Monday 14 May 2018

ZAREEN KHAN HINDI ACTRESS BORN 1987 MAY 14




ZAREEN KHAN HINDI ACTRESS 
BORN 1987 MAY 14




சாரீன் கான்(Zareen Khan) [பிறப்பு: 14 மே, 1987] இந்தித் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகை ஆவார். இதவ்ர் தமிழ் மற்றும் பஞ்சாபி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் அனில் சர்மா இயக்கிய வீர் எனும் திரைப்படத்தில் சல்மான்கானின் இணையாக நடித்தார். இத்திரைப்படம் ஜீ தொலைக்காட்சியின் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவர் நடிப்பில் வெளியான ஹவுஸ்புல் 2 எனும் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்ற திரைப்படமாகும். 2013 ஆம் ஆண்டில் நான் ராஜாவாகப் போகிறேன் எனும் தமிழ்த் திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சாரீன் கான் 14 மே, 1987 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரத்தின் மும்பை நகரில் பிறந்தார். இவர் இஸ்லாமிய பஷ்தூன் இனத்தினைச் சார்ந்தவராவார்.[1][2][3] இவர் இந்தி, உருது, ஆங்கிலம், மராத்தி மற்றும் பஷ்தூன் ஆகிய மொழிகளைப் பேசும் திறனுடையவர்.[4][5] மும்பையிலுல்ள ரிஸ்வி அறிவியல் கல்லூரியில் கல்வி பயின்றார்.

திரைத்துறை

2010 ஆம் ஆண்டில் சாரீன் கான்
மருத்துவராக ஆசைப்பட்டு பின்னர் நடிகையானவர் சரீனா கான். சுபாஷ் கய் உருவாக்கிய யுவ்ராஜ் திரைப்பட படப்பிடிப்புத் தளத்திற்கு சரீன கான் சென்றபோது இவரைப் பார்த்த சல்மான் கான் அவரது நண்பரான அனில் சர்மாவிடம் பேசி இவரை நடிகையாக வீர் எனும் திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.[6] இத்திரைப்படத்தில் இளவரசி யசோதையாக நடிப்பதற்கு சல்மான் கான் பரிந்துரைத்தார். அதன் பொருட்டு அக்கதாப்பாத்திரத்திற்காக தன் உடல் எடையை எட்டு கிலோகிராம்கள் அதிகரித்தார்.[7] ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழான இந்தியாவினைச் சித்தரிக்கம் விதமாக டுக்கப்பட்ட இத்திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை. ஆனால் இவரது நடிப்பு மக்களாலும் விமர்சகர்களாலும் குறிப்பிடப்பட்டது. இந்தித் திரைப்படம் தவிர்த்து பிற மொழிப்படங்களில் இவர் நடித்து முதலில் வெளியானது ஜாட் ஜேம்ஸ் பாண்ட் எனும் பஞ்சாபி மொழித் திரைப்படமாகும்.
இத்திரைப்படம் 2014 ஆம் ஆண்டில் வெளியானது. இதில் லல்லி எனும் வெகுளியான கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இஅவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. சாரீன் கான், விருதினைப் பெறும் அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார் என திரைப்பட விமர்சகர் கோமல் நாக்தா குறிப்பிட்டார்.[8][9] தமிழ்த் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நான் ராஜாவாகப் போகிறேன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார்.




திரைப்படங்களின் பட்டியல்[தொகு]


வருடம்திரைப்படம்வேடம்மொழிகுறிப்பு
2010வீர்இளவரசி யசோதைஇந்திஜீ தொலைக்காட்சி விருதிற்கு முன் மொழியப்பட்டது
2011ரெடிகுஷிஇந்திஒரு பாடலில் சிறப்புத் தோற்றம்
2012ஹவுஸ்புல்2ஜெலோஇந்தி
2013நான் ராஜாவாகப் போகிறேன்மல்கோவாதமிழ்ஒரு பாடலில் சிறப்புத் தோற்றம்
2014ஜாட் ஜேம்ஸ் பாண்ட்லல்லிபஞ்சாபிஅறிமுகத் திரைப்படம்
2014டெத் ஆப் அமெர்பத்திரிகையாளர்இந்தி
2015ஹேட் ஸ்டோரி 3[10]சியா திவான்இந்தி
2016வீரப்பன்இந்திஒரு பாடலில் சிறப்புத் தோற்றம்  
2016வாஜா தும் ஹோஇந்திஒரு பாடலில் சிறப்புத் தோற்றம்
2017அக்ஸார் 2ஸீனாஇந்தி
20181921ரோஸ்இந்தி

No comments:

Post a Comment