DON`T LAUGH ,JUST THINK
SARAVANA STORES
நீங்கள் பார்த்த சரவணாஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரங்கள் சிரிக்க அல்ல சிந்திக்க...!
சென்னை அண்ணாநகர் அருகே உள்ள பாடியில் சரவணா ஸ்டார் புதிய கிளை இன்று காலை திறக்கப்பட்டது. சில நாட்களாக இந்த கிளை திறப்புவிழாவுக்கான விளம்பரம் டிவி உள்ளிட்ட ஊடகங்களில் வருகிறது. அதில் நடிப்பவரை பார்த்து சமூக ஊடகங்களில் அவ்வளவு கிண்டல், கேலி, நக்கல். ஏகப்பட்ட வில்லங்க, வயிற்றெரிச்சல் கமென்ட்கள். அதை பார்த்து உங்களில் பலர் சிரித்து இருக்கலாம். நீங்களும் கிண்டல் செய்துஇருக்கலாம். விளம்பரத்தை பார்த்து அந்த விளம்பரத்தில் வருவரை பார்த்து நீங்கள் சிரித்து இருந்தால் அது தவறு அல்லது வருத்தப்பட வேண்டிய விஷயம். நீங்கள் ஒன்றும் அறியாதவர் என்று அதர்தம். காரணம். அந்த விளம்பரத்தில் வருபவர் சரவணா ஸ்டார் பாடி கிளை அதிபர் எஸ்.எஸ்.சரவணன். சூர்யா, பார்த்திபன் போன்றவர்கள் சரவணாஸ்டார்ஸ் முந்தைய கிளை விளம்பரங்களில் நடித்து இருந்தார்கள்.பல முன்னணி நடிகைககள் நடித்து இருந்தார்கள். இந்தமுறை அண்ணாச்சியே ஹீரோவாகிவிட்டார்.
சின்ன பிளாஷ்பேக்...
1970களில் பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதி பணிக்கநாடார் குடியிருப்பு. இன்றைக்கு வறண்ட ஊர். திருச்செந்துாருக்கு அருகே இருக்கிறது. அங்கே இருந்து பிழைக்க சென்னைக்கு வந்தனர் 3 சகோதரர்கள். செல்வரத்னம், ராஜரத்னம், யோகரத்னம் என்பது அவர்களின் பெயர்கள். ஆரம்பத்தில் சென்னை வீதிகளில் சுக்கு காப்பி விற்றார் செல்வரத்னம். அப்புறம் சகோதரர்கள் ஒன்று சேர்ந்து இன்றைய சென்னை ரங்கநாதன் தெருவின் சின்ன பாத்திரகடை ஆரம்பித்தார்கள். ரோட்டில் படுத்து உறங்கினார்கள். எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள். இப்போதுபோல அன்றைக்கு ரங்கநாதன் தெரு ஏரியா பிரபலம் ஆகவில்லை.தங்கள் உழைப்பால் படிப்படியாக சகோதரர்கள் உயர்ந்தார்கள். இப்போது சென்னையில் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகிவிட்டது. சரவணா ஸ்டார்ஸ் கடைகள். சென்னை திநகர் தவிர்த்து பாடி, புரசைவாக்கம் என பல இடங்களில் பல அடுக்குமாடி கடைகள்.ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி பிஸினஸ். இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் ரீடெயில் துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் சரவணா ஸ்டார்ா்்
செல்வரத்னம்
் யோகரத்னம்(இவர் மகன் தான் பாடி கடை ஓனர் எஸ்எஸ்சரவணன்)
காலமாகிவிட்டார்கள். அவர்களின் வாரிசுகள் கடை நடத்துகிறார்கள். கொஞ்சம் பாகப்பிரிவினை என்பதை தனிக்கதை ஆனாலும், 1970களில் நம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்து சென்னைக்கு பிழைக்க வந்த ஒரு நெல்லை அண்ணாச்சி இன்றைக்கு தனது உழைப்பால் இந்தியாவின் பெரும்பணக்காரர்களுள் ஒருவராக உயர்ந்து இருக்கிறார். உழைப்பே உயர்வு என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். அவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். சிரிக்க கூடாது. இன்றைக்கு நவீன ரங்கநாதன் தெரு, கலர்கலர் பல்புகள் மின்னும் பல அடுக்கு சென்னை திநகரை உருவாக்கியதில் இவர்களுக்கும் பங்கு உண்டு.இன்றைக்கு ஹன்சிகா, தமனாவுக்கு பல லட்சம் சம்பளம் கொடுத்துதான் விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். பல ஆயிரம் ஊழியர்கள் அவர்களிடம் வேலை பார்க்கிறார்கள். எதற்கு நடிகை வைத்து என்று நினைத்து தன்னம்பிக்கையாக தானே நடித்து இருக்கிறார். அவர் நடித்தால் வியாபாரம் குறைந்துவிடப்போகிறதா? இன்றைக்கு கடை திறப்புவிழா நாளிலே அவ்வளவு கூட்டம், அவ்வளவு தள்ளுமுள்ளு. பாடி பக்கம் போய் பாருங்கள் கடையி்ல எவ்வளவு கூட்டம் அலைமோதுகிறது என்பதை
அப்புறம், ஆணாதிக்க ஆண்கள் கவனத்துக்கு எத்தனை நடிகர்களை நடிகைகளை அழைத்தாலும், தேசியவிருது வாங்கி கவிஞரை அழைத்தாலும்,பல கோடி முதல்போட்ட கொண்ட கடையில் முதல்வியாபாரத்தை யாரை வைத்து அண்ணாச்சி தொடங்கியிருக்கிறார் தெரியுமா? அவர் நினைத்து இருந்தால் அமிதாப்பச்சனை அல்ல, அர்னால்டையே அழைத்து வந்து இருக்கலாம். முதல் வியாபரத்தை பெற்றுக்கொண்டவர் அவருடைய மனைவி செல்வி. அப்புறம், தனது மகள்கள் யோகன்யா, மீனாட்சி, மருமகன் சுரேந்தர், அம்மாவை அழைத்து கவுரப்படுத்தியிருக்கிறார். வீ்ட்டு பெண்களை மதிக்க தெரிந்தவன் வாழ்க்கையில் முன்னேறுவான்.
மீண்டும் ஒரு தகவல்... நீங்கள் பார்த்த சரவணாஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரங்கள் சிரிக்க அல்ல சிந்திக்க...!
No comments:
Post a Comment