Saturday 7 October 2017

B.R.BANDULU , FREEDOM FIGHTER ,DIRECTOR OF 20 TH CENTURY



B.R.BANDULU , FREEDOM FIGHTER ,DIRECTOR OF 20 TH CENTURY




பி. ஆர். பந்துலு (Boodgur Ramakrishnaiah Panthulu, B. R. Panthulu, 26 சூலை 1911[1] – 8 அக்டோபர் 1974) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார்.பழம்பெரும் திரைப்பட இயக்குநரான பி.ஆர்.பந்துலுவின் நூற்றாண்டையொட்டி கர்நாடகத்தில் ஒரு வருட கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. . தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 57 படங்களை தயாரித்தும், இயக்கியுமுள்ளார். பத்மினி பிக்சர்ஸ் என்ற இவரது பிரபலமான பேனரின் கீழ் இந்தப் படங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியத் திரையுலகின் முன்னணி பிதாமகர்களில் பந்துலுவும் ஒருவர். அவரது பல படங்கள் தேசிய அளவிலும், மாநிலஅளவிலும் விருதுகளைக் குவித்துள்ளன. அவரது இயக்கத்தில் உருவான வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் , கர்ணன் ஆகியவை காலத்தால் மறக்க முடியாதவை. இதில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு ஆப்ரோ ஆசிய திரைப்பட விழாவில் விருது கிடைத்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் படம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் டெக்னி கலர் படமாகும். அதேபோல கன்னடத்தின் முதல் வண்ணப் படமான ஸ்ரீகிருஷ்ணதேவராயலு படத்தையும் பந்துலுவே தயாரித்து இயக்கினார். என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், எம்.ஜிஆர், சிவாஜி கணேன் ஆகிய தென்னகத்து சூப்பர் ஸ்டார்களுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர் பந்துலு. கன்னடத்தில் பந்துலு இயக்கிய ஸ்கூல் மாஸ்டர் படத்திலும் சிவாஜி கணேசன் கெளரவ வேடத்தில் நடித்திருப்பார். அதேபோல எம்.ஜி.ஆருடன் இணைந்து ஆயிரத்தில் ஒருவன்,ரகசிய போலீஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய படங்களைக் கொடுத்தவர் பந்துலு.
ஜெயலலிதாவை முதன் முதலில் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தியவர் பந்துலு. கன்னடத்தில் இயக்கிய சின்னாட கோம்பே என்ற படம் மூலம் நடிகையானவர் ஜெயலலிதா. பின்னர் ஆயிரத்தில் ஒருவன் மூலம் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்த்து அறிமுகப்படுத்தினார். தென்னகத்து சுதந்திரப் போராட்ட வரலாற்றை திரையில் அழகாகப் பதிவு செய்த ஒரே இயக்குநர் பந்துலு மட்டுமே. குறிப்பாக தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்ட மறவர்களை, பந்துலுவைப் போல சரியாக சித்தரித்தவர்கள் வேறு யாருமே கிடையாது. தமிழராக இல்லாத பந்துலு, தமிழ் சுதந்திரப் போராட்ட வரலாற்றை மிகச் சரியாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது வியப்புக்குரியது.

பிறப்பும் வளர்ப்பும்[மூலத்தைத் தொகு]


பூதகூர் ராமகிருஷ்ணய்யா பந்துலு என்ற பி.ஆர்.பந்துலு, ஜூலை 26, 1910 அன்று, கோலார் மாவட்டத்தின் புடகுரு கிராமத்தில், தற்போது கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் பிறந்தார். [2] அவர் ஒரு ஆசிரியராக தனது தொழிலை தொடங்கினார்.

நாடக வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

அவர் தொழில்முறை நாடகத்தினால் பாதிக்கப்பட்டு வேலையை விட்டு விலகி சந்திரகலா நாடக மண்டலி என்ற நாடக குழுவில் சேர்ந்து சம்சார நவ்கா, சதாரமே , மற்றும் குலேபகாவலி நாடகத்தில் நடித்தார் . பின்னர் குப்பி வீரண்ணா நாடக மன்றத்திலும் ,பணியாற்றினார் . பந்துலு தானே கலாசேவா நாடகா மண்டலி ஏற்படுத்தி நடித்து வந்தார்

சினிமா நடிகர் வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

முதன்முதலில் சம்சார நாவ்கே (1936) என்ற கன்னட படத்தில் நடித்தார். இந்த படத்தில் கதாநாயகிஎம் .வி .ராஜம்மா .பின்னாளில் இவருடைய மனைவிகளில் இவரும் ஒருவர் . அந்தப் படம் தயாரானது சென்னையில்தான். பந்தலுவுக்கு சென்னையும் தமிழும் வாழ்வாதாரமாயின. அப்புறம் ஏழாண்டுகள் சினிமாவில் நடிக்கவில்லை .நாடகத்தில் நடித்தார் . 1936 லிருந்து 1955 வரை 11 படங்களில் நடித்தார் .இதில் இவரது தயாரிப்பில் நான்கு படங்கள்

தமிழ் இயக்குனர் ஆன பந்துலு[மூலத்தைத் தொகு]

1950 களில்டி ஆர் மஹாலிங்கம் தயாரிப்பில் பி புல்லையாவும் சேர்ந்து மச்சரேகை என்ற படத்தை இயக்கினார் .அப்புறம் சொந்தமாய் பத்மினி பிக்சர்ஸ் தொடங்கப்பட்டது .அதன் மூலம் முதலில் வெளிவந்த படம் கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி . . 1957ல் வெளியான ‘தங்கமலை ரகசியம்’, பந்தலு தயாரித்து இயக்கிய முதல் படம். அதற்குக் கிடைத்த வரவேற்பு அவருக்கு உற்சாகம் தந்தது.




சிவாஜியும் சந்திரபாபுவும் நகைச்சுவையால் அதகளம் செய்த சபாஷ் மீனா படமும் இவரது இயக்கத்தில் வெளியானதுதான். எனினும், பி.ஆர்.பந்தலுவின் தனித்த அடையாளத்தை வெளிப்படுத்திய படம், 


1959ல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன். காட்சியமைப்புகளாலும் வசனங்களாலும் இன்றளவும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதுமே நம் கண்முன்னே நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான் தோன்றுவார். 


கட்டபொம்மன் வரலாறு குறித்த சர்ச்சைகள் இருந்தாலும், வெள்ளையனை எதிர்த்து நின்று தூக்குக் கயிற்றை முத்தமிட்ட அந்த மாவீரனின் தியாகத்தைத் தமிழகத்தில் உள்ள பாமர மக்களுக்கும் அறிமுகம் செய்தவர் பி.ஆர்.பந்தலுதான். அப்போது கேவா கலர் நெகட்டிவை டெக்னீக் கலரில் பிரிண்ட் போடுவது இங்கிலாந்தில் அறிமுகம் ஆனது .

டெக்னீக் கலரில் அவர் தயாரித்து-இயக்கிய அந்தப் படத்திற்குப் பெரும்பலமாக அமைந்தவர்கள் அதன் நாயகனான சிவாஜி, கட்டபொம்மன் வரலாற்றை எழுதிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி., படத்திற்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி ஆகியோர். படத்தின் இசையமைப்பாளரான ஜி.ராமனாதன் அருமையான பாடல்களைத் தந்தார். போர்க்களக் காட்சிகளை டபிள்யூ.ஆர்.சுப்பாராவும் கர்ணனும் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தனர். இப்படத்திற்காக ஆஃப்ரோ-ஆசிய திரைப்பட விழாவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு விருது கிடைத்தது. கெய்ரோ பட விழாவில் இசையமைப்பாளர் ஜி.ராமனாதனுக்கு விருது கிடைத்தது. அந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப்படமாக இதற்குத் தேசிய விருது கிடைத்தது. 




வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக வரலாற்று நாயகர்களையும் புராண கதாபாத்திரங்களையும் திரைப்படத்தின் வாயிலாக மக்களிடம் நிலைநிறுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார் பந்தலு. 1961ல் வெளியான கப்பலோட்டிய தமிழன் படமும் (வ.உ.சிதம்பரனார் வரலாறு) 1964ல் வெளியான கர்ணன்படமும் அவரது தணியாத தாகத்தின் வெளிப்பாடுகள். கட்டபொம்மனைவிடவும் கப்பலோட்டிய தமிழன் படத்தில் வரலாறும் அது சொல்லப்பட்ட விதமும் மேம்பட்டிருந்தது. 

வ.உ.சியாக வாழ்ந்து காட்டியிருந்தார் சிவாஜி. எனினும், கறுப்பு-வெள்ளையில் வெளியான அப்படம் வணிகரீதியில் பெரிய வெற்றியைத் தரவில்லை. மகாபாரதக் கதாபாத்திரமான கர்ணனை செல்லுலாய்டில் வண்ணமயமாகவும் அற்புதமாகவும் செதுக்கினார் பந்தலு. 


சிவாஜிதான் இந்தக் கதாபாத்திரத்திற்கும் உயிரூட்டினார். தலைமுறைகளைக் கடந்து 2012ல் நவீன தொழில்நுட்பத்தில் கர்ணன் மறுவெளியீடு செய்யப்பட்டு 100 நாட்களைக் கடந்து ஓடியது. பலேபாண்டியா, முரடன் முத்து ஆகிய படங்களும் சிவாஜியை கதாநாயகனாக்கி பந்தலு தயாரித்து இயக்கிய படங்களே. 1965ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்-செல்வி.ஜெயலலிதா நடித்த தமிழின் மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் ஒன்றான ஆயிரத்தில் ஒருவன் பந்தலுவின் வண்ணமிகு வெற்றிப்படங்களில் குறிப்பிடத்தக்கது. கடற்பயணம், கடற்கொள்ளையர்கள், அடிமைகள் வியாபாரம் போன்றவற்றை மையமாக வைத்து இனிமையான பாடல்கள்-விறுவிறுப்பான சண்டைக்காட்சிகள்- நறுக்கென்று அமைந்த வசனங்கள் இவற்றை சரிவிகிதத்தில் கலந்து மக்களைக் கவர்ந்தார் பந்தலு. நாடோடி(1966), ரகசிய போலீஸ்115 (1968), தேடி வந்த மாப்பிள்ளை (1970) ஆகியவையும் எம்.ஜி.ஆர்-பந்தலு கூட்டணியில் வெளியான வெற்றிப்படங்கள்.
குழந்தைகள் கண்ட குடியரசு, நம்ம வீட்டு மகாலட்சுமி, கங்கா கவுரி போன்ற பல படங்களை இயக்கிய பந்தலு. அவருக்குத் தாய்மொழி தமிழ் அல்ல. ஆனால், தமிழ்த் திரை வரலாற்றில் அவர் பதித்திருக்கும் முத்திரை அழுத்தமானது. வரலாற்று நாயகர்களை வெள்ளித்திரையில் கல்வெட்டாக்கி நிலைபெறச் செய்த பெருமை பந்தலுவுக்கு உண்டு.

கன்னட இயக்குனர் ஆன பந்துலு

ஸ்கூல் மாஸ்டர், கிருஷ்ணதேவராயா போன்ற படங்களைக் கன்னடத்தில் எடுத்தார். அங்கும் அவருக்குப் பெயர் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தெலுங்கு, தில் தேரா தீவானா (இந்தி) எனப் பல மொழிகளிலும் அவரது திறமைகள் வெளிப்பட்டன

ஆயிரத்தில் ஒருவன் உருவான கதை[மூலத்தைத் தொகு]



டைரக்டர் பி.ஆர்.பந்துலு தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில் சிலபடங்களை எடுத்து நஷ்டமடைந்திருந்த காலகட்டம் அது. அடுத்து சிறிய பட்ஜெட்டில் ( 5லட்சம்) ஒரு கருப்பு வெள்ளை படத்தை எடுத்து தனது அலுவலகத்தை நடத்தவும், சிறிய கடன்களை அடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார். தனது குழுவினரைஅழைத்து விருப்பத்தை தெரிவித்தார். அவர்களும் அதற்கேற்ற வகையில் ஆலோசனைகளை வழங்கினார்கள். அதற்காகறி (கடற்கொள்ளைக்காரர்கள்) என்ற ஆங்கில நாவலை தேர்வு செய்து வசனகர்த்தா ஆர்.கே.கண்முகம் மூலம் திரைக்கதையை உருவாக்கினார்கள். இந்தப் படத்தை தயாரிப்பதற்கு பைனான்ஸ் முதலில் ரெடி பண்ண வேண்டும் என்பதற்காக தனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த வீனஸ்பிக்சர்ஸ் (கிருஷ்ணமூர்த்தி கோவிந்தராஜ்) குழுவினரை போய்ச் சந்தித்தார் பி.ஆர். பந்துலு. அவர்களும் பைனான்ஸ் கொடுக்க முன்வந்தார்கள். தொடர்ந்து பலபடங்களை எடுத்து வந்த வீனஸ் பிக்சர்ஸ் தற்காலிகமாக படங்கள் எடுப்பதை நிறுத்தி வைத்திருந்தது 



பின்னாளில் எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா நடித்த ‘என் அண்ணன்' படத்தை தயாரித்தார்கள். இடைப்பட்ட காலங்களில் சிறிய படங்களுக்கு பைனான்ஸ் உதவி செய்து வந்தார்கள். அப்படித்தான் டைரக்டர் பி.ஆர்.பந்துலு எடுக்கவிருந்த படத்திற்கும் பைனான்ஸ் கொடுகக ஒப்புக் கொண்டார்கள். டைரக்டர்.பி.ஆர்.பந்துலு எடுக்கப் போகும் படத்திற்கான Pirates கதையை அவர்களிடம் சொன்னார். கதையைக் கேட்ட வீனஸ் பிக்சர்ஸ் குழுவினர் இந்தப் படத்தை யாரை கதாநாயகனாகப் போட்டு எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு பி.ஆர்.பந்துலு, "பாதை தொயுது பார்' விஜயன், அல்லது ‘இரவும் பகலும்' ஜெய்சங்கர் இவர்கள் இருவரில் யாரயாவது ஒருவரை ஹீரோவாக போடலாம்னு இருக்கோம்," . என்றார் .
இதில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர் அவர்கள்தான் நடிக்க வேண்டும். அவர் நடித்தால்தான் நீங்கள் போடுகின்ற முதல், நாங்கள் தருகின்ற பைனான்ஸ் எல்லாம் திரும்பி வரும். படத்தையும் நல்லபடியாக வியாபாரம் பண்ணி விடலாம்.யோசித்துச் சொல்லுங்க", என்று வீனஸ் பிக்சர்ஸ் குழுவினர் சொன்னதும் பி.ஆர்.பந்துலு கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென்று சரி என்று சொல்லிவிட்டார். 



"இந்த படத்திற்கு பட்ஜெட் பெரிதாக வரும்.. பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் வியாபாரத்திற்கு கியாரண்டி இருக்கும் போது ஏன் பயப்பட வேண்டும். நீங்களே எம்.ஜி.ஆர். அவர்களிடம் பேசி முடிவு பண்ணுங்களேன். எம்.ஜி.ஆர் கதாநயாகனாக நடிக்கட்டும்," என்று கால்ஷீட் கேட்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்தார் . எம்.ஜி.ஆர்.எந்த மறுப்பும் சொல்லாமல் படம் நடிக்க ஒப்புக் கொண்டார். பி.ஆர்.பந்துலுவையும் அவரது குழுவினரையும் நேரில் வரவழைத்துப் பேசினார்.



அவர்களும் ரெடிப்பண்ணி வைத்திருந்த Pirates கதையைச் சொன்னார்கள். அதில் முக்கியமான சில மாற்றங்களைச் சொன்னார் எம்.ஜி.ஆர். அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். பி.ஆர்.பந்துலு குழுவினரில் சிலர் மாற்றப்பட்டார்கள். வசனத்தை ஆர்.கே.கண்முகத்தையே எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் & ராமமூர்த்தி படத்திற்கு இசைமைப்பாளரானார்கள். ஒளிப்பதிவாளரும் மாற்றப்பட்டார். பாடல்களை கவியரசர் கண்ணதாசன், கவிஞர் வாலி எழுதினார்கள். இந்தப்படத்திற்கு 'ஆயிரத்தில் ஒருவன்' என்று பெயர் சூட்டினார்கள். படப்பிடிப்பு முழுவதும் கோவாவில் நடந்தது.
பாடல் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு எம்.ஜி.ஆர். ஐடியாபடி ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை' என்ற பாடலை கவிஞர் வாலியை வைத்து எழுதி கடைசியாகப் படமாக்கி படத்தில் சேர்த்தார்கள். 



எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படம் [[ஆயிரத்தில் ஒருவன்தான். இரட்டையர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த கடைசிப் படமும் இதுதான். ஆயிரத்தில் ஒருவன் (1965) படம் அழகாக எடுக்கப்பட்டு வெளிவந்து பி.ஆர்.பந்துலு போட்ட முதலை விட இரண்டு மடங்கு லாபத்தைத் கொடுத்தது. அவரது அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தது இந்தப் படம்! 2014-மறு வெளியீடாக வந்த ஆயிரத்தில் ஒருவன் 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழாக் கொண்டாடியது இன்னுமொரு சாதனை!

சொந்த வாழ்க்கையும் ,மரணமும்[மூலத்தைத் தொகு]


1974ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி பந்துலு மரணமடைந்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய கப்பலோட்டிய தமிழன் படத்தைப் பார்த்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நெகிழ்ந்து போய் இந்தப் படத்துக்கு நிரந்தர வரி விலக்க அளிக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பந்துலுவின் நூற்றாண்டையொட்டி அதை கர்நாடகத்தில் ஒரு வருட காலம் கொணடாடுகின்றனர். நேற்று தொடங்கியது இந்த கொண்டாட்டம். இதையொட்டி ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டத்தில் அவரது இரு படங்கள் திரையிடப்படுகிறது.

No comments:

Post a Comment