Wednesday 9 June 2021

Julio,Claudian ,dynasty ENDED ON ACCOUNT OF SUICIDE OF NERO ON JUNE 9,58

 


Julio-Claudian dynasty ENDED

 ON ACCOUNT OF SUICIDE OF NERO ON JUNE 9,58



ஜூலியோ குளாடிய மரபு (Julio-Claudian dynasty) அல்லது ஜூலியோ குளோடிய வம்சம் என்பது உரோமப் பேரரசின் முதல் ஐந்து பேரரசர்களை அல்லது அவர்களது குடும்பத்தைக் குறிக்கிறது. அவர்கள் - அகஸ்ட்டஸ்டைபீரியஸ்கலிகூலாகுளோடியசு மற்றும் நீரோமுதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உரோமைப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து கி.பி.68 வரை அவர்கள் ஆட்சி புரிந்தனர். இந்த மரபைத் தோற்றுவித்தவர் முதல் உரோமைப் பேரரசரான அகஸ்ட்டஸ். இறுதிப் பேரரசர் நீரோவின் தற்கொலையுடன் இந்த மரபின் ஆட்சி முடிவுக்கு வந்தது.[1]

ஜூலியோ குளாடிய மரபைச் சேர்ந்த எந்த பேரரசருக்குப் பின்னரும் அவரது மகன் பேரரசராக வில்லை. பண்டைய உரோம வரலாற்றாளர்களான டேசிட்டசும் சியூட்டேனியசும், ஜூலியோ குளாடியப் பேரரசர்களை நல்லவிதமாகக் குறிப்பிடவில்லை. உரோம செனேட் அவை மேட்டுக்குடியினரின் கோணத்திலேயே அவர்கள் இருவரும் பேரரசர்களை சித்தரிக்கின்றனர். உரோமக் குடியரசை முடிவுக்கு கொண்டு வந்து, உரோமப் பேரரசை உருவாக்கி வளர்த்தது இம்மரபு தான் என்பதாலும், பேரரசர்களின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் தங்கள் வரலாற்று நூல்களுக்குப் பரபரப்பு சேர்க்கும் என்பதாலும் இவ்வாறான சித்தரிப்பைச் செய்திருக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, டேசிட்டசின் பின்வரும் பத்தியினைக் கொள்ளலாம்:

பழைய உரோம மக்களின் [குடியரசின்] வெற்றிகளும் தோல்விகளும் புகழ்பெற்ற வரலாற்றாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அது போலவே அகஸ்டசின் காலத்தைப் பதிவு செய்ய முன் வந்த ஆளுமைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் [பேரரசில்] பெருகிப் போன துதிபாடல் தன்மையால் அவர்கள் [உண்மையை எழுதினால் தங்களுக்கு ஏதேனும் நிகழ்ந்து விடுமோ] என்று அஞ்சி விலகிக் கொண்டனர். டைபீரியஸ், கையஸ், குளாடியஸ், நிரோ ஆகியோரது வரலாறுகள் அவர்கள் ஆட்சியிலிருந்த வரை பயத்தின் அடிப்படையில் எழுதப்பட்டன. அவர்கள் இறந்தபின்னால் [அவர்கள் மீதிருந்த] வெறுப்பின் அடிப்படையில் எழுதப்பட்டன. [2]


  1. அகஸ்ட்டஸ் (27 BC–14 AD)
  2. டைபீரியஸ் (14–37)
  3. கலிகூலா (37–41)
  4. குளாடியஸ் (41–54)
  5. நீரோ (54–68)

No comments:

Post a Comment