Saturday 21 November 2020

#இதயக்கனி

 #இதயக்கனி



மக்கள் திலகம் என்றென்றும்

#இதயக்கனி

  சத்யா மூவீஸ் தயாரிப்பில், ஏ.ஜெகன்னாதன் இயக்கத்தில் வெளிவந்த ப்ளாக்பஸ்டர் படம். ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகள் எந்த வருடமானாலும் மக்கள் திலகம் வசூல் மன்னன் என்பதனை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்த படம்.

   இலட்சங்களில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் சுமார் 2.5 கோடி வசூலை குவித்தது. இன்றைய மதிப்பில் இது கிட்டத்தட்ட 57 கோடிக்கு சமமாகும்.

   தேயிலை எஸ்டேட் உரிமையாளரும், கடமை தவறா காவல் துறை அதிகாரியுமான மோகன் ((மக்கள் திலகம்)) ஒரு பொதுஉடமைவாதி. தன் எஸ்டேட்டில் வருகிற லாபம், செல்வம் அனைத்தையும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொதுவில் வைத்து அவர்கள் அன்பை பெற்றவர். ஒரு நாள் தன்னை அடைக்கலமாக வந்தடைந்த லட்சுமி யை((ராதா சலூஜா)) தன் எஸ்டேட் வீட்டில் தங்க வைக்கிறார். பின் பெரியவர்களின் ஆசியோடு லட்சுமியை மணந்து கொள்கிறார்.


   ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி கொலையின் பின்னணியில் கொள்ளைக்கூட்டம் இருப்பதை தன் மேலதிகாரியின் மூலம் அறிந்து கொள்கிறார் மோகன். அந்த கொலைக்கான முக்கிய சந்தேகப்படும் குற்றவாளியாக தன் மனைவி லட்சுமியின் புகைப்படமும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் மோகன். தன் மனைவி குற்றவாளியா? நிரபராதியா? என மோகன் கண்டுபிடிப்பதே மீதிக்கதை.

  மக்கள் திலகத்தின் த்ரில்லர் வகை படங்களில் இது முக்கியமானது. வழக்கம் போல் தெறிக்க விடுகிறார் மக்கள் திலகம். அதுவும் மிஸ்டர்.ரெட் வேடத்தில் கொள்ளைக்கூட்ட தலைவி ராஜசுலோசனாவுடன் மோதும் இடம், வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் போடும் ஆட்டம், வெடித்து சிதறும் குண்டுகளிடையேயான போட் சேசிங், இதை தவிற ராதா சலூஜாவுடன் ரொமேன்ஸ் என்று தெரிக்க விடுகிறார் மக்கள் திலகம்.

   படத்தின் இன்னொரு கதாநாயகர் சந்தேகமில்லாமல் மெல்லிசை மன்னர்தான்."நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற "என்ற அட்டகாசமான இன்ட்ரோ வில் தொடங்கி-"இன்பமே உந்தன் பேர் பெண்மையோ" என்ற அதகள டூயட் பாடல், "இதழே இதழே கனி வேண்டும்" என்ற ரொமான்ஸ் டூயட், "ஒன்றும் அறியாத பொண்ணோ"-"எங்கேயோ பார்த்த நியாபகம்" என்று இன்று வரை பாடல்களை நிற்க வைத்துள்ளார் மெல்லிசை மன்னர்.

   மக்கள் திலகம், அமெரிக்கா-ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது "நீங்க நல்லாயிருக்கணும்" பாடலும் அனைத்து இடங்களிலும்-குறிப்பாக திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது. மக்கள் திலகத்தின் படங்களுக்கு மெல்லிசை மன்னர் இசையமைத்த பாடல்கள் வெறும பாடல்கள் அல்ல- மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உணர்வோடும், உள்ளத்தோடும் கலந்து விட்ட ஒன்று என்பது, இந்த படம் வெளிவந்த போது இந்த பாடலை ரசிகர்கள் ஆரவாரத்தோடு ரசித்தபோதும்,பின்னர் இதே பாடலை மக்கள் திலகம் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது உணர்வு பூர்வமாக அவருக்காக வேண்டியபோதும் சரி...

 மீண்டும் நிரூபிக்கப்பட்டது.




  இந்தப்படம் 150 நாட்களுக்கு மேல் ஓடி அந்த வருடத்தின் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை புரிந்தது. அதே போல தமிழகம் எங்கும் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு,  படம் வெளியான நாள்முதல்  அதிக காட்சிகள் திரையிடப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது. அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்த சாதனை முறியடிக்கப்படவே இல்லை.

 1978 ம் ஆண்டு தாஷ்கண்ட் ((அன்றைய ரஷ்யா-இன்றைய உஸ்பெகிஸ்தான் தலைநகர்)) உலக திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பில் திரையிடப்பட்ட ஒரே படம் என்ற பெருமையையும் "இதயக்கனி" தட்டிச்சென்றது..!!!

அண்ணாவின் "இதயக்கனி" என்றென்றும் மக்களிடமே...!!!

தகவல் & புகைப்படம் :https://en.m.wikipedia.org/wiki/Idhayakkani


No comments:

Post a Comment