Wednesday 9 May 2018

CONTRAVERSIAL HIGH COURT JUDGE -KARNAN





CONTRAVERSIAL HIGH COURT JUDGE -KARNAN



#நீதிமன்ற #அவமதிப்பு #வழக்கு


#உயர்நீதிமன்ற #நீதிபதி #ஒருவருக்கு #சிறை #தண்டனை #விதிப்பது #இதுவே #முதல்முறை
#நீதிபதி #கர்ணனுக்கு #6மாத #சிறை; #சுப்ரீம் #கோர்ட் #அதிரடி #உத்தரவு #பிறப்பித்தது
#புதுடில்லி: பல்வேறு சர்ச்சையான உத்தரவுகளை பிறப்பித்து வந்த கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு , கோர்ட் அவமதித்ததாக 6 மாத சிறை தண்டனை வழங்கி சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவரும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியுமான, கர்ணன் மீது, சுப்ரீம் கோர்ட் சுயமாக கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது நீதித்துறை மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் கர்ணனுக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு, தடை விதித்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேரும் தமது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பைத்தியக்கார நீதிபதிகள் என்றும் வர்ணித்தார். இதனால் கோர்ட் வட்டாரத்தில் பரப்ப்பு ஏற்பட்டது. இதனிடையில், நீதிபதி கர்ணனுக்கு, மே, 4ல் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது . டாக்டர்கள் குழு அவரது வீட்டுக்கு சென்ற போது நீதிபதி கர்ணன் மனநல மருத்துவப் பரிசோதனைக்கு உடன்பட மறுத்து விட்டார்.
*மீடியாக்களுக்கும் தடை*
இதனையடுத்து , மன நல பரிசோதனைக்கு ஒத்துழைக்காதது கோர்ட்டை அவமதிப்பதாகும் என அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து இன்று ( 9 ம் தேதி) சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கர்ணன் பிறப்பிக்கும் உத்தரவுகளை வெளியிட மீடியாக்களுக்கு தடையும் விதித்தது. பணியில் உள்ள நீதிபதி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். நீதிபதி கர்ணன் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment