STORY ABOUT GRAVEYARD
மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?" அதை கேட்க
கணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான்... "உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று...
மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்... மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை கட்டி விட்டு வீடு திரும்புகிறான்...
தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை!
என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது.
ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,
ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான்.
அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ...
"என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அண்ணா தினமும் காலையிலும் மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு" என்று கூறி சத்தியம் வாங்கிக்கொண்டாளப்பா!" என கூறி சத்தமாக அழுகிறான்.
(இறந்தும் என்ன ஒரு வில்லத்தனம்.?)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மயானத்தில் ஒரு நாள் ஒரு யுவதி ஒரு கல்லறையில் சோகத்துடன் அமர்ந்து
இருக்கிறாள் . கையிலே ஒரு விசிறி .அதை கணவனின் கல்லறையில் வீசிக்கொண்டிருக்கிறாள்
காலையில் ஒரு மணி நேரமும் ,மாலையில் ஒரு மணி நேரமும் இவ்வாறு செய்து கொண்டே
இருந்தார் .காண்போர் அனைவரும் இவளல்லவோ பதிவிரதை -கணவன் மரித்த பின்னும்
அவன் மேல் இவ்வளவு பாசம்மா என்றே வியந்தனர்
ஒரு வாரம் சென்றது .ஒருவர் அவளிடம் ஆறுதலாய் பேசினார் .மாண்டார் மீண்டு வருவாரோ என்று தேற்றினார் .
அதன் பிறகு அவள் தன் கதையை சொல்ல தொடங்கினாள்
மரண படுக்கையில் இருக்கும் தன் கணவன்
நான் மரணித்தப் பிறகு நீ எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வாய்? ் என்று கேட்க
நான் சொன்னேன் ... "உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று...
அதனால் தான் அன்பரே ! கல்லறை ஈரம் சீக்கிரம் காயட்டும் என்று தினமும் இருமுறை
விசிறியால் வீசி வருகின்றேன் என்றாள்
( இந்த கதை முதலமைச்சர் கருணாநிதியால் விருதுநகர் செந்திகுமாரநாடார் கல்லூரி
வெள்ளிவிழா ஆண்டு 1973 இல் எங்களுக்கு சொன்னது அன்றைக்கு காலையில் விருதுநகர் பெண்கள் கல்லூரிக்கும் விஜயம் செய்தார் .அங்கேயும் இதே கதை தான் சொன்னார் )
No comments:
Post a Comment