Sunday 20 June 2021

ON THE AWAKENING DEATH OF PARAMAHAMSA YOGANANTHA ...BOSTON

 

ON THE AWAKENING DEATH OF PARAMAHAMSA YOGANANTHA ...BOSTON



பரமஹம்ச யோகானந்தா தன் உடலை விடும்பொழுது....!! அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். தான் உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, தன் உடலை நீத்தார். மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொருத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது. இதயமோ, நுரையீரலோ, வேறு எதோ ஒன்று கெட்டுப்போனால் உயிர் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை.

அதுமட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, ‘33 நாட்களுக்கு பிறகுதான் இவ்வுடல் அடக்கம் செய்ய வேண்டும் அழிந்து போகாத  இவ்வுடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு உடலை நீத்தார். உடலில் தேவையான அளவிற்கு ‘வியானப் பிராணா’வை அவர் தக்கவைத்துச் சென்றதால்... அத்தனை நாட்களுக்கு உடல் நன்றாக இருக்கும். இதைச் செய்வதற்கு அவருக்கு எவ்வித அவசியமும் இல்லை. ஆனால், அவர் உயிரோடு இருக்கும்போது, காரண அறிவை மட்டுமே பயன்படுத்தும் மனிதர்கள் பலர், அவருக்கு அதிகளவில் தொல்லைகள் தந்தனர். அதனால் போகும்போது, அவர்களுக்கு கொஞ்சம் விளையாட்டுக் காட்டிவிட்டுச் செல்லலாம் என்று அவர் முடிவு செய்தார். காரண அறிவை மட்டுமே பயன்படுத்தி அவரைப் பற்றி இல்லாததை எல்லாம் பேசிய விஞ்ஞானிகளுக்கு, புரியவைத்துப் போகலாம் என்றெண்ணி, 30 நாட்கள் உடல் அப்படியே இருக்கும், அனைத்து சோதனைகளையும் நன்றாக செய்யுங்கள் என்று சொல்லி, உடலை விட்டுப் போனார் அவர்.


அவர் உடல்  (U.S.A) லாஸ் ஏஞ்சல்ஸில்

இன்றும் அவர் உடல் அழிவில்லாமல் அப்படியே இருக்கிறது. 


இவரது  குரு யுக்தேஸ்வரகிரியும் இவரை போலவே தன் உயிரை துரக்க போவதை முன்கூட்டியே அரிவித்தார் மேலும் அவர் இறந்த மருநாளே பரமஹம்ஸ யோகானந்தருக்கு தன் உடலோடு காட்சி கொடுத்தார்.


ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை விடும் நிலை தனித்துவமானது. மகா சமாதி என்றழைகப்படும். 


கபீர் மறைந்த இடத்தில வெறும் ரோஜா பூக்களே இருந்தன. 

ரமணர் மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணமலையில் மறைந்தது. 

பிரம்பு கூடைக்குள் புகுந்து கடற்கரையோர சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டிய பட்டினத்தார் அந்த கூடைக்குள்ளிருந்தே மறைந்து போனார். அடையாளம் அழித்து பூரணமான அவரின் அடையாளமாக, அவர் இருந்த இடத்தில ஒரு சிவ லிங்கம் இருந்தது....

பரமஹம்ச யோகனந்தரின் கடைசி சிரிப்பு...


பரமஹம்ஸ யோகனந்தரின் யோகா உடல் 33 நாட்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

பக்தியோடு MGM

No comments:

Post a Comment