Wednesday 9 May 2018

ACTOR ,DIRECTOR T.RAJENDAR ALIAS VIJAYA RAJENDAR BORN 1955 MAY 9



ACTOR ,DIRECTOR T.RAJENDAR 
ALIAS VIJAYA RAJENDAR
BORN 1955 MAY 9



டி. ராஜேந்தர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குனரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.

டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.

அரசியல் வாழ்க்கை

திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996ல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 

2004ல் திமுகவிலிருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

 2013 ஆம் ஆண்டு இறுதியில், லட்சிய திமுக கட்சியை கலைத்து விட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.[2][3]

15வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 8,211 வாக்குகள் பெற்றார்.

திரைப்படங்கள்
இவர் இயக்கி நடித்த சில படங்கள்.

உயிருள்ளவரை உஷா
மைதிலி என்னைக் காதலி
தங்கைக்கோர் கீதம்
உறவைக்காத்த கிளி
தாய் தங்கை பாசம்
ஒரு தாயின் சபதம்
சொன்னால் தான் காதலா
மோனிசா என் மோனலிசா


இவர் நடித்து இயக்கிய கடைசி தோல்வி படம்  மோனிசா என் மோனலிசா.இதில் தன் வழக்கமான பாணியை மீறி படம் எடுத்திருந்தார் . இதற்கு  ஒரு பத்திரிகை விமர்சனம் செய்திருந்தது 


பொதுவாக தந்தையைப்பார்த்து மகன் கெட்டுப்போவது வழக்கம் தான் .
ஆனால் இப்படத்தை பொறுத்தவரை தனயனை பார்த்து தந்தை கெட்டு

போய் விட்டதாய் விமரிசனம் செய்தது   



No comments:

Post a Comment