Wednesday 16 May 2018

OUR CIVILISATION HAD GONE








OUR CIVILISATION HAD GONE


இடம் பத்தலை ....
தலையணை இல்லை....
போர்வை எனக்கு...
என்ற சண்டைகளை மீறி தூங்கும்போது 
usha rani

இதையெல்லாத்தையும் வீட்டு பெரியவங்க ஆட்டய போட ...பறி கொடுத்துட்டு....மரண தூக்கம் தூங்கி ....
காலையிலேயே....அத்தை...சித்தி..யோட கைக்குழந்தை...பூபாளம் பாட...நை நைன்னு எரிச்சலோட தூக்கம் கலைந்து விழிக்க.....

பல்துலக்கும் படலம்...
தாத்தாவோ மாமாவோ...பொறுப்பு இந்த டிபார்ட்மன்ட்டுக்கு...
இல்லையேல் Colgate tooth powder டப்பா ஒரே நாள்ல காலி...கொஞ்சமா எல்லார்கைலயும் போடறது...
காபி படலம்...
விறகு அடுப்பில்
பாலைக்காய்ச்சி...ஈயம்பூசிய பித்தளை குண்டான்ல. காபி கலந்து....ஓட்டல்ல அடுக்கற மாதிரி...20 பேருக்கு காபி கலந்து ஒவ்வொண்ணா கொஞ்சம் பெரிய பிள்ளைக கையில் தந்து தாத்தா சித்தப்பா மாமா என ஆண்களுக்கு கொடுத்து வர சொல்லுவாங்க...பிறகு சின்ன பள்ளிக்கூடம் போல இருக்கும் வாண்டு பட்டாளத்தை வரிசையா உக்காரவச்சி உக்காந்து குடின்னு கைல கொடுத்தாலும் அதில் சிலது காப்பி டம்ளரை டபுக்னு கவிழ்த்து விட்டு....ரெண்டு முதுகுல வாங்கி #வீர் னு அலறும்....தாத்தாவோ பாட்டியோ சமாதானப்படுத்த....அடுத்த டோஸ். வீட்டு 
பெண்களுக்கு தயாராகும் டிகாக்‌ஷனில் காபி கொடுக்கபடும்....
கன்னத்தில் காய்ந்த கண்ணீர் கோடுடன் திண்ணையில் அமர்ந்து காலாட்டிக்கொண்டே கதை பேசிக்கொண்டிருக்கும் எங்கள் கூட்டத்தில் அமரும் வாண்டுவை வலிக்குதா...சரி சரி. அழாதே....அத்தை தான அடிச்சாங்கன்னு சமாதானபடுத்துவோம்......
அடுத்து குளியல் படலம்...
சித்தியோ...பாட்டியோ...பொறுப்பு இந்த டிபார்ட்மன்ட்டுக்கு
கதற கதற கண்ல சோப்பு சீயக்காய் பட்டாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தாலும் துள்ளிக்குதிக்கும் ஜல்லிக்கட்டு கன்னுகுட்டிகளை குளிப்பாட்டி பவுடர் போட்டு தலை வாரி விட்டு அடுத்த செக்‌ஷனுக்கு அனுப்புவாங்க...
டிபன் படலம்....
அணையா அடுப்பு காலை டிபன் முடிய 11 மணி ஆகும்.... எனக்கு குட்டி தோசை...எனக்கு ரோஸ்ட்...எனக்கு இட்லி...ன்னு விதவிதமா ஆர்டர் கொடுத்தாலும் கிளை அடுப்பை முடுக்கி விட்டு கட கடவென சப்ளை செய்யும் மாமியும் சித்திகளும்......
பத்துமணிக்கு மேல் அவங்க துணிகளை சர்ப்பில் நனைக்க ...செல்ல மிரட்டலை மீறி

சோப்புக்குமிழிகளை அள்ளிக்கொண்டு...விளையாட ஓடுவோம்....
உண்டு முடித்ததும் ..வயது வாரியாக பிரிந்து தாயம்... பல்லாங்குழி... தோட்டத்து பப்ளிமாஸ் மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடுதல் என..பொழுது போகும்....வீட்டு பெண்கள் குளித்து துவைத்து. துணிகாயப்போட மாடிக்கு போகையில் நாங்களும் ஓடறது....மற்ற நேரத்ல மாடி கதவு பூட்டப்படும்....பாதுகாப்புக்காக....
யாருக்கேனும் எப்போதும் ஒரு கைக்குழந்தை இருப்பதால் தூளி தொங்கிக்கொண்டே இருக்கும்.....
குழந்தையை குளிப்பாட்ட எண்ணெய் வெந்நீர் எடுத்து கொடுக்க...பவுடர் கண்மை எடுத்து வரன்னு....மதிய வேளை நெருங்கிடும்.....
மதிய உணவில் பச்சடி பொரியல் வறுவல்னு...பக்கத்துல இருக்கறவனை(ளை) விட நமக்கு குறையாம இருக்கான்னு பாத்துகிறது....இல்லன்னா கோவிச்சிகிட்டு சீன் போட முடியாதுல்ல..😜😜😜.....
மூணு மணிக்கு பெண்கள் சாப்பிட்டு வெற்றிலை பாக்கு போட்டுகிட்டே சிரித்து கதை அளந்து கண்ணயர்ந்து.....
வீடு பெருக்கி.....
மாலையில்...புரச இலையில் சூடாக கட்டி தரும் பொட்டலம் மிக்சர் வாங்கி தந்து...காபியைக் கொடுத்து
மாமாவின் தலைமையில் பார்க்குக்கு அழைத்து போக pack பண்ணி விட்றது...
பார்க்கில் ஒலிக்கும் ரேடியோ பாடலுடன் செய்திகளையும் கேட்டு....
வீடு திரும்புகையில் மாமா சொல்லும் சில டுபாக்கூர் கதை உண்மை கதைகளை கேட்டுக்கொண்டே வருவதும்
.....

வீட்டுக்கு வந்து கை கால்களை கழுவி....இரவு சாப்பாட்டுடன் பாட்டி கூறும் கதைகளை வட்டமாக அமர்ந்து கேட்டுவிட்டு உறங்கி....மகிழ்ந்த நாட்கள். இன்றைய தலைமுறை. அறியாத ஒன்று.........*..

No comments:

Post a Comment