Wednesday 9 May 2018

MAHARANA PRATAP SINGH,GREAT WARRIOR AGAINST AKBAR 1540 MAY 9- 1597 JANUARY 29







MAHARANA PRATAP SINGH,GREAT WARRIOR 
AGAINST AKBAR 1540 MAY 9- 1597 JANUARY 29







மகாராணா பிரதாப் அல்லது மேவார் பிரதாப் சிங் (Maharana Pratap, மே 9, 1540 - ஜனவரி 29, 1597) வட மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த மேவார் இராச்ச்சியம் எனப்படும் உதய்பூர் இராச்சியத்தின் இந்து அரசராவார். அவர் ராஜபுத்திரர்களின் சூர்யவன்ஷி குலமரபில் சிசோதியா என்கின்ற பிரிவை சார்ந்தவர். ராஜபுத்திரர்கள் தொன்று தொட்டு போற்றிவரும் வீரம், நாட்டுப்பற்று மற்றும் சுய மரியாதை ஆகிய அருங்குணங்களுக்கு ஒரு மிகவும் சிறந்த எடுத்துக் காட்டாக மகாராணா பிரதாப் சிங் விளங்கினார்.

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்


4 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகளுக்கு, மூத்தவராக, கும்பால்கர் என்ற இடத்தில் (தற்போது ராஜஸ்தானில் ராஜசமந்து மாவட்டம்|ராஜ்சமந்து மாவட்டத்தில் உள்ளது) பிரதாப் பிறந்தார், அவரது பெற்றோர்கள் மஹாராணா உதய்சிங் II மற்றும் சன்கார மகாராணி ஜவந்தபாய் ஆவார்கள்.

வாரிசாக பதவியேற்றல்

1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள்.

இந்தப் பேரிடருக்கு முன்னரே, உதய்சிங் II மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள குன்றுகளுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் அவர் ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் தமது புதிய அரசை அமைத்தார். இந்தப் புதியதளம் பிறகு படிப்படியாக உதய்பூர் என, அவரது பெயரிலேயே அழைக்கப்பெற்றது. உதய்சிங், அவருக்குப் பிறகு அவருடைய செல்ல மகனான ஜக்மால் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தார் ஆனால் அரசவையில் இருந்த மூத்த மேன்மக்கள் அவரது மூத்த மகன் ராணா பிரதாப் அரசராக வருவதையே விரும்பினார்கள். முடிசூட்டும் விழாவில், ஜக்மால் வலுக்கட்டாயமாக அரண்மனையிலிருந்து அகற்றப் பெற்றார். தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரதாப் அரசராக வருவதை விரும்பவில்லை. எனினும் ராஜபுத்திர உயர்குடிமக்கள் ஜக்மால் அன்றைய சங்கடமான தருணங்களில் அரசாளக்கூடிய தகுதிபடைத்தவர் இல்லை என்று கூறி பிரதாப்பை ஒப்புக்கொள்ளச் செய்தனர். அதுவே அவரது வாழ்க்கையின் போராட்டங்களும் பெரும் துயரங்களும் நிறைந்த அரசியல் வாழ்க்கையின் தொடக்கமாக திகழ்ந்தது.


மஹாராணா பிரதாப் அக்பரை இந்தியாவின் அரசராக ஒருபோதும் மனதார ஏற்றுக் கொள்ளவில்லை, மற்றும் தனது வாழ்நாள் முழுதும் அக்பரை எதிர்த்துக் கொண்டே வாழ்ந்தார். அக்பர் முதலில் ராஜதந்திர முறையில் மஹாராணா பிரதாப் சிங்கை ஈர்க்க முயன்றார் ஆனாலும் எதுவும் பலன்தரவில்லை. பிரதாப் அக்பரோடு போரிடுகின்ற நோக்கம் தனக்கில்லை என்ற நிலையில் நின்றாலும், அவரிடம் தலைதாழ்ந்து நிற்கவும் மற்றும் அவரை அரசராக ஏற்கவும் விரும்பவில்லை. ஒருசில நூலாசிரியர்களின் வாதப்படி, மஹாராணா அக்பரோடு நட்புறவு கொண்டிருந்தாலும், சித்தூர் கோட்டை முற்றுகையின் போது, 27,000 பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது, அவரது மனதை உறுத்தியது. இது மஹாராணாவின் மனதில் ஓர் ஆழமான வடுவை ஏற்படுத்தியதால் அவர் அத்தகைய அநீதிக்கும் மற்றும் கொடுமைக்கும் ஒத்துப்போக மறுத்தார்.


டோட் என்பாரின் ராஜஸ்தானின் ஆண்டுத் தொகுப்பேடுகள் மற்றும் தொன்மை வாய்ந்த சின்னங்கள் படி , தெரிவிக்கப்படுவது யாதெனில், பிரதாப் ராஜபுத்திரர்கள் மேற்கொண்ட திருமண ஒழுங்குமுறை அடிப்படையில், தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை தடுத்து நிறுத்தினார், (எண்ணிறந்த ராஜபுத்திர அரசர்கள் தங்கள் மகள்களை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை அவர்களின் மேம்பட்ட தைரியத்திற்கு மரியாதை தரும் நிமித்தமாகவும்), மற்றும் அவர்களின் நல்லாதரவு பெறவும் ஏற்ற வழியாகக் கருதினார்கள்:


:


மேவார் மற்றும் ஆம்பர் மற்றும் ஆமர் அரசர்கள் (தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு வழங்க முன்வந்தவர்கள்) எடுத்துக்காட்டாக, மேலும் இந்த சபலத்தில் இருந்துமீள முடியாத வகையில் ராஜஸ்தான் சிறுபான்மை முதல்வர்கள் அடிமைகளாக, குடியாண்மை ஊழியம் கொண்டவர்களாக டெல்லியின் கீழ்பணியும் சத்திரபதிகள் (சத்தர்ப்ஸ்) ஆக மாறினார்கள்.


இவர்கள் யாவரும் பிரதாப்பைக் கண்டு பயந்தார்கள். போர் வீரர்கள் வெகுண்டு எழுந்தார்கள், தன் மானக் குறைவு அவர்களை வாட்டி எடுத்தது, ஆனால் அவரைப் போல் துணிந்து செயல்பட மனோதைரியம் இடம் கொடுக்காததால் அவர்கள் வெறுப்பும் கோபமும் கொண்டு, பொறாமையால் செயலிழந்து நின்றார்கள். இப்படி ஒவ்வொரு ராஜஸ்தான் இளவரசரும் பாரபட்சமாக நடந்துகொள்ள, முகலாயர்களுக்கு கீழ் படிந்தமைக்காக ராணா பிரதாப் அவர்களுடன் கூடிய உறவுகளை முறித்தார். பிரதாப் நெடுங்கால மதிப்பு நிலைநாட்ட, பிறப்பித்த ஆணையானது மொகலாய முடியாட்சியாளர்களோடு மிகவும் நெருங்கியவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் யாவரும் மகுடபதிகளோடு, கொண்ட மண உறவுகளை ஏற்க மறுத்ததோடு மட்டும் அல்லாமல் மார்வார் மற்றும் அம்பர் போன்ற சகோதர இளவரசர்களுடன் செய்த உறவினையும் ஏற்கவில்லை. ராஜ்புத்திர அரசர்களான புக்கேட்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் கைப்பட எழுதிய கடிதங்களின்படி பழைய கொள்கைகளை கை விட்டதால் ராஜபுத்திரர்கள் சற்று உயர்ந்த நிலையை அடைந்தனர். ஆனாலும் பழைய கொள்கைகளில் விடாப்பிடியாக மேவார் இருப்பதால் அது அழிவுப் பாதையை நோக்கி செல்வதாகவும், ஆதலால் திருமண கொள்கை "தூய்மை படுத்த வேண்டும்", "ராஜபுத்திரர்களை உருவாக்கும் பொருட்டும்" அமைந்து இருக்க வேண்டும், "ராஜபுத்திரர்கள் ஆகச் செய்ய வேண்டும்", மற்றும் இந்த முறை நடைமுறைக்கு எப்பொழுது வரும் என்றால் ராஜபுத்திரர்கள் பழைய கொள்கையை விட்டுகொடுக்கும் பட்சத்தில் என்றார். (மொகலாயர்களுக்கு தங்களது பெண்களை கொடுப்பது). இந்த பழைய திருமண கொள்கை மேற்கொண்டதால் ராஜபுத்திரர்களுக்கு இடையே, நூறு வருடங்களுக்கு மேலாக ஒற்றுமை இல்லாத ஓர் நிலைமையை உருவாகிவிட்டது.[1]
முரண்பாடு

சித்தூர் கோட்டை, பிரதாப்பின் பூர்வீக இல்லமாகும், அது மொகலாயர் வசமிருந்தது. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இருந்தமையால், மறுபடியும் சித்தூரைக் கைப்பற்றும் கனவை (மற்றும் அதனால் மேவாரின் கீர்த்தியை மீட்பது) பிரதாப், நனவாக்குவதே லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரது எதிர்கால முயற்சிகள் இந்த இலக்கை நோக்கியே அமைந்திருந்தது. சாராம்சமாக எடுத்துக் கூறவேண்டுமானால் பிரதாப் ஏட்டளவில்தான் அரசராக இருந்தாரே ஒழிய அவரது வாழ்நாளில் எந்த நிலத்தையும் ஆட்சிசெய்ய முடியவில்லை.

ஏறத்தாழ பிரதாப்பின் சகராஜபுத்திர முதல்வர்கள் மொகலாயர்களுடன் குடியாண்மை ஊழியம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர் பிரதாப்பின் சொந்த சகோதரர்களான, சக்திசிங் மற்றும் சாகர் சிங், இருவரும் அக்பருக்குப் பணிபுரிந்தனர். உண்மையில், பலராஜபுத்திர முதல்வர்கள், உதாரணம், அம்பரின் முதல்வர் மான் சிங் போன்றோர் (பின்னாளில் அம்பர் ஜெய்பூர் என்றானது) அக்பரின் படைகளில் தளபதிகளாக பணியாற்றினார்கள் மற்றும் ராஜா தோடர்மால் போன்றவர்கள் அவரது அவையில் நிதிஅமைச்சராக இடம்பெற்றிருந்தனர். அக்பர் மொத்தத்தில் ஆறு ராஜதந்திர தூதுக்குழுக்கள் அனுப்பி, சமாதான உடன்பாடு எப்படி பிற ராஜபுத்திரர்கள் செய்து கொண்டனரோ அதேபோல் பிரதாப்பையும் செய்து கொள்ள வலியுறித்தினார். பிரதாப் ஒவ்வொரு முறையும் முழுக்கமுழுக்க மறுதலித்தார், அதன்மூலம் தனது தற்பெருமையை வெளிப்படுத்தினார்.


புதிய தலைநகர்-உதய்பூர் உருவாக, மஹாராணா உதய்சிங் ஒரு நீர்த்தேக்கம்-உதய்சாகர் எனும் பெயரில் 1565 ஆம் ஆண்டில், கட்டிமுடித்தார். அந்த அணைத்திட்டத்தில் ஜூன் 1573இல், அம்பரின் குன்வர் (இளவரசர்) மான்சிங், மொகாலய பேரரசர் அக்பரின் தூதுவராகச் சந்தித்து, வீம்பு முனைப்பாக இல்லாமல், மஹாராணா பிரதாப்பை உடன்படிக்கைக் குறிப்புகளைக் கைவிட்டு, அவருக்கு மதிப்பளிக்க விருந்தில் வந்து கலந்துகொள்ள வற்புறுத்தினார். பிரதாப் மற்றும் மான்சிங் இருவரும் ஒரேதலைமுறையைச் சார்ந்தவர்களாவர், குன்வர் மான்சிங் பிறந்தநாள் ஞாயிறு டிசம்பர் 21, 1550, ஆகும், ஆனால் பிரதாப் அரசராகிட மான்சிங் இளவரசானார். பிரதாப், உடன்படிக்கைக் குறிப்புகள் பின்பற்றி, தனது மகன் குன்வர் அமர்சிங்கை அந்த விருந்தில் அக்பரின் தூதுவராக வந்த குன்வர் மான்சிங்குடன் பங்கேற்கச் செய்தார். இந்த நிகழ்ச்சி மொகல்-மேவார் முரண்பாட்டை மேலும் துரிதப்படுத்தியது.

மான்சிங் ஒரு குன்வராக இருந்தமையால், அவரது தந்தை ராஜா பகவன்தாஸ் மற்றுமொருமுறை ஒரு சமாதானத் தூதுக்குழுவை நடத்தித் தோல்வி கண்டார், அக்டோபர் 1573இல் நடந்த நிகழ்வில் ராணா பிரதாப் உடன் இருந்தார்.

ஹல்டிகாடி போர்முனை
ஜூன் 21, 1576 தேதி (ஜூன் 18 மற்ற கணக்குகள் படி), இரண்டு படைகளும் ஹல்டிகாட்டில் சந்தித்தன. இரண்டு படைகளின் கணக்கீடுகள் மாறுபட்டு இருந்தாலும், எல்லா வழிமூலங்களும் ஒரே கருத்தில் ஒத்திருந்தன, அதாவது, மொகலாயப் படைகள் அதிக அளவில் பிரதாப்பின் வீரர்களைக் காட்டிலும் (1:4) விஞ்சி இருந்தன. ஹல்டிகாடி யுத்தம், ராஜபுதனா ஆண்டுத்தொகுப்பேடுகளின்படி, ஒரு பெரும் வரலாற்று நிகழ்ச்சியாகும், அதுவும் நான்கு மணி நேரமே நீடித்தது. இந்தக் குறுகிய காலத்தில், பிரதாபின் வீரர்கள் பலதுணிகர சாகசங்களை களத்தில் நிகழ்த்திக் காட்டினார்கள். மக்கள்மரபு ஆராய்ச்சியின்படி பிரதாப் தனியாக மான்சிங்கைத் தாக்கினார்: அவரது சேட்டக் குதிரை தனது முன்னங்காலை மான்சிங்கின் யானையின் மீது வைத்தது மற்றும் பிரதாப் தனது ஈட்டியை எறியும் சமயம் மான்சிங் திடுமெனக் குனிந்து தலைதாழ்த்தியதால், பாகன் இறந்தார்.

எனினும், மொகலாயப் படையின் எண்ணிக்கை மேம்பாடும், மற்றும் அவர்களது பீரங்கிப்படையும் போர்க்களத்தில் விஞ்சியது. தோல்விமுகம் கண்டதால், பிரதாபின் தளபதிகள் களத்தை விட்டு அவரை ஓடிவிட வற்புறுத்தினார்கள் (அப்பொழுது தான் அவரால் மீண்டும் போர் தொடுக்க இயலும்.) புராணக் கதைகளின்படி, பிரதாப் தப்பிச் செல்வதை வசதிப்படுத்த, அவரது படைத்தலைவர்களில் ஒருவர், ஜ்ஹல வம்சம் சார்ந்தவர், பிரதாபின் குறிப்பிடத்தக்க அங்கிகளை அணிந்து போர்க்களத்தில் அவரது இடத்தில் அமர்ந்தார். விரைவில் அவர் இறந்தார். இதற்கிடையில், தனது நம்பகமான குதிரை சேத்தக் மீது சவாரி செய்து, பிரதாப் குன்றுகள் நோக்கி தப்பிச் சென்றார்.

ஆனால் சேத்தக் தனது இடது தொடையில் ஒரு மர்தானா மூலம் (யானைத் தும்பிக்கையில் உள்ள உறைவாள்) பிரதாப் மான் சிங்கைத் தாக்க முற்படும் போது ஆபத்தான காயம் ஏற்பட்டது. அதிகக் குருதி வெளிவரவே சேடக் ஒரு சிற்றோடையைத் தாண்டும் பொழுது அதுவும் போர்க்களத்தில் சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் இறந்து போனது. பிரதாப்பின் படைத்தலைவன் அவர் போல உடையும் ஆயுதமும் தரித்து இடமாற்றம் செய்தது யுத்தத்தில் குழப்பங்களிடையே கண்டுகொள்ள முடியாமல் போனது, ஆனாலும் மொகலாயப் படையில் இரண்டு துருக்கிய வீரர்கள் மட்டும் உண்மையையைக் அறிந்துகொண்டனர். அவர்கள் குழுவில் அதை மற்றவர்களிடம் கூற முடியவில்லை, ஏனெனில் மொழி பேசுவதில் உள்ள தடையே (பாரசீகம், மார்வாரி, அல்லது அரபி மொழிகள் மட்டுமே மொகலாயப் படையில் வழக்கத்தில் இருந்தன). ஆயினும் அவர்கள் பிரதாபைப் நேரத்தை வீணாக்காமல் பின்தொடர்ந்தனர். அவர்கள் பிரதாபைப் பின்தொடர்ந்த தருணம், அவரது இளைய சகோதரர், ஷக்திசிங், அதாவது அவர் மொகலாயர் பக்கமாக இருந்து போரிடுபவர், (பிரதாப் முடிசூட்டு விழாவில் அவருடன் ஏற்பட்ட சச்சரவால் அக்பர் பக்கம் கட்சி மாறியவர்) அந்த நேரம் தனது சொந்த சகோதரர் ஆபத்தில் சிக்கியுள்ளதை உணர்ந்தார். பிரதாபின் படைத்தலைவர் அவருக்காக உயிர் துறந்ததை அவர் கண்டார். அவரால் உதவ முடியவில்லை எனினும் அவர் தனது சொந்த சகோதரர் ஆபத்தில் உள்ளதை அறிந்து உடனடியாகச் செயல்படத் தொடங்கினார். அவர் அந்த துருக்கியர்களுடன் ஒற்றை ஆளாகப் போரிட்டு, அவர்களைக் கொன்றார். இதற்கிடையில், சேடக் மரணமடைந்தது மற்றும் பிரதாப் தனது சகோதரர் ஷக்திசிங், அந்த இரு மொகலாய குதிரை வீரர்களைக் கொல்வதை நேரில் கண்டார். தனது அன்பிற்கினிய படைத்தலைவன் மற்றும் குதிரை இரண்டின் இழப்பால் துக்கமுற்ற பிரதாப், தனது சகோதரரைக் கண்ணீர் மல்கக் கட்டித் தழுவினார். சக்திசிங் கூவி அழுது தனது சகோதரரின் எதிரியாக மாறியதற்கு மன்னிப்பைக் கோரினார். பிரதாப் அவரை மன்னித்தருளினார் (பின்னாளில் அவருக்கு சித்தூர் அருகே ஒரு பெரிய பண்ணைத் தோட்டத்தை வழங்கினார்). சக்திசிங் அதன்பின் தனது குதிரையை சகோதரருக்கு அளித்து ஒரு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல தயவுடன் கேட்டுக்கொண்டார். ராஜஸ்தானி நாடோடிப்பாடலின்படி, ஒரு பாட்டு "ஒ நீலே கோடே ரே அஸ்வர்" ( ஒ நீலப்புரவி வீரனே!)

சேடக்கிற்காக ஒரு கல்லறை மாடம் அதன் மரணமுற்ற அதே இடத்தில் அதன்நினைவாக அமைத்தது..

யுத்தத்தின் விளைவு மொகலாய ராணுவத்தில் குறிப்பிடத்தக்க முறையில் பாதித்தது. எண்ணற்ற முகலாய போர் வீரர்கள் மாண்டனர். பிரதாப் பக்கம் நின்ற சுற்றுப்புற குன்றுகளில் வாழும் பில் பூர்வீக மக்கள் பலமாக அம்புகள் ஏவியதால் மொகலாயப் படையினர் அதிகம் பாதிப்படைந்தனர். அவர்களது பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், ஒரு பில் போர்வீரன் மேவாரில் உள்ள அரசகுடும்ப அணிகல வரிசையில் பிரதாபிற்கு அடுத்ததாக அமர்த்தப்பட்டார்.

ஹல்டிகாட் யுத்தம் மொகலாயர்களிடம் ஒரு வல்ஊடுவழி காண வாய்த்த முதல் யுத்தமாகும், 1527 ஆம் ஆண்டில், இரண்டாம் கான்வா யுத்தமும் ராஜபுத்திரர்களுக்குச் சாதகமாக அமைந்தது, அந்த இரண்டாம் கான்வா யுத்தம் மஹாராணா பிரதாப்பின் பாட்டனர் ராணா சங்காவிற்கும், அக்பரின் பாட்டனார் பாபருக்கும் இடையே நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். பல ராஜபுத்திர குடும்பங்களில் இந்த யுத்தம் ஒரு குறிப்பிடத்தக்க முறையில் பெருமையாகக் கருதப்படுகிறது.

படைத்தலைவர்கள்
ஹக்கீம் கான் சூர் பதான்
ஹக்கீம் கான் சூர் பதான் ஆப்கன் ஷெர் ஷா சூரி வம்சாவளியைச் சார்ந்தவராவார். அவர் தனது முன்னோர்களின் வீழ்ச்சியை முன்னிட்டு அதற்குக் காரணமான மொகலாயர்களை பழி வாங்க பிரதாபுடன் சேர்ந்தார். மொகலாயர்கள் திட்டமிட்டு பல கோவில்களை அழித்தார்கள். பிரதாப்பும் மற்ற ராஜபுத்திரர்களும் தங்கள் மதம் காத்திடவே போரிட்டனர். ராஜபுத்திரப் படைகளில் சில முஸ்லிம் கூலிப்படையினர் இருந்ததும், மொகலாயர்களோடு உள்ள முரண்பாடும்,ஹிந்து மதம் காப்பதற்காக அல்ல என்பது நன்கு புலனாகும்.

ஜால மான்சிங்
ஜால மான்சிங் (மேலும் ஜால சர்தார் என்றும் அழைக்கப்படுபவர்) சுதந்திரம் பெறும் போராட்டத்துக்காக அபூர்வமான வீரம், துணிச்சல், தியாகம் மூன்றிற்கும் தக்க உதாரணமாகத் திகழ்ந்தார். 1576இல், ஹல்டி காடி போர்க்களத்தில், மஹாராணா பிரதாப் காயம் அடைந்தார். (வாள், ஈட்டி, மற்றும் துப்பாக்கிக் குண்டு ஆகிய மூன்றினால் பட்ட காயங்கள்) அவர் மூர்ச்சை அடைந்து கிடந்ததும் , ஜ்ஹல, அச்சமயம் பிரதாப்பின் மகுடம், மற்றும் ராஜ முத்திரைச் சின்னங்கள் யாவையும் களைந்து அவைகளை தானே அணிந்து கொண்டு தான் தான் பிரதாப் என்று மொகலாயப் படைகளை நம்பவைத்து அவர்களின் தாக்குதல்கள் எதிர்கொண்டார். இறுதியாக அவர் தன இன்னுயிர் பிரதாபிற்காகவும் மற்றும் நாட்டு விடுதலைக்காகவும் நீத்து அரிய தியாகம் புரிந்தார். இந்த தியாகத்தினால்தான் பிரதாப் தொடர்ந்து மொகலாயர்களுடன் போரிட்டு மேவாரை மீட்டு, சித்தூர் நீங்கலாக, மீண்டும் தன்ஆட்சியை நிலைநாட்ட முடிந்தது.

உதய்பூரில் இன்றும் கூட, ஜ்ஹலவின் வழிவந்தோர், மஹாராணா வழங்கிய மேவாரின் அரசச்சின்னம் ஏந்திக் கொண்டு வருவதைக் காணலாம். ஸ்ரீ அசோக் தட்டத்ராயா குல்கர்னி கூற்றின்படி, அந்த தைரியம் மிக்க வீரன் மான்சிங் ஜ்ஹலல்ல அவர் பீட ஜால ஆவார். குறிப்பு- மஹாராணா பிரதாபாஞ்ச ராஜ்வன்ஷ் (ஒரு மராத்தி நூல் ஆகும், மேவாரின் வரலாறு மற்றும் குஹிலோட் வம்சாவளியினர் பற்றியும் அதில் உள்ளது).

டோமர்கள்
ராஜா ராம் ஷா டோமர், குவாலியரைச் சார்ந்தவர், ராணா உதய்சிங் மகளை மணம்புரிந்தவர், தனது குவாலியரை மொகலாயரிடம் இழந்த பிறகு, மேவாரிடம் தஞ்சம் அடைந்தார். அவரும் அவரது முன்னூறுக்கும் மேலான வீரர்களும் ஹல்டிகாடி யுத்தத்தில் பங்கு கொண்டனர். அவர்கள் வம்சத்தைக் காக்க அவருக்கு எஞ்சிய ஒரே மகனை பிகாநேருக்கு பாதுகாப்புடன் இருக்க அனுப்பினார்கள், மற்ற யாவரும் மேவாருக்காக தங்களது இன்னுயிர் நீத்தனர்.

பர்குஜர்ஸ்
பர்குஜர்கள் மேவாரின் நம்பத்தகுந்த சகாக்களாக இருந்தனர் மற்றும் அவர்கள் ராணாவுடன் இறுதி வரைக்கும் சேர்ந்தே போராடினார்கள்.அவர்கள் எந்த ஒரு போர்முனையிலும் முன்வரிசையில் நின்று கடுமையாகப் போரிடும் வீரர்கள் ஆவார்கள்.

பீம்சிங் டோடிய
பீம்சிங் டோடிய, மேவாரின் பிரபுக்களில் ஒருவர் ஆவார் மற்றும் அவர் மஹாராணா பிரதாப் சிங்கின் கோகுண்ட அவையில் (1576) ஹல்டிகாடி யுத்தத்திற்கு முன்னாலேயே இடம்பெற்றவர் ஆவார்.

சேத்தக்
சேத்தக், கத்தியவார் பகுதியின் வெள்ளை நிறக் குதிரையாகும். (இந்திய இனம் சார்ந்த திணைத் தோன்றலாகும்) அது குள்ளமான கழுத்து, அடர்ந்து செறிந்த முடிகொண்ட வால், குறுகலான முதுகு, பெரிய விழிகள், கட்டு மஸ்தான தோள்கள், அகன்ற நெற்றி மற்றும் பரந்த நெஞ்சம் கொண்டதாகும். மேலும் பார்வைக்கு வனப்பு மிகுந்ததாகவும், செய்யுள் நடையில் புனிதமாகவும் அது கருதப்பட்டு வந்தது, இப்புரவி ஒரு சமச்சீரான தசைநார் கொண்ட உடலமைப்பு அதற்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை அளித்தது, அதனுடைய "பறக்கும்" பாதங்கள் அதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அதுபற்றி மேலும் விளக்குகையில் ஓர் அபூர்வமான, துல்லியமான நுண்ணறிவு படைத்தது என்றும், மேலும் கட்டுப்பாடு மற்றும் துணிவு இரண்டும் ஒருசேர பெற்றதென்பதும், தனது எஜமானிடம் பின்வாங்காத நம்பகமும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

சேடக், மகாராணா பிரதாபின் குதிரை, ஹல்டிகாட் போர்முனையில் கருணைமறம் (வீரம்) காட்டி இறந்த தருணம், அவர் கூக்குரலிட்டு மற்றும் அவரது கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தார்.

ராஜா பூன்ஜா
பில் போர்வீரர்கள் ஹல்டிகாட் போர்முனையில் ராணா பூன்ஜாவின் தலைமையில் போரிடப் பங்கு கொண்டனர். பில் போர்வீரர்கள் உற்சாகமுடன் ரகசியமான செய்தியாளர்களாகவும் மற்றும் ஓடி தகவல் தெரிவிப்பவர்களாகவும் பணியாற்றினர். மேவார் மாகாண வரலாற்றில் குஹில் இனப்பிரிவினர் தைரிய மிகுந்த சாகசச் செயல்களுக்காக புகழ் பெற்றவர்களாக விளங்கினார்கள். பில் இனத்தாரின் பங்களிப்பு என்பது மறக்க இயலாததாகும். குஹாதித்யாவின் முடிசூட்டு விழாவின் தருணம், "அதன்படி, ஒரு மன்ட்லீக் "பில்" சர்தாரின் பெருவிரலிலிருந்து ஒழுகும் குருதி சொரிந்து திலக் சடங்கு (மங்கலப் பொட்டிடும் நிகழ்ச்சி) நடைபெற்றது."

இதற்கெனவே, மேவாரின் மாகாண அரசர் சின்னமான ஜெயகோபுரத்தில், ஒருபக்கம் ராஜபுத்திர வீரர் புடைசூழவும் மற்றும் "பில் இனத்தாரின் வில்-அம்பும்" கொண்டுள்ளது காணலாம்.

ராணா பூஞ்சா ஒரு பண்ர்வா திக்கான மகாராணா கி ஜெய் சார்ந்த சிசொடியா ஆவார்.

பாமா ஷா (அல்லது பாமாஷா)
பாமாஷா மேவாரின் வரலாற்றில் ஓர் அடையாளம் ஏற்படுத்தியர் ஆவார். 450 ஆண்டுகள் முன்னதாக, பார்மல் கவாடியாவின் மகனாகபிறந்த அவர் நேர்மை, திட நம்பிக்கை, மற்றும் கடமை உணர்வு மூன்றிலும் சீரிய எடுத்துக் காட்டாக விளங்கினார்.

அவர் பிரதாபின் பொருளாளர் மட்டுமல்ல, ஒரு வீரனாகி தேவை ஏற்படும் போது போரிட்டவரும் ஆவார். மகாராணா பிரதாப் பன்னிரண்டு வருடங்களாக 25,000 வீரர்கள் அடங்கிய ஒரு படையை நன்கு பராமரித்து வந்ததற்கு உகந்த காரணம், பாமாஷா தனது சொத்தை நன்கொடையாக அளித்தது மட்டுமல்ல, இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிதிஉதவி, மற்றும் இருபதாயிரம் தங்கக் காசுகள் மால்புராவிலிருந்து தொகையாக வழங்கியதும் ஆகும். மேலும் பாமாஷா மஹாராணா அமர்சிங்கிடமும் பணிபுரிந்தவர் ஆவார். அதன்பிறகு அவரது மகன் ஜீவ் ஷா மஹாராணாவின் பொருளாளர் ஆனார். அவர் மரணம் அடைந்த வேளையில் பாமா ஷா தனது மனைவியிடம் அரசரின் பொக்கிஷ விபரங்கள் அடங்கிய விளக்கமான பதிவேடுகளை மஹாராணா அமர்சிங் வசம் ஒப்படைக்கக் கேட்டுக்கொண்ட பிறகே விண்ணுலகு ஏய்தினார்.குறிப்பு- மஹாராணா பிரதாபாஞ்ச ராஜ்வன்ஷ் - ஒரு மராத்திநூல் அதில் மேவாரின் வரலாறு உள்ளது. அதை ஸ்ரீ அசோக் தட்டட்ரைய குல்கர்நி 2008 ஆம் ஆண்டில், வெளியிட்டார்.

பின்விளைவுகள்
பிரதாப் ஆரவல்லி மலைத்தொடர் வனப்பகுதிகளில் பின்வாங்கிக் கொண்டு தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். அவரது ஒரு முயற்சியான நேருக்குநேர் மோதல் தோல்வி கண்டமையால், பிரதாப் கொரில்லாச் சண்டை யுக்திகளை மேற்கொண்டார். தனது குன்றுகளைத் தளமாகப் பயன்படுத்தி, பிரதாப் முகாமிட்டிருந்த மொகலாயப் படையினரை பெருமளவில் அலைக்கழிக்கத் தொடங்கினார். அவர் மேவாரில் உள்ள மொகலாயப் படையினர்கள் ஒருபோதும் சமாதானம் காணக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தார்: அக்பர் மூன்று படைஎழுச்சிகள் நடத்தி பிரதாப்பை மலையில் மறைவிடங்களில் தேடிப்பார்த்துக் கண்டுபிடிக்க முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில், பிரதாப் பாமாஷாவிடம் நிதிஉதவி, ஒரு நல-விரும்பி என்ற முறையில் பெற்று வந்தார். ஆரவல்லி குன்றுகளில் வாழும் பில் பூர்வீகக் குடிகள் பிரதாப்பிற்கு சண்டைக்காலத்தில் ஆதரவும் மற்றும் சமாதான நாட்களில் காடுகளில் வசிக்க உரிய வழிமுறைகள் கூறியும் உதவி செய்தனர். இவ்விதமாக பல்லாண்டுகள் கழிந்தன. ஜேம்ஸ் டோட் எழுதுவது யாதெனில்: "ஆரவல்லி தொடர்வரிசையில் ஒரு கணவாய் கூட இல்லாததால், மகாராணா பிரதாப் சிங் போன்ற பெரிய சுதந்திர போராளிக்கு வீரச்செயல் புரிய வழியில்லை: ஏதோ பிரகாசமான வெற்றி அல்லது அடிக்கடி மகத்தான தோல்வி இரண்டுமே பெற முடிந்தது." ஒரு சம்பவத்தில், பில்ஸ் தக்க தருணத்தில் ஓடிவந்து ராஜபுத்திரர் பெண்மணிகள் மற்றும் பிள்ளைகளை உதய்பூர் அருகே சாவார் ஆழமான துத்தநாகச் சுரங்கங்கள் ஊடே கடத்திச் சென்று காப்பாற்றினார்கள். பிறகு, பிரதாப் தனது இடம் சாவண்டுக்கு அதாவது மேவாரின் தென்கிழக்குப் பகுதியில் மாற்றி அமைத்துக் கொண்டார். மொகலாயர்களின் தேடுதல் அலைக்கழிப்பாலே, நாடு கடத்திக் கொண்ட யாவரும் மலையிடுக்குகளில் பல்லாண்டுகளாக காட்டு வகை ரசம் நிறைந்த சிறு பழங்களை (பெர்ரிகள்) உண்டும் மற்றும் வேட்டை ஆடியும் மற்றும் மீன்பிடித்தும் வாழ்வாதாரம் கொண்டிருந்தனர். புராணக்கதைகளின் படி பிரதாப் சிரமமான நாட்களில் புல் விதைகள் மூலம் செய்து வந்த சப்பாத்தியை உண்ண நேர்ந்தது.

ப்ரித்விராஜ் ரத்தோரின் கடிதம்
ப்ரித்விராஜ் ரத்தோரின் கடிதம் பிரதாப்பிற்கு கவிதை நடையில் அனுப்பியது பின்வருமாறு அமைந்து இருந்தது:

பாடல் சன் பட்ஷா, போலே முக்ஹ ஹுண்ட பயன்
மிஹிர் பிச்சம் திஸ் மாஹ்ன், உகே கசப் ராவ் உட்
' படக்குன் முன்ச்யன் பான், கே படக்குன் நிஜ் தன் கரட்
டிஜே லிக்ஹ தீவான்,இன் டூ மகாலி பேட் இக்
' (பிரதாப்பின் வாயானது "பத்ஷா" என்று சொல்லத் தொடங்கியது. O ராவ்! சூரியன் என்ன மேற்கில் உதிக்க தொடங்கினானா? எனது கரத்தை ஏன் மீசையின் மேலே வைத்திருக்க வேண்டுமா? அல்லது எனது மேனி எனது கரங்களில் விழ வேண்டுமா? ஒ தீவான்! ஒரு விடையை இரண்டில் ஒன்று என்று தேர்வு செய்க).

பிரதாப் இக்கடிதத்திற்கு பின்வரும்படி பதில் கொடுத்தார்.

துரக் கஹசி டுரகடோ, இன் முக்ஹ சன் இக்ளிங்
' உகே ஜய ஹாய் உகசி, பிரசி பிச் படங்
' க்ஹுஷி ஹன்ட் பீத்தல் காமத், படகோ முன்ச்யன் பன்
' ஜெடே ஹாய் பச்சடன் படோ, கிழமா சர் கேவண்
' (லார்ட் எக்ளிங்க்ஜி எனது வாயை எப்பொழுதுமே அவனொரு "துர்க்" என்றே அழைக்கச் செய்வார். சூரியன் எப்போதும் கிழக்கில் தான் உதயம் ஆவான். ஒ ப்ரித்விராஜ் ரதோரே மகிழ்ச்சியாய் இரு மற்றும் உனது கரத்தை உன் மீசைமேலேயே வைத்து இருப்பாய். பிரதாப் தன காலில் நிற்கும் வரைக்கும், அவரது உடைவாள் படையெடுப்பாளர்களின் தலைகளின் மேல் ஊசலாடி கொண்டேயிருக்கும்.)

நாடு கடத்தப்பட்டோர் யாவருமே உண்மையில் பட்டினி கிடக்கும் அவலநிலை வந்த பொழுது, பிரதாப் அக்பருக்கு கடிதம் எழுதினார் அதில் அவர் ஒரு சமாதான உடன்பாடு செய்யச் சித்தமாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். பிரதாப்பின் முதல்மைத்துனர் (அவரின் தாயாரின் சகோதரியின் பிள்ளை) ப்ரித்விராஜ் ரதோரே, அவர் அக்பரின் சபையோர்களில் ஒருவராவார், அவர் இந்த தனிமுறைக் கோரிக்கை பற்றி கூறுவதாவது: அவர் வளர்ந்தவராயினும் சோர்வுற்று இருதார் மற்றும் தனது மைத்துனர் பிரதாப்பிற்கு எழுதினார்:

இந்துவின் நம்பிக்கைகள் இந்து சூர்யன் உதிப்பதில் தான் உள்ளது இருப்பினும் ராணா அவைகளைக் கைவிட்டுள்ளார். ஆனால் அது பிரதாபிற்காக, எல்லாமே அக்பரால் ஒரே அளவில்தான் கருதப்படும்; ஏனெனில் நம்முடைய முதல்வர்கள் தங்கள் தைரியம் இழந்துள்ளனர் மற்றும் நமது பெண்கள் தங்கள் மதிப்பை இழந்துள்ளனர். நமது இனத்தில் அக்பர் ஒரு சந்தைத் தரகராகவே உள்ளார்; அவர் அனைத்தையும் மொத்தமாக விலை தந்து வாங்கியுள்ளார் ஆனால் உதய்யின் மகன் மட்டும் (சிங் II மேவார்); அவர் அவரது விலைக்கு மிக தூரமாக இருந்தார். எத்தனை உண்மையான ராஜபுத்திரர்களால் மதிக்கப்பட்ட நௌரோசா என்ற [பாரசீகப் புத்தாண்டு பண்டிகையின் பொழுது, அக்பர் தனது சுகபோகம் நாடி பெண்களை தேர்வு செய்வது]; இருப்பினும் எத்தனை பேர்கள் தான் பண்டமாற்றாகக் கருதி செய்துள்ளனர்? சித்தூர் இந்த சந்தைக்கு வருமா...? பட்டா என்று (அன்புடன் அழைக்கப்பட்ட பிரதாப்சிங்) தனது சொத்தையே (போர்முறை யுக்திகளுக்காக), மற்றும் படைப்பிரிவுகளுக்காகவே செலவிட்டார், இருந்த போதிலும் அவர் இந்த பொக்கிஷத்தைப் பேணிப் பாதுகாத்தார். மனக்கசப்பு மனிதனை இந்த சந்தைக்குத் தள்ளியது, அவர்கள் சுயகெளரவம் பாதிக்கப்படுவதை கண்கூடாகக் கண்டனர்: அப்படிப்பட்ட பழியில் இருந்து ஹம்மிர் (மகா ராணா ஹம்மிர்) வழித்தோன்றல் மட்டுமே பாதுகாக்கப்பட்டார். உலகம் கேட்கலாம், பிரதாப்பிற்கு எங்கிருந்து மறைமுக உதவி வெளி வந்தது? எங்கிருந்தும் அல்ல ஆனால் அவரது ஆண்மை மற்றும் வாளில் இருந்தே வந்தது.. மனிதச் சந்தையின் தரகரான (அக்பர்) நிச்சயம் ஒருநாள் இந்த உலகை விட்டுப் போகத்தான் போகிறார்; அவர் நிரந்தரமாக நீண்டு வாழப் போவதில்லை. அப்போது நமது இனம் பிரதாப்பை நோக்கி வரப் போகிறதா, மனிதவாசம் இல்லாத நிலங்களில் ராஜபுத்திர விதைகள் தூவப் போவது யார்? அவரைப் பொறுத்த மட்டிலும் எல்லாருமே அதனைப் பாதுகாக்கவே விரும்புகிறனர், அதன் தூய்மை மீண்டும் உயிர்கொண்டு ஒளிவிளக்கம் பெற விழைகின்றனர் என்பதுதான். பிரதாப் அக்பரை சக்ரவர்த்தி என்று அழைத்திருந்தால் அது நம்பத்தக்கதல்ல எப்படி சூரியன் மேற்கு திசையில் உதிக்கின்றான் என்றால் எப்படியோ அப்படித்தான் அதுவும். நான் எங்கே நிற்க வேண்டும்? எனது வாளை என் கழுத்தில் வைப்பதா? அல்லது அதை பெருமையுடன் ஏந்திக் கொண்டு இருப்பதா? என்பதை கூறவும்? என்றான்.

பிரதாப் அவருக்குப் பின்வருமாறு பதில் அளித்தார்.

எனது கடவுள் ஏகலிங்கா, பிரதாப் அழைப்பது துருக்கியச் சக்ரவர்த்தி என்று மட்டும் தான், 'துருக்கிய' என்ற சொல் பல இந்திய மொழிகளில் இழிவுப் பொருள் பயப்பதாகும் மற்றும் சூரியன் கிழக்கில் நிச்சயம் தோன்றுவான்." பிரதாப்பின் வாள் மொகலாயர்களின் தலைமீது ஊசலாடுகின்றவரையில் நீங்கள் உங்களது பெருமையைத் தாங்கிச் செல்லலாம். "சங்காவின் குருதியைப் பொறுத்தவரை பிரதாப் குற்றமுள்ளவனாக இருக்கலாம், அவன் அக்பரைப் பற்றி சகித்துக் கொள்ளவேண்டுமானால்! நீங்கள் இந்த வார்த்தை யுத்தத்தில் மேம்பட்டு இருக்கலாம்."

பிரதாபுக்கும் மற்றும் அக்பருக்கும் இடையே மறுசீரமைப்பு தொடக்கநிலையிலேயே இவ்வாறு முற்றுப்பெற்றது. இந்த ப்ரித்விராஜ், ஷக்தி சிங்கின் சகோதரி கிரன்மாயேவின் கணவராவார்.(மஹா ராணா பிரதாப்பின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்).

அக்பரின் படையெடுப்புகள்
அக்பரோ மஹாராணா பிரதாப்பை எதிர்த்து படையெடுப்பு ஒன்றன்பின் ஒன்றாக நடத்திக்கொண்டே இருந்தார், ஆனாலும் ஒருபோதும் அவர் வெற்றி பெறவில்லை. ஏராளமான அளவில் அவர் பணச்செலவு செய்தும் மஹாராணா பிரதாபைத் தோற்கடிக்க முடியவில்லை. முப்பது ஆண்டுகள் மேலாக பிரதாப் அக்பரை விஞ்சியே இருந்தார் மற்றும் அவரது வாழ்க்கையில் கடைசி பத்தாண்டுகள் தனது ராஜ்யத்தின் பெரும்பகுதியை விடுவித்திருந்தார். அவரால் பிடிக்க முடியாதவைகள் சித்தூர் மற்றும் மண்டல் கர்ஷ் இரண்டுமேதான் அவரை அவைகள் அதிகம் வருத்தம் அடையச் செய்தது.

தனிப்பட்ட வாழ்க்கை
ராணா பிரதாப் பதினேழு மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் கொண்டிருந்தார். உதய் சிங் II ஆண்-வரிசை வழித்தோன்றல்கள் "ரானாவட்" என்ற தந்தைவழிப் பெயரைத் தாங்கி உள்ளனர். இத்தகைய தந்தைவழிப் பெயர்கள் ஆட்சியாளர்கள் தங்களது நாட்டைவிட்டு ஓடிப்போகும் போதோ மற்றும் புதிய தலைநகர் ஏற்படுத்தும் போதோ மாற்றம் கொள்ளும். குஹிலோட் என்பவர்கள் குஹவின் வழித்தோன்றல்கள் ஆவார்கள், சிசொடியாக்கள் சிசொட கிராமத்தின் ஹமீர் குஹிலோட்டின் வழித்தோன்றல்கள் ஆவார்கள் மற்றும் ரணவட்கள் ராணா உதய் சிங்கின் வழித்தோன்றல்கள், அவர்கள் சித்தூர் விட்டு ஓடி ஒரு புதிய தலைநகர் உதய்பூர் என்று ஏற்படுத்திக்கொண்டார்கள். தந்தைவழி பெயர்மாற்றம் என்பது பெருமளவில் ஜனத்தொகை இடம்பெயர்ந்தாலோ அல்லது போரிட்டாலோ தோன்றிவரும்.

இறுதி நாட்கள்
மஹா ராணா பிரதாப் வேட்டையாடும் பொழுது ஏற்பட்ட விபத்தால் மரணம் அடைந்தார். அவர் சாவண்டில் ஜனவரி 29, 1597, நாளன்று மரணம் அடைந்தார், அப்பொழுது அவருக்கு வயது ஐம்பத்து-ஆறாகும். மரணம் அடையும் தருவாயில் தனது மகன், அமர்சிங்கை அவருக்கு அடுத்த வாரிசாக்கி தொடர்ந்து நிரந்தரமாக மொகலாயர்களுடன் போரிட்டுக்கொண்டே இருக்கும்படி பிரமாணம் எடுத்துக்கொள்ளச் செய்தார். இவ்வாறாக, அவரது சிரமமான சூழ்நிலைகள் அவரது சரிவடைந்த வருடங்களில் அதிகவலுப்பெற வைக்கவில்லை; இறுதிவரை துணிச்சலாகவே நிமிர்ந்து இருந்தார். அவர் படுக்கையில் தூங்காமலேயே வாழ்ந்து வந்தார், அக்பரிடம் இருந்து மொத்த ராஜ்ஜியம் மீட்டு கைவரப் பெற்றும் அவரது சபதம் சித்தூரைக் கைப்பற்றும் வரை தரையில்தான் தூங்குவது மற்றும் ஒரு குடிலில் தான் வாழ்வது என்பதைக் காத்து வந்தார்.

மஹாராணா பிரதாப்பின் மகன், அமர்சிங், மொகலாயர்களுடன் பதினேழு முறைகள் யுத்தங்கள் செய்தார் ஆனாலும் அவர் நிபந்தனையின் பேரில் அவர்களை ஆட்சி யாளர்கள் என்று ஒப்புக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், மகாராணா பிரதாப்பின் நம்பகத்துக்குரிய ராஜபுத்திரர்கள் சரணடைதல் என்ற மாயையில் இருந்து விடுபட்டு ராஜஸ்தானில் இருந்தே வெளியேறினர். இந்தக் கூட்டம் ரதோர்கள், தியோர சொவ்கன்கள், பரிஹரகள், டோமராக்கள், கச்ச்வாஹ்க்கள் மற்றும் ஜ்ஹலக்கள் ஆகியோர் அடங்குவர். அவர்கள் "ரோர்கள்" என்று அழைக்கப்படுவர் மற்றும் ஹரியானாவில் குடியமர்ந்தனர், ஒருசிலர் மட்டுமே உத்திர பிரதேசத்தில் இடம்பெயர்ந்தனர். இன்றைய தினம் கூட, அவர்கள் பிற ராஜபுத்திரர்களுடன் மணம்புரிந்து கொள்வது கிடையாது ஆனாலும் "கோத்ரா அனுமதிபெறுதல்" ரோர் சமுதாயத்திற்குள்ளேயே நிகழ்ந்து வருகின்றது.

மஹாராணா பிரதாப் ஒருபெரும் நாயகனாக இந்தியர்களின் பார்வையில் விளங்குகிறார், அவர்தன் மக்களால் அதிகம் மதிப்பும் மற்றும் அன்பும் செலுத்தப் படுகின்றவராகவே விளங்குகிறார். இந்து வரலாற்றில் ஒரு இருளான அத்தியாயத்தில், பிரதாப் மட்டுமே தன் கெளரவம் மற்றும் கண்ணியம் கருதி தன்னந்தனியானாக உறுதிபட நின்றார்; தனது கௌரவத்தை சுயபாதுகாப்பிற்காக ஒருபோதும் அவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. அவர் ஒரு பெருமைக்குரிய மற்றும் சுதந்திரமான மனிதராகவே இறந்தார்.

நற்பண்பு
ஹல்டிகாடி போருக்கு முன்னதாக, மான்சிங் கச்ச்வஹா எஞ்சி இருந்த ஒருசில நூற்றுக்கணக்கான எதிரிகளைத் தேடிக் கொண்டிருந்தார். பிரதாபின் பில் ஒற்றர்கள் அந்த முகாமிலிருந்து ஒருசில கிலோ மீட்டர்கள் தொலைவில் அவருக்கு செய்திகளை தெரிவித்தனர். பிரதாபின் சில பிரபுக்கள் அத்தகைய நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மான் சிங்கைத் தாக்கிக் கொல்லவேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள். பிரதாப் மறுப்புரைத்தார், அவ்வகையில் தனது நேர்மை உணர்வை எடுத்துக் காட்டினார்.

மற்றுமொரு சம்பவத்தில், அப்துர் ரஹீம் க்ஹன்க்கனா என்னும் மொகல் அதிகாரியின் பெண்மணிகள், பிரதாபின் மகன் அமர்சிங் வசம் அகப்பட்டுக்கொண்டனர். அந்த சரியான நேரத்தில், க்ஹன்க்கன பிரதாப்பை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தார் மற்றும் செர்புரில் முகாமிட்டு இருந்தார் அதன்படி பிரதாப்பை நேரடியாகத் தாக்க முன்னேற்பாடுகள் செய்துகொண்டு இருந்தார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல், பிரதாப் தனது மகன் அமர்சிங்கை (பதினேழு மகன்கள் மற்றும் ஐந்து மகள்களில் மூத்தவர்) அந்த மொகலாயப் பெண்மணிகளைப் பத்திரமாக அவர்களது முகாமில் கொண்டு சேர்க்குமாறு கட்டளை இட்டார். க்ஹன்க்கன இந்த நிகழ்ச்சியால் வெகுவாகப் பாதிப்படைந்தார் மேலும் ஒரு வீரப் பெருந்தகைமையாளர் ஆன மாமன்னரை எதிர்த்து நிற்க மறுத்துவிட்டார். அவர் அக்பரிடம் ஒரு மனு அளித்து தன்னை பதவியில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டதால் தொடர்ந்து பின்னர் (1581 ஆம் ஆண்டில்) அக்பரின் மகன் சலிம்க்கு மெய்க்காப்பாளராக ஆனார். மேலும் ஒரு கொள்கைக்குரல் "ஜோ த்ரித் ரகே தர்ம், நே தாஹி ரகே கர்த்தார்" அப்துர் ரஹீம் க்ஹன்க்கன சொன்னதாக நம்பப்படுகிறது அவர் மேலும் "ரஹீம் தாஸ்" என்றும் ஹிந்திச் செய்யுளில் அழைக்கப்படுகிறார்.

தற்போதைய-நாள் நிலவரம்
இந்தியாவின் சுதந்திரம் 1947இல், பெற்றதைத் தொடர்ந்து, மகாராணா பூபால்சிங் (பதவிக் காலம் 1930-1955) என்பவர் மகாராஜ் பிரமுக் ராஜஸ்தான் மாநில (~ ஆளுநர் ) 1952-1955 –அந்த ஒரேபதவிதான் இந்தியக் குடியரசு மேவாருக்காக ஏற்படுத்தியுள்ளது! மகாராணா பூபால்சிங் தான் முதன்முதல் தனது மாநிலத்தை சுதந்திர இந்தியாவுடன் (18 ஏப்ரல் 1948)இணைத்துக் கொண்ட மன்னராவார். இந்தியாவின் முதல் யூனியன் உள்துறை அமைச்சர் (லோஹ் புருஷ் - இரும்பு மனிதர்) சர்தார் வல்லபாய் படேல் யூனியனில் சேரத் தயங்கிய ஹைதராபாத் மற்றும் பிற மாகாணங்களை வன்மையாகக் கடிந்துரைக்கும் கண்டனம் தெரிவித்துக் கூறினார், "இந்தியாவில் எந்த ஒரு சுதேச சமஸ்தானம் சுதந்திரம் கோரும் உரிமை பெற்று உள்ளது என்றால் அது மேவார் ஒன்றுதான், ஆனால் அதுவோ சந்தோஷமாகவும், சம்மதமாகவும் இந்திய தேச யூனியனுடன் சேர்ந்து கொள்ள விரும்புகின்றது, அதன் கூற்றுப்படி, அவர்களின் பதிமூன்று நூற்றாண்டுகள் மேற்கொண்ட தூதுக்குழுவின் முயற்சிகள் முழுப்பலன் தந்துள்ளது...மேவாரைத் தவிர்த்து மற்ற எந்த ஒரு சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு உரிமையேதும் கிடையாது..." சுதந்திரம் பெற்ற பிற்காலத்தில் கூட, இந்தியாவின் பொதுமக்கள், இந்தியாவின் ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், மற்றும் அரசியல் வாதிகள் எவ்வகையிலும் பிரதிபலன் எதிர்பாராமல் மேவாருக்கு மதிப்பும், மரியாதையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வந்தனர். மேலும் குறிப்பிடத்தக்க இந்திய சுதந்திரப் போராளியும், யூனியன் அமைச்சரும் மற்றும் பாரதிய வித்யா பவன் நிறுவனரும், நவீன காலத்து இந்தியாவின் பெருமைக்குரிய மனிதர்களில் ஒருவருமான, கே.எம். முன்ஷி (1887-1971) எழுதியுள்ளதாவது, "மேவாரின் மகாராணாக்கள் ஹிந்துப் பண்பாடு மற்றும் ஆட்சிஅமைப்பு ஒழுங்கு இரண்டையும் சிறப்பாகவும், உயர்குடிப்பிறப்பாகவும் வெளிப்படுத்திக் காட்டினார்கள். ராம்ராஜ்ஜியம் என்பதன் புராணியக் கோட்பாட்டை நடைமுறையில் அமுல்படுத்தி வைத்தார்கள்...

மஹாராண பிரதாப் இந்தியாவில் மிகுந்த உயர்வான மதிப்பு கொண்டவராகவும் மற்றும் தேசப்பற்று மற்றும் சுதந்திரப்போர் மொகலாய ஆட்சியைத் துணிந்து எதிர்த்து நிகழ்த்தியதில் ஒரு முன்மாதிரியாகவும் சித்திரிக்கப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றார். பிரதாப் மற்றும் சேடக் பெயர்கள், அப்பொலிகுதிரை, யாவுமே பிரசித்திப் பெற்றதாகும் மற்றும் இந்தியக் குடியரசு அரசாங்கம் அவைகளின் நினைவாக தபால் தலைகள் (1967, 1998) மற்றும் நாணயங்கள் (2003) வெளியிட்டு இந்தியாவின் மிகப்பெரும் மகனாரை கௌரவப்படுத்தியது. நன்றியோடு நாடானது சேடக் மீது ஏறி உள்ள பிரதாப்பின் சிலையை அவரது கூட்டுப் பணியாளர்களான-ஜ்ஹல மான், பிலு ராஜா (மலைவாழ் மக்கள் முதல்வன்), பாமா ஷா, ஹக்கீம் கான் சூர், மற்றும் ஒரு காலாட்படை-வீர-சேவகன் அனைவரது சிலைகளுடன் புது டெல்லியில் பாராளுமன்ற இல்லத்தின் முன்னால் ஆகஸ்ட் 21, 2007இல் நிறுவி அஞ்சலிசெலுத்தி வருகின்றது.

மஹாராணா பிரதாப் பற்றிய ஒரு வெள்ளித்திரைப் படம் தயாரிப்புப்பின்- பணிகளில் உள்ளது. எல்லா விவரங்களும் அதனுடைய இணைய தளத்தில் கிடைக்கப் பெறலாம்.[1]

மோடி மக்ரி
மஹாராணா பிரதாப்பின் வெண்கலச் சிலை மற்றும் அவரது விருப்பமான, உண்மையான புரவி, வீரமாகப் போராடி தனது எஜமானைக் காத்து வந்ததாலும் உயிர்பிரியும் வரை உடன் இருந்ததாலும், மோடி மக்ரியின் உச்சியில் (முத்து மலை) பதெஹ் சாகரில் கம்பீரமான குதிரைச் சிலையும் உள்ளது. உள்ளூர் மக்கள் அந்தக் குன்றின்மீது ஏறிச் சென்று மஹா ராணா பிரதாபிற்கும் மற்றும் அவரது உண்மையான புரவி 'சேடக்'கிற்கும் அது ஹல்டிகாடி யுத்தத்தில் கொல்லப் பட்டதால் அதற்கும் சேர்த்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கே மேலும் முதல் உதய்புரின் அமைதியான அரண்மனையின் சிதலங்கள் காணலாம் மற்றும் ஓர் அழகான ஜப்பானிய பாறைத் தோட்டம் ஒன்று அதிக தூரம் இல்லாமல் அமைந்துள்ளது. அந்த நினைவகமானது முதல்ஒளி மற்றும் ஓலிஅமைப்பு ஏற்படுத்தப்பட்டு ராஜஸ்தானில், மேவாரின் 1400 வருடங்களான கீர்த்திமிகு வரலாற்றை பறைசாற்றிக் கொண்டு வருகின்றது.

வாள்
நாற்பது கிலோ கிராம் எடையுள்ள வாள் ராணா பிரதாப் சிங் பயன்படுத்தியது. ராணா பிரதாப் இரண்டு வாட்களை தன்னுடன் ஏந்திச் செல்வது அவரது வழக்கமாகும். சண்டை ஏற்படும் போது தனது எதிரிக்கு ஒரு வாளினை அவர் நிராயுதபாணியாக இருந்தால் வழங்குவதுண்டு.





WE BRING TO YOU 10 AMAZING FACTS ABOUT MAHARANA PRATAP:


1. THE 'MOUNTAIN MAN':
Maharana Pratap is revered as one of the strongest warriors India has ever seen. Standing at 7 feet 5 inches, he would carry a 80-kilogram spear and two swords weighing around 208 kilograms in total. He would also wear an armour weighing 72 kilograms.

2. ASCENSION TO THRONE:

Pratap's ascension to the throne was not easy. Rani Dheer Bai, Pratap's stepmother, wanted Kunwar Jagmal to be the king after Udai Singh's defeat at the hands of Mughal emperor Akbar. In 1568, Akbar had captured the Chittorgarh Fort and the Mewar royalty took shelter in Udaipur. After a long conflict and debate, Pratap was made the king as the court found Jagmal to be as an unfit ruler.

3. DOMESTIC PRESSURE:
Before fighting the Mughals, Pratap had to face the wrath of his domestic adversaries. By the time of his reign, almost all Rajput dynasties had surrendered to Akbar and had become members of his council. Akbar had sent six diplomatic missions to Pratap to create a peaceful alliance between the two mighty rulers.

4. "NO, THANK YOU" TO AKBAR:

After the fifth diplomatic mission, Pratap had sent his son Amar Singh to the Mughal court to deny Akbar's proposal of peace. As he did not present himself before the Mughal emperor, Akbar took offence. Due to his act of defiance, Akbar decided to go ahead with the battle and fight with Pratap.

5. PREPARING FOR BATTLE:

Pratap's prowess in fighting battles was proved during the Battle of Haldighati in 1576. Mughal emperor Akbar ordered Man Singh I, one of his Rajput army commanders, and Asaf Khan I to attack Pratap. Man Singh and Asaf Khan had gathered an army almost half the size of the Mughal military force and held position at Haldighati, a mountain pass around 40 kilometres from Udaipur.Despite this Maharana Pratap won the battle.

6. ALLIES:
On the other hand, Pratap had gathered Gwalior's Ram Shah Tanwar and his three sons-- Rawat Krishnadasji Chundawat, Maan Singhji Jhala and Chandrasenji Rathore of Marwar, the Afghan leader Hakim Khan Sur and a small army of people from the Bhil tribe led by Rao Poonja.

7. BATTLE OF HALDIGHATI:

The battle took place on June 18, 1576 for four hours. The Mughal army found a traitor in Pratap's brother, Shakti Singh, who told them about the secret pass.


The Mughal cavalry was led by Man Singh I but was outfought at first by the Rajput soldiers. Pratap decided to kill Man Singh on his own and rode his war horse Chetak against Man Singh's elephant. Both Chetak and Pratap were injured by Man's elephant. Seeing this, the Mewari contingent lost hope. However, Pratap chieftain Man Singh Jhala exchanged armours with Pratap to confuse the Mughal army. Chetak tried to escape via the Haldighati pass with a single long leap, for which it is famous, but was killed by Mughal archers.

Pratap was devastated to know about his horse's death. Realising his fault, Shakti Singh offered his own horse to Pratap, so that the latter could escape.

8. THE ADAMANT RULER:
After the battle, the Mughal forces, personally led by Akbar, continued to conquer the entire Mewar region including Chittor, Gogunda, Kumbhalgarh (Pratap's temporary capital) and Udaipur. All Rajput dynasties, including that of Bundi, surrendered to Akbar, leaving Pratap completely alone.

9. RECOVERY OF CHITTOR:

After 1579, following rebellions in Bengal, Bihar and Punjab, Akbar loosened the noose on Mewar. Pratap took advantage of the situation and gathered an army using the money given by Dan Shiromani Bhamashah, who later became one of Pratap's ministers. Pratap recovered most of his turf-- Kumbhalgarh and the areas around Chittor. He gathered an army of 40,000 soldiers and conquered Gogunda, Kumbhalgarh, Ranthambore and Udaipur from Mughal ally Jagannath Kachhawa.

10. FIRST NATIVE FREEDOM FIGHTER:
Pratap had rebuilt his capital in the city of Chavand, around 60 kilometres south of Udaipur and spent the rest of his life there. Because of his fight for freedom against the Mughals, Maharana Pratap is widely regarded as India's first native freedom fighter.















மஹாராணா ப்ரதாப் சிங்கின் பெயரோடு நாளைத் துவக்கினால், மதிப்பானது, மங்களமானது. தன் இன்னுயிரைக் கொடுத்து தேசத்தை, தர்மத்தை, கலாச்சாரத்தை, நாட்டின் சுதந்திரத்தைக் காத்த, மாண்பும் வீரமும் செரிந்த அரசர்களில் அவரது பெயர் தலையாயது. அவரது தீரம் குறித்த புனிதமான நினைவு கூர்தல், இதோ.   யாருக்குத் தான் மேவாரின் மகத்தான அரசன் மஹாராணா ப்ரதாப் சிங்கைப் பற்றித் தெரியாது? இந்திய சரித்திரத்திலேயே, இந்தப் பெயர் வீரம், சாகஸம், தியாகம், பலிதானம் ஆகிய குணங்களுக்காக எப்போதும் கருத்தாக்கம் கொடுக்கும் பெயராக விளங்கி வந்திருக்கிறது. பப்பா ராவல், ராணா ஹமீர், ராணா சாங்கா போன்ற பெருந்தகைகள் எல்லோரும் மேவாடின் சிசோதியா குடும்பத்தில் பிறந்தவர்கள், அவர்கள் அனைவருக்கும் ராணா என்ற பட்டப் பெயர் இடப்பட்டது. ஆனால் மஹாராணா என்ற பட்டப் பெயர் ப்ரதாப் சிங்குக்கும் மட்டுமே உரித்தாக்கப்பட்டது.   1540ம் ஆண்டு...... மஹாராணா ப்ரதாப் சிங் பிறப்பு. மேவாரின் 2வது ராணா உதய் சிங்குக்கு 33 குழந்தைகள். அவர்களில் மூத்தவர் தாம் ப்ரதாப் சிங். சுயமரியாதையும் நற்பண்புகளுமே ப்ரதாப் சிங்கின் பிரதான குணங்களாக விளங்கின. அவர் தனது குழந்தை பிராயத்திலேயே கூட தைரியமாகவும், வீரம் நிறைந்தவராகவும் விளங்கினார்; அவர் வளரும் போதே அவர் மிகப் பெரிய தீரனாக இருப்பார் என்று அனைவருமே நம்பினார்கள். சராசரிக் கல்வி கற்பதை விட அவர் விளையாட்டுக்கள் மற்றும் ஆயுதப் பயிற்சியிலேயே அதிக நாட்டம் கொண்டவராக விளங்கினார்.   மஹாராணா ப்ரதாப்பின் காலத்தில் தில்லியின் பேரரசராக முகலாய மன்னன் அக்பர் ஆட்சி செய்தார். ஹிந்து அரசர்களின் பலத்தைப் பயன்படுத்தியே பிற ஹிந்து அரசர்களை அடிபணிய வைப்பது தான் அக்பரின் கொள்கையாக இருந்தது. பல ராஜபுத்திர அரசர்கள், தங்கள் மகோன்னதமான பாரம்பரியங்களையும், போரிடும் குணத்தையும் விடுத்து, பரிசுகளும், கௌரவமும் பெற்றுக் கொள்ள, தங்கள் மகள்களையும், மருமகள்களையும், அக்பரின் அந்தப்புரத்துக்கு அனுப்பி வைத்தார்கள். உதய் சிங் தான் இறப்பதற்கு முன்பாக, தனது இளைய மனைவியின் மகன் ஜகம்மல் என்பவரை தனது வாரிசாக நியமித்தார்; ப்ரதாப் சிங் ஜகம்மலை விட மூத்தவராக இருந்தாலும் கூட, அவர் தனது உரிமைகள் அனைத்தையும் பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைப் போல துறந்து மேவாரை விட்டுச் செல்லத் தயாராக இருந்தார். ஆனால் தளபதிகளுக்கு தங்கள் அரசர் எடுத்த முடிவில் சம்மதமில்லை. இது தவிர, ஜகம்மலுக்கு ஒரு அரசருக்கும் ஒரு தலைவனுக்கும் முக்கியமான தேவையாக கருதப்படும் தைரியம், சுயமரியாதை போன்ற குணங்கள் இல்லை என்று நினைத்தார்கள். ஆகையால் அவர்கள் ஒட்டுமொத்தமாக, ஜகம்மல் சிம்மாஸனத்தைத் துறக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். மஹாராண ப்ரதாப்பும் கூட தளபதிகளின் விருப்பத்துக்கும், மக்களின் எதிர்பார்ப்புக்கும் உரிய மரியாதை கொடுத்து, மேவார் மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.   முன்னதாக, 1568ல், ராணா 2ம் உதய் சிங்கின் ஆட்சியின் போது சித்தூர் முகலாய அரசன் அக்பரால் கைப்பற்றப்பட்டது. சித்தூரின் 3வது ஜௌஹர்
அரங்கேறியது; கோட்டையின் பெண்கள் தங்கள் மானம் காக்க தீ புகுந்தார்கள், ஆண்கள் போர்க்களத்தில் வீர மரணம் எய்தினார்கள். இந்த பெரு நாசத்துக்கு முன்பாகவே உதய் சிங்கும் அவரது குடும்பத்தாரும் புத்திசாலித்தனமாக அராவலி மலைத்தொடரின் அடிவாரத்தில் அவர் ஏற்கெனவே சமைத்திருந்த உதய்புர் நகருக்கு சென்று விட்டார்கள். இதற்குப் பின்னர் தான் ஜகம்மல் அகற்றப்பட்டு மஹாராணா ப்ரதாப் சிங் அரியணை ஏறினார். மஹாராணா எப்போதுமே இந்தியாவின் ஆட்சியாளராக அக்பரை அங்கீகரித்ததில்லை. அக்பர் முதலில் ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி, மஹாரானா ப்ரதாப்பை வெற்றி கொள்ள நினைத்தாலும், அவரால் அக்பரை அரசனாக ஏற்றுக் கொண்டு தலை வணங்க முடியவில்லை. மஹாராணா அக்பரை அரசராக கூட ஒரு வேளை ஏற்றுக் கொண்டிருக்கலாம், ஆனால் இஸ்லாத்துக்கு மதம் மாற மறுத்ததால், அப்பாவி சிவிலியன்கள் 30000 பேர்களை சித்தூர் போருக்குப் பின் அக்பர் கொன்று குவித்ததை மஹாராணாவால் மன்னிக்க முடியவில்லை, அத்தகைய அநியாயத்துக்கும், கொடுமைக்கும் தான் தலை வணங்கப் போவதில்லை என்று தீர்மானித்ததாக சில அறிஞர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால், ஹிந்து வீர சம்பிரதாயப்படி போர்வீரன் அல்லாதவர்களையோ, ஆயுதங்களை எறிந்து சரணடைந்தவனையோ தாக்குவது மரபல்ல, தர்மமல்ல.   மஹாராணாவின் மூதாதையர்கள் இருப்பிடமான சித்தோர்கட் (சித்தூர் கோட்டை) முகலாயர்கள் பிடியில் இருந்தது. சித்தூரை மீட்பது தான் மஹாராணாவின் கனவாக இருந்து வந்தது, அவரது எதிர்கால முயற்சிகள் இந்த இலக்கை நோக்கியவையாகவே இருந்தன. கிட்டத்தட்ட மஹாராணாவின் சக ராஜபுத்திர அரசர்கள் எல்லோரும் முகலாயர்களிடம் கைகட்டி சேவகம் செய்து வந்தார்கள். மஹாராணாவின் சொந்த சகோதரர்களான சக்தி சிங்கும், சாகர் சிங்குமே கூட அக்பரிடம் சேவகம் புரிந்தார்கள். ஏன், அம்பரின் ராஜா மான் சிங் போன்றோர் அக்பரின் படையில் தளபதிகளாகவும், அவரது குழுவில் ஆலோசகர்களாகவும் பணி புரிந்தார்கள். அக்பர் மொத்தம் 6 ராஜரீக தூதுக்களை மஹாராணாவிடம் அனுப்பி, பிற ராஜபுத்திர அரசர்களிடம் அவர் ஏற்படுத்தியிருந்த பரந்து பட்ட ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள அனுப்பினார், ஆனால் மஹாராணா ஒவ்வொரு முயற்சியிலும் மண்ணை அள்ளிப் போட்டார்.   புதிய தலைநகரான உதய்பூருக்காக ராணா உதய் சிங், 1565ம் ஆண்டு உதய் சாகர் என்ற ஒரு நீர்த்தேக்கத்தை உருவாக்கினார். ஜூன் மாதம் 1573ம் ஆண்டு அம்பரின் குவர் மான் சிங், அந்த அணை மீது, முகலாய அரசன் அக்பரின் தூதுவனாக நின்று கொண்டு, தன்னை கௌரவப்படுத்த நடத்தப்படும் விருந்தில், மரபுச் சீர்முறையை விடுத்து மஹாராணா கலந்து கொள்ள வேண்டும் என்று ஆணவத்தோடு மொழிந்தார். மஹாராணாவும் மான்சிங்கும் ஒரே வயது உடையவர்கள், இருவருமே மே மாதம் 9ம் தேதி 1540ம் ஆண்டு பிறந்தவர்கள், ஆனால் ஒருவர் அரசர் மற்றவரோ இளவரசர். மஹாராணா ப்ரதாப், மரபுச் சீர் முறையைப் பின்பற்றி தனது மகன் குவர் அமர் சிங்கை, அக்பரின் சிறப்பு தூதுவரான குவர் மான் சிங்கோடு விருந்தில் பங்கு கொள்ள அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சி தான் முகலாயர்-மேவாரின் போருக்கு வழி வகுத்தது.   
எதிரி மேவாரைச் சூழ்ந்து விட்டான். முதல் பிரச்சனை, நேரடியான ஒரு யுத்தம் நடத்த தேவையான படை வீர்ர்களைத் திரட்டுவது; ஆனால் இதைச் செய்ய பெரும் நிதி தேவைப்படும், மஹாராணாவின் கஜானாவோ காலிக் கிடங்காகிக் கிடந்தது. அக்பரிடத்தில் பெரும்படை, ஏராளமான பணம், மேலும் பல சாதகங்கள் நிறைந்து கிடந்தன. ஆனால் மஹாராணா ப்ரதாப் மயங்கி விடவுமில்லை, மனம் தளரவுமில்லை, அக்பரோடு ஒப்பிடும் போது தான் பலவீனமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கவுமில்லை. அவருக்கு இருந்த ஒரே கவலை எப்படியாவது முகலாயர்களின் பிடியிலிருந்து தாய் நாட்டை மீட்பது ஒன்று தான். ஒரு நாள் அவர் தனது நம்பிக்கைக்குரிய தளபதிகளை அழைத்து, மிக முனைப்பும், எழுச்சியும் மிக்க உரையாற்றினார். அதில் அவர், ‘’தைரியம் நிறைந்த என் வீர சகோதரர்களே, நமது தாய்நாடான இந்த புனித மேவார் பூமி, இன்னமும் முகலாயர்களின் பிடியில் சிக்கி இருக்கிறது. இன்று நான் உங்கள் அனைவரின் முன்பாகவும் சபதம் செய்கிறேன், சித்தூர் விடுதலை பெறும் வரை, நான் தங்கம் அல்லது வெள்ளித் தட்டுக்களில் உணவருந்த மாட்டேன், பஞ்சு மெத்தையில் படுத்துறங்க மாட்டேன், அரண்மனையில் வசிக்க மாட்டேன்; மாறாக நான் இலையில் தான் உணவு உண்பேன், கட்டாந்தரையிலே, ஒரு குடிசையிலே தான் படுத்துறுங்குவேன். அதே போல சித்தூர் விடுவிக்கப்படும் வரை என் முடியைக் கூட நான் ஷவரம் செய்து கொள்ள மாட்டேன். என் வீர சகோதரர்களே, இந்த சபதம் நிறைவேறும் வரை உங்கள் மனம், உடல், செல்வம் என அனைத்தையும் நீங்கள் அர்ப்பணித்து எனக்கு ஆதரவளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்’’ என்று சூளுரைத்தார். அனைத்து தளபதிகளும் தங்கள் அரசனின் இந்த சபதத்தால் கருத்தூக்கம் பெற்று, தங்கள் இறுதி சொட்டு உதிரம் உள்ள மட்டும் சித்தூரை விடுவிப்பதிலும், முகலாயர்களை எதிர்ப்பதிலும் மஹாராணாவுக்கு துணை நிற்பதாக வாக்களித்தார்கள்; தங்கள் இலக்கை விட்டுப் பின்வாங்கப் போவதில்லை என்று உறுதி பூண்டார்கள். அவர்கள், ‘’ராணா, நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் என்று நம்பிக்கையோடு இருங்கள்; உங்கள் சமிக்கை கிடைத்தால் மட்டும் போதும், நாங்கள் எங்கள் உயிரைத் தியாகம் செய்ய சித்தமாக இருக்கிறோம்’’ என்றார்கள்.   மஹாராணாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர அக்பர் செய்த பெரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவின. எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படாத நிலையில் கோபமடைந்த அக்பர் போர் அறிவிப்பு செய்தார். ராணா பிரதாப்பும் முஸ்தீபுகளை மேற்கொண்டார். அவர், அடைய கடினமாக இருக்கும் அராவலி மலைத்தொடரில் அமைந்த கும்பல்கட்டுக்கு தன் தலை நகரை மாற்றிக் கொண்டார். அவர் காடுகளில் வசிக்கும் மலைக்குடியினரை தன் படையில் சேர்த்துக் கொண்டார். இவர்களுக்கு போர் புரிந்த அனுபவமே கிடையாது, ஆனால் அவர் அவர்களுக்கு பயிற்சி அளித்தார். மேவாரின் விடுதலைக்காக அவர் அனைத்து ராஜபுத்திர தளபதிகளையும் ஒரு கொடியின் கீழ் வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.  maharana battle   ராணா பிரதாப்பின் 22000 வீரர்கள் கொண்ட படை அக்பரின் 2 லட்சம் வீரரக்ள் கொண்ட படையோடு ஹல்திகாட்டில் பொருதியது. ராணா ப்ரதாப்பும் அவரது படையினரும் இந்தப் போரில் பெருவீரம் காட்டினார்கள்; ஆனாலும் அவர் பின் வாங்க நேர்ந்தது. அதே சமயம் அக்பரின் படையாலும் முழுமையாக ராணா பிரதாப்பை முறியடிக்க முடியவில்லை.   shethak ராணா ப்ரதாப்புடன் கூட அவரது விசுவாசமான குதிரையான சேத்தக்கும் இந்தப் போரில் அமர நிலை எய்தியது. சேத்தக் ஹல்திகாட்டிப் போரில் ஆபத்தான காயம் பட்டாலும், தனது எஜமானனின் உயிரைக் காப்பாற்ற அது ஒரு கால்வாயைத் தாண்டியது. கால்வாய் கடந்தவுடன், சேத்தக் மடிந்தது, மஹாராணாவின் உயிரைக் காத்தது. நெஞ்சுரம் கொண்ட மஹாராணாவே கூட ஒரு சிறு குழந்தை போல தனது விசுவாசமான குதிரை உடல் மீது கதறிக் கதறி அழுதார். பின்னர் சேத்தக் தனது கடைசி மூச்சை விட்ட இடத்தில் ஒரு அழகான நந்தவனம் அமைத்தார். பிறகு, அக்பரே தாக்குதலுக்கு தலைமை ஏற்றார், ஆனால் 6 மாதக் காலப் போருக்குப் பிறகு, அக்பரால் ராணா ப்ரதாப்பை முறியடிக்க முடியாமல் தில்லி திரும்பினார். கடைசி உத்தியாக, அக்பர் 1584ம் ஆண்டு மேலும் ஒரு மகத்தான தளபதியான ஜகன்னாத்தை ஒரு பெரும் படையோடு மேவாருக்கு அனுப்பினார், ஆனால் 2 ஆண்டுகள் இடைவிடாது முயற்சி செய்த பின்னர் கூட அவரால் ராணா ப்ரதாப்பைக் கைப்பற்ற இயலவில்லை.   காடுகளிலும், மலைகளின் பள்ளத்தாக்குகளிலும் திரிந்த மஹாராணா ப்ரதாப் தன்னுடன் தனது குடும்பத்தாரையும் கூட்டிச் செல்வது வழக்கம். எதிரி எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தாக்க கூடிய அபாயம் இருந்தது. காடுகளில் சரியான உணவு கிடைப்பதில் சிரமம் இருந்தது. பல முறைகளில் அவர்கள் உணவில்லாமல் போக கூடிய சூழலும் ஏற்பட்டது. அவர்கள் உணவோ உறக்கமோ கூட இல்லாமல் மலைகளிலும் காடுகளிலும் சுற்றித் திரிய வேண்டி இருந்தது. உணவைத் துறந்து, எதிரியின் வருகை அறிந்து வேறு ஒரு இடத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. அவர்கள் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டே இருக்க நேர்ந்தது. ஒரு முறை மஹாராணி காட்டில் ரொட்டிகளை (பக்ரிக்களை) சுட்டுக் கொண்டிருந்தார்; தங்கள் பங்கை உண்ட பின்னர், அவர் தனது மகளிடம், மிச்சம் இருந்த பக்ரியை இரவு உணவுக்கு வைத்திருக்க சொன்னார், ஆனால் அந்த நேரத்தில் ஒரு காட்டுப் பூனை தாக்கி இளவரசி கையிலிருந்த பக்ரியை பிடிங்கிக் கொண்டு சென்றதால், அரசகுமாரி அழ ஆரம்பித்தாள். அந்த பக்ரித் துண்டு கூட அவள் உண்ண விதிக்கப்படவில்லை. ராணா ப்ரதாப்புக்கு தன் மகளின் நிலையைக் கண்டு வருத்தம் ஏற்பட்டது; தனது சாகஸம், வீரம், சுயமரியாதை பற்றி அவருக்கே கோபம் உண்டானது; இத்தனை போராட்டமும் தேவை தானா, மதிப்பானது தானா என்ற சந்தேகமும் எழுந்தது. இத்தகைய தடுமாற்றம் மேலிட, அவர் அக்பரோடு சமரஸம் பேச ஒப்புக் கொண்டார். அக்பரின் அரசவையில் இருந்த ஒரு கவி ப்ருதிவிராஜ் என்பவர், மஹாராணா ப்ரதாப்பை பார்த்து வியப்பவர்களில் ஒருவர். அவர் ராஜஸ்தானி மொழியில் மஹாராணாவுக்கு ஒரு நீண்ட கடிதம் வரைந்து, அதில் அக்பரோடு சமரஸம் செய்து கொள்ள வேண்டாம் என்று கூறி, மஹாராணாவை ஊக்கும் விதமாக எழுதியிருந்தார். அந்த கடிதத்தைப் படித்த பின்னர் மஹாராணாவுக்கு பத்தாயிரம் வீரர்களின் பலம் கிடைத்த உணர்வு ஏற்பட்டது. அவரது மனம் அமைதியடைந்து, நிதானத்தை எய்தியது. அவர் அக்பரிடம் சரண் அடையும் எண்ணைத்தைத் துறந்தார். மாறாக, அவர் தனது படையைப் பெருக்கி, மேலும் புதிய உத்வேகத்தோடு தனது இலக்கை அடைய கச்சை கட்டி இறங்கினார்.
மஹாராணா ப்ரதாப்பின் முன்னோர்களின் அவையில் அமைச்சராகப் பணி புரிந்த ஒரு ராஜபுத்திர தளபதி இருந்தார். தனது அரசன் காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிதல் கண்டு மனம் நொந்து போயிருந்தார். ராணா ப்ரதாப் எதிர்கொண்ட இடர்களையும் துயரங்களையும் பற்றித் தெரிந்து வேதனைப் பட்டார். 25000 வீரர்களை அடுத்த 12 ஆண்டுகளுக்கு பராமரிக்கத் தேவையான செல்வத்தை அவர் மஹாராணாவுக்கு அளித்தார். மஹாராணாவுக்கு பெருமகிழ்ச்சி, நெஞ்சாற நன்றி பாராட்டினார். தொடக்கத்தில் பாமாஷா அளித்த செல்வத்தை பெற அவர் தயக்கம் காட்டினாலும், பாமாஷா தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில், அவர் இந்த அர்ப்பணிப்பை ஏற்றுக் கொண்டார். பாமாஷாவிடமிருந்து பணம் பெற்ற மஹாராணா பிற ஆதாரங்களிடமிருந்தும் செல்வம் பெறத் தொடங்கினார். தனது செல்வம் அனைத்தையும் பயன்படுத்தி தனது படையைப் பெருக்கி, முகலாயர்கள் வசம் இருந்த சித்தோரைத் தவிர மேவார் முழுக்கவும் மீட்டெடுத்தார்.   அக்பர் ஒன்றன் பின் ஒன்று என மஹாராணா ப்ரதாப்புக்கு எதிராக பல படைகளை அனுப்பினாலும், அவரால் வெற்றி பெற இயலவில்லை. அவர் நிறைய பணத்தையும், வீரர்களையும் மஹாராணா ப்ரதாப்பை தோற்கடிப்பதில் இழந்தது தான் மிச்சம். 30 ஆண்டுகள் மஹாராணா அக்பரின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார்; தனது இறுதி பத்தாண்டுகளில் தனது ராஜ்ஜியத்தின் பெரும்பகுதியை மீட்க முடிந்தாலும், சித்தோர் கோட்டை மட்டும் எட்டாக் கனியாக, கானல் நீராக இருந்தது. அவருக்கு இது துயரமானதாக இருந்தாலும், அவரது மறைவுக்குப் பிறகு அவரது மூத்த மகன் அமர் சிங், சித்தோரை மீட்டான்.   மஹாராணா ப்ரதாப் ஒரு வேட்டையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக இறந்தார். அவர் ஜனவரி மாதம் 29ம் தேதி 1597ம் ஆண்டு சாவண்டில் தனது 56வது வயதில் இறந்தார். தனது மகன் அமர் சிங்கை தனது வாரிசாக நியமித்த மஹாராணா, இறக்கும் தறுவாயில் முகலாயர்களிடம் தொடர்ந்து போரிடுவேன் என்ற வாக்குறுதியை வாங்கிக் கொண்டார். சங்கடமான சூழ்நிலைகள் கூட அவரது திட வைராக்கியத்தை மாற்றவில்லை. தன் இறுதி மூச்சு உள்ள மட்டும் அவர் பஞ்சு மெத்தையில் உறங்கவுமில்லை, தங்கத் தாம்பாளத்தில் உணவருந்தவுமில்லை, மாளிகை வாசமும் செய்யவில்லை.   மஹாராணா ப்ரதாப்பின் மகன் அமர் சிங் முகலாயர்களோடு 17 போர்களை மேற்கொண்டாலும், சில ஷரத்துக்களுக்கு உட்பட்டு, அவர்களை ஆட்சியாளர்களாக ஏற்றுக் கொண்டான். இதே சமயத்தில், மஹாராணா ப்ரதாப்பின் விசுவாசம் மிக்க ராஜபுத்திரர்களின் பெரும் பகுதியினர், இந்த சரணாகதியால் மனம் வெதும்பி ராஜஸ்தானத்தை விட்டே வெளியேறினார்கள். இந்தக் குழுவில் ராட்டோர்கள், தியோரா சௌஹான்கள், பரிஹாரர்கள், தோமர்கள், கச்வாஹாக்கள், ஜாலாக்கள் ஆகியோர் அடக்கம். அவர்களில் பெரும்பாலானோர் ஹரியாணாவிலும், சில உத்திர பிரதேசத்திலும் குடி பெயர்ந்தார்கள். அவர்களை ரோர்கள் என்று அழைப்பார்கள்.   சுவாரசியமான நிகழ்வுகள் சிலவற்றில் இரண்டு:
ஹல்திகாட்டி போருக்கு முன்பாக, மான் சிங் கச்வாஹா சில பேர்கள் துணை கொண்டு வேட்டையாடிக் கொண்டிருந்த போது, ராணாவின் பீல் இன வேவுக் கார்ர்கள், இதை சில கி.மீ தொலைவில் இருந்த ராணாவுக்கு தெரிவித்தார்கள். மஹாராணாவின் பிரபுக்கள் சிலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மான் சிங்கை கொன்று விடலாம் என்று கூறிய போது, மஹாராணா அதற்கு சம்மதிக்கவில்லை, இது அவரது மாண்பினை வெளிப்படுத்துகிறது.
வேறு ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு முகலாய அதிகாரி அப்துர் ரஹீம் கான்கானாவின் குடும்பப் பெண்கள், ராணாவின் மகன் அமர்சிங்கிடம் சிக்கி விட்டார்கள். இந்த கட்டத்தில் கான்கானா, ப்ரதாப்புக்கு எதிராக போர் தொடுத்துக் கொண்டிருந்தார்; அவர் ராணாவுக்கு எதிரான தாக்குதலுக்கு ஷேர்புரில் இருந்து தயார் செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் பொருட்படுத்தாத மஹாராணா தனது மகன் அமர் சிங்கிடம், முகலாய பெண்களை பாதுகாப்பாக அவர்கள் கூடாரம் அனுப்பி வைக்குமாறு ஆணை இட்டார். இந்த நிகழ்வு கான்கானாவை எந்த அளவுக்கு பாதித்தது என்றால், அத்தகைய மாண்பு மிக்க ஒரு பேரரசனுக்கு எதிராக தன்னால் போரிட முடியாது என்று தீர்மானித்து, அக்பரிடம் தன்னை தனது பதவியிலிருந்து நீக்கி விடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன் பின்னர் அவர் அக்பரின் சொந்த மகன் சலீமுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த அப்துர் ரஹீம் கான்கானாவைத் தான் ரஹீம் தாஸ் என்று ஹிந்தி மொழிக் கவிதையில் கருதப்படுகிறார்.








மஹாராணா உதய்சிங் அவர்களுக்குச் சின்னவயசுலேயே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. பதினெட்டு வயசுலே அவருக்கு பிள்ளையா ப்ரதாப் சிங் பிறந்தார் (1540) அதுக்குப்பிறகு சிலபல மனைவிகள் மூலம் இருபத்தி அஞ்சு மகன்களைப் பெற்றெடுத்துருக்கார். முதல் மகனாகப் பிறந்ததால் பிரதாப் சிங் பட்டத்து இளவரசர் ஆனார். உதய்பூரை தலைநகரா மாற்றிய நாலே வருசத்தில் (1572) , தந்தை இறந்துட்டார். முப்பத்தி இரண்டு வயசில் ராணா பிரதாப் சிங் பட்டத்துக்கு வந்தார். அதுலேயும் ஒரு சின்ன தகராறு ராமாயணக்கதை மாதிரி ஆகிப்போச்சு.

உதய்சிங் மஹாராஜாவின் பல மனைவிகளில் அவருக்குப் பிரியமான மனைவிக்குப் பிறந்த ஜக்மல் என்பவரை தனக்குப்பிறகு நாட்டை ஆளணுமுன்னு எழுதி வாங்கிக்கிட்டாங்க அந்த ஜக்மலின் தாய் ராணி படியானி(Rani Bhatiyani). (ஓஹோ.... அதான் உதய்பூரில் ஜக் மந்திர், ஜக் நிவாஸ் இப்படி ஜக் ஜக்கா இருக்கோ!)

இந்த ஜக்மல் தானே ராஜாவா ஆகணுமுன்னு பிடிவாதமா இருக்கார். மந்திரி பிரதானிகள் எல்லாம் ஆலோசனை செய்து, ராணா ப்ரதாப்சிங்தான் அரசுரிமை ஏற்றெடுக்கணுமுன்னு வாக்குவாதம் செஞ்சு ஒரு வழியா ப்ரதாப் சிங் பட்டம் சூட்டிக்கிட்டார். இதனால் எரிச்சலான ஜக்மல், நேரா அஜ்மெர் போய் எதிரியான அக்பரிடம் போய் சேர்ந்துக்கிட்டார். இந்த துரோகத்துக்குப் பரிசா குறிப்பிட்ட இடத்துக்கு (ஜஹஸ்பூர்) இவரை ஜாகீர்தாரா ஆக்கினாராம் அக்பர்.

முகலாயர்களுக்கு இந்த மேவாரைப் பிடிப்பதே ஒரு லட்சியமா ஆகிப்போச்சு. மற்ற ராஜபுத்திர சமஸ்தானங்கள் முகலாயரோடு வம்பு எதுக்குன்னு இணக்கமாப் போயிட்டாலும் மேவார் சமஸ்தானம் மட்டும் கடைசிவரை பிடி கொடுக்காமலே இருக்கு. எங்களோடு இணைஞ்சுக்குங்கன்னு ஆறு தடவைகள் தூதுவர்களை அனுப்பிப் பார்த்தார் அக்பர் சக்ரவர்த்தி. ஒன்னும் சரியாகலைன்னு ஆனப்போது தன்னுடைய மச்சினரும் தளபதியுமான ராஜா மான்சிங்கையும் தூது அனுப்பினார். ராஜா மான்சிங்கின் சகோதரி அக்பரின் மனைவிகளில் ஒருவர்.

இனி போர் என்று முடிவு செஞ்சு மேவார் போகும் வழியைக் கைப்பற்றித் தன் படைகளை நிரப்பினார் அக்பர். எம்பதாயிரம் வீரர்கள். ராணாவின் படையில் இருபதாயிரம் வீரர்கள்தான். நாலில் ஒரு பங்கு! அக்பரின் படையைத் தலைமைதாங்கி நடத்தியது ராஜா மான்சிங்.

ராஜா மான்சிங் யானை மேலே இருந்து சண்டை போடறார். நம்ம பிரதாப் சிங் குதிரையில் இருந்து. இந்தக் குதிரைதான் மஹாராணா ப்ரதாப் சிங்கின் பட்டத்துக் குதிரை. 'சேதக்' என்று பெயர்.. இதோட முகத்துலே யானைத் தும்பிக்கை போல ஒன்னு செஞ்சு மாட்டி விட்டுருக்காங்க. யானை இன்னொரு யானையைப் பார்த்தால் முதலில் ஒன்னும் செய்யாதாம். அதனால் தந்திரமா இப்படி ஒரு ஏற்பாடு.
ராஜா மான்சிங்கை வாளால் தாக்கும்போது அவர் சட்னு குனிஞ்சதால் யானைப்பாகன் கொல்லப்பட்டார். ஆனால் முகலாயர்கள் இன்னொரு தந்திரம் செஞ்சுட்டாங்க. யானையின் துதிக்கையில் வாளைக் கட்டி வச்சுருந்தாங்க. அது குதிரையின் அடிவயித்தைக் கிழிச்சுருச்சு. அதுக்குப்பிறகு மேவார் மன்னரை முகலாயப்படைகள் சூழ்ந்துக்கிட்டாங்க. அந்த சமயம் பார்த்து மன்னரின் சகோதரர் ஷக்தி சிங் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன் படுத்திக்கிட்டு சேதக் மன்னரோடு தப்பி ரெண்டு மைல் தூரம் ஓடி அங்கிருந்த ஆற்றைத் தாவிக் கடந்து மன்னரைக் காப்பாற்றிய நிம்மதியோடு கீழே விழுந்து உயிரை விட்டுச்சு:(

இந்தப் போர் ஆரம்பிச்சு நாலே மணி நேரத்தில் முடிவுக்கு வந்துருச்சு. இந்த விவரங்களையெல்லாம் மோதி மாங்ரி ம்யூஸியத்தில் விளக்கப்படங்களோடு வச்சுருக்காங்க. சண்டை நடந்த ஹல்டிகாட்டி (Haldighati)என்ற இடத்தையும் பெரிய அளவில் மாடலாச் செஞ்சு வச்சுருக்காங்க. சித்தூர் கோட்டை மாடலும் இருக்கு. இந்த சித்தூரில்தான் இதே ராஜவம்சத்து மருமகளா வந்தவங்க மீராபாய். ஒவ்வொரு மாடலும் ஒவ்வொரு பெரிய ஹாலில் கண்ணாடிச் சட்டத்துக்குள் இருக்கு!

மோதி மாங்ரியில் உள்ளே போக சின்னக் கட்டணம் ஒன்னு வசூலிக்கிறாங்க. ஆட்டோவுக்கு தனி கட்டணம். கேட்டுக்குள்ளே நுழைஞ்சு போகும்போது ஏதோ ஒரு மலைப்பாதைக் காட்டுக்குள்ளே போவது போல இருக்கு. கொஞ்சம் உயரமான இடம் இது. போகும் வழியிலே இந்த ம்யூஸியம் இருக்கு. அதையும் தாண்டி இன்னும் கொஞ்ச தூரம் போனால் இன்னும் கொஞ்சம் உயரமான பகுதியில் அழகான தோட்டம். நடுவில் செயற்கை நீரூற்று. நீரூற்றைப் பார்த்த மாதிரி சேதக் மேல் அமர்ந்த நிலையில் மஹாராணா ப்ரதாப் சிங்கின் வெண்கலச்சிலை.

பீடத்தின் நாலு பக்கமும் சுருக்கமான சரித்திரம் படங்களாக! சூரிய வம்சம், ராணாவின் வாழ்நாள், ஹல்திகாட்டி போர். சேதக் உயிரைவிடுவது இப்படி!

அங்கே இருந்து சுற்றிவரக் கண்ணை ஓட்டினால் ஒரு பக்கம் ஃபடே ஸாகர், இந்தப் பக்கம் குன்றுகள் மரங்கள் இப்படிப் பசுமையாவே இருக்கு.
மஹாராணாவின் நினைவிடத்துலே கேடயம் டிஸைனோடு ரெய்லிங் எனக்கு ரொம்பப் பிடிச்சது..

ராஜஸ்தானி பாரம்பரிய உடைகளைத் தொங்கவிட்ட ஒரு ஸ்டுடியோ ஒன்னு இருக்கு இங்கே. அந்த உடைகளை அணிஞ்சுக்கிட்டுப் படம் எடுத்துக்கலாம். நாம் சுத்திப் பார்த்து முடிக்குமுன் படம் ரெடி ஆகிருமாம். கோபாலுக்கு ஏனோ ஆர்வம் இல்லை:( பெரிய முண்டாசு ஒன்னு தலையில் இருந்தால் நல்லா இருக்காது?

அடுத்த இடமா நம்மை ஸஹலியோன் கி பாடி ( Sahalion ki bari) என்ற தோட்டத்துக்குக் கொண்டு போனார் ஆட்டோக்காரர் ரஹ்மான். உள்ளே போக நுழைவுக் கட்டணம் தலைக்கு அஞ்சு.
மஹாராணா சங்ரம்சிங் அவர்களின் நாற்பத்தியெட்டு மனைவியருக்காகக் கட்டப்பட்டது. அந்தக் காலத்தில் கல்யாணப்பெண் கூடவே சில தோழியரும் தஹேஜ் வகையில்( வரதட்சிணை) வந்துருவாங்களாம். அப்போ நாப்பத்தியெட்டுக்குக் கூடவே இன்னும் எத்தனை பேர் அந்தப்புரத்தில் இருந்துருப்பாங்கன்னு பாருங்க. அவுங்க எல்லோரும் மாலை நேரத்தில் ஓய்வா உலாத்த இந்தத் தோட்டத்தை அரசர் கட்டிவிட்டுருக்கார். (அங்கேயே எப்படியாவது அடிச்சுக்குங்க. என் வேலையில் குறுக்கே வரவேணாம்!)

இல்லையில்லை.அவருக்கு ஒரே ராணிதான். ராணியின் கூட வந்தவங்க இந்த 48 தோழிகள் என்றும் சிலர் சொல்றாங்க.
பெரிய கேட் இருக்கும் நுழைவு வாசலைக் கடந்தால் தரையில் நீரூற்று! கடந்து போனால் அருமையான புல்வெளிகளும் விசிறி வாழையும், அசோகமும், மா மரங்களுமா ஒரு பெரிய வளாகம். சுற்றுலா மக்களுக்காக நாலைஞ்சு மேசை போட்டு கலைப் பொருட்கள் விற்பனை:(

இன்னும் நாலு படியேறி உள்ளே போனால் நீராழி மண்டபம். அடிக்குற வெய்யிலுக்கு பார்க்கவே ஜில்லுன்னு இருக்கு. குளத்தைச் சுத்தி பெரிய நடைபாதைகள் இருக்கைகள், நாலு மூலைக்கும் சின்னதா நாலு மண்டபங்கள், தொட்டியில் செடிகள்னு அழகு!
அழகு முழுவதையும் ரசிக்க விடாமல் தலைசுற்றல் வந்துச்சு எனக்கு. ப்ரெஷர் மாத்திரை ஒழுங்காத்தானே எடுத்துக்கறேன். இது என்னடா வம்பு?
படிக்கட்டில் கொஞ்ச நேரம் உக்கார்ந்து பார்த்துட்டு ஹவேலிக்குத் திரும்பிடலாமுன்னு ரெஹ்மானிடம் சொன்னதும் அவருக்கு லேசான அதிர்ச்சி.

ஹவேலிக்கு வந்ததும், பேசின தொகை முன்னூறைக் கொடுத்தோம். அவர் அதுலே இருந்து நூறை நமக்கு நீட்டுறார். 'இருக்கட்டும். நாங்கதானே போதும்னுன்னு வந்தோம். நீங்க வச்சுக்குங்க'ன்னதும் வேணாம் என்பது போல மனசில்லா மனசோடு கையை நீட்டிக்கிட்டே இருந்தார். பாவம். நல்ல மனுஷர். இந்தக் காலத்திலும் இப்படி நேர்மை இன்னும் சிலரிடத்தில் இருக்கு பாருங்க. நாளைக்கு பாக்கி இடங்களைப் பார்க்கணுமுன்னா சொல்லுங்க. நான் கூட்டிப்போய் காமிக்கிறேன்னார்!

அறைக்குப்போய் இன்னொரு மாத்திரையைப் போட்டிக்கிட்டுக் கண்ணைமூடி ஒரு மணி நேரம் படுத்திருந்தேன். கொஞ்சம் ஆசுவாசமா இருந்தது. ஜன்னலில் தெரிஞ்ச காட்சி மனசை அப்படியே மயக்குச்சு. விளக்கொளியில் ஏரி, அதிலுள்ள கட்டிடங்கள் எல்லாம் ஜொலிக்குது.





















No comments:

Post a Comment