Monday 28 May 2018

N.T.RAMARAO , THE LEGEND






N.T.RAMARAO , THE LEGEND


என்டி.ராமா ராவ் ஒரு மகத்தான மனிதர்


என்டி.ராமா ராவ் தனக்கென வித்தியாசமான கொள்கையை கொண்டவர் . ஒளிவு ,மறைவு ,சூது எதுவும் அறியாத மாபெரும் கலைஞர் . அவருடைய ரசிகர்கள் எம்ஜியார் ரசிகரைப்போல் திமிர் பிடித்தவர்கள் அல்ல .ராமராவ் சொன்னால் அப்படியே அசையாமல் தரையில் படுத்து கொள்ளும் அளவு பக்தி மிக்கவர்கள் .அப்போது திருலோக சந்தர் கூறினார்

.நீங்கல்லாம் அரசியலுக்கு வந்தா நிச்சயமா முதல்வர் ஆயிடுவீங்க !(1968 ) என் டி ஆர் செட்டில் இருந்தா அந்த இடம் பயம் கலந்த மரியாதையுடன் இருக்கும் 
இடி போல பேசுவார் .அவர் நடிக்கும் போது யாரிடமும் அரட்டை அடிக்க மாட்டார் செல்வி ஜெயலலிதாவும் அப்படியே .இருவரும் எவர் மீதும் குறை ,புரளி ,புகார் கூறாதவர் என்று ஏவிஎம் சரவணன் கூறுகிறார் .

ஒரு கால்சீட் என்பது காலை 9 டு இரவு9 .இரவு கால்சீட் 
இரவு 9 டு 12 மணிதான் .சரியாக உதவியாளர் 11.45 க்கு கொண்டுவந்த நாற்காலியை மடக்குவார் - இதான் சிக்னல்- சரியாக 40 கால்சீட் தான் குடுப்பேன் என்று கறாரான கூறி விடுவார்


.ஏவிஎம் கேன்டீனில் அவல் கேசரியும் ,மிளகாய் பஜ்ஜியும் மெனு என்றால் எண்டியார் சூட்டிங் என்று பொருள் . எப்போதும் ஒரு பெரிய கூஜாவில் தண்ணீர் கொண்டு வருவார் .அதில் திராட்சை உளர் பழங்கள் 
இட்டு காய்ச்சிய நீர் .எவருக்கும் தர மாட்டார் திருலோகசந்தர் மட்டும் இதில் விதி விலக்கு.

அதே போல் கோபத்திலும் பொரிந்து தள்ளி விடுவார் .எம்ஜியாரை வைத்து படம் எடுத்த மணியன் ஒரு முறை எங்க படத்துல நடிக்கணும்னு சொல்லியிருக்கார் . அந்த மணியன் நீங்கல்லாம் எங்க படத்துல நடிப்பீர்களா ?என்று சொன்னவுடன் நீங்க எப்ப கேட்டீங்க ,எப்ப மறுத்தேன் .தயாரிப்பாளர்கள் வந்து கேக்குறதுதானா வழக்கம் .சும்மா ஒரு நிகழ்ச்சில கேக்குறது முறையான அழைப்பா ?என்று பொரிந்து தள்ளிட்டார்

ஏவிஎம் சரவணன் ராமு -தெலுங்கில் எடுக்க சந்திக்க நேரம் கேட்ட போது காலை 4.30 க்கு வாங்கன்னு சொன்னவுடன் தூக்கி வாரி போட்ருக்கு. போய் பார்த்தால் மேக்கப்போடு இருந்திருக்கார் .வளவள பேச்செல்லாம் கிடையாது


எடுத்த எடுப்பிலே நான் எவ்வளவு சம்பளம் வாங்குறேன்னு தெரியுமா ? ஒரு லட்சம் .ஆனா என்னுடைய கடைசி ரெண்டு படம் சரியா போகல அதனால 90 ,000 கொடுங்க !

கமலஹாசன் நடித்த 100 வது படம் ராஜபார்வை .இதற்கு விழா எடுக்க ஏவிஎம் முற்பட்ட போது 
எம்ஜியார் வருகிறேன் என்றார் .ஆனால் ராமராவ் மறுத்து விட்டார் .காரணம் சொன்னார் .

எம்ஜியார் படங்களில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் .நான் இன்னும் ஸ்ரீதேவி கூட அவரைப்போலவே 
நடித்து கொண்டிருக்கிறேன் .நான் வாழ்த்தி பேசினால் அது சும்மா பொய்யான வார்த்தையா இருக்குமே 
தவிர என் மனசாட்சியுடன் பேசியதா அர்த்தம் ஆகாது என்று சிதறு காயை உடைப்பது போல் உடைத்து விடுவார்


தேர்தல்ல ஜெயித்து முதலமைச்சர் ஆகி சென்னை வந்த போது அவரைக்காண சரவணன் 
கொஞ்சம் பயத்துடன் பார்க்க சென்றிருக்கிறார் .அவரை பார்த்த வுடன் எழுந்து வந்து வரவேற்றார் .
என்ன சார் இது ? நீங்களே வந்து ...

I AM NOT RAMAARAO I AM THE CHIEF MINISTER OF ANTHRA PRADESH. YOU ARE NOT SARAVANAN .YOU ARE THE SHERIFF OF MADRAS.I MUST RECEIVE YOU PROPERLY

No comments:

Post a Comment