BABY INDHIRA CHILD ACTRESS
இவரை 1970-80 களின் திரை ரசிகர்களுக்கு நினைவிருக்கும். குழந்தை நட்சத்திரமாக 1972 ம் ஆண்டில் டாக்டர்.ராஜ்குமாரின் கன்னட படத்தில் அறிமுகமானார். பின் தமிழ், தெலுகு, மலையாள படங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
எந்த மொழிப்படமாய் இருந்தாலும் தன் சொந்தக்குரலிலேயே பேசுவார்.டார்லிங், டார்லிங், டார்லிங் படத்தில் பாக்யராஜீக்கு தங்கை- பாயும்புலி படத்தில் ரஜினிக்கு தங்கையாகவும் - சத்யா படத்தில் கமலஹாசனுக்கு தங்கை- "வெள்ளை ரோஜா" படத்தில் நடிகர் திலகம்- பிரபுவுடன் "மும்தாஜ்" என்ற பாத்திரத்திலும் நடித்தார்.
இவரது கணவர் மாஸ்டர் ஸ்ரீதர் ; தங்கை ராசி ஆகியோரும் நடிகர்களே. ஸ்ரீதர் 2013 ஆம் ஆண்டு 60 ஆவது வயதில் காலமானார்.ஸ்ரீதர்-இந்திரா தம்பதிகளுக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உண்டு.பேபி இந்திரா அதிக வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் 1980 களுக்கு பிறகு நடிக்கவில்லை.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் பெரும் புகழ் பெற்ற கமலஹாசன், ஸ்ரீதேவி போல் எதிர்பார்க்கப்பட்டவர், ஏனோ பாதியிலேயே திரையுலகை விட்டு ஒதுங்கிவிட்டார்.
No comments:
Post a Comment