Thursday 1 October 2020

SIVAJI GANESAN SILENTLY LIVED AS KARNAN BORN 1928 OCTOBER 1 -JULY 21,2001

 

SIVAJI GANESAN SILENTLY LIVED AS KARNAN 

BORN 1928 OCTOBER 1 -JULY 21,2001




சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1928 - சூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும்.[2] இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்


வாழ்க்கைக் குறிப்பு

'சிவாஜி' கணேசன், சின்னையா மன்ராயா் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4வது மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார்.


திரைப்பட வாழ்க்கை

முதன்மைக் கட்டுரை: சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்

சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.


இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.


பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள்

கூண்டுக்கிளி திரைப்படத்தில் சிவாஜி மற்றும் எம் ஜி ஆர்

தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் "பாசமலர்", "பாவ மன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன் மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை


1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

புகழ்

எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.[3]




பிரபல நடிகர் சிவாஜி கணேசன் 1927 அக்டோபர் 1 இல் பிறந்தார் - சென்னைக்கு நடிப்பதற்கு அழைத்து வந்து நாடக கம்பனியில் சேர்த்து விட்டவர் எம் .ஆர் .ராதா -

காலப்போக்கில் இதெல்லாம் எவரும் நினைவு கூறுவதில்லை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சிவாஜி கணேசன் அவர்கள், தென்னிந்தியாவின் ஒரு பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர், அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், அவர் தெலுங்கில் ஒன்பது திரைப்படங்கள், கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு, ஹிந்தியில் இரண்டு திரைப்படங்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி மேலும் தகவல் பெற, அவரது இந்த வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: 1 அக்டோபர் 1927

பிறந்த இடம்: விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா

இறப்பு: 21 ஜூலை 2001

தொழில்: நடிகர், அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:
சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.

ஆரம்பகால வாழ்க்கை

சிவாஜி கணேசன் அவர்கள், தனது இளம்வயதிலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாலும், அதில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்ததாலும், தனது கனவினை நிறைவேற்ற ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தார். பின்னர், அவரது சொந்த அம்மாவே நாடகக் குழுவில் இடம் பெற உதவி செய்தார். சிவாஜி கணேசன் அவர்கள், கமலா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர்.

திரையுலக வாழ்க்கை:

திரையுலகுக்கு வரும் முன், நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மூலமாக மிகவும் பிரபலமானார். இதில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இந்நிகழ்ச்சியே, அவருக்கு ‘சிவாஜி கணேசன்’ என்ற பெயரை நிலைக்கச் செய்தது.

தமிழ்த் திரையுலகில், ‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அவருக்குத் தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.

அக்காலத்தில், தேசத் தலைவர்களின் பத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த முக்கிய நடிகர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன் அவர்கள். ‘இராஜராஜ சோழன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்றாகும். ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள், இவரின் வீர வசனத்திற்காகப் பெயர்ப் பெற்றவை. ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் காணலாம். ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்தித் திரைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டவை.

அரசியல் வாழ்க்கை

அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1961ல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார். பின்னர், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1987ல் கட்சியை விட்டு விலகி, ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பெரும்நடிகராக இருந்தாலும், அவருக்கு அரசியலில் எம்.ஜி.ராமச்சந்திரன் போல செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, தனது இறுதிக்காலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

விருதுகள்:

1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

1966 – பத்ம ஸ்ரீ விருது

1984 – பத்ம பூஷன் விருது

1995 – செவாலியே விருது (Chevalier)

1997 – தாதா சாகேப் பால்கே விருது

1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.

இறப்பு

தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.

Image may contain: 1 person





சிவாஜி கணேசன் (அக்டோபர் 11928 - சூலை 212001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும்.[2] இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்

அன்றைய காலத்தில் சிவாஜி கணேசனை கஞ்சன் என்று அவரது ரசிகர்களே எண்ணும் அளவுக்கு மறைமுக பிரசாரத்தில் யாரோ ஒருவர்(?) ஈடுபட்டு இருந்தார். எட்டாத கிராமத்தில் இருக்கும் ஒரு சாதராண ரசிகன் கூட “சிவாஜி சிக்கனமாக இருக்கலாம்… அவரது நடிப்பும் படமும் என்னை நல்லவனாக, நாட்டுப்பற்று உள்ளவனாக மாற்றியது” என்றுதான் பெருமைப்பட்டு கொண்டிருந்தான். அன்று சிவாஜி சிக்கனவாதி என்றே நினைக்கும் அளவுக்கு பொய் பரப்பியவர் யாராக இருந்தாலும், சிவாஜி கணேசன் கொடுத்த உதவிகளை இப்போது அறியும் பலரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரது கொடைகளை ஒப்பிடும்போது அன்று பொய்யுரை பரப்பியவரின் தானம் ஒரு தூசிக்கு சமம். ஒரு நேரத்தில் அவரது வீட்டையே விற்கும் நிலைக்கு வந்ததென்றால் அதற்கு அவர் யாருக்கும் தெரியாமல் செய்த உதவிதான் காரணம்.

அவர் நாட்டுக்காக செய்த சேவைகள் சில…


கொடைக்கு சிறந்தவன் கர்ணன்.அந்த கர்ணனான சினிமாவில் நடித்தவர் சிவாஜி கணேசன். அவர் கர்ணனாக நடித்து கண்கண்ட கர்ணனாக வாழ்ந்தவர் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். கர்ணனின் கொடைத் தன்மையையும் வீரத்தையும் மறைக்க எத்தனையோ சதிகள் நடந்தன.அதேபோல் சிவாஜி கணேசன் செய்த சேவைகள் எல்லாம் மறைக்கப்பட்டன. சிவாஜி தான் செய்ததை பறைசாற்ற விரும்பவில்லை. தேவைக்கு கொடுப்பதை விளம்பர படுத்துபவன் கொடையாளி அல்ல. தற் புகழலாளி . ஆனால் சிவாஜி கணசேன் தான் கொடுத்ததை அடுத்த நொடியே மறந்துவிடுவார்.



கர்ணன் மீது அர்ஜுனன் எப்போதும் பகை பாராட்டுவான். கர்ணன் கொடை வள்ளல் என்பதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியிவில்லை. அவனது பொறாமை குணத்தை அறிந்த கண்ணபிரான் அர்ஜுனனுக்கு பாடம் புகட்ட நினைத்தான்.மலைபோல் இரண்டு தங்க குவியலகளை கண்டன் உருவாக்கினார். பின்னர் அர்ஜுனனையும், கர்ணனையும் அழைத்து இவற்றை யார் முதலில் தானம் செய்கிறீர்கள் என்பதுதான் போட்டி என்றார். அர்ஜுன் இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக வருவோர் போவோருக்கெல்லாம் தாராளமாக அள்ளி அள்ளி கொத்தான். தங்க குவியல் குறையவில்லை. கர்ணன் தன்தங்க குவியல் அருகே நின்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வறியவன் ஒருவன் வந்தான். அவனிடம் கர்ணன், இந்த தங்க குவியலை நீயே எடுத்துக் கொள் என்று சொல்லி விட்டு சென்றுவிட்டான்.ஒரு நொடியில் மலைபோல் குவிந்திருந்த தங்கத்தை தானமாக வழங்கிவிட்டான். கர்ணன் . அர்ஜுனன் உண்மையை உணர்ந்து தலைகுனிந்தான்.இந்த புராண கதை என்ன உணர்த்துகிறது என்றால் தான எண்ணம் என்பது தன்னுள்ளே இருக்க வேண்டும் என்பதைத்தான்.அதேபோல்தான் சிவாஜி கணேசனும். பொதுவாக ஒருவருக்கு அளவுக்கு மீறி பணம் வந்துவிட்டால் அதை பிறருக்கு கொடுத்து புகழ் சேர்க்கலாம் என்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் தானே ஒரு வறியவனாக இருக்கும்போது தானம் செய்யும் மனம் யாரிடம் இருக்கிறதோ அவனே உண்மையான தர்மவான். அப்படிப்பட்டவர்தான் சிவாஜி.



சினிமாவில் அவர் அடியெடுத்து வைக்கும்போது அவர் பணக்காரர் அல்ல. உணவு உணவுக்குகூட அரும்பாடுபட்ட காலம் அது. அந்த நேரத்தில் அவர் செய்த சேவையைஇங்கே குறிப்பிட விரும்புகிறேன். சுந்தரராஜன் என்பவர் இணைய தளத்தில் வெளியிட்ட தகவல் இது…அது 1953-ம் ஆண்டு.அப்போது சிவாஜிக்கு பராசக்தி படம் மட்டுமே வெளிவந்த நேரம்.இலங்கை யாழ்பாணத்தில் முனாய் ஆஸ்பத்திரியின் நிர்வாகத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரபிள்ளை . இவர்

சிவாஜியை அணுகி இலங்கைக்கு .வரவழைத்து பெரிய அளவில் கவுரவித்திருக்கிறார்.தன்னுடைய மருத்துவமனை கட்டிடங்களுக்கான நிதி திரட்டி தரும்படி சிவாஜியிடம் கோரிக்கை வைத்தார்.சிவாஜியும் பெருமகிழ்ச்சியோடு ஒப்புகொண்டு, 30.11.53 அன்று கொழும்பு, ஜிந்தப்பிட்டியில்,முருகன் டாக்கீஸில் “என் தங்கை” என்ற நாடகத்தை நடத்தி, நாடகத்தின் இறுதியில் பராசக்தி வசனங்களை பேசினார். இதில் வசூலான .பணம் ரூ.25 ஆயிரத்தை முனாய் மருத்துவமனைக்கு நிதியாக வழங்கினார்.அப்போது சிவாஜி கணேசன் பராசக்தி படத்துக்காக வாங்கிய சம்பளம் வெறும் ரூ.2,500 தான். தன் சம்பளத்தை போல் பத்து மடங்கு தொகையை நிதியாக அளித்த வள்ளல் தன்மையை எப்படி சொல்வது. பராசக்தி படம் வெற்றி பெற்றாலும் இனி படம் வருமோ…பணம் கிடைக்குமோ என்ற எண்ணத்தில் மேலும் பணம் சேர்க்கத்தான் ஒருவன் ஆசைப்படுவான். ஆனால் சிவாஜி அதற்கெல்லாம் ஆசைப்படாது, ரூ. 25 ஆயிரத்தை கொடுத்ததை இப்போது ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும் அவரது கர்ணனத் தன்மை.



1962-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-சீனா போரின் போது அப்போதைய பிரதமர் நேருவை சந்தித்து ரூ.40 ஆயிரம் கொடுத்த முதல்நபர்.

சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி( பாசமலரின் இந்தி ஆக்கம்) திரைப்படத்தின் அகில இந்தியாவின் ஒருநாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக கொடுத்தார்.

1965-ம் ஆண்டு பாகிஸ்தான் போரிட்டபோது அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் தன்னுடைய நகைகள் அனைத்தையும் (தாலியைத் தவிர) கமலா அம்மையார் கழற்றி கொடுத்தார். அவற்றின் மொத்த எடை 400 பவுன். அதே நாளில் சிவாஜிகணேசன் தனக்கு பரிசாக கிடைத்த 200 பவுன் தங்க பேனாவை கொடுத்தார்.

1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17, 18 -ந் தேதிகளில் நீதியின் நிழல், களம்கண்ட கவிஞன் நாடகங்கள் நடத்தி வசூலான தொனை ரூ.1 லட்சத்தை யுத்த நிதியாக தமிழக முதல் அமைச்சர் பக்தவச்சலத்திடம் கொடுத்தார்.

துணை ஜனாதிபதி ஜாகீர்உசேனிடம் இந்தியா-பாகிஸ்தான் போர் நிதியாக ரூ.15 ஆயிரம் கொடுத்தார்.

1999-ம் ஆண்டு கார்க்கில் போர் நிதியாக தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் ரூ-.1 லட்சம் கொடுத்தார்.


விடுதலை வீரர்கள்


1965-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது போரில் ஈடுபட்டு காயம்பட்ட வீரர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த சிவாஜி கணேசன் தமிழகத்தின் முன்னணி கலைஞர்களை போர் முனைக்கே அழைத்துச் சென்று கலைநிகழ்ச்சி நடத்தி மகிழ்வித்தார்.

நேதாஜி சுபாஷ்சந்திரபோசின் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய பி.என்.பிள்ளை அவர்களை சாந்தி தியேட்டரின் நிர்வாகியாக நியமித்தார்.

சாந்தி தியேட்டரின் நிர்வாகியாக இருக்கும் வேணுகோபாலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார்.

கார்கில் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி கார்க்கில் தீபம் ஏற்றி தியாகிகளை போற்றினார்.

1972-ம் ஆண்டு ராஜா சினிமா மூலம் சென்னை நகரில் வசூலான ஒரு நாள் தொகையை விமானப்படையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு அர்ப்பணித்தார்.


கல்விப் பணி


1958-ம் ஆண்டு முதல் 1961 வரை வீரபாண்டிய கட்டப்பொம்மன் நாடகம் நடித்து (112 முறை) அதன் மூலம் வசூலான தொகையில் நாடக செலவு, உறுப்பினர்கள் சம்பளம் போக ரூ-.32 லட்சத்தை பல கல்லூரிகளுக்கும் நூலகங்களுக்கும் கொடுத்தார்.

1968-ம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியின் கட்டிட நிதிக்காக ரூ.40 ஆயிரம் கொடுத்தார்.

திருச்சியில் உள்ள ஜமால்முகமது கல்லூரி கட்டிட நிதிக்காக 1968-ம் ஆண்டு வியட்நாம் வீடு நாடகம் நடத்தி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்தார்.

சிவாஜி-பிரபு அறக்கட்டளை அமைத்து திரையுலகில் நலிந்த பிரிவில் உள்ள கலைஞர்களின் பிள்ளைகள் பள்ளிப்படிப்பைத் தொடர வழிவகுத்தார். மாநகராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்தினர் நடத்தும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. இதுவரை பல லட்சக்கணக்கான பணம் செலவிடப்பட்டு ஏராளமான ஏழை எளியவர்கள் பயன்பெற்று உள்ளனர்.

மதிய உணவு திட்டம்

1959-ம் ஆண்டு பிரதமர் நேருவிடம் மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ-.1 லட்சம் கொடுத்தார்.

1982-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை பிரபு நேரில் சந்தித்து சத்துணவு திட்டத்திற்காக தன் சார்பில் ரூ-.25 ஆயிரமும், சிவாஜி கணேசன் சார்பில் ரூ-1 லட்சம் கொடுத்தார்.


புயல் வெள்ளம்

1960-ம் ஆண்டு தமிழகம் பெரும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது அப்போதைய முதல் அமைச்சர் காமராஜர் மேற்பார்வையில் சிவாஜி தனி மனிதனாக 1 லட்சம் உணவு பொட்டலங்களையும் 800 மூட்டை அரிசியையும் தானமாக கொடுத்தார்.

1957 முதல் 1961-ம் ஆண்டு வரை மும்பையில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்வி செலவிற்கு ரூ.5 லட்சம் நிதி கொடுத்தார்.

1964-ம் ஆண்டில் மராட்டியத்தில் கொய்னா பூகம்பம் நிதியாக அந்த மாநில முதல்-அமைச்சர் ஒய்.பி.சவானிடம் ரூ-.1 லட்சம் கொடுத்த முதல் நடிகர் சிவாஜி.


1966-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட போது நிதிஉதவியாக ரூ-.10 ஆயிரம் அளித்தார்.

1975-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டபோது ரூ-.1 லட்சம் நிதி வழங்கினார்.

1953-ம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதிக்காக விருதுநகரில தெருதெருவாக சென்று பராசக்தி வசனம் பேசி ரூ-.12 ஆயிரம் வசூலித்து கொடுத்தார்.

1961-ம் ஆண்டு தாம்பரத்தில் காசநோய் ஆஸ்பத்திரி கட்டுவதற்கு பிரதமர் நேருவிடம் ரூ-.1 லட்சம் கொடுத்தார்.


சிலை அமைக்க உதவி

சிவாஜி கணேசன் தன் தலைவரான காமராஜருக்கு பல இடங்களில் சிலை அமைக்க நிதி உதவி செய்தார். ஆனால் அத்தோடு அவரது சேவை நின்றுவிட வில்லை.

1964-ம் ஆண்டு மும்பையில் வீரசிவாஜி சிலை அமைத்துக் கொடுத்தவர் இந்த சிவாஜி கணேசன்.

1968-ம் ஆண்டு சென்னை கடற்கரையில் திருவள்ளுவர் சிலை அமைக்க நிதி கொடுத்ததோடு அதற்கு மாடலிங்காக இருந்து போஸ் கொடுத்தவர் சிவாஜி கணேசன்.

1971-ம் ஆண்டு வீரபாண்டிய கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் 47 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி அதில் கட்டப்பொம்மன் சிலை யை நிறுவினார்.

1972-ம் ஆண்டு ஆப்பனூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிலையை அமைத்துக் கொடுத்தார்.

1975-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி தனது பிறந்த நாள் அன்று அவரது வீட்டிற்கு வந்த பெருந்தலைவர் காமராஜரிடம் பீகார் வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.1 லட்சம் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் அவரது பிறந்தநாளையட்டி ரசிகர்கள், மாலை, சால்வைக்குப்பதிலாக பணத்தை கொடுத்தனர். அந்தப் பணத்தையும் பீகார் வெள்ளி நிவாரணத்துக்கு சிவாஜி கணேசன் கொடுத்தார்.

1993-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் லாட்டூரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு நிவாரணமாக ரூ.1 லட்சம் கொடுத்தார்.


கக்கன்


காமராஜரின் தொண்டரான கக்கன் அப்பழுக்கற்றவர். மந்திரி பதவி வகித்தபோதும் ஏழைமையைத் தேடிச் சென்று ஏழ்மையாய் மறைந்தவர். இவரது குடும்பத்திற்கு 1973-ம் ஆண்டு சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி, அப்போது கிடைத்த தங்கப்பதக்கத்தையும் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைத்த ரூ-.15 ஆயிரத்தை கொடுத்தார்.

1972-ம் ஆண்டு காஷ்மீர் மாநில முதல்-மந்திரி மீர் கசிமிடம் அந்த மாநில தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி நிதிக்காக ரூ-.25 ஆயிரம் கொடுத்தார்.

சென்னை பெசன்ட் நகரில் மங்கையர்க்கரசி மகளிர் மன்ற கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தை நடத்தி ஒரு நாள் வசூலை கொடுத்தார்.

அதேபோல் சென்னையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமண மண்டபம் கட்ட தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி ஒரு நாள் வசூலைக் கொடுத்தார்.

சென்னை கோடம்பாக்கத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை நலிந்த நடிகர்-நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக கொடுத்தார்.


கோவில் பணி


வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவிலில் மணி அமைக்கும் முழுச் செலவையும் ஏற்றார்.

வல்லக்கோட்டை முருகன் கோவில் திருப்பணிக்காக கிருபானந்தவாரியாரிடம் ரூ.-10,001 நன்கொடையாக கொடுத்தார்.

சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோபில் தெப்பக்குளத்தின் திருப்பணிக்கான முழு செலவையும் இவரே ஏற்றார்.


திருச்சி திருவானைக்கா கோவில், தஞ்சை முத்துமாரியம்மன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களுக்கு யானை வாங்கிக் கொடுத்தார்.

இவை தவிர எத்தனையோ ரசிகர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று உதவி இருக்கிறார். எத்தனையோபேருக்கு படவாய்ப்பை கொடுத்து இருக்கிறார். பலரை பட அதிபராக்கி இருக்கிறார்.



கணேசன், என்றறியப்படும் இவர் சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 01.10.1928 ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் பிறந்த நாளன்று காலையில் தந்தை சின்னையா மன்றாயர் பிரிட்டிஷாரை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கைதாகி சிறை சென்றிருந்தார். சாயங்காலம் கணேசன் பிறந்தார் . அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வரும்பொழுது கணேசன், நாலரை வயது சிறுவனாய் வளர்ந்திருந்தார்.

இவருக்கு ஏழு வயது நடக்கும்பொழுது தன் தந்தையுடன் கட்டபொம்மன் நாடகம் பார்க்க சென்றார். நாடகம் நடத்துபவர்கள் வெள்ளைக்கார பட்டாளத்திற்கு ஆள் போதவில்லையென்று கணேசனை மேடையேற்றினர். அதுவே இவரின் முதல் நாடகம். ஆர்வமாய் நடித்தார் .ஆனால் கல்வி அறிவற்ற தந்தையாருக்கோ தான் எதிரியாக நினைக்கும் வெள்ளைக்காரர் படையில் மகன் நடித்து விட்டானே என்று கோபம். வீட்டிற்கு வந்ததும் என் எதிரியின் படையில் சேர்ந்து எப்படி கூத்தாடலாம் என்று அடித்தார். அந்த நேரத்தில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் கம்பெனியான மதுரை ஸ்ரீபாலகான சபாவினர் திருச்சியில் முகாமிட்டிருக்க - தனது நடன, பாட்டு ஆர்வத்தை அவர்களிடம் வெளிப்படுத்தி தான் அனாதை என்று கூறி, அவர்களிடம் இரக்கத்தை ஏற்படுத்தி, நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். சேர்ந்தார்இவர் [[மனைவி]] பெயர் கமலா; மகன்கள், இராம்குமார் [[பிரபு (நடிகர்)|பிரபு]] மற்றும்; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.

==நாடக,நாடோடி வாழ்க்கை ==−

மதுரை ஸ்ரீபாலகான சபாவில் காலை ஏழு மணிக்கு எழுப்பி விடுவார்கள். எழுந்தவுடன் குளித்து விட்டு சாமி கும்பிட வேண்டும். அதன்பிறகு முதலில் பாட்டு இரண்டாவது டான்ஸ். அடுத்தது அன்று நடக்க வேண்டிய நாடகத்திற்கு வேண்டிய உரையாடல்களுக்கு ஒத்திகை நடத்த வேண்டும். இந்த முறைப்படியான பயிற்சி இவரை பெண் வேஷம் போடுவதிலிருந்து ஆண் வேஷம் அணிந்து நடிக்கும் 'ராஜபார்ட் நடிகர்' என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது. இந்த நாடக கம்பனியில் இருந்த காக்கா ராதாகிருஷ்ணன் சிவாஜியின் ஊருக்கு சென்று வந்தார் ,அப்போதுதான் கணேசன்


உயிரோடு இருப்பதே ராஜாமணி அம்மையாருக்கு தெரியும் . பின்னர் நாடக கம்பனிக்கு திரும்பி வரும் போது அண்ணன் திருஞான சம்பந்த மூர்த்தி இறந்து போனதை சொன்னார் .என்றாலும் கணேசன் முக்கிய வேடத்தில் நடித்ததால் ஊருக்கு போக முடியவில்லை .


ஏனென்றால் நாடக கம்பனியில் 250 பேர் வரை இருந்தார்கள் .அவர்கள் கதி? கம்பனி முகாம் [[திருச்சி]] , [[திண்டுக்கல்]],[[ பழனி]] ,[[மதுரை]] ,[[மேலூர்]] ,[[பரமக்குடி]] .[[சேலம்]] ,[[நாமக்கல்]] ,[[குமாரபாளையம்]] ,கோவையில் உள்ள [[சிங்காநல்லூர்]] ,[[பொள்ளாச்சி]] என்று மாறிக்கொண்டே இருந்தது . இந்த காலகட்டத்தில் இவரின் மூத்த இரு அண்ணன்கள் அடுத்தடுத்து இறந்தனர்.இசசெய்தி தெரிந்தும் வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் கணேசன் இருந்தார்.

==நாடக சபாவின் வேதனைகளும் ,நடிப்பாற்றலும் ==

முதலில் கணேசன் கட்டியது ராமாயணத்து சீதை வேடம் .பின்னர் பரதன் ,அழகிய சூர்ப்பனகை ,இந்திரஜித் என்று .அப்போது கணேசனின் தலைமுடி முழங்கால் வரை நீண்டிருக்கும் . சாப்பாடோ ரசம் அல்லது மோர் சாதம் .அதுவும் அளவு சாப்பாடு .தொட்டுக்க ஊறுகாயும் ,சில நேரங்களில் அப்பளம் கிடைக்கும் .இந்த கால கட்டத்தில் கணேசனின் சகோதரர்கள் திரு ஞான சம்பந்த மூர்த்தி ,இன்னொரு அண்ணன் கனக சபா நாதர் இவரும் இறந்து விட்டார் .என்றாலும் துக்கத்தை அடக்கிக்கொண்டு நடித்து வந்தார் .அந்த காலத்தில் ஏழு வயது முதல் நாற்பது வயது வரை நாடக சபாவில் 250 பேர் இருந்தனர் . நாடகம் மழையில் தடைபட்டால் சாப்பாட்டுக்கு கஷ்டம் . எனவே கணேசன் வீட்டுக்கு செல்ல முடியவில்லை.


பழனியில் கிருஷ்ணா லீலா வில் அழகிய பூதகி வேடம் , பதிபக்தி ,கதரின் வெற்றி ,பம்பாய் மெயில் போன்ற சமூக நாடகங்களில் பெண் வேடம் . [[மதுரை]] முகாமில் கிருஷ்ண லீலா நாடகம் நடந்து கொண்டிருந்தது .தேவகி வேடத்தில் கணேசன் . அப்போது ஒரு அசரீரி .'''உனக்கு எட்டாவது மகனால் மரணம் ''' என்று சொல்லும் போது எலக்ட்ரிக் லைட் ட்ரிக்க்கில் ஸ்டார் கீழிறங்கி வரும் . ஒரு முறை அந்த ஸ்டார் வரவில்லை .அதை சரி செய்யப்போன '''சுப்பையா''' என்ற எலெக்ட்ரிஷியன் ,எலக்ட்ரிக் ஷாக் ஏற்பட்டு அப்படியே உயரே தொங்கினார் .மறுநாள் '''கிருஷ்ணன்''' என்ற பையன் இதே ஞாபகமாய் இருந்து " சுப்பையா என்னை கூப்பிடுகிறார் " என்றே அரற்றி மறுநாள் இறந்தான் .

மேலூரில் தேள் ,பூரான் ,பாம்பு தொல்லை களை அனுபவிக்க வேண்டி இருந்தது .விக் எடுத்தால் தேள்களும் ,சட்டை எடுத்தால் பூரான்களும்
வந்தன .[[பரமக்குடி]]யில் [[எம் .ஆர் .ராதா]] ,கணேசனுடன் இணைந்தார் . கதரின் வெற்றி நாடகத்தில் இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த
ஒருவர் சதா கைதட்டி கொண்டே இருந்தார் .அவர் தான் பின்னாளில் [[தமிழ்நாடு]] [[ முதலமைச்சர்]] [[காமராஜ்]] அவர்கள் .

சேலத்தில் இழந்த காதல் நாடகம் . நாமக்கல்லில் [[ராமாயணம்]] ,[[மஹாபாரதம்]] ,[[கிருஷ்ண லீலா]] நாடகம் .ஒரு முறை''' டம்பாச்சாரி''' என்ற நாடகம் பார்த்தார் கணேசன் .அதில் '''சாமி அய்யர்''' என்பார் ஒன்பது வேடங்களில் நடித்ததை கண்டு ஆச்சரியப்பட்டார் .இந்த ஆசை [[நவராத்திரி]] திரைப்படத்தில் நிறை வேறியது.அங்கு சினிமாவும் பார்த்தார் . வரிசையாக நிற்க வைத்து ஆட்டை பத்தி கொண்டு போவது போல் நடிகர்களை அழைத்து செல்வார்கள் .[[ ரதனாபாய்]] , [[சரஸ்வதி பாய்]] இருவர் படங்களை பார்த்திருக்கிறார் கணேசன் .அவ்வளவே . −

குமாரபாளையத்தில் ,பவானி ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட அங்குள்ள இளைஞர்கள் நாடக சிறுவர்களை காப்பாற்றினார் .அதில் கணேசனும் அடக்கம் .பொள்ளாச்சியில் முகாமிட்டு இருந்த போது இரக்கப்பட்டு திருச்சிக்கு தங்கவேலு என்ற நண்பருடன் அனுப்பி வைக்கப்பட்டார் .அப்போது கணேசனுக்கு வயது 13 .

தொடரும்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இந்த கட்டுரை விக்கிப்பீடியாவில் நிராகரிக்கப்பட்டது

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இப்போதைய்ய கட்டுரை நிலைமை இதான்

சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1927 - சூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]
'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், இராம்குமார் பிரபு மற்றும்; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.

திரைப்பட வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
முதன்மை கட்டுரை: சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள்[மூலத்தைத் தொகு]

கூண்டுக்கிளி திரைப்படத்தில் சிவாஜி மற்றும் எம் ஜி ஆர்
தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் "பாசமலர்", " பாவ மன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", " வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன் மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

புகழ்[மூலத்தைத் தொகு]
எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.[2]

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@இது பற்றி தங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சத்தியராஜ் மற்றும் சிவாஜிகணேசன் என்ற நடிகர் பற்றி நான் எழுதிய கட்டுரை நீக்கப்பட்டுள்ளது . இதை கனகு என்பவர் நீக்கி யுள்ளார் . அவர் 3000 கட்டுரைகள் எழுதி இருக்கலாம் ஆனாலும் அவைகள் உருப்படியில்லாமல் ,ஒழுங்கில்லாமல் இருப்பவை தமிழ் புலமை பெற்ற ஒருவர் ஒருவர் கூடவா விக்கி பீடியாவில் இல்லை கட்டுரையை படித்து ஆய்வு செய்யும் தகுதியே இல்லாத கனகு திருத்தியிருக்கிறார் முதலில் நான் எழுதிய கட்டுரையை கொஞ்சம் அறிவு இருக்கக்கூடிய வர்களை வைத்து படியுங்கள் ...மாற்றம் செய்யுங்கள் ... please correct my article with right person ,who are capable of tamil knowledge atlease some not fools k.nakarajan

Image may contain: 1 person, smiling, hat



.எந்த ஒரு பிரபல கதாநாயகனுமே ஒரே நாளில் தன்னுடைய இரு படங்களை வெளியிட சம்மதிப்பதில்லை. ஆனால் சிவாஜி இதற்கு விதிவிலக்கு. படம் முடிவடைந்து விட்டால் அதை ரிலீஸ் செய்வதை தடுக்கமாட்டார். அப்படி ஒரே நாளில் இரு படங்கள் என 24 சிவாஜி படங்கள் வெளியானது மட்டுமல்ல; வெற்றியும் அடைந்திருக்கின்றன.


இதோ அந்த சாதனை விவரம்:–


13-4-1954:

அந்தநாள்,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (100 நாட்களுக்கு மேல்).

26-8-54:

கூண்டுக்கிளி,தூக்குத்தூக்கி (100 நாள்).

13-11-55:

கோடீஸ்வரன், கள்வனின் காதலி.

14-1-56:

நான் பெற்ற செல்வம்,நல்லவீடு.

3-11-64:

முரடன்முத்து (12 வாரம்),

நவராத்திரி (100 நாள்).

1-11-67:

ஊட்டிவரை உறவு,

இரு மலர்கள் (இரண்டுமே 100 நாள்).

29-10-70:

எங்கிருந்தோ வந்தாள்,

சொர்க்கம் (இரண்டுமே 100 நாள்).

14-4-71:

சுமதி என் சுந்தரி (12 வாரம்),

பிராப்தம் (60 நாள்).

2-11-75:

டாக்டர் சிவா,வைரநெஞ்சம் (இரண்டும் 9 வாரங்களுக்கு மேல்).

5-2-82: ஊருக்கு ஒரு பிள்ளை.

6-2-82 (ஒரு நாள் இடைவெளி): வா கண்ணா வா (100 நாள்).

14-11-82:

ஊரும் உறவும், பரீட்சைக்கு நேரமாச்சு.

28-8-87:

கிருஷ்ணன் வந்தான்,ஜல்லிக்கட்டு (100 நாள்).

மொத்தத்தில் 24 படங்கள் இவ்வாறு ஒரே நாளில் வெளியாகி வெற்றியடைந்துள்ளன.இவற்றில், ஊட்டி வரை உறவு, இருமலர்கள்; எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் ஆகியவை தீபாவளி நாட்களில் வெளியாகி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


.

-கடையம் பாலன்.-கே.சந்திரசேகரன் எழுதிய சிவாஜி ஒரு வரலாற்றின் வரலாறு என்ற புத்தகத்தை கையாண்ட கடையம் பாலன்



No comments:

Post a Comment