BOMBAY NAVAL REVOLT 1946
1946 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கலாம் என்று பிரிட்டிஷார் முடிவு செய்து ஜின்னா தனிநாடு கேட்டுக்கொண்டிருந்த காலம் .கிடைக்க வேண்டிய சுதந்திரம் ஜின்னாவால் பாழாகி கொண்டிருந்தது .இந்த நேரத்தில் நமது நாட்டில் கலவரத்தை தூண்டுவது ,அதை ஆதரிப்பது முட்டாள் தனமான ஒன்று .எனவே காந்தி போன்ற பொறுப்பான தலைவர்கள் இதனை ஆதரிக்கல .காந்தியின் தென்னிந்திய பயணம் மூலம் வசூல் செய்து கொண்டிருந்தார் .இதை வைத்து ஏழை மக்களின் நலனுக்கு ஏதாவது செய்யலாம் என்று தான் முயன்று கொண்டிருந்தார் .ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சி
என்ற பேரில் கிறுக்குத்தனமான இதுபோன்ற நடவடிக்கையில் இரங்கி இருந்தது .இந்த கலவரத்தில் இறந்து போன 300 பேர் மரணத்திற்கு யார் காரணம் ? இப்போது எதை எடுத்தாலும் காந்தியை கொச்சை படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர் பலர் .சரி .அவங்களுக்கு இருக்கும் அறிவு அம்புடுதேன்
MY OPINION
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
காந்தியால் மட்டுமே கிடைத்ததா சுதந்திரம்?
நாவல் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல
கி.ராஜ நாராயணனின், ‘ கோபல்லபுரத்து மக்கள்’ நாவல் படித்து முடித்தேன்.
நாவலின் இறுதிப் பகுதியில், H.I.M.S. தல்வார் என்கிற கப்பற்படைப் பயிற்சித் தளத்தில் இருந்த இந்திய மாலுமிகள் ஆரம்பித்து வைத்த வெள்ளையர்களுக்கு எதிரான வீரம் செறிந்த போராட்டம் பற்றி விரிவாகப் பதிவு செய்கிறார்.
தல்வார் கொடிக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியை இறக்கியிருக்கிறார்கள். இந்தியாவிலேயே, பிரிட்டிஷ் கொடியை இறக்கியது, இது தான் முதலாவது என்று சொல்லப்படுகிறது.. அதே கொடிக் கம்பத்தில், வேறொரு கொடியை ஏற்ற வேண்டும், எந்த கொடியை ஏற்றுவது என்று தயங்கியிருக்கிறார்கள். பிறகு, இந்திய தேசிய காங்கிரசின் மூவர்ண கொடி, முஸ்லிம் லீக்கின் பச்சைக் கொடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி ஆகிய மூன்றையும் ஏற்றியிருக்கிறார்கள். இது ஒரு முதன்மையான வரலாற்றுத் தரவு என்பதாகத் தோன்றுகிறது. ( பிரிட்டிஷாரிடம் பணியாற்றிய மாலுமிகள் இத்தனை முன் யோசனை உள்ளவர்களாக இருந்தது நம்மை வியக்க வைக்கிறது.)
அந்த போராட்டம், பம்பாயில் நங்கூரமிட்டிருந்த 60 பயிற்சி கப்பல்களுக்கும் பரவியது. மாலுமிகள் பம்பாய் நகரத்து வீதிகளில் இறங்கி, ஊர்வலமாகச் சென்று கடை அடைப்புப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கராச்சி மற்றும் கொழும்பு துறைமுகங்களில் நின்றிருந்த கப்பல்களுக்கும் இந்த போராட்டம் விரிவடைந்தது.
பொதுமக்களின் ஆதரவு இருந்த இந்த போராட்டத்தை, காந்தி, முகம்மது அலி ஜின்னா, நேரு, பட்டேல், அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
.
‘‘கடைசியாக, பிரிட்டிஷார் சரண் அடைந்தார்கள். போராடிய மாலுமிகளிடம் அல்ல, போராட்டத்திற்கு எதிராக இருந்த தலைவர்களிடம்’ என்று ஒரு பன்ச் வைக்கிறார்’ கி.ரா.
இனிமேல் இவர்களை அடக்கி ஆள முடியாது என்று பிரிடிஷார் நினைத்தது போலவே, இனிமேல், இவர்கள் நம் சொல்லைக் கேட்க மாட்டார்கள் என்று தேசியத் தலைவர்கள் நினைத்திருக்கிறார்கள். காரணம் மக்கள் அவர்கள் கட்டளையை மீறித் தான் மாலுமிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்திருக்கிறார்கள்.
வழக்கமான கி.ரா-வின் கிண்டல் கேலி என்று நகரும் ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவல், இறுதியில் மாலுமிகளின் போராட்டத்தை, அந்த ஊருக்கு வந்த மாலுமி மணி என்பவர் சொல்வதன் வாயிலாக நகர்த்தும் போது, வழக்கத்திற்கு மாறாக, ஒரு துப்பறியும் நாவலின் விறுவிறுப்புடன் நகர்கிறது.
‘பம்பாய் தெருக்களில், இரண்டு நாட்கள், வெள்ளை அரசின் இராணுவத்தோடு மக்கள் போராடியதில், 300 பேர் கொல்லப் பட்டார்கள். இந்திய நாட்டின் வரலாற்றில், பிரிட்டிஷ் படைகளுடன், மக்கள் போராடியதும், அதில் இந்திய இராணுவ வீரர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் இணைந்து கொண்டதும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி.’
காந்தியின் அகிம்சை போராட்டம் மட்டுமே, இந்தியாவிற்கு விடுதலைப் பெற்றுத் தந்தது என்று சொல்லிக் கொடுப்பதும் கூட ஒரு விதத்தில், வரலாற்றுப் புரட்டு என்பதாகவே தோன்றுகிறது.
காந்தி மகான் என்பதும் ஏற்கக் கூடியதே. நள்ளிரவில், விடுதலை கிடைக்கிறது. பொழுது விடிந்ததும், கல்கத்தாவில், அமைதியாக ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருந்த காந்தியைப் பத்திரிகையாளர்கள்.. சந்திக்கிறார்கள் “ இந்தியாவுக்கு விடுதலை கிடைத்து விட்டது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? “ என்று கேட்கிறார்கள். திரும்பத் திரும்ப கேட்ட போதும், காந்தி சொன்ன ஒரே பதில், “ ஒன்றுமில்லை “
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், ஒன்றுமில்லை’
நாவலுக்கு வெளியே :
பம்பாய் கலகம் ( Bambay Mutiny) என்று குறிப்பியடப் படும் இந்த கலகம், 1946, பிப்ரவரி 18-ஆம் நாளில், H.I.M.S. Thalvar என்கிற யுத்த கப்பலின் மாலுமிகளால் துவக்கப் பட்டது.
அருணா ஆசஃப் அலி, போராட்டத்தை ஆதரித்திருக்கிறார். போராட்டக் காரர்களைச் சந்திக்கவும் ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், போகவில்லை. காந்தி, அவரை மிகவும் கடுமையாகக் கண்டித்ததை அறியும் போது, அதற்கான காரணமும் விளங்குகிறது.
பாம்பே வீதிகளில் போராட்டக் காரர்கள், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் லெனின் படங்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர். கைது செய்யப் பட்ட இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்தவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதும், பல கோரிக்கைகளில் ஒன்று. காந்தி, நேருக்கு இவை உவப்பாக இருந்திருக்காது என்பதும் புரிகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, போராட்டத்தை முழுமையாக ஆதரித்திருக்கிறது.
John Master’s ‘Bhowani Junction’ என்கிற புத்தகம், இந்த கலகத்தை அடிப்படையாக வைத்து எழுதப் பட்டது.
2014-இல் வெளி வந்த ‘லியோபிண்டே புஸ்தகம்’ என்னும் மலையாளத் திரைப் படம், இக் கலகத்தை முழுமையாகப் பேசுகிறது. ஃபகத் ஃபாசில், கலகம் செய்யும் மாலுமியாக நடித்திருக்கிறார். Amal Neorol என்பவர், இயக்குநர்
No comments:
Post a Comment