CAVE TEMPLES OF KARNATAKA
இங்கே கொசுக்களை விட கோவில்களே அதிகம்..
கர்நாடக மாநிலம் முழுக்கவே பல்வேறு சிற்பக்கலைகள் ,குகைகள் கொண்ட கோவில்கள் மிக அதிகம்.. இதில் சாலுக்கிய மன்னர்கள்களின் ராஜ்ஜியத்தின் தலைநகரமான பாதாமி , பட்டாடக்கல்லு , அய்ஹோலே போன்ற ஊர்கள் மிக அருமை..இதில் சிறப்பு என்னவென்றால் இது 5 முதல்-8ம் நூற்றாண்டுகளில் வம்சாவளிகளாக கட்டப்பட்டதாகும்..
முதலில் நாங்கள் சென்ற பாதாமி(பதாமி) ஐ பார்ப்போம்..
திராவிடர் கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட குகை கோவில்கள் கொண்ட நகரம்.. இந்த சிறு நகரம் முழுக்க பாதாம் நிறத்தில்( கரடுமுரடான standstone பாறைகள் நிறைந்து இருப்பதால் இந்த ஊருக்கு பாதாமி என்று பெயர் வந்ததாக கூறுகிறார்கள்..பதாமி என்றும் கூறுகிறார்கள்..
இந்த குகை கோவில் சிற்பங்கள், சாலுக்கிய மன்னன், புலிகேசி -1 கி.பி.543ம் ஆண்டு பாதாமிக்கு தலைநகரத்தை மாற்றிய போதிலிருந்து அமைக்கப்பட்டுள்ளன.. இந்த குகை கோவில்களை அவர்கள் உருவாக்கியது, இயற்கையாகவே தென்னகத்தில் இருந்த படை எடுத்து வந்த பல்லவ நாட்டு எதிரிகளிடம் இருந்து காத்து கொள்ள அமைந்தது சிறப்பாகும்..
மிகப்பெரிய sandstone மலையை ,மிக எளிய பொருட்களை கொண்டு குடைந்து சிற்பங்களை அமைத்துள்ளது மிக அற்புதம்..இதில் standstone என்பது சற்று sensitive ஆன கற்களாகும்.. இதை சற்று வேகமாகவோ,தவறாகவோ செதுக்கினால்,கல் இரண்டாக உடைந்து போக வாய்ப்புகள் அதிகம்.. இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் அங்கிருக்கும் சிற்பங்கள் , தூண்கள் மற்றும் குடைந்தெடுத்த குகைக்குள் அமைக்கப்பட்டிருப்பது மிக அழகு.. மொத்தம் 4 குகை கோவில்கள் அருகருகே இருக்கின்றது.. இதில் மேல் ஏறுவது சிரமம் ஏதுமில்லை..ஆபத்தும் இல்லை.. யார் வேண்டுமானாலும் சென்று வரலாம்..
கீழே ஒரு அகஸ்த்தியர் தீர்த்தக்குளமும் , அதில் பழங்கால புத்தநாதர் கோவிலும் அமைந்திருக்கின்றன.. இதை மேலிருந்து பார்த்தால்,பச்சை நிற குளத்தில் இருப்பது மிக அழகாக இருக்கின்றது..
குகைக்கு மேலே 18ம் நூற்றாண்டுகளில் திப்பு சுல்தான் அமைத்த கோட்டை இருக்கின்றது..ஆனால் மேலே சென்று வருவது சிரமம் என்பதால் நாங்கள் செல்லவில்லை..
இந்த ஊருக்குள் நுழையும் போதே அங்கிருக்கும் பிரம்மாண்ட பாறைகள் , சந்து சந்தாக குறுகிய பாதைகள் கொண்ட தெருக்கள் , மிக பழமையான வீடுகள் , தொழில்நுட்பங்கள் பெரிதாக இல்லாத பழங்கால கிராம வாழ்க்கை , இவற்றையெல்லாம் பார்க்கும் போது நமது எண்ணங்கள் , கற்பனைகள் பின்னோக்கி பயனிக்கும் என்பதில் சந்தேகமில்லை..
தகவல்கள்:
நாங்கள் சுற்றி பார்த்த வரையில் ரோடுகள் இந்த ஏரியாவை பொறுத்தவரையில் மோசமே.. எங்கேயும் வழிகாட்டிகள் கிடையாது.. சுற்றியும் 1960 களில் பார்ப்பது போன்ற பழைய கிராமங்களே இருக்கின்றன..நாங்கள் பாதாமிக்கு வந்து சேர இருட்டி விட்டது , கிட்டதட்ட 20-30kmக்கு ஆள் நடமாட்டமே இல்லை.. பயணமும் சற்று த்ரில்லிங்காக இருந்தது..
அங்கிருக்கும் கிராம மக்களும் பழமை மாறாமல் மராத்தி மக்களை போல் உடை அனிந்து இருக்கின்றனர்..அங்கே மராட்டி மொழியே அதிகம் பேசப்படுகின்றது...இவை அனைத்தும் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது..
பதாமி நகரத்தை தவிர எங்கேயும் பெரிய வீடு என்று ஒன்று கூட இல்லை..அனைத்தும் சிறிய வீடுகளே..தொழில்கள் எதுவும் சிறப்பாக இருப்பதாக தெரியவில்லை , விவசாயம்(வெங்காயம் , கம்பு , சோளம் , ராகி, செவ்வந்தி பூ), எருமை மாடு மேய்பது மட்டுமே அதிகம் தெரிந்தது..
கோவில்,குகைகளை அரசாங்கம் சுத்தமாகவே வைத்துள்ளது.. இருந்தாலும் செல்லும் வழியெல்லாம் மிகக்குறுகிய ரோடுகள் , அசுத்தமானவையாக இருக்கின்றன..
இந்த மூன்று ஊர்களையும் ஒரே நாளில் பார்த்து முடிக்கலாம்.. சிற்பக்கலை , வரலாற்றில் விருப்பம் அதிகம் இருப்பவர்கள் கண்டிப்பாக ஒரு நாள் தங்கியிருந்து பார்க்கலாம்..
இந்த ஊர்கள் 30 கி.மி. சுற்றலவில் இருக்கின்றன..
இந்த ஊர்களுக்கு செல்லும் போது பதாமி யில் மட்டுமே தங்க முடியும்.. மற்ற இரண்டு ஊர்களில் எந்த வசதியும் இல்லை... உணவகங்கள் கூட பதாமியில் மட்டும் தான் உள்ளது.. மற்றபடி ஏதாவது தேவையென்றால் பதாமியிலேயே வாங்கிக்கவும்.. இல்லையென்றால் சிரமம் தான்..
விடுதிகளை பொறுத்தவரையில் இரண்டு மூன்று சுமாரானவை இருக்கின்றன.. ஒரு சில பெரிய ஹோட்டல்களும் இருக்கின்றன..ஆனால்,அவைகள் சற்று outer ல் உள்ளாதால் முடிந்தளவு நேரமாகவே சென்று விடுவது நல்லது..
இந்த இடங்களுக்கு சென்று வர நினைப்பவர்கள் கூடவே hampi ஐயும் வரும் போது பார்த்துவிட்டு வருவது சிறந்தது..
இந்த இடங்கள பெங்களூருவிலிருந்து வடக்கே 513 கி.மி.கள் வரும்.. பதாமியிலிருந்து ஹம்பிக்கு(பெங்களூர் வழி) கிட்டதட்ட 120 கி.மி. வரும்..
பெங்களூரிலிருந்து ஒரு ரயில் பதாமிக்கு செல்கிறது.( golgumbaz express)
இவ்விடங்களை வாகனங்கள் இருந்தால் நாமே சென்று பார்த்து வரலாம்.. இருந்தாலும் கைடுகள் வைத்துக்கொள்வது சிறந்தது..
இங்கே கொசுக்களை விட கோவில்களே அதிகம்.
No comments:
Post a Comment