Sunday 20 June 2021

KARNAN ,SUPERB CINEMATOGRAPHER

 

KARNAN ,SUPERB CINEMATOGRAPHER




#இனிய_நினைவுகளில்

#ஒளிப்பதிவு_மேதை

#இயக்குநர்_கர்ணன்

#இந்திராணி_பிலிம்ஸ் வழங்கும்...

#மக்கள்_கலைஞரின்....

  இந்த மூன்று மந்திரப்பெயர்களை சினிமா போஸ்டரில் பார்த்தவுடனே,சினிமா தியேட்டரை  நோக்கி தலைதெறிக்க ரசிகனை  ஓட வைத்தது 60-70 களின் மறக்க முடியாத நினைவு...

  இங்கிலீஷ் காரன மட்டும்தான் "Western-cow boy" படங்களை எடுக்க முடியுமா? நானும் தான் எடுப்பேன் . என்று சவால் விட்டு, தமிழிலும் ஹாலிவுட் கெட்டப்போடு படமெடுத்து பட்டையை கிளப்பியவர் கர்ணன்....!!!

   இன்றைய விலை உயர்ந்த-தொழில் நுட்ப வசதிகளோடு கூடிய கேமாராக்களை வைத்து படமெடுக்கும் இந்தக்காலத்தைவிட, அந்த கால வசதிகள் இல்லாத சாதாரண கேமரைவை வைத்தே ஓடும் குதிரையின் முகத்திலிருந்து ரேக்ளா வண்டி ஓட்டும் கதாநாயகனின்  முகத்தை காட்டியும் -ஓடும் காரின் சக்கரத்திலிருந்து பின்னால் துறத்தி வரும் காரை Focus செய்து தெறிக்கவிட்டவர் கர்ணன். அதே போன்று சாதாரண துப்பாக்கியை, படம் பார்க்கிற ரசிகனுக்கு ஒரு பீரங்கி போல் காட்டி அல்லு தெரிக்கவிட்டவர் "ஒளிப்பதிவு மேதை" கர்ணன்.

  காலம் வெல்லும், கங்கா, ஜக்கம்மா, எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, ஒரே தந்தை, புதிய தோரணங்கள், அவனுக்கு நிகர் அவனே, ஜான்சி ராணி ஆகியவை இவை இயக்கிய சில படங்கள்.இவரது படங்கள் அனைத்துமே Front benchers எனப்படும் வெகுஜன ரசிகர்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு, வசூலிலும் சாதனை புரிந்ததன.

  அன்றைய கோவில் திருவிழாக்களில், திருவிழாக்களில் திருவிழா காண வந்த பக்தர் கூட்டத்தைவிட, கோவில் பின்புறம் 16MM திரையில் திரையிடப்பட்ட "கங்கா" படத்தை காண வந்த ரசிகர் கூட்டமே அதிகம் என்பது 70-80கள் கண்ட உண்மை.

  இது தவிர இவர் சாரதா, கற்பகம்,சிம்லா ஸ்பெஷல், பொல்லாதவன், கீழ்வானம் சிவக்கும் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

  வீரபாண்டிய கட்டபொம்மன் போல மீசை,கம்பீரம், நெற்றிப்பொட்டு போன்றவை இவரது அடையாளம். ஒளிப்பதிவாளர் என்.சி.பாலகிருஷ்ணனிடம்,வி.ராமமூர்த்தியிடமும் உதவியாளரான இவர் பின்னர் வின்சென்ட், ராய், பி.எஸ்.ரங்கா, ரஹ்மான் போன்ற பிரபல ஒளோளிப்பதிவாளர்களிடம் பணியாற்றினார் கர்ணன்.

  60-70 களின், சினிமா ரசிகர்களின் மறக்கமுடியாத அடையாளமாக இருந்த கர்ணன் டிசம்பர் 2013 அன்று காலமானார். இன்றைய பிரபல ஒளிப்பதிவார் ரவி.கே.சந்திரன், கர்ணனை தன்னுடைய "வழிகாட்டி"எனக்குறிப்பிடௌடுள்ளார்.

No comments:

Post a Comment