Sunday 22 November 2020

ஆற்றில் குதித்து தற்கொலை

 


ஆற்றில் குதித்து தற்கொலை 



கல்லூரி காலத்தில் இருந்தே தோழிகளாக இருந்து வந்த பெண்கள் ஓரினசேர்கையில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வேறொரு ஆணுடன் தோழியை அனுப்பி வைக்க முடியாமல் இருவரும் சேர்ந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள சடயமங்கலத்தைச் சேர்ந்த சிவதாஸின் மகள் அம்ருதா அனி. நீரைகோடு அஞ்சு பவனைச் சேர்ந்த அசோக் குமாரின் மகள் ஆர்யா. 21 வயதான இருவரும் அஞ்சலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ பட்டப்படிப்பை முடித்துள்ளனர். கல்லூரியில் இருந்தே நெருங்கிய தோழிகளாக இருந்து வந்த இருவரும் நவம்பர் 13 ஆம் தேதி கல்வி சான்றிதழ்களை வாங்கிவருவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளனர். ஆனால், அன்று மாலை வரை இருவரும் வீடு திருப்பவில்லை. இதனால், இருவரது பெற்றோரும் மகள்களை செல்போனில் தொடர்பு கொண்டபோது செல் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. இதையடுத்து, மகள்களை காணவில்லை எனக்கூறி கொல்லம் போலீசில் புகார் தெரிவித்தனர்.


​இணைபிரியா தோழிகள்


அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாயமான அம்ருதா, ஆர்யாவை தேடி வந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 7.45 மணியளவில் இரண்டு பெண்களும் வேம்பநாடு ஆற்றின் பாலத்தின் அருகே சென்றதாக உள்ளூர் வாசிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று இருவரும் பாலத்தின் மீதேறி ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன் தொடர்ச்சியாக, உள்ளூர் வாசிகளின் உதவியுடன் போலீசார் ஆற்றில் இரங்கி தேடினர். ஆனால், அம்முயற்சி பலனிக்கவில்லை.



​கரை ஒதுங்கிய சடலங்கள்



அதனை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அன்று தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையான ஸ்கூபா-டைவிங் குழு ஆற்றில் தேடுதல் நடத்தியது. அவர்களின் முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இதற்கிடையில் மாயமான இருவரது உடல்களும் மூவாற்றுப்புழா ஆற்றில் கரையொதுங்கியது. சம்பவம் அறிந்து வந்த போலீசார், ஆர்யா மாற்று அம்ருதாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், பாலத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடமைகளை உறவினர்கள் அடையாளம் கண்ட பின்னர் அவர்கள் கொல்லமில் இருந்து காணாமல் போன அதே பெண்கள் என்று போலீசார் உறுதிப்படுத்தினர்.


​தற்கொலை காரணம்




இணைபிரியாத தோழிகளின் திடீர் தற்கொலைக்கு காரணம் என்ன என்று போலீசார் விசாரித்ததில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்ருதாவின் பெற்றோர் அவருக்கு திருமண வரன் தேட தொடங்கியுள்ளனர். ஆனால், திருமணம் செய்துகொண்டால் ஆர்யாவை பிரிய நேரிடும் என அம்ருதா பயந்துள்ளார். மேலும், தனக்கு மாப்பிளை பார்க்கிறார்கள் என்ற விஷயத்தை அம்ருதா ஆர்யாவிடம் கூறியதையடுத்து, இருவரும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாகவும், சம்பவம் நடந்த அன்று இருவரும் கைகோர்த்தபடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.


ஓரின சேர்க்கை



அம்ருதாவின் தந்தை சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கொரோனாவால் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், அந்த காலகட்டத்தில், அம்ருதா ஆர்யாவின் வீட்டில் 14 நாட்கள் தங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இருவரும் ஓரின சேர்க்கை முறையில் பழகி வந்ததனால், அம்ருதாவின் திருமணம் பேச்சு இருவருக்கும் மன அழுத்தத்தை உண்டாகியிருக்கும் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment