Saturday 21 November 2020

#பத்மபிரியா ((எ)) பத்மலோசனி..

 

#பத்மபிரியா

((எ)) பத்மலோசனி..



..#இனிய_நினைவுகளில்

#பத்மபிரியா

((எ)) பத்மலோசனி..

  தென்னகத்தின் ஹேமாமாலினி என்று 1970 களில் அழைக்கப்பட்ட இவர் கர்நாடகாவில் பிறந்தார்.கன்னடத்தில் டாக்டர்.ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் ஆகியோரோடு சில படங்கள் நடித்தார்.

 தமிழ் திரையுலகத்தை பொருத்தவரை இவரை மக்கள் திலகம், நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு நன்கு நினைவிருக்கும் .இவருக்கு ஓரளவு கைகொடுத்த படங்கள், நடிகர் திலகத்தோடு வைர நெஞ்சம், ,மோகனப்புன்னகை ,ஆகிய படங்களும், மக்கள் திலகத்தோடு "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" சில அடிகள் படமாக்கப்பட்ட "நல்லதை நாடு கேட்கும்" ஆகிய படங்களிலும்..

 "உறவு சொல்ல ஒருவன்" "வாழ்ந்து காட்டுகிறேன்","அன்று சிந்திய ரத்தம்" "உண்மையே உன் விலை என்ன","சொர்க்கம் நரகம்","ஆயிரம் ஜென்மங்கள்",

ஆகிய படங்களிலும் 1990 களில் "காதலன்" "தொட்டா சிணுங்கி" ஆகிய படங்களில் நடித்தார்.




  1983 ம் வருடம் சீனிவாசன் என்பவரோடு திருமணம் ஆனாலும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை.விவாகரத்துக்குப்பின் பத்மபிரியா தன் பெற்றோருடனே வசித்து வந்தார். இவருக்கு வசுமதி என்ற பெண் உண்டு. பெரும் பொருளாதார கஷ்டத்துடன் வாழ்ந்து வந்த பத்மபிரியா, 16-11-1997 ம் ஆண்டு சென்னை தி.நகரில், இளம் வயதிலேயே மாரடைப்பால் காலமானார். திரையுலகமும் இந்த "தென்னகத்து ஹேமா மாலினியை" மறந்தே போயிற்று

No comments:

Post a Comment