Friday 11 June 2021

PARAMBU MALAI ALIAS PRAN MOUNTAIN

 


PARAMBU MALAI ALIAS PRAN MOUNTAIN


பிரான்மலை: `வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்!’ - கல்குவாரியால் சிதைக்கப்படும் பாரி ஆண்ட மலை?

அருண் சின்னதுரை

சி அரவிந்தன்

பிரான்மலை

பிரான்மலை


பாரி ஆண்ட பறம்புமலை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம். பிரான்மலை என மாற்றமடைந்த இந்த மலையில் இந்து, இஸ்லாமியர்கள் அருகருகே வழிபடும் ஸ்தலமும் உள்ளன. ஆன்மிக ஸ்தலமாக மட்டுமல்லாமல் இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களும் நிறைந்துள்ளன.


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது பிரான்மலை. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பிரான்மலையை முல்லைக்கு தேரீந்த `பாரி’ ஆண்ட பறம்பு மலை எனப் போற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த மலையின் குறிப்பிட்ட பகுதிகள் தனியாருக்குச் சொந்தமான பட்டா இடமாகும். இந்த மலை அடிவாரத்தில் உள்ள 'கல் மற்றும் மண்' நிறைந்த குன்றுகளை இடத்தின் உரிமையாளர்கள் கல்குவாரி நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளதால், அவர்கள் அதைச் சிதைத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.



கல்குவாரி அமைந்துள்ள இடம் 

கல்குவாரி அமைந்துள்ள இடம்

இந்நிலையில் இந்த மலை அருகே கல் குவாரி நடப்பதை பார்வையிட உள்ளதாக, பல்வேறு தமிழ் ஆதரவு இயக்கங்கள் இணைந்து பிரான்மலை நோக்கி சென்றனர். அப்போது எஸ்.வி மங்களம் காவல்துறையினர் சுமார் 65-க்கும் மேற்பட்ட நபர்களை சிறைபிடித்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் சமூக வளைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. இது குறித்து மக்கள் மன்றம் ராஜ்குமார், தமிழ் தேசிய முன்னணி கர்ணன் கூறுகையில், ``பாரி ஆண்ட பறம்புமலை வரலாற்று சிறப்பு மிக்க இடம். பிரான்மலை என மாற்றமடைந்த இந்த மலையில் இந்து, இஸ்லாமியர்கள் அருகருகே வழிபடும் ஸ்தலமும் உள்ளன. ஆன்மிக ஸ்தலமாக மட்டுமல்லாமல் இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்று சின்னங்களும் நிறைந்துள்ளன.



இந்த மலை தனியார் பட்டா இடத்தின் கீழ் வருகிறது. இந்நிலையில் இந்த மலையின் அடிவாரத்தில் கல் குவாரி அமைக்கப்பட்டு கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கப்படுகிறது. இதனால் மலை மற்றும் குவாரியைப் பார்வையிட கிளம்பும்போது பிரான்மலை அருகே காவல்துறையினர் கைது செய்து எங்களை சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்தனர்.



பிரான்மலை உச்சியில் இந்து மற்றும் இஸ்லாமிய கோயில்கள்

பிரான்மலை உச்சியில் இந்து மற்றும் இஸ்லாமிய கோயில்கள்

பாரம்பர்யம்மிக்க பிரான்மலையைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு, இதில் சம்பந்தப்பட்ட நபர்களிடம், இயற்கைக்கு எதிராக செயல்பட்டு வரும் கல்குவாரியை நிறுத்தி, மலையைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம்" என்றார்.



பிரான்மலைக்குப் பாத்தியப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி இராமலிங்கம், ``பிரான்மலையில் எங்களது முன்னோர்கள் ராஜாக்கள் காலத்தைத் தொடர்ந்து வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்திலும் பாரம்பர்யமாக வாழ்ந்துள்ளனர்.



பிரான்மலை செல்லும் வழி

பிரான்மலை செல்லும் வழி

மேலும் மலையைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு உதவிகளையும் செய்துள்ளனர். சுதந்திரத்துக்குப் பின் எங்கள் பங்காளிகளுக்கு பட்டா எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மலையைப் பாதுகாக்க வேண்டும் எனப் பங்காளிகள் இணைந்து செலவு செய்து மலையில் கோயில் கட்டி பராமரிக்கிறோம்.



இந்நிலையில் மலையின் அடிவாரத்தின் அருகே உள்ள மண் குன்றை கல் குவாரி அமைக்க லீசுக்கு கொடுத்துள்ளோம். ஆனால், நாங்கள் பாரம்பர்யமிக்க மெயின் மலையில் கல்குவாரி அமைத்துள்ளதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டுகின்றனர். மலைக்கும் குவாரி அமைத்திருக்கும் இடத்துக்கும் சம்பந்தமே இல்லை. மேலும், இந்த குவாரி அரசு அனுமதியுடன் முறைப்படி நடைபெறுகிறது. குறிப்பிட்ட யாரோ சிலர் இதை பிரச்னையாக மாற்ற வேண்டும் என நினைக்கின்றனர்" என்றார்.


பிரான்மலை 

பிரான்மலை

காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, ``கொரோனா ஊரடங்கு சமயத்தில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நபர்கள் மலையில் ஆய்வு செய்யப்போவதாக ஒட்டுமொத்தமாகக் கிளப்பினர். அசாதாரண சமயத்தில் அனுமதி பெறாமல் 60-க்கும் மேற்பட்டோர் கிளம்பியதால் பிரச்னைகள் உருவாகிவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக அவர்களை வழியிலேயே மறித்து சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக வைத்தோம்" என்றனர்.


No comments:

Post a Comment