Friday 13 November 2020

STONE AND STATUE

 

STONE AND STATUE


அற்புதமான சிற்பி ஒருவர், ஒருநாள் கடைத்தெருவில் நடந்து போய் கொண்டிருந்தார்.._

_அப்பொழுது ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.._

_ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி,_

_அதன் பின் அந்தக் கடைக்காரரிடம்,_ *'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?'* என்று கேட்டார்..

*'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள்.. இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது.. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்'* என்றார் கடைக்காரர்..

_பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி,_

_அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.._

_அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது.._

_போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டனர்.._

*_அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.._*

_முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.._

_அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர்,_ *'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'* என்று கேட்டார்..

அதற்கு சிற்பி, *'வேறு எங்கிருந்தும் இல்லை. .தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன்..*

*என்னை தங்களுக்கு நினைவில்லையா? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்..*

கடைக்காரர் வியந்தார்..

*_ஆம்.. தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது.. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது.._*

*வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன்.. உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!'* என்றார்..

🐝

👇

*ஆம்..* _*தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய்,*_

_*ஒவ்வொருவரும் நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்..*_

No comments:

Post a Comment