Tuesday 22 May 2018

STROKE , HOW TO ERADICATE





STROKE , HOW TO ERADICATE





பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது.? சாத்தியக்கூறுகள் என்ன .?
மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடையாகிறது. இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ஏற்படும் பக்க வாதத்திற்கு “ஐசெமிக் ஸ்ட்ரோக்” (Ischemic stroke) என்று பெயர்.
மூளைக்குச் செல்லும ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாகும் சமயங்களிலும் பக்கவாதம் உண்டாகும். இதற்கு “ஹெமராஜிக் ஸ்ட்ரோக்” என்று பெயர்.
எனவே, பக்கவாதம் என்னும் இந்நோய் முழுக்க முழுக்க மூளையின் பாதிப்பால் ஏற்படும் நோய்தான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய கால கட்டத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவீதத்தினர் “ஐசெமிக் ஸ்டோரோக்”-னால்தான் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வகை ஸ்ட்ரோக்கிலும் “திரம்போடிக்”(Thrombolytic) மற்றும் “எம்போலிக்”(Embolytic) என இரு வகைகள் உள்ளது. இந்த இருவகை பக்கவாதமும் ரத்த ஓட்டத் தடை, ரத்தம் உறைதல் போன்ற காரணங்களினால் ஏற்படுவதாகும்.
மினி ஸ்ட்ரோக் தற்காலிகமாககக உண்டாகும் பக்கவாத நோயாகும். இந்தப் பிரச்சனைக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட்டால் பக்கவாதத்திலிருந்து உடனடியாக விடுபடலாம். சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் “ஐசெமிக் ஸ்டோரோக்” நிலை உண்டாகிவிடும்.
மீதமுள்ள 20 சதவீதத்தினர், “ஹெமராஜிக் ஸ்ட்ரோக்”கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூளை பாதிப்பு:
மூளையின் வலது பகுதி பாதிக்கப்பட்டால் உடலின் இடது பக்க உறுப்புகளும், மூளையின் இடது பகுதி பாதிக்கப்பட்டால் உடலின் வலதுபக்க உறுப்புகளும் செயலிழந்து விடுகின்றன.
பக்கவாதத்தின் அறிகுறிகள்:
உடலின் ஒரு பகுதியில் எடை குறைவு ஏற்படுதல், சரியாகப் பேச முடியாமல் போகுதல், ஒரு பக்க கண்ணில் பார்வைக் கோளாறு, திடீரென உண்டாகும் தலைவலி, தலைசுற்றல் போன்றவை பக்கவாத நோயின் அறிகுறிகளாகும்.
இந்நோயால் வருடத்திற்கு சுமாராக 50,000 பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய் எல்லா வயதினரையும் தாக்கும் நிலை இருந்தாலும், வயதான முதியவர்களையே மிக அதிகமாக தாக்கும்.
ரத்த அழுத்தம் அதிகமாகும் போதும், அதிக அளவு கொழுப்பு சேர்ந்துவிடும் நிலையும், இதயத்துடிப்பு சீராக இல்லாத போதும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பக்கவாத நோய் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்ட உடனேயே காலம் தாழ்த்தாமல் டாக்டரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நோயினை மாத்திரைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றின் மூலம் குணப்படுத்தலாம். ரத்த அழுத்த பரிசோதனை போன்றவற்றின் அடிப்படையில் நோயின் தீவிரம் கண்டறியப்பட்டு, அதைப் பொறுத்தே சிகிச்சைகள் அமையும். தற்காலிக பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் அது நிரந்தர பக்கவாத நோயாக மாறிவிடும்.
முன்னேறி வரும் மருத்துவத்துறையில் எல்லா நோய்களுக்கும் புதிய சிகிச்சை முறைகள் இருப்பது போல் பக்கவாத நோயைக் குணப்படுத்தவும் அநேக புதிய முறைகள் உள்ளன. எனவே, இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நோயும் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் தீர்வு நிச்சயம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இது பக்கவாத நோய்க்கும் பொருந்தும்.


ஸ்ட்ரோக் ஏற்படக் காரணம் என்ன?


பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் தலையில் அடிபடுவதுதான். ரத்தக் கொதிப்பு, மது அருந்தும் பழக்கம், புகைபிடித்தல் ஆகியவையும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். இதுவே பெண்களுக்கு வேறுவிதமான பாதிப்பைத் தரும். சிலருக்குப் பிரசவத்தின் போதும், கருக்கலையும் போதும் ரத்தம் உறையக்கூடும். அவை ரத்தநாளம் வழியாக மூளையை அடைந்து, ரத்த ஓட்டத்தைத் தடுத்துவிடும். இதனால் ஸ்ட்ரோக் ஏற்படும். இது உடனடியாகவோ, பின்னாளிலோ ஏற்படலாம்.


 பாதிப்புக்கான காரணங்கள் என்ன? 
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், அதிக கொழுப்புச்சத்து, ரத்தக்குழாயில் கொழுப்பு படிதல், அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன், புகைத்தல், புகையிலை பழக்கம், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பேறியான வாழ்க்கை முறை, நாட்பட்ட மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை மற்றும் நாட்பட்ட தொற்று கிருமி பாதிப்பாலும், பக்கவாதம் வரலாம்.

 நோயின் அறிகுறிகள் என்ன? 
வாய் ஒரு பக்கம் கோணுதல், பேச்சு குழறல் அல்லது பிறர் பேசுவது புரியாமல் இருத்தல், ஒரு பக்கம் கை, கால் செயல் இழத்தல் அல்லது மரத்துப் போதல், ஒரு பக்கம் பார்வை மங்குதல், திடீரென தலை சுற்றுதல், தடுமாற்றம், உடலின் ஒரு பக்கம் மரத்துப் போதல், சாப்பிடும்போதோ, தண்ணீர் குடிக்கும்போதே பொரை ஏறுதல். திடீர் மறதி, குழப்பமான மன நிலை போன்றவை அறிகுறிகள்.

 எந்த வயதில் பாதிக்கும்? 
உலகில், ஆறு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது; நிமிடத்திற்கு பத்து பேர் இறக்கின்றனர். 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 12 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. முதியோரை மட்டுமல்ல, இளைஞர்கள், குழந்தைகளையும் இந்நோய் தாக்குகிறது.

 பக்கவாதம் வராமல் தடுக்க என்ன வழி? 
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துவதைக் கைவிடவேண்டும். கொழுப்பு சத்தைக் கட்டுப்படுத்துதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் வராமல் பணிகளை எளிமைப்படுத்திக் கொள்வது அவசியம். ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, உப்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அலட்சியமாக இருந்தால், பக்கவாதம் பாதித்து நம் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சுமையாகிவிடுவோம். அந்த நிலை வராமல் காப்பது அவரவர் கையில்தான் உள்ளது. 

மூளை பலத்திற்கு என்ன டயட்?

டென்ஷன் கூடாது. வறுத்தது, பொரித்தது கூடாது. இவற்றைக் கொஞ்சமாகச் சாப்பிடலாம். உணவில் எண்ணெய், நெய், வெண்ணெய், அளவுக்கு மீறிய அசைவ உணவு, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment