடும் ,தற்போதைய பிரப் ரோடும் கட்டப்பட்டு மக்கள் குடி வைக்கப்பட்டனர் . இவ்விரண்டு ரோடுகளும்இரு ரோடு என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி ஈரோடு ஆனது
-
BROUGH MEMORIAL CHURCH
-
BROUGH MEMORIAL CHURCH
No comments:
Post a Comment