Wednesday 9 May 2018

GOPALA KRISHNA GOKHALE ,FREEDOM FIGHTER 1866 MAY 9- 1915 FEBRUARY 19






GOPALA KRISHNA GOKHALE ,FREEDOM  FIGHTER  1866 MAY 9- 1915 FEBRUARY 19




கோபால கிருஷ்ண கோகலே- இவர் காந்திமகானின் வழிகாட்டி 1866 மே 9இல் பிறந்தார்

கோபால கிருஷ்ண கோகலே , CIE (மராட்டி: गोपाळ कृष्ण गोखले) (மே 9, 1866 - பிப்ரவரி 19, 1915) இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்புபின் உருவாக்குனரும் ஆவார். அந்த அமைப்பின் மூலம் மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் இதர அரசியலமைப்புகளில் பணிபுரிந்ததன் மூலம், கோகலே ஆங்கிலேய அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் அல்லது முக்கியமாக அதை மட்டுமே செய்யாமல் அவர் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்: வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல்.

பின்னணி மற்றும் கல்வி[தொகு]

கோபால கிருஷ்ண கோகலே, 1866 ஆம் ஆண்டு மே 9 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில் பிறந்தார், அப்போது இந்த மாநிலம் இந்திய மேற்கு கடற்கரையோரம் இருந்த பாம்பே பிரெசிடென்சியின் ஒரு அங்கமாக இருந்தது. அவர்கள் சித்பாவன் பிராமணர்களாக இருந்தபோதிலும் கோகலேவின் குடும்பம் ஒப்பீட்டளவில் ஏழ்மையில் இருந்தது. இவ்வாறு இருந்தபோதிலும் அவர்கள் கோகலேவுக்கு ஆங்கில கல்வி கிடைப்பதை உறுதிசெய்தனர், இதன் மூலம் ஆங்கிலேய அரசில் ஒரு கிளார்க்காகவோ சிறு அதிகாரியாகவோ வேலை கிடைக்கும் நிலையில் கோகலே இருப்பார் என நம்பினர். பல்கலைக்கழக கல்வியைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே 1884 ஆம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். கோகலேவின் கல்வி அவருடைய எதிர்கால வாழ்க்கைத் தொழிலின் போக்கை மிகப் பெரிய அளவில் தூண்டுவதாக அமைந்தது – ஆங்கிலம் கற்றதோடல்லாமல் அவர் மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளுக்கு உள்ளாகி ஜான் ஸ்டூவார்ட் மில் மற்றும் எட்முண்ட் புர்கே போன்ற தத்துவ அறிஞர்களின் பெரும் ஆர்வலராக ஆனார்.[1] ஆங்கில காலனிய ஆட்சிமுறையின் பல அம்சங்களைத் தயக்கமின்றி விமர்சித்து வந்தபோதிலும், கோகலே தன்னுடைய கல்லூரி ஆண்டுகளில் பெற்ற ஆங்கிலேய அரசியல் கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான மரியாதை அவருடைய வாழ்நாள் முழுவதற்கும் அவருடனேயே இருந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பால கங்காதர் திலகருடனான பகை[தொகு]

சமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரணடேவின் ஆதரவாளராக கோகலே 1889 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ்சின் உறுப்பினரானார். பால கங்காதர் திலகர், தாதாபாய் நௌரோஜி, பிபின் சந்திர பால், லாலா லஜ்பத் ராய் மற்றும் அன்னி பெசன்ட் போன்ற இதர சமகாலத்திய தலைவர்களுடன் கோகலே, சாதாரண இந்தியர்களுக்குப் பொதுத் துறை விஷயங்களில் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடினார். அவர் தன்னுடைய எண்ணங்களில் மற்றும் மனப்பான்மையில் மிதமானவராக இருந்தார், இந்தியர்களின் உரிமைகளுக்கு ஆங்கிலேயர்களின் பெருமளவு மரியாதையைப் பெற்றுத்தரக்கூடிய பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் செயல்முறையை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆங்கில அதிகாரிகளிடத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார். கோகலே அயர்லாந்து[2] சென்றுவந்தார், அங்கு அவர் ஐரிஷ் தேசியவாதியான ஆல்ஃப்ரெட் வெப்பை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பணிபுரிய 1894 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த ஆண்டு, கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசின் இணைச் செயலாளர் ஆனார். திலகர் மற்றும் கோகலேவின் ஆரம்ப கால தொழில்வாழ்க்கை பல விதங்களில் இணையானதாகவே இருந்து வந்தது – இருவருமே சிட்பவான் பிராமணர்கள் (இருந்தாலும் கோகலே போலல்லாமல், திலகர் பெரும் வளமிக்கவராக இருந்தார்), இருவருமே எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தனர், இருவருமே கணித பேராசிரியர்களானார்கள் மற்றும் இருவருமே டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். எனினும், இருவருமே காங்கிரசில் ஈடுபட ஆரம்பித்தவுடனே, இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சிறப்பான வழிமுறை தொடர்பான அவர்களின் வேறுபட்ட எண்ணங்கள் தெளிவாக வெட்டவெளிச்சமாகியது.[3]

திலகருடனான கோகலேவின் முதல் பெரும் எதிர்ப்படுதல் அவருடைய விருப்பமான செயல்திட்டத்தின் மீது மையம் கொண்டிருந்தது, அது 1891-92 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஜ் ஆஃப் கன்சன்ட் சட்டமாகும். கோகலே மற்றும் அவருடைய திறந்த மனப்பான்மையுடைய கூட்டாளிகள், தங்களுடைய சொந்த இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தைத் திருமண வன்கொடுமைகளைத் தடுத்திடும் நோக்கில் ஏற்புடைய சட்டத்தை விரும்பினர். அந்தச் சட்டம் தீவிரமாக இல்லாதபோதும், திருமண ஒப்பந்தத்தைப் பத்து வயதிலிருந்து பன்னிரண்டு வயதாக மட்டுமே உயர்த்த எண்ணியிருந்தபோதிலும் திலகர் அதை ஒரு பெரும் விஷயமாக ஆக்கினார்; குழந்தைத் திருமணத்தை நீக்கும் எண்ணத்தை அவர் எதிர்க்கவில்லை ஆனால் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஆங்கிலேயர்கள் தலையிடும் எண்ணத்தை எதிர்த்தார். திலகருக்கோ அத்தகைய மறுமலர்ச்சி நடவடிக்கைகள் ஆங்கிலேயர்களால் நடைமுறைப்படுத்தப்படுதல் பிடிக்கவில்லை, ஆனால் அவற்றை சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியர்கள் தாங்களே தங்கள் மீது இவற்றை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என்றிருந்தது. எனினும் திலகரின் எதிர்ப்புகளுக்கு இடையில் கோகலே மற்றும் மறுமலர்ச்சியாளர்கள் அன்றைய நாளை வென்று அந்த மசோதா பாம்பே பிரெசிடென்சியில் சட்டமாக ஆனது.[4]

1905 ஆம் ஆண்டில் கோகலே இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவரானார். கோகலே இப்போது தன்னுடைய புதிய பெரும்பான்மை ஆதரவைப் பயன்படுத்தி தன் நீண்டகால எதிரியான திலகரை வலுவிழக்கச் செய்து, 1906 ஆம் ஆண்டில் காங்கிரசின் தலைவர் வேட்பாளராக திலகரை ஆதரிக்க மறுத்துவிட்டார். இதற்குள் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது: கோகலே மற்றும் திலகர் முறையே காங்கிரசின் மிதமானவர்கள் மற்றும் "தீவிரவாதி"களின் தலைவரானார்கள் (பிந்தையது இப்போது அரசியல்ரீதியாக சரியான சொல்லான, 'தீவிரமான தேசியவாதிகள்' என்னும் சொல்லால் அறியப்படுகிறது). திலகர், ஆங்கிலேயப் பேரரசை வீழ்த்துவதற்கு உள்நாட்டு கலவரம் மற்றும் நேரடி புரட்சியின் ஆதரவாளர், ஆனால் கோகலேவோ ஒரு மிதமான மறுமலர்ச்சியாளர். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக உடைந்து பத்தாண்டு காலத்துக்கு அதன் செயல்பாட்டுத்தன்மையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. 1916 ஆம் ஆண்டில் கோகலே இறந்த பின்னர் இரு பிரிவுகளும் ஒன்று சேர்ந்தன.

இந்தியச் சேவகர்கள் அமைப்பு[தொகு]

1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, இந்தியச் சேவகர்கள் அமைப்பினை ஏற்படுத்தினார், இது அவருடைய இதயத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த, குறிப்பாக இந்தியக் கல்வியின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கானது. கோகலேவுக்கு, இந்தியாவில் உண்மையான அரசியல் மாற்றம் என்பது புதிய தலைமுறை இந்தியர்கள் தங்களுடைய நாட்டிற்கும் மற்றும் ஒருவர் மற்றவர்களிடம் காட்டும் உள்நாட்டு மற்றும் தாய்நாட்டு பற்றுக்கான கடமைக்கான கல்வியைப் பெறும்போதுதான் சாத்தியம் என எண்ணினார். ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமைச் சேவைகள், இந்த அரசியல் கல்வியை இந்தியர்கள் பெறுவதற்கான போதிய அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று அவர் எண்ணினார், இந்திய சேவகர்கள் அமைப்பு இந்தத் தேவையை நிறைவேற்றும் என்று கோகலே நம்பினார். இந்தியச் சேவகர்கள் அமைப்புக்கான அரசயலமைப்பின் முன்னுரையில் கோகலே இவ்வாறு எழுதினார், "இந்தியச் சேவகர்கள் அமைப்பினர், நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் நபர்களை சமய ஆர்வத்துடன் தயார்படுத்தி, இருக்கும் எல்லா சட்டமைப்பு முறையின் கீழ் இந்திய மக்களின் தேசிய உணர்வுகளை ஊக்குவிக்கும்." [5] அந்த அமைப்பு இந்திய கல்வியை முன்னேற்றும் நோக்கத்தை உள்ளார்வத்துடன் எடுத்துக்கொண்டது, மேலும் அதன் பல செயல்முறைத் திட்டங்களுடன், நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்தது, பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தது மற்றும் தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகளை வழங்கியது.[6]

கோகலேவின் இறப்பினைத் தொடர்ந்து இந்த அமைப்பு தன்னுடைய வீரியத்தை இழந்தபோதிலும் அது இன்றைய நாள் வரையில் நிலைத்திருக்கிறது, இருந்தாலும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை சிறியதாகவே இருக்கிறது.

ஆங்கிலப் பேரரசின் அரசாங்கத்துடன் ஈடுபாடு[தொகு]
இந்திய தேசிய அமைப்பின் ஆரம்பக்கட்டத் தலைவராக இருந்தபோதிலும், கோகலே சுதந்திரத்தைப் பற்றி முதன்மையாகக் கவலைப்படவில்லை ஆனால் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்; அத்தகைய மறுமலர்ச்சிகள் ஏற்கெனவே இருக்கும் ஆங்கிலேய அரசு நிறுவனங்களுக்குள்ளேயே பணி செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பினார், இந்த நிலை திலகர் போன்ற அதி தீவிர தேசியவாதிகளிடத்தில் பகைமையை ஏற்படுத்தியது. இத்தகைய எதிர்ப்புகளால் தைரியமிழக்காமல், தன்னுடைய மறுமலர்ச்சி குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்கு கோகலே தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் ஆங்கிலேயர்களுடன் நேரடியாக பணி செய்தார்.

1899 ஆம் ஆண்டில், கோகலே மும்பை சட்ட பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903 ஆம் ஆண்டு மே 22 அன்று அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவிவகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் பேரரசின் சட்டப் பேரவை 1909 ஆம் ஆண்டில் விரிவடைந்தபின்னர் அதில் சேவை புரிந்தார். அங்கு அவர் மிகவும் அறிவுத்திறமுடையவர் என்னும் பெயரைப் பெற்று ஆண்டு வரவுசெலவு திட்ட விவாதங்களில் பெரிதும் பங்காற்றினார். அவர் இங்கிலாந்து நாட்டின் செயலாளர் லார்ட் ஜான் மார்லேயுடன் ஒரு சந்திப்புக்காக இலண்டனுக்கு அழைக்கப்படும் அளவுக்கு அவர் ஆங்கிலேயர்களுடன் ஒரு சுமுகமான உறவை உருவாக்கிக் கொண்டார், இவருடன் கோகலே இணக்கமான உறவை மேற்கொண்டிருந்தார். 1909 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மார்லே-மிண்டோ திருத்தங்களை செழுமைப்படுத்துவதில் கோகலே இந்த பயணங்களின் போது உதவினார். 1904 ஆம் புத்தாண்டு கௌரவிக்கப்படுபவர்கள் பட்டியலில் கோகலே CIE (கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்பையர்) ஆக நியமிக்கப்பட்டார், இது அவருடைய சேவைக்காக பேரரசின் ஒரு முறையான அங்கீகாரமாகும்.

ஜின்னா மற்றும் காந்தி இருவருக்குமான அறிவுரையாளர்[தொகு]
மகாத்மா காந்தி வளர்ச்சிபெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான அறிவுரையாளராக இருந்து வந்தார். 1912 ஆம் ஆண்டில் காந்தியின் அழைப்பின் பேரில் கோகலே தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை புரிந்தார். ஒரு இளம் பாரிஸ்டராக காந்தி, தம்முடைய தென் ஆப்பிரிக்க பேரரசுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து திரும்பி கோகலேவிடமிருந்து தனிப்பட்ட முறையில் அறிவுரைகளைப் பெற்றார், இதில் இந்தியா பற்றிய அறிவாற்றலும் புரிதலும் மற்றும் சாதாரண இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் உள்ளடங்கியது. 1920 ஆம் ஆண்டுக்குள் காந்தி இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராக உருவானார். தன்னுடைய சுயசரிதையில் காந்தி, கோகலேவை தன்னுடைய அறிவுரையாளர் மற்றும் வழிகாட்டி எனக் குறிப்பிடுகிறார். காந்தியும் கூட கோகலேவை ஒரு போற்றத்தக்க தலைவர் மற்றும் தேர்ந்த அரசியல்வாதியாக ஏற்றுக்கொண்டு, அவரை 'படிகம் போன்று சுத்தமானவர், ஆட்டுக்குட்டி போன்று மென்மையானவர், சிங்கம் போல் வீரமுடையவர், தவறுக்கு பெருந்தன்மை கொண்டவர் மேலும் அரசியல் அரங்கில் ஒரு சரியான மனிதர்' என்று விவரித்துள்ளார்.[7] கோகலேவிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தபோதிலும், அரசியல் மாற்றங்களைப் பெறுவதற்கான ஒரு வழியாக மேற்கத்திய நிறுவனங்களில் கோகலே வைத்திருக்கும் நம்பிக்கையை காந்தி நிராகரித்தார், அதன் விளைவாக அவர் கோகலேவின் இந்திய சேவகர்கள் அமைப்பில் உறுப்பினராகச் சேர விரும்பவில்லை.[8] பாகிஸ்தானின் எதிர்கால நிறுவனரான முகமத் அலி ஜின்னாவின் முன்மாதிரியாகவும் அறிவுரையாளராகவும் கூட கோகலே இருந்தார், ஜின்னா 1912 ஆம் ஆண்டில் "இஸ்லாமிய கோகலே"வாக உருவாக விருப்பப்பட்டார். ஜின்னாவை "இந்து-முகமதிய ஒற்றுமையின் தூதுவர்" என்று கோகலே பிரபலமாகப் புகழ்ந்தார். (சான்று தேவை)

கோகலே நிறுவனம்[தொகு]
கோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் (GIPE), பொதுவாக கோகலே இன்ஸ்டிடியூட் என்று அறியப்படுவது, இந்தியாவில் இருக்கும் மிகப் பழமையான பொருளாதார ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இது மஹாராஷ்டிராவின் பூனேவிலுள்ள டெக்கன் ஜிம்கானா பகுதியில் இருக்கும் பிஎம்சிசி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனம் திரு. ஆர்.ஆர். காலே அவர்களால் இந்திய சேவகர்கள் அமைப்புக்கு வழங்கப்பட்ட நிலையான நிதியிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்திய சேவகர்கள் அமைப்பினர் தான் இந்த நிறுவனத்தின் அறங்காவலர்கள் ஆவார்கள்.

இறப்பு[தொகு]
கோகலே தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையிலும் தொடர்ந்து அரசியல் ரீதியாக இயங்கிக்கொண்டே இருந்தார். இதில் வெளிநாட்டுப் பயணங்களும் அடங்கும்: 1908 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பயணம் அல்லாது அவர் 1912 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கும் சென்றுள்ளார், அவருடைய ஆதரவாளரான காந்தி அங்கு வசித்துக்கொண்டிருந்த சிறுபான்மை இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக பணி புரிந்துகொண்டிருந்தார். இந்தியக் கல்வியை மேம்படுத்துவதற்காக முனைந்துகொண்டிருந்த அதே நேரத்தில், அவர் தொடர்ந்து இந்திய சேவகர்கள் அமைப்பு, காங்கிரஸ் மற்றும் சட்டப் பேரவையிலும் ஈடுபட்டு வந்தார். எனினும் இத்தகைய மன அழுத்தங்கள் தன் உயிர் பலியை வாங்கிக்கொண்டது, 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் இறந்துவிட்டார்.

இந்திய தேசிய இயக்கத்தின் மீது பாதிப்பு[தொகு]
இந்திய தேசிய இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கில் கோகலேவின் பாதிப்பு பெருமளவில் இருந்தது. ஆங்கிலேய பேரரசின் அரசாங்கத்தில் உயர்ந்த பதவிநிலையில் இருப்பவர்களுடன் கோகலே கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் மூலம், இந்தியாவின் காலனியாதிக்க தலைமையாளர்களை வற்புறுத்தி கல்விபெற்ற புதிய தலைமுறை இந்தியர்களின் திறன்களை அங்கீகரிக்கும்படியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவர்களை ஆட்சிமுறை செயல்பாடுகளில் சேர்த்துக்கொள்ளும்படியும் அவர் கட்டாயப்படுத்தினார். அரசியலை ஆன்மீகமாக்கல், சமூக மேம்பாடு மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவற்றின் தேவை மீது கோகலே கொண்டிருந்த திடமான நம்பிக்கை, இந்திய அரசியல் அரங்கில் இருந்த அடுத்த தலைமுறை மனிதரான மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியை வெகுவாகக் கவர்ந்தது; மேற்கத்திய அரசியல் நிறுவனங்கள் மற்றும் பழமையிலிருந்து விடுபடுதல் போன்றவற்றில் கோகலேவுக்கு இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை காந்தி நிராகரித்த போதிலும், 1950 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெஸ்மினிஸ்டர் மாதிரியான அரசாங்கம் உருவாக்கத்தில் இது பலனளிக்கக்கூடியதாக இருந்தது
Image may contain: 1 person

No comments:

Post a Comment