Sunday 29 November 2020

மைக் ஈஸ்-ந்வாலி நொகு (Mike Eze-Nwalie Nwogu).

 


0/மைக் ஈஸ்-ந்வாலி நொகு (Mike Eze-Nwalie Nwogu)மைக் ஈஸ்-ந்வாலி நொகு (Mike Eze-Nwalie Nwogu)



மைக் ஈஸ்-ந்வாலி நொகு (Mike Eze-Nwalie Nwogu), இவர் நைஜீரியாவை சேர்ந்து இரவு விடுதி நடத்தி வரும் உரிமையாளர் ஆவார். இவர் தனது நண்பர் ஒருவருடைய திருமணத்திற்கு, 6 கர்ப்பிணி பெண்களுடன் வருகை புரிந்தார். மேலும், அந்த ஆறு பெண்களின் கருவிற்கு, தானே தகப்பன் என்று கூறி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.


6 மனைவியரை ஒரே நேரத்தில் கர்ப்பம் ஆக்கிய ஆண், வைரல் நியூஸ்!

திருமண விழாக்களில் ஆச்சரியங்கள் நடப்பது இயல்பு. பெருபாலும் அந்த ஆச்சரியம் பரிசாகவோ, நடனம் போன்ற ஏதேனும் நிகழ்வு மூலம் மணமக்களுக்கு தான் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இங்கே மைக் ஈஸ்-ந்வாலி நொகு, தனது நடவடிக்கை மூலம் திருமண விருந்தினர் உட்பட அனைவர்க்கும் ஆச்சாரியத்தை ஏற்படுத்தியுள்ளார். சொல்லப் போனால், திருமண விழாவில் மணமக்களை விட, மைக் ஈஸ்-ந்வாலி நொகு மற்றும் அவரது 6 கர்ப்பிணி மனைவியரும் தான் பெரும் ஈர்ப்பு பெற்றனர்.I]K, நைஜீரியாவில் ஒரு இரவு விடுதி நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தனது நண்பர் ஒருவருடைய திருமண விழாவில் பங்கெடுத்துக் கொண்டார். அனைவரும், திருமண விழாவிற்கு பரிசுதான் குடும்பமாக பங்கெடுத்துக் கொள்வார்கள். ஆனால், மைக் ஈஸ்-ந்வாலி நொகு, தனது மனைவியருக்கு தான் கொடுத்த பரிசு (கர்ப்பம்) உடன் கம்பீரமாக, ஸ்டைலாக திருமண விழாவில் பங்கெடுத்துக் கொண்டார்.



மைக் ஈஸ்-ந்வாலி நொகு ஆறு கர்ப்பிணி பெண்களுடன் திருமண விழாவில் நுழைந்த போதே பலரும் ஆச்சரியப்பட்டனர். மேலும், அந்த ஆறு பெண்களின் கர்ப்பத்திற்கு தானே காரணம் என்று மைக் ஈஸ்-ந்வாலி நொகு கூறிய போது, அந்த ஆச்சரியம் விண்ணைத் தொட்டது என்றே கூற வேண்டும். மனைவியர் எல்லாம் ஜொலிக்கும் வெள்ளி நிற உடையிலும், மைக் ஈஸ்-ந்வாலி நொகு பெண்கள் விரும்பும் பிங்க் நிறத்திலான ஜொலிக்கும் ஷூட்டிலும் திருமண விழாவில் பங்கெடுத்துக் கொண்டனர்...துக் கொண்ட திருமண விழாவின் புகைப்படங்களை தனது இன்ஸ்டா அக்கவுண்டில் பதிவிட்டிருந்தார் மைக் ஈஸ்-ந்வாலி நொகு. அதில் ஒரு புகைப்படத்தில் தனது கர்ப்பிணி மனைவியரின் வயிற்றில் அவர் முத்தமிடும் படமும் இடம் பெற்றிருந்தது.


அந்த பதிவில், இது ஃபிலிம் ட்ரிக்ஸ் எதுவும் இல்லை, நாங்கள் எங்கள் வாழ்க்கையை சிறந்த முறையில் வாழ்ந்து வருகிறோம். என்று குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பதிவுக்கு (நவம்பர் 22 அன்று பதிவிட்டிருந்தார்.) இதுவரை 64 ஆயிரம் லைக்குக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்டுகள் குவிந்துள்ளன.


இதுவே மைக் ஈஸ்-ந்வாலி நொகு ஊடகங்களை ஈர்க்கும் வகையில் வருகை தந்த முதல் நிகழ்வல்ல. 2017ம் ஆண்டு இரு பெண்களுடன் விழா ஒன்று வருகை தந்திருந்தார் மைக் ஈஸ்-ந்வாலி நொகு. ஆனால், அந்த இரு பெண்களின் கழுத்தில் நாய் சங்கிலி அணிவித்து வருகை தந்திருந்தார். இதனால், மைக் ஈஸ்-ந்வாலி நொகு காவலர்களால் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment