Monday 7 May 2018

ILAIYARAJA ,MUSIC DIRECTOR LEGEND BORN 1943 JUNE 4





ILAIYARAJA ,MUSIC DIRECTOR LEGEND
BORN 1943 JUNE 4



இளையராஜா (ஆங்கிலம்:Ilaiyaraaja, பிறப்பு: சூன் 2, 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.

இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 25 சனவரி 2018 அன்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.[1]


தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

வாழ்க்கைச் சுருக்கம்
இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.

இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.

1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.[2]

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.

நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினைத் தேடித்தந்தன. முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.

ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.

இசை நடை மற்றும் தாக்கம்
இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள்
இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.
"How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
"Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
"India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.
1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.

"ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
"இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
"மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
சாதனைகள்
இளையராஜா, இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசை கோர்த்துள்ளார்.
லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார். (அந்தச் சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).
விருதுகளும் பட்டங்களும்
தமிழக அரசின் கலைமாமணி விருது

1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது
1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருது
இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் முனைவர் பட்டம் (டாக்டர் - Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.
பத்ம பூசண் விருது
பத்ம விபூஷண் விருது- 2018 [3]
இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :
1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு)
1987இல் - சிந்து பைரவி (தமிழ்)
1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு)
2009இல் - பழஸிராஜா (மலையாளம்)
2016இல் - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)[4]
இயேசுவின் உயிர்த்தெழுதல் விமர்சனம்
இளையராஜா இயேசுவின் உயிர்த்தெழுதல் இடம்பெறவில்லை என்றும் உயிர்த்ததெழுந்த ஒரே ஒரு நபர் ஈராம மகாரிசி ஒருவரே எனவும் தன் கருத்தினை வெளியிட்டிருந்தார்.[5] இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக இருந்நதுடன் கிறிஸ்தவ குழு ஒன்றினால் தங்களின் அடிப்படை விசுவாசத்திற்கு எதிரான பேச்சு என்பதால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.[6]

பங்குபெறும் பிற துறைகள்
இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய புத்தகங்கள் :

சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
வழித்துணை
துளி கடல்
ஞான கங்கா
பால் நிலாப்பாதை
உண்மைக்குத் திரை ஏது?
யாருக்கு யார் எழுதுவது?
என் நரம்பு வீணை
நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
இளையராஜாவின் சிந்தனைகள்
பயன்படுத்திய ராகங்கள் சில
கீரவாணி - என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் (வள்ளி), காற்றில் எந்தன் கீதம் (ஜானி)
கல்யாணி - ஜனனி ஜனனி (தாய் மூகாம்பிகை)
பந்துவராளி - ஓம் சிவோஹம் (நான் கடவுள்)
ரசிகரஞ்சனி - அமுதே தமிழே அழகிய மொழியே (கோயில் புறா)
இவற்றையும் பார்க்க
இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

1976 - 1980
அன்னக்கிளி (1976)
பத்ரகாளி (1976)
பாலூட்டி வளர்த்த கிளி (1976)
அவர் ௭னக்கே சொந்தம் (1977)
ஆளுக்கொரு ஆசை (1977)
16 வயதினிலே (1977)
காயத்ரி (1977)
பெண் ஜென்மம் (1977)
துர்கா தேவி (1977)
தீபம் (1977)
புவனா ஒரு கேள்விக்குறி (1977)
துணையிருப்பாள் மீனாட்சி (1977)
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977)
ஓடி விளையாடு தாத்தா (1977)
அச்சாணி (1978)
வாழ நினைத்தால் வாழலாம் (1978)
அவள் அப்படித்தான் (1978)
கிழக்கே போகும் ரயில் (1978)
சிட்டுக்குருவி (1978)
தியாகம் (1978)
திருக்கல்யாணம் (1978)
திரிபுர சுந்தரி (1978)
கண்ணன் ஒரு கைக்குழந்தை (1978)
காற்றினிலே வரும் கீதம் (1978)
இளமை ஊஞ்சலாடுகிறது (1978)
இது ௭ப்படி இருக்கு (1978)
அவள் ஒரு பச்சைக் குழந்தை (1978)
அவள் அப்படித்தான் (1978)
மாரியம்மன் திருவிழா (1978)
முள்ளும் மலரும் (1978)
பிரியா (1978)
பைரவி (1978)
சிகப்பு ரோஜாக்கள் (1978)
சொன்னது நீதானா (1978)
வட்டத்துக்குள் சதுரம் (1978)
ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
அகல் விளக்கு (1979)
ஆறிலிருந்து அறுபது வரை (1979)
அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979)
நல்லதொரு குடும்பம் (1979)
நான் வாழ வைப்பேன் (1979)
நிறம் மாறாத பூக்கள் (1979)
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று (1979)
கடவுள் அமைத்த மேடை (1979)
கல்யாண ராமன் (1979)
அன்பே சங்கீதா (1979)
அன்னை ஓர் ஆலயம் (1979)
கவிக்குயில் (1979)
தர்ம யுத்தம் (1979)
கௌரிமான் (1979)
பகலில் ஒரு இரவு (1979)
பட்டாக்கத்தி பைரவன் (1979)
பூந்தளிர் (1979)
சட்டம் ௭ன் கையில் (1979)
சக்களத்தி (1979)
லட்சுமி (1979)
இளையராஜாவின் ரசிகை (1979)
பொண்ணு ஊருக்கு புதுசு (1979)
புதிய வார்ப்புகள் (1979)
உதிரிப்பூக்கள் (1979)
வெற்றிக்கு ஒருவன் (1979)
மணிப்பூர் மாமியார் (1979)
முகத்தில் முகம் பார்க்கலாம் (1979)
முதல் இரவு (1979)
மூடுபனி (1980)
அன்புக்கு நான் அடிமை (1980)
கண்ணில் தெரியும் கதைகள் (1980)
கல்லுக்குள் ஈரம் (1980)
கரும்பு வில் (1980)
காளி (1980)
கிராமத்து அத்தியாயம் (1980)
உல்லாசப் பறவைகள் (1980)
நதியை தேடி வந்த கடல் (1980)
நான் போட்ட சவால் (1980)
நிழல்கள் (1980)
நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980)
முரட்டுக்காளை (1980)
சூலம் (1980)
ரிஷிமூலம் (1980)
தைப்பொங்கல் (1980)
புதிய அடிமைகள் (1980)
பூட்டாத பூட்டுகள் (1980)
இதயத்தில் ஒரு இடம் (1980)
இளமை கோலம் (1980)
ஒரே முத்தம் (1980)
ஜானி (1980)
குரு (1980)
௭ல்லாம் உன் கைராசி (1980






1991 – 2000
குணா (1991)
கும்பக்கரை தங்கையா (1991)
இதயம் (1991)
இரும்பு பூக்கள் (1991)
ஈரமான ரோஜாவே (1991)
ஊரெல்லாம் உன் பாட்டு (1991)
கேப்டன் பிரபாகரன் (1991)
மைக்கேல் மதன காமராஜன் (1991)
கோபுர வாசலிலே (1991)
பிரம்மா (1991)
பிள்ளை பாசம் (1991)
புதிய ராகம் (1991)
புதிய ஸ்வரங்கள் (1991)
புது நெல்லு புது நாத்து (1991)
மனித ஜாதி (1991)
தளபதி (1991)
தர்மதுரை (1991)
தந்துவிட்டேன் ௭ன்னை (1991)
தம்பிக்கு ஒரு பாட்டு (1991)
தாலாட்டு கேட்குதம்மா (1991)
தாயம்மா (1991)
௭ன் அருகில் நீ இருந்தால் (1991)
௭ன் ராசாவின் மனசிலே (1991)
சாமி போட்ட முடிச்சு (1991)
சார் ஐ லவ் யூ (1991)
உருவம் (1991)
வெற்றிப் படிகள் (1991)
வெற்றிக் கரங்கள் (1991)
தங்கதாமரைகள் (1991)
கற்பூர முல்லை (1991)
அக்னி பார்வை (1992)
ஆவாரம்பூ (1992)
இன்னிசை மழை (1992)
இது நம்ம பூமி (1992)
உன்னை வாழ்த்தி பாடுகிறேன் (1992)
௭ன்றும் அன்புடன் (1992)
ஒன்னா இருக்க கத்துக்கணும் (1992)
தம்பி பெண்டாட்டி (1992)
தங்கக்கிளி (1992)
தங்க மனசுக்காரன் (1992)
தாலாட்டு (1992)
நாடோடித் தென்றல் (1992)
நாடோடிப் பாட்டுக்காரன் (1992)
நாங்கள் (1992)
கலிகாலம் (1992)
பங்காளி (1992)
பரதன் (1992)
பாண்டியன் (1992)
பாண்டித்துரை (1992)
மீரா (1992)
தெய்வ வாக்கு (1992)
சின்ன கவுண்டர் (1992)
சின்னத் தம்பி (1992)
சின்ன பசங்க நாங்க (1992)
சின்ன தாய் (1992)
சின்னவர் (1992)
சிங்காரவேலன் (1992)
தாய்மொழி (1992)
தேவர் மகன் (1992)
திருமதி பழனிச்சாமி (1992)
வண்ண வண்ண பூக்கள் (1992)
வா வா வசந்தமே (1992)
வில்லுப்பாட்டுக்காரன் (1992)
செம்பருத்தி (1992)
செந்தமிழ் பாட்டு (1992)
மன்னன் (1992)
மகுடம் (1992)
மாப்பிள்ளை வந்தாச்சு (1992)
ராசுக்குட்டி (1992)
வள்ளி (1993)
வால்டர் வெற்றிவேல் (1993)
உழைப்பாளி (1993)
உடன்பிறப்பு (1993)
உள்ளே வெளியே (1993)
உத்தம ராசா (1993)
மணிக்குயில் (1993)
மகராசன் (1993)
மறுபடியும் (1993)
மாமியார் வீடு (1993)
அரண்மனைக்கிளி (1993)
ஆத்மா (1993)
மகாநதி (1993)
பார்வதி என்னை பாரடி (1993)
பொன்விலங்கு (1993)
பொறந்த வீடு புகுந்த வீடு (1993)
௭ஜமான் (1993)
௭ங்க முதலாளி (1993)
௭ங்க தம்பி (1993)
ஏழை ஜாதி (1993)
ஐ லவ் இந்தியா (1993)
சக்கரைத் தேவன் (1993)
சின்ன ஜமீன் (1993)
சின்ன தளபதி (1993)
தர்ம சீலன் (1993)
துருவ நட்சத்திரம் (1993)
சின்ன கண்ணம்மா (1993)
சின்ன மாப்பிள்ளை (1993)
கலைஞன் (1993)
கட்டளை (1993)
காத்திருக்க நேரமில்லை (1993)
கிளிப்பேச்சுக் கேட்கவா (1993)
கோயில் காளை (1993)
ராக்காயி கோவில் (1993)
நாளை ௭ங்கள் கல்யாணம் (1993)
கண்மணி (1994)
செந்தமிழ் செல்வன் (1994)
அமைதிப்படை (1994)
அதிரடிப்படை (1994)
அதர்மம் (1994)
ஆனஸ்ட் ராஜ் (1994)
மகாநதி (1994)
மகளிர் மட்டும் (1994)
பெரிய மருது (1994)
சக்திவேல் (1994)
சக்திவயவான் (1994)
தென்றல் வரும் தெரு (1994)
சேதுபதி ஐபிஎஸ் (1994)
சாது (1994)
சீமான் (1994)
செவ்வந்தி (1994)
தோழர் பாண்டியன் (1994)
வீரா (1994)
புதுப்பட்டி (1994)
பொண்ணுத்தாயி (1994)
ராசாமகன் (1994)
பிரியங்கா (1994)
ராஜகுமாரன் (1994)
வனஜா கிரிஜா (1994)
வீட்ல விசேங்க (1994)
வியட்நாம் காலணி (1994)
சின்ன வாத்தியார் (1995)
சதிலீலாவதி (1995)
சந்திரலேகா (1995)
அவதாரம் (1995)
ஆணழகன் (1995)
இளையராகம் (1995)
ராசய்யா (1995)
ராஜா ௭ங்க ராஜா (1995)
ராஜ முத்திரை (1995)
ராஜாவின் பார்வையிலே (1995)
பாட்டு வாத்தியார் (1995)
பாட்டு பாட வா (1995)
பெரிய குடும்பம் (1995)
மக்களாட்சி (1995)
மாயாபஜார் (1995)
முத்துக்காளை (1995)
மோகமுள் (1995)
௭ல்லாமே ௭ன் ராசாதான் (1995)
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி (1995)
கட்டுமரக்காரன் (1995)
கோலங்கள் (1995)
நந்தவனத் தேரு (1995)
தேடி வந்த ராசா (1995)
இரட்டை ரோஜா (1996)
கட்ட பஞ்சாயத்து (1996)
நாட்டுப்புறப் பாட்டு (1996)
பூமணி (1996)
பூவரசன் (1996)
கடவுள் (1997)
காதலுக்கு மரியாதை (1997)
சின்ன ராமசாமி பெரிய ராமசாமி (1997)
தம்பிதுரை (1997)
வாசுகி (1997)
தெம்மாங்கு பாட்டுக்காரன் (1997)
தென்பாண்டி சிங்கம் (1997)
தேவதை (1997)
நானும் ஒரு இந்தியன் (1997)
ராமன் அப்துல்லா (1997)
கண்களின் வார்த்தைகள் (1998)
கண்மணி ஒரு கவிதை (1998)
கண்ணாத்தாள் (1998)
கவலைப்படாதே சகோதரா (1998)
காதல் கவிதை (1998)
கிழக்கும் மேற்கும் (1998)
கும்பகோணம் கோபாலு (1998)
வீர தாலாட்டு (1998)
தர்மா (1998)
தலைமுறை (1998)
தேசிய கீதம் (1998)
பூந்தோட்டம் (1998)
செந்தூரம் (1998)
கும்மிப்பாட்டு (திரைப்படம்)(1999)
அண்ணன் (1999)
அந்தப்புரம் (1999)
சின்ன துரை (1999)
சேது (1999)
பொண்ணு வீட்டுக்காரன் (1999)
மனம் விரும்புதே உன்னை (1999)
முகம் (1999)
தொடரும் (1999)
நிலவே முகம் காட்டு (1999)
ராஜஸ்தான் (1999)
டைம் (1999)
ஹவுஸ்புல் (திரைப்படம்) (1999)
பாரதி (2000)
ஹே ராம் (2000)
திருநெல்வேலி (2000)
இளையவன் (2000)
கண்ணுக்குள் நிலவு (2000)
காக்கைச் சிறகினிலே (2000)
காதல் ரோஜாவே (2000)
கரிசக்காட்டு பூவே (2000)
கரிவேலம்பூக்கள் (2000)
2001 - 2010
கண்ணா உன்னைத் தேடுகிறேன் (2001)
காசி (2001)
காதல் சாதி (2001)
காற்றிற்கு ௭ன்ன வேலி (2001)
குட்டி (2001)
ஆண்டான் அடிமை (2001)
௭ன் இனிய பொன்நிலாவே (2001)
பிரண்ட்ஸ் (2001)
௭ன்மன வானில் (2002)
அழகி (2002)
தேவன் (2002)
ரமணா (2002)
சொல்ல மறந்த கதை (2002)
கொஞ்சி பேசலாம் (2003)
தனுஷ் (2003)
பிதாமகன் (2003)
மனசெல்லாம் (2003)
ஜுலி கணபதி (2003)
விருமாண்டி (2004)
விஷ்வ துளசி (2004)
காமராஜ் (2004)
அது ஒரு கனாக்காலம் (2005)
ஒரு நாள் ஒரு கனவு (2005)
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி (2005)
பொன் மேகலை (2005)
மும்பை ௭க்ஸ்பிரஸ் (2005)
கரகாட்டக்காரி (2005)
கஸ்தூரி மான் (2005)
மது (2006)
இனிமே நாங்கதான் (2007)
மாயக்கண்ணாடி (2007)
குற்றப்பத்திரிகை (2007)
தனம் (2008)
உளியின் ஓசை (2008)
கண்களும் கவிபாடுதே (2008)
நான் கடவுள் (2009)
அழகர் மலை (2009)
வால்மீகி (2009)
காதல் கதை (2009)
ஜகன் மோகினி (2009)
கண்ணுக்குள்ளே (2009)
மத்திய சென்னை (2009)
அஜந்தா (2009)
நந்தலாலா (2010)
2011 - நடப்பு
அய்யன் (2011)
பொன்னர் சங்கர் (2011)
அழகர் சாமியின் குதிரை (2011)
செங்காத்து பூமியிலே (2012)
தோணி (2012)
முதல்வர் மகாத்மா (2012)
மயிலு (2012)
நீதானே ௭ன் பொன் வசந்தம் (2012)
மறந்தேன் மன்னித்தேன் (2013)
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013)
சித்திரையில் நிலாச்சோறு (2013)
தலைமுறைகள் (2013)
ஒரு ஊருல (2014)
உன் சமையல் அறையில் (2014)
மேகா (2014)
டூரிங் டாக்கீஸ் (2015)
தாரை தப்பட்டை (2016)
ஓய் (2016)
கிடா பூசாரி மகுடி (2016)
அம்மா கணக்கு (2016)
ஒரு மெல்லிய கோடு (2016)
அப்பா (2016)
வகைப் பிரிக்கப்பட வேண்டியவை
அபூர்வ சக்தி
அன்புச் சின்னம்
அன்னையே ஆணை
அதிர்ஷ்டம் அழைக்கிறது
ஆதாரம்
இளமை இதோ இதோ
இவண்
ஏழுமலையான் மகிமை
பரணி (திரைப்படம்)
பிள்ளை (திரைப்படம்)
சின்ன தேவன்
காதல் தேவதை
எம்ஜிஆர் நகர் போலீஸ் ஸ்டேசன்
மருத நாயகம் (படம் முழுதும் எடுக்கப்படவில்லை)
முரட்டு கரணங்கள்
முதலமைச்சர் ஜெயந்தி

நான் சந்தித்த சட்டம்





May 7, 2016 at 4:24pm · 
தேசிய விருது வழங்கு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து இசையமைப்பாளர் இளையராஜாவை கடுமையாக சாடியிருக்கிறார் கங்கை அமரன்.

63-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் 'தாரை தப்பட்டை' படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் விருதுகள் வழங்கும் விழாவில் இளையராஜா கலந்து கொள்ளவில்லை. இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது.

இளையராஜா கலந்து கொள்ளாதது குறித்து, விருதுகள் தேர்வுக் குழுவில் இருந்த கங்கை அமரன், இளையராஜாவை கடுமையாக சாடியிருக்கிறார். அது குறித்து கங்கை அமரன் கூறியிருப்பது:

"பின்னணி இசை மற்றும் பாடல்கள் என ஒரே விருதாக கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆஸ்கர் விருதில் அப்படி கிடையாது. இரண்டு பேருக்கு விருது கொடுப்பதில் அவருக்கு என்ன நஷ்டம்? இப்போது யார் பின்னணி இசை பண்ணுகிறார்கள். ஆளுக்கு ஆள் ஒவ்வொரு இசை பண்ணிக் கொடுக்கிறார்கள், அது இசையமைப்பாளர் பெயரில் வருகிறது. ஒரே ஒரு ஆள் பின்னணி இசை அமைக்கிறார் என்றால் அது இளையராஜா மட்டும் தான். பாடல்கள் நன்றாக இருந்தால் கொடுக்கப் போகிறோம், நன்றாக இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பழைய மாவை அரைத்துக் கொண்டிருந்தால் எப்படி? புதிய இசையமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள்.. நமது காலம் முடிந்துவிட்டது என்பதை அவர் யோசிக்க வேண்டும். இன்றைக்கும் நான் இளைஞன் என்று ஓட முடியாது.

தேசிய விருதைப் போல இந்தியாவில் பெரிய விருது எதுவும் இருக்கிறதா? இந்தியாவில் பெரிய விருது என்றால் இது ஒன்று தான். முதலிலேயே எனக்கு விருது வேண்டாம் என்று அறிக்கை கொடுத்திருந்தால் நாங்கள் படம் பார்க்கும் போது இவர் வாங்க வரமாட்டார் என்று விட்டுருப்போம். 'விசாரணை' படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை நன்றாகத்தான் அமைத்திருந்தார். புதியவர்களுக்கு கொடுத்து ஊக்கமளித்திருப்போம்.

இளையராஜாவை மீறிய இசையமைப்பாளர் என்று இந்தியாவில் யாரும் கிடையாது என்பது உண்மையான விஷயம். இந்தியாவின் பெரிய விருதை அவர் வந்து வாங்கவில்லை என்பது அவருடைய ரசிகர்களான எங்களுக்கு பெரிய வருத்தம். இந்த விருதை வேண்டாம் என்று சொல்பவர் தாதா சாகேப் பால்கே விருதையும் வேண்டாம் என்று தான் சொல்லுவார். அதை நினைத்து அவர்களும் கேட்காமல் விட்டு விடுவார்கள். எந்த விருது தான் வேண்டும் என்று நினைக்கிறார்?

தமிழகத்தில் இருந்து ஒருவர் சிறந்த இசையமைப்பாளர் விருது வாங்குவது தமிழனுக்கு பெருமை. என் பாட்டை மட்டும் கேளுங்கள் நான் விருது வாங்கமாட்டேன் என்று சொன்னால் என்ன அர்த்தம். இது தான் இந்தியாவிற்கு கொடுக்கும் மரியாதையா? ஜனாதிபதி வந்து விருது கொடுக்கும் விழாவில் அமிதாப் உள்ளிட்ட அனைவருமே வந்து விருது வாங்கினார்களே. அமிதாப் வாங்காத விருதா?

'தாரை தப்பட்டையில்' அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு அருமையாக பின்னணி இசை அமைத்திருந்தார். விருதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பவதாரணி, யுவன் யாரையாவது விட்டு வாங்கியிருக்கலாம். இந்திய விருது எனக்கு வேண்டாம், ஆஸ்கர் விருது மட்டுமே வேண்டும் என்று சொல்லியிருக்கலாமே. இளையராஜா என்பவர் பெரிய மகான். ஒரு பெரிய மகான் என்பவர் மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். இசைக்காகவே வாழ்கிறேன் என்று சொல்லிவிட்டு, இந்தியாவில் இருந்து கொடுக்கும் விருதை வேண்டாம் என்று சொல்வது ஏன் எனப் புரியவில்லை.

இளையராஜா மீது தான் முழுக்க முழுக்க தப்பு. வியாபாரம் என்று வந்துவிட்டால் 10 பேர் கேள்விக் கேட்கத்தான் செய்வான். தமிழ்நாட்டில் உள்ள இசையமைப்பாளர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய கெளரவம். ஏன் இந்த அதிகாரத்தன்மை? ஏன் மற்றவர்களை உதாசீனப்படுத்தக் கூடிய கொள்கை? அவர் மட்டும் தான் இசையமைப்பாளர் என்பதை ஒத்துக் கொள்கிறேன். மற்ற இசையமைப்பாளர்களையும் கூட சேர்த்து அழைத்துக் கொண்டு செல்வதுதான் பெரியமனிதத் தன்மை. அவர் இருக்கும் இடத்திற்கு அதைத்தான் செய்தாக வேண்டும். மற்றவர்கள் யாரும் எனக்கு சமமில்லை என்று சொல்வது ஒரு அசிங்கமான கொள்கை.

பின்னணி இசைக்கு ஒருவரும் பாடலுக்கு ஒருவரும் தேசிய விருது வாங்குவதில் என்ன தப்பு? 2 பேர் தேசிய விருதை வாங்கிக் கொள்ளட்டுமே. சட்டம் என்று ஒன்று போட்டால், அதை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். சட்டம் இயற்றப்படும் போதே இதை நான் புறக்கணிக்கிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும். இவருக்கு இருக்கும் தகுதிக்கு கச்சேரி பண்ணுவது எல்லாம் தேவைற்ற ஒன்று. திறமைசாலி என்றுதான் ஒப்புக் கொண்டோமே, இதற்கு மேலும் திறமையை நிரூபிக்க வேண்டுமா?" என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார் கங்கை அமரன்.

No comments:

Post a Comment