STERLITE - FACTORIES ARE
TEMPLES UPLIFT ECONOMY
தொழிற்சாலைகள் தேசத்தின் கோவில்கள் "
பண்டித ஜவஹர்லால் நேரு
போலீஸ் செய்தது சரியே .
இன்றைக்கு எல்லா அரசியல் தலைவர்களும் தூத்துக்குடி யில் நடந்த வன்முறைகளுக்கு போலீசை குற்றம் சாட்டுகிறார்கள். "இதை முன்னமேயே தடுத்திருக்க வேண்டாமா "என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். எல்லா ஊடகங்களும் போலீசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகிறார்கள். போலீசால் அப்படி ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் பதில் சொல்ல முடியாது என்பதாலும், அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு ஒரு அமைப்பும் இல்லாததாலும் , இந்த பதிவின் மூலம் அத்தனை அரசியல் வாதிகளையும் , நேற்று முளைத்த காளான்கள் உட்பட , ஊடகங்களையும் கேள்வி கேட்க விரும்புகிறேன்.
"முன்னமே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே "என்றால் என்ன நடவடிக்கை யை எதிர் பார்க்கிறீர்கள் ? போலீஸ் எடுத்த நடவடிக்கை தான் 144 தடை உத்தரவு. "இத்தனை கூட்டம் வரும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும் " என்றால் அந்த வாதம் சாதாரண கூட்டத்துக்கு பொருந்தும். ஆனால் கிரிமினல்கள் எப்படி செயல் படுவார்கள் என்று தெரியாத நிலையில் போலீஸ் வேறு எதையும் செய்திருக்க முடியாது. தற்போது வெளிவரும் செய்திகளை பார்த்தால் அந்தக் கூட்டம் கிரிமினல்களால் வழி நடத்தப்பட்ட கூட்டம்தான் என்று தெளிவாக தெரிகிறது. இவர்கள் கையில் இவ்வளவு கற்கள் எங்கிருந்து வந்தன , இந்த பெட்ரோல் குண்டுகள் எங்கிருந்து வந்தன என்று ஏன் எந்த தலைவனும் எந்த ஊடகமும் கேட்கவில்லை ?
இலங்கைப் போரில் விடுதலைப் புலிகள் சிறுவர்களை போரில் கேடயங்களாக ஈடு பட செய்தது மிகப்பெரிய மனித உரிமை மீறல். இப்போது இந்த போராட்டத்தில் பெண்களையும் குழந்தைகளையும் உடன் அழைத்து சென்று அவர்களை கேடயமாக பயன் படுத்தியது மட்டும் மனித உரிமை மீறல் இல்லையா ? மனித உரிமை ஆணையம் நடுநிலைமையான அமைப்பு என்றால் டிஜிபி
அவர்களுக்கு அழைப்பாணை விடுத்தது போல போராட்டத்தின் தலைவருக்கும் அதே போன்ற அழைப்பாணை
அனுப்பியிருக்க வேண்டும் அல்லவா. ஏன் செய்யவில்லை ?
ஏனென்றால் போராட்டம் நேர்மையாளவர்களால் நடத்தப் படவில்லை.நேருக்கு நேர் நின்று போராடும் தைரியம் அவர்களுக்கு இல்லை.யார் முன்னின்று நடத்துகிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.
மேலும் போராட்டத்தலைவர்கள் தங்களை மறைத்துக்கொண்டு அப்பாவி மக்களை இயக்குபவர்கள். உண்மையில் கிரிமினல்கள்தான் அப்படி தங்கள் அடையாங்களை மறைத்துக்கொண்டு இறங்குவார்கள.
. இதுதான் அவர்கள் " மறைந்திருந்து பார்க்கும் மர்மம்" . போஸீஸ் முதலில் சற்று தடுமாறுவது போல காட்டிக் கொள்வதும் ஒரு வியூகமே. இது போலீஸ், கிரிமினல்களை பொறி வைத்துத்தான் பிடிக்கும் ஒரு முறை. .
இனிமேல் போலீஸ் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நிச்சயம் தவற மாட்டார்கள். . ஏனென்றால் கிரிமினல்கள் இப்போது மாட்டிக்கொண்டு விட்டார்கள் அல்லவா. அவர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்திக்கொண்டு விட்டார்கள் அல்லவா. ஆகையால் இனி தூத்துக்குடியில் நிச்சயம் அமைதி திரும்பும்.
முன்னெச்சரிக்கையாக பல தீய சக்திகளை கைது செய்திருக்கலாம் என்றால் அப்போதும் இதே குற்றச்சாட்டைதானே எல்லா அறிவுஜீவிகளும் சொல்லப்போகிறீர்கள். "அமைதியாக போராட்டம் நடத்த இருந்த எங்களை தேவை இல்லாமல் கைது செய்கிறது போலீஸ். இது உரிமை மீறல் "என்று கோர்ட்டுக்கு போவீர்கள். கோர்ட்டிலும் போலீசுக்காரர்களைத் திட்டிவிட்டு "நீங்கள் தாராளமாக போராட்டம் செய்யுங்கள் "என்று அனுமதி வழங்கப் போகிறார்கள். பிறகு எதற்கு இந்த ஆஷாட பூதி வேலை எல்லாம்.
ஹிந்து பத்திரிக்கையின் புகைப்படக் காரர் ராஜேஷை வன்முறை கும்பல் தாக்கி அவரது காமெராவை பறித்துள்ளது. அது அதிர்ச்சி. அதை விட அதிர்ச்சி அந்த வன்முறையாளர்கள் அந்த காமிராவில் இருந்த வன்முறை தொடர்பான படங்களை மட்டும் அழித்துவிட்டு காமிராவை திருப்பி கொடுத்துள்ளார்கள். இதில் என்ன அதிர்ச்சி என்கிறீர்களா.
அந்த வன்முறைக்கு கும்பலுக்கு ராஜேஷ் என்பவர் ஹிந்து பத்திரிக்கையை சேர்ந்தவர் என்று தெரிந்திருக்கிறது. அவரை தாக்கினால் அதன் விளைவு விபரீதமாக இருக்கும் என்றும் தெரிந்திருக்கிறது. ஆகையால் அவரைத் தேடி மீண்டும் அந்த காமிராவை ஒப்படைத்து ஹிந்து பத்திரிக்கையிடம் "நல்ல பெயர் " வாங்க முயற்சி செய்துள்ளார்கள். ஆனால் அதுவே விபரீதமாகிவிட்டது. ஹிந்து பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் கட்டம் கட்டி அந்த செய்தியை வெளியிட்டு விட்டார்கள். ஆகவே இந்த போராட்டம் கிரிமினல்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு வன்முறை என்பது மிகவும் தெளிவாகி விட்டது. அவர்கள் அனைவருக்கும் கிலி பிடித்ததும் புரிகிறது.இவர்கள் " வெளிப்படைத்தன்மை" பற்றி விடிய விடிய பேசுவார்கள்.ஆனால் தங்கள் முகத்துக்கு மட்டும் முக்காடு போட்டுக் கொள்வார்கள். போலிகள்.
. எனக்கு வரும் கோபத்திற்கு போலீசை கேள்வி கேட்பவர்களை இப்படி திருப்பி கேள்வி கேட்க வேண்டும் போல தோன்றுகிட்டது "ஏண்டா மாங்காய்களா
பறந்து வர்றது கல்லா அல்லது ஏதாவது நாட்டு வெடிகுண்டா ன்னு போலீசை அங்க நின்னு ஒன்னொன்னா கைல புடிச்சு ஆராய்ச்சியாடா பண்ண சொல்றீங்க .அவன் செத்தா அவன் புள்ள குட்டிகளுக்கு நீயாடா பதில் சொல்லப்போற ? . நீ ஜாலியா ஏஸீ ரூம்ல ஒக்காந்து எல்லா டீவீயிலயும் ஏதாவது கமன்ட் அடிப்ப. அவன் மட்டும் வேகாத வெய்யில்ல வெறுங்கையில "ஸ்டாப் "ன்னு கை காட்டணும். ஒடனே எல்லா போராட்டக்காரங்களும் "சரிங்க எசமான் "நாங்க இங்கயே நின்னுடறோம் னு நின்னுடுவாங்க. அப்பிடித்தானே நீ நினைக்கறே . நீ ஒரு தடவ போய் கையில கத்தி அருவா வெச்சிருக்கற கூட்டத்துக்கு முன்னாடி வெறும் லத்திக்கம்போட நில்லேன். அப்ப தெரியும் போலீஸ் என்ன மனா அழுத்தத்தில் வேல செய்யறான்னு "
வன்முறையாளர்க கல்லெறிவார்களாம். போலீஸ் பொறுத்துக்கொள்ள வேண்டுமாம். அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசுவார்களாம். போலீஸ் பொறுத்துக்கொள்ள வேண்டுமாம். அந்த
பொறுக்கிகள் அரசு அலுவலகத்தில் நுழைத்து பெண்களை மானபங்கப்படுத்துவார்களாம். அதையம் பொறுத்துக்கொள்ள வேண்டுமாம் .ஆலை தொழிலாளர்கள் குடியிருப்புக்கு சென்று அங்கும் வன்முறை செய்வார்களாம் ஆனால் அதையும் பொறுத்துக்கொள்ள வேண்டுமாம். "அப்ப போலீசை என்னதான்டா செய்ய சொல்றீங்க .அரசு ஊழியர்களுக்கு மனித உரிமை எல்லாம் கிடையாதா .ஆலை தொழிலாளர் குடும்பங்களுக்கு மனித உரிமை கிடையாதா அவர்களை காப்பாற்றும் பொறுப்பு போலீசுக்கு கிடையாதா " என்று கேட்கத்தோன்றுகிறது.
இந்த மைய்யத்தலைவர் சொய்யதலைவர் எல்லாம் இந்தக் கேள்விக்கு ஏதாவது விடை சொல்லுங்களேண்டா . 'நாமளே ஒரு சட்டம் போடுவோமாம். பிறகு நாமளே அதை மீறுவோமாம். இது என்ன ஒழுங்குமுறை என்றே புரியவில்லை. .
இதில் கனகராஜ் என்று ஒருவர் பேசுகிறார்... "வாயில் குறி பார்த்து சுட்டார்கள்". இவர் போலீஸ் குறி வைத்ததை பார்த்தார் அல்லவா. அப்போது அந்த பெண்ணை காப்பாற்றாமல் இவர் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். விவாதத்தில் வன்முறையாளர்களை கண்டிக்காமல் அவர் ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார்..... அந்த போலீஸ் லஞ்சம் வாங்கினார் தெரியுமா. அவர் இப்படி பட்டவர் இவர் இப்படி பட்டவர் என்று விஷயத்துக்கு சம்பந்தமே இல்லாமல் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இதில் வீராவேசம் வேறு அவருக்கு. வீரம் என்றால் என்னவென்று போலீசை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். தியாகம் என்றால் என்னவென்று போலீசை பார்த்து தெரிந்த கொள்ளுங்கள். சமீபத்தில் சென்னை பறக்கும் ரயிலில் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி செய்த ஒரு நாயை , இளைஞரான ஒரு ரயில்வே போலீஸ்
காப்பாற்றியதை மறக்காதீர்கள்.
போலீஸ் கடும் நடவடிக்கை எடுத்தது அப்பாவி பொது மக்களுக்கு எதிராக அல்ல. அவர்கள் நடவடிக்கை எடுத்தது திட்டமிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்ட ஒரு கிரிமினல் கும்பல் மீது.
பொது மக்களுக்கு ஒரு தொழிற்சாலை தங்களை பாதிக்காமல் இயங்க வேண்டும் என்று சொல்ல எல்லா உரிமையும் உண்டு. ஆனால் ஒரு தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமைக்கு கிடையாது. இப்படி ஒரு கோரிக்கை தற்போது முன் வைக்கப்படும் போது அதன் பொருள் என்னவென்றால் அரசாங்கத்தை உசுப்பி விட்டு ஒரு பகுதியில் தொழிற்சாலைகள் வர விடாமல் தடுத்து அதனால் அந்தப் பகுதியில் வளர்ச்சியை அழித்து ஒரு அதிருப்தியை உண்டாக்கி பின் அதையே காரணம் காட்டி தங்களை வளர்த்துக்கொள்ள ஒரு கூட்டம் அலைகிறது என்பதுதான். இது தேச விரோத கும்பல். தேச ஒற்றுமைக்கு சவால் விடும் கும்பல். சாதாரண அப்பாவி மக்கள் இவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவர்களை விலக்கி வைக்க வேண்டும்.
ஊடகங்களே ! ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நீங்கள் வேண்டுமென்றே அரசுக்கு எதிராகவும் போலீசுக்கு எதிராகவும் சதி செய்தது உண்மை. நீங்கள் நடு நிலைமையானவர்கள் என்றால் ஏன் நீங்கள் மெரினா கடற்கரை நடை பாதையில் அழிக்க முடியாத பெயிண்டில் எழுதப்பட்டிருந்த தேச விரோத வாசகங்களை, அவை உங்கள் காலடியிலேயே இருந்தாலும் உங்கள் தொலைக்காட்சியில் காட்டவில்லை ? இப்போதும் அது போல வன்முறை யாளர்களை தியாகிகள் போல சித்தரிக்காதீர்கள். போலீசை அவர்கள் வேலையை ஒழுங்காக செய்ய விடுங்கள்
அரசின் சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள்; அரசு ஊழிமர்களைத் தாக்குபவர்கள் பொது மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் ஊறு விளைவிப்பவர்கள்....இவர்கள் போராளிகள் கிடையாது. இவர்கள் நச்சுச் செடிகள்.அந்த செடிகள் வேர் வரை அழிக்கப்பட வேண்டும்
அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இணைய தளத்தை முடக்கியது பாராட்டப் பட வேண்டிய நடவடிக்கை. இந்த நடவடிக்கையால் கோபப்படுபவர்கள் அனைவரும் வதந்நி ஆலையின் தொழிலாளிகள் என்று தெரிந்து கொள்ளலாம்.
""தொழிற்சாலைகள் தேசத்தின் கோவில்கள் "என்று பண்டித ஜவஹர்லால் நேரு சொன்னதை மறக்காதீர்கள்.
ராமகிருஷ்ணன்
தூத்துக்குடியில் ஓயாத போராட்டம், உயிர்ப்பலி என கடந்த மூன்று நாட்களில் நடந்த நிகழ்வுகள் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை அரசு மூடியுள்ளது.
இந்நிலையில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த ஸ்டெர்லைட் நிறுவன சிஇஓ பி.ராம்நாத்,வெளியில் இருந்து ஊடுருவிய சில கலவரக்காரர்களே இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் என்கிறார். அதேவேளையில், ஆலையை தொடர்ந்து நடத்த தங்கள் சட்டப்போராட்டம் ஓயாது தொடரும் எனவும் உறுதிபடக் கூறுகிறார்.
தொடர்புடையவை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ‘வேறிடத்தில்’ இருந்து உத்தரவு வந்ததா? - காங்கிரஸ் சந்தேகம்
முதல் 100 நாட்கள் போராட்டம் அமைதியாகவே நடந்தது. மே 22-ல் அப்படி என்னதான் நடந்தது?
மே 22-ம் தேதி போராட்டம் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக போராட்டக்காரர்கள் போதிய அளவிலான எச்சரிக்கையைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
வெறுப்பை உமிழும் வகையில் சமூகவலைதளங்களில் நிறைய பதிவுகள் உலாவந்தன. ஸ்டெர்லைட் ஆலை பற்றி எரிவதுபோல் ஆங்காங்கே போஸ்டர்கள் தொடர்ந்து ஒட்டப்பட்டு வந்தன. காவல்துறையினரும், துணை ஆட்சியரும் போராட்டக்காரர்களுடன் சமரசம் பேச அழைப்பு விடுத்திருந்தனர் என்பதை நாங்கள் ஊடக செய்தி வாயிலாகவே தெரிந்து கொண்டோம்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒரு தரப்பு ஒப்புக்கொண்டிருந்தாலும். மற்றொரு தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் எல்லாம் துரதிர்ஷ்டவசமானவை.
இருப்பினும், துப்பாக்கிச் சூடு நிச்சயமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டை தவிர்ப்பது குறித்து காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகமுமே திட்டமிட்டிருக்க வேண்டும்.
எங்கள் வளாகத்துக்குள் எங்கள் சொந்த மக்கள் மீது நடந்த வன்முறைக்கு நாங்கள் வருந்துகிறோம். எங்களுக்குச் சொந்தமான 15 முதல் 20 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
டீசல் ஜெனரேட்டர் முழுவதுமாக நாசமாக்கப்பட்டுள்ளது. நல்லவேளை போராட்டக்காரர்கள் குடியிருப்புகளுக்குள் நுழையவில்லை. அதற்காக நன்றி சொல்கிறேன்.
அதேபோல் இதுநாள் வரை ஆலை மீது எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்பதற்கும் நாங்கள் நன்றி சொல்லிக்கொள்கிறோம். இன்னும் சில நாட்களில் எல்லாம் சீரடையும் என நாங்கள் நம்புகிறோம். நல்லதையே எதிர்நோக்கிவுள்ளோம்.
ஆலை விரிவாக்கத்துக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து ஆலை விரிவாக்கம் குறித்து மக்கள் கருத்து கேட்கப்படவில்லை என்ற சர்ச்சை குறித்து?
நீதிமன்றத்தின் அந்த உத்தரவானது ஆர்.பாத்திமா என்பவரின் அவசர மனு மீது வழங்கப்பட்டதாகும். எங்களது கருத்துகளை முன்வைக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
அண்மைகாலமாக எதிர்ப்புக் குரல் ஓங்கியபோதுகூட நாங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆலையைச் சுற்றிப் பார்க்குமாறு அழைப்புவிடுத்தோம். ஆனால், அவர்கள் யாரும் வரவில்லை. மக்களின் அச்ச உணர்வைத் தணிக்கவே நாங்கள் விரும்புகிறோம். மக்களிடம் மனம்விட்டு பேசவும் தயாராக இருக்கிறோம்.
- தமிழில்: பாரதி ஆனந்த்
No comments:
Post a Comment