VAISHALI DHANIKA SERIAL ACTRESS TURNED TO MOVIE ACTRESS BORN 1994 SEPTEMBER 26







VAISHALI DHANIKA SERIAL ACTRESS TURNED TO 
MOVIE ACTRESS BORN 1994 SEPTEMBER 26



சென்னை : விஜய் டி.வி-யின் டாப் சீரியல்களில் ஒன்றான 'ராஜா ராணி'யில் ஹீரோ சஞ்சீவின் தங்கையாக நடித்து வருபவர் வைஷாலி தனிகா. BORN 1994 SEPTEMBER 26

'மாப்பிள்ளை' சீரியலில் ஶ்ரீஜாவின் தங்கையாக நடித்தவர். விஜய் நடித்த 'பைரவா', சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ', பிரபுதேவா நடித்த 'யங் மங் சங்' ஆகிய படங்களில் நடித்தவர் தற்போதும் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பிஸியாக இருக்கிறார். சினிமா, சீரியல் என அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பவரிடம் ஷூட்டிங் கேப்பில் பேசினோம். ஒன் இந்தியா வாசகர்களுக்காக வைஷாலி தனிகா பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே..


இப்போ என்னென்ன படங்கள்ல நடிச்சிட்டு இருக்கீங்க?
"சிவகார்த்திகேயனின் 'சீமராஜா', விஜய்யின் 62-வது படம் ஆகிய படங்கள்ல நடிச்சிக்கிட்டு இருக்கேன். ரெண்டுமே பெரிய படம். என்னோட சினிமா கரியர் ரொம்ப நல்லா போகுது. ஏற்கெனவே, 'பைரவா' படத்துல நடிச்சிருந்தாலும் அப்போ விஜய் சார் கூட சீன் இல்லை. இப்போ அவர் கூட எனக்கு சீன் இருக்கு. அவர் கூட நடிச்சது நல்ல எக்ஸ்பீரியன்ஸ். 'சீமராஜா' ஷூட்டிங் பத்தி சொல்லவே வேண்டாம். சிவகார்த்திகேயனும், சமந்தாவும் வேற லெவல். இந்தப் படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடிக்கிறேன். நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் இப்போதான் பேசிட்டு இருக்கேன். ஜீவா படம் பண்ணுவேன்னு நினைக்கிறேன்."

விஜய் கூட நடிக்கிறது பற்றி? 

"விஜய் சார் ரொம்ப நல்ல மனிதர். 'விஜய் 62' டீமும் சிறப்பான டீம். ஏ.ஆர்.முருகதாஸ் சார், விஜய் ரெண்டு பேருமே ரொம்ப நல்லா கைடு பண்றாங்க. விஜய் சார் என்னை நல்லா பண்றமான்னு அப்ரிஷியேட் பண்ணாரு. பெரிய ஸ்டார் வந்து இதையெல்லாம் என்கிட்ட சொல்லணும்னு அவசியமில்லை. ஆனா, இவர் என்கரேஜ் பண்றது செம்ம. நாம டென்ஷன் ஆகிடப்போறோமோன்னு அந்த சிச்சுவேஷனை கூல் பண்றதுக்காக ஃப்ரீயா பேசுவார். ஹீ இஸ் வெரி நைஸ்."

சீரியல் நடிப்பு எப்படி போய்க்கிட்ருக்கு?

"சீரியல் நடிப்பும் சிறப்பா போய்க்கிட்டு இருக்கு. நல்லா ஃபேமிலி மாதிரி என்ஜாய் பண்ணி பண்ணிட்ருக்கேன். 'மாப்பிள்ளை' சிரியலில் வில்லி கேரக்டர் பண்ணேன். ஜீ தமிழ்ல 'லட்சுமி வந்தாச்சு' சீரியல்ல ஹீரோவுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் அவரை லவ் பண்ற பொண்ணு ரோல். முதலில் தயங்கினாலும், இதுவும் இரு கேரக்டர் தானேன்னு நடிச்சேன். நல்ல ரீச் கிடைச்சது. இப்போதைக்கு 'ராஜா ராணி' மட்டும் தான் பண்றேன். நடிக்கிறோம்னே டென்ஷன் இல்லாம எல்லோருமே ஜாலியா கூலா ஆக்ட் பண்ணுவோம்."


சினிமா - சீரியல்.. ரெண்டுக்குக்கும் இடையே நீங்க உணரும் வித்தியாசம்? 


"சினிமாவும் சீரியலும் மொத்தமா வேற வேற. இது ரெண்டையும் என்னால கம்பேர் பண்ணமுடியலை. சினிமாவில் ஒரு நாளைக்கு ஒண்ணு ரெண்டு சீன் தான் எடுப்பாங்க. நிறைய டைம் இருக்கும். எடுக்கிற விதம் வேற. சீரியல்ல நிறைய சீன்ஸ் எடுப்பாங்க. மத்தபடி பெரிய வித்தியாசம் இல்ல. ஏன்னா விஜய் டி.வி-யும் இப்போ சினிமா லெவலுக்கு வந்துட்டாங்க. இதுவும் பெரிய பிளாட்ஃபார்ம் ஆகிட்ருக்கு. ரெண்டுமே என்னோட கரியர்ங்கிறதால சந்தோஷமா பண்றேன்."


வெப் சீரிஸ் நடிக்கும் வாய்ப்பு எதுவும் வந்ததா? 

"வெப் சீரியல் நடிக்க சான்ஸ் வந்துருக்கு. ஆனா, நான் கமிட் ஆகலை. வெப் சீரிஸ்ல நடிக்கக்கூடாதுனு லாம் இல்லை. எனக்கு தொடர்ச்சியா ஷூட் இருக்கிறதால இப்போதைக்கு கமிட் ஆக முடியலை. இனிமே, நல்ல ஸ்கிரிப்ட்டோட வெப் சீரியல் சான்ஸ் வந்துச்சுனா, ஷூட்டிங் டேட்ஸ் ஒத்து வந்துச்சுனா கண்டிப்பா பண்ணலாம்."

காதல்? 

"சத்யா கூட ஸ்கூல்ல படிக்கும்போதுல இருந்தே பழக்கம். +1 படிக்கும்போதுல இருந்து எட்டு வருஷமா லவ். ரெண்டு பேரும் ஸ்கூல்ல பக்கத்து பக்கத்து கிளாஸ். ஃப்ரெண்ட்ஸ் ஆகி, காலேஜ் போனதுக்கு அப்புறம் லவ் ப்ரொபோஸ் பண்ணி இப்போ என்கேஜ்மென்ட் வரைக்கும் வந்திருக்கோம். அவர் மரைன் என்ஜினியர். வாழ்க்கையில் ரெண்டு பேருக்குமே அவங்கவங்க ஃபீல்டுல சில குறிக்கோள்கள் இருக்கு. ரெண்டு பேருக்கும் இன்னும் ரெண்டு வருஷம் டைம் வேணும்னு கேட்ருக்கோம்."

நடிக்கும் ஆசை வந்தது எப்படி?



"எனக்கு சின்ன வயசுல இருந்து நடிக்கிறதுல ரொம்ப ஆர்வம். குட்டிப் பொண்ணா இருக்கும்போதே டி.வி பார்த்து டான்ஸ் ஆக்டிங்லாம் பண்ணுவேன். சின்ன வயசுல ஆஃபர் வந்துச்சு. ஆனா, அப்போ வீட்டுல என்னை நடிக்க விடலை. ஏன்னா, எங்க சரவுண்டிங்லயே யாரும் சினிமா பக்கம் இல்லை. நடிச்சா படிப்பு பாதிக்கும்னு முடியவே முடியாதுன்னுட்டாங்க. என்ஜினியரிங் படிக்கும்போது படிப்பு பாதிக்காதுன்னு பிராமிஸ் பண்ணி நடிக்க சம்மதம் வாங்கினேன். அதே மாதிரி டிகிரியை முடிச்சதும் என் ஃபேமிலி என் நடிப்பு ஆசைக்கு ஃபுல் சப்போர்ட் கொடுக்குறாங்க." மகிழ்ச்சியாகப் பேசி முடித்தார் வைஷாலி தனிகா.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER