BAHUBALI -2 REVIEW
பாகுபலி 2 விமர்சனம்
மகிழ்மதி தேசம் . இந்த தேசத்திற்கு ராஜாக்கள் தேவையில்லை .அப்படி நியமிக்கப்பட்டாலும் அவைகள் செஸ் விளையாட்டில் வரும் ராஜாக்கள் போல தான் .அமைதியாக இருக்க வேண்டும் .
ராஜமாதாவே செஸ் விளையாட்டில் வரும் ராணி .குறுக்கும் போவார் நெடுக்கும் போவார் .அவளின்றி ஓர் அணுவும் அசையாது .இப்படி ஒரு பத்திர படைப்பை ரம்யா கிருஷ்ணன் ஏற்றுள்ளார் - பல சமயங்களில்
அனுஸ்கா வையும் மிஞ்சிடும் மேக் அப் போட்டு அசர வைக்கிறார்
பிரபாஸை கடோதகஜனாக காட்ட வேண்டும் என்று ராஜமவ்லியின் ஆசை . எனவே 500 பேர் இழுத்தாலும் அசைய மறுக்கும் பிரமாண்ட தேரை தனி ஒரு மனிதனாய் கைவண்டி இழுப்பதுபோல் இழுத்து வருகிறார் .தேரை இழுத்து தெருவில விட்டு ,கிராபிக்ஸ் யானையிடம் இருந்து ரம்யா கிருஷ்ணனை காப்பாற்றி , அந்த யானையின் துதிக்கையை பிடித்து ஏறி இருக்கிறார் இதுவல்லவா வீரம் என்று வாய் பிளக்க வைத்திருக்கிறார்கள் . யானை கால் காட்ட அதன் மேல் ஏறி சவாரி செய்தால் தெலுங்கு வீரம் என்னாவது ?
ஜோதாபாய் அக்பரில் வரும் பைராம்கானின் நடை ,உடை ,பாவனையில் சத்தியராஜ் படம் முழுக்க வந்து போகிறார் .
இந்த பாத்திரத்திற்கு ஏற்றார் போல் வீர வசனங்கள் எழுத முடியவில்லை போலும் .ஆரம்ப காட்சிகளில் கட்டப்பா சத்தியராஜ் காமெடி சகிக்கமுடியாத எழுபது வருட தூசி தட்டிய முக்கமாலா தெலுங்கு காமெடி.
நல்லவேளை சத்தியராஜ் சீக்கிரம் ராஜ விசுவாச நடைக்கு திரும்புகிறார் . பிரபாஸுக்கு உயிருக்கு உயிரான மாமன் என்றாலும் ராஜ மாதா சொல்லி விட்டால் கொலையும் செய்வான் இந்த மாமன் .
ராஜ விசுவாசம் என்பதே இதுதான் என்பதை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை எனவே இடைவேளையில் பாப்கார்ன் ,பெப்சி ஊற்றி அதை முதலில் ஜீரணிக்கிறோம்
தெலுங்கு படத்தில் மட்டுமே விசித்திர திருமணம் வாளுக்கு மாலையிடுவது -என்ன கருமந்திரமோ இந்த படத்திலும் வந்து தொலைக்கிது . ராஜமாதா பொன் பொருளோடு தன் மகன் பல்லாளன் வாளுக்கு மாலையிட சொல்ல தூதுவனை அனுப்பி வைக்க அனுஸ்கா பொங்கலோ பொங்கல் என்று ஒரே பொங்காக பொங்குகிறார்-பொங்குனது மட்டும் இல்லாமல் ராஜமாதாவுக்கு புரியோதரை பார்சல் கட்டி அனுஸ்கா அனுப்ப செம காண்டாகிறார் ரம்யா -
உடனே பிரபாஸுக்கு போன் போட்டு அனுஸ்காவை
லெக் பீஸ் பிரியாணியோடு கைது பண்ணி வர சொல்கிறார் .விபரம் அறிந்த அனுஸ்கா கோழி பிரியாணி என்றால் உடனே பண்ணிடுவேன் மாட்டு பிரியாணி என்றால் சிவசேனை காரங்ககிட்ட,RSS கிட்ட அனுமதி வாங்கணும்னு வருந்துகிறார்
இந்த பிரியாணி நிலவரம் ,பெரிய களேபரம் ஆகி விவசாயி நிர்வாண போராட்டம் ஆகி ,ராஜமாதா சசிகலா ருத்ர தாண்டவம் ஆட கடைசியில் பன்னீர் செல்வத்துக்கு பதிலா எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர் ஆனது போல், ராணா அரசன் ஆகிறார்
.
ஆனாலும் ராஜமாதா கணவர் நடராஜன் வேடத்தில் நாசர் நடிப்பு கச்சிதம் . அனுஸ்காவின் மாமன் தினகரனை விட்டே பல்லாளனை கொல்ல விரித்த வலையில் தினகரனே சிக்கி சின்னா பின்னம் ஆகிறார்
அனுஸ்கா விற்கு குழந்தை பொறக்குது
பல்லாளன் -நாசர் சதி தெரிய வருது ராஜமாதாவுக்கு
கிளியோபாட்ரா சீசரியனை அரச வாரிசாக அறிவித்தது போல் அனுஸ்காவின் குழந்தையை
ஜனங்களுக்கு தீபாவைப்போல் மாடி தரிசனம் தர ராணா கொந்தளிக்கிறார்
ராஜமாதாவை கொல்ல அவருடன் அனுஸ்கா குழந்தையும் நீரில் மூழ்குகிறது
அந்த குழந்தை எப்படி காப்பாற்றப்படுத்து ,
எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளருது
அனுஸ்கா எப்பிடி கைதியாகிறார் .
எப்பிடி சித்திரவதை செய்யப்படுகிறார்
எப்பிடி தப்பிக்கிறார் என்பதையெல்லாம் எவனும் கேட்கக்கூடாது நானும் சொல்ல மாட்டேன் என்று ராஜமௌலி அடம் பிடிக்கிறார்
நமக்கேன் வம்பு
அப்புறம் சீவக சிந்தாமணி கதை தான்
வெட்டு ,குத்து ,வெட்டு ,குத்து
கடைசில அனுஸ்கா ராஜமாதா -
பாகுபலி மவன் பாகுபலி அரசன்
துள்ளி துள்ளி ஓடிவரும் தமன்னாவுக்கு தக்கனொண்டு பார்ட்டு சண்டைபோடுகிறார் .ஒரு மிடில் சாட்- ஒரு குளோசப் கூட இல்லை மூஞ்சில ரத்தக்கறை போட்டு வீணடிச்சிட்டாங்க
ராணாவை எப்படி பாத்தாலும் கொடூரமா பாக்க முடியல !
பெங்களூர் நாட்கள் ராணா வந்து போவதால் வில்லனாய் ரசிக்க முடியல
மொத்தத்தில் பாகுவலி !!!
No comments:
Post a Comment