Tuesday 12 June 2018

THE LAST TESTAMENT OF EMPEROR AURANGAZEEB













THE LAST TESTAMENT OF EMPEROR AURANGAZEEB 1707 MARCH 3




சக்கரவர்த்தியாக இருப்பவன் தான் உலகிலேயே துரதிர்ஷ்டம் மிக்கவன்.

ஔரங்க சீப்பின் கடைசி உயில் !சம்பளம் தர இயலாத ஒரு சக்ரவர்த்தியின் மரண சாஸனம்!

நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாய் இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ் நாளில் ஒரு நல்ல காரியம் கூட செய்ததில்லை என்பதற்காக மிகவும் வருத்தப்ப டுகிறேன். எனினும் இப்போது வருந்துவதால் எந்த பயனும் இல்லை. என் இறுதிச் சடங்குகளை என் அருமை மகன் ஆஸம்தான் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். வேறு யாரும் என்னுடலைத் தொடக்கூடாது.

என் பணியாள் ஆயா பேக்கிடம் என் பணப்பை உள்ளது. அதில் கவனமாகச் சேமித்துவைத்த 4 ரூபாயும் 2 அனாக்களும் உள்ளன. எனக்கு ஓய்வான நேரத்தில் நான் குர் ஆன் பிரதிகளை கையால் எழுதிக் கொடுத்தேன்.தொப்பிகள் தைத்தேன். அந்த தொப்பிகளை விற்று நான் நேர்மையாக சம்பாதித்த பணம்தான் அது. அந்தப் பணத்தில்தான் கஃபன் (என் உடல் மூடும்) துணி வாங்கப்பட வேண்டும். இந்தப் பாவியின் உடலை மூட வேறு எந்தப் பணமும் செலவிடப்படக் கூடாது. இது எனது இறுதி விருப்பம். (என் கையால் எழுதப்பட்ட) குர் ஆனின் பிரதிகளை விற்று நான் 305 ரூபாய்களைப் பெற்றேன். அந்தப் பணமும் ஆயாபேக்கிடம்தான் உள்ளது. இந்தப் பணத்தில் வாங்கப்படும் இனிப்பு சோறு ஏழை முஸ்லீம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

என்னுடைய சாமான்களான துணிமணிகள், மைக்கூடுகள், எழுதுகோல்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் என் மகன் ஆஸ்மிடம் கொடுத்துவிட வேண்டும். என் சவக்குழி வெட்டுவதற்கான கூலியை இளவரசர் ஆஸம் கொடுப்பார்.

ஓர் அடர்ந்த காட்டில் எனக்கான குழி தோண்டப்பட வேண்டும். என்னைப் புதைத்த பிறகு என்னுடைய முகத்தை திறந்து வைக்க வேண்டும்.என் முகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டாம். திறந்த முகத்தோடு நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன். அவனுடைய உச்ச நீதிமன்றத்திற்கு திறந்த முகத்தோடு போகின்றவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனது கஃபன் துணி தடித்த கதர் துணியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.எனது உடலின் மீது விலையுயர்ந்த கம்பளம் எதையும் போர்த்த வேண்டாம். எனது சவ ஊர்வலம் செல்லும் வழியில் மலர்களைத் தூவ வேண்டாம்.என் உடல் மீதும் மலர்களை வைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. எந்த இசையும் இசைக்கவோ பாடவோ கூடாது. நான் இசையை வெறுக்கிறேன்.

எனக்காக கல்லறை எதுவும் கட்டக்கூடாது. வேண்டுமானால் ஒரு மேடை அமைத்துக் கொள்ளலாம்.என் ராணுவ வீரர்களுக்கும் என் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கும் பல மாதங்களாக என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை.

நான் இறந்த பிறகு என்னுடைய தனிப்பட்ட வேலைக்காரர்களுக்காவது அவர்களுக்கான முழு சம்பளமும் கொடுக்கப்பட வேண்டும்.ஏனெனில் கஜான காலியாக இருக்கிறது. நிஅமத் அலி எனக்கு மிகவும் நம்பிக்கையான ஊழியன். என் உடலை அவன் தான் சுத்தப்படுத்துவான். என் படுக்கை தூசியாக இருக்க அவன் அனுமதித்ததேயில்லை.

என் நினைவாக எந்த கட்டடமும் எழுப்பக்கூடாது. எனது கல்லறையில் என் பெயர் பொறிக்கப்பட்ட எந்த கல்லும் வைக்கக்கூடாது. கல்லறையில் அருகில் மரங்களை நடக்கூடாது. என்னைப் போன்ற பாவிக்கு நிழல்தரும் மரங்களின் பாதுகாப்பைப் பெறுவதற்கு தகுதியில்லை.

எனது மகன் ஆஸம் டெல்லியில் இருந்து ஆட்சி செய்வதற்கான அதிகாரம் பெற்றவனாகிறான். பீஜப்புர், கோல்கொண்டா ஆகிய மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பஷிடம் விடப்பட வேண்டும்.


அல்லாஹ் யாரையும் சக்கரவர்த்தியாக்கக் கூடாது. சக்கரவர்த்தியாக இருப்பவன் தான் உலகிலேயே துரதிர்ஷ்டம் மிக்கவன்.



Aurangzeb’s Will:-


48: Aurangzeb’s Will. The sketch shows Aurangzeb, now about 89 years old, writing his Will. A Khoja (eunuch) is the only one present at some distance.

Aurangzeb’s Will:-

“Praise to be God and blessing on those servants [of Him] who have become sanctified and have given satisfaction [to Him]. I have some [instructions to leave as my] last will and testament:



1       There is no doubt that I have been the emperor of India and I have ruled over this country. But I am sorry to say that I have not been able to do a good deed in my lifetime. My inner soul is cursing me as a sinner. But I know it is of no avail. It is my wish that my last rites be performed by my dear son Azam. No one else should touch my body.

2       My servant, Aya Beg, has my purse in which I have carefully kept my earnings of Rupees 4 and 2 Annas. In my spare time, I have been writing the Quran and stitching caps. It was by selling the caps that I made an honest earning. My coffin should be purchased with this amount. No other money should be spent for covering the body of a sinner. This is my dying wish.
By selling the copies of Quran I collected Rupees 305, which is also with Aya Beg. It is my will that poor Mohammedans should be fed with sweet rice procured with this money.

3       All my articles – clothes, ink stand, pens and books should be given to my son Azam. The labour charges for digging my grave will be paid by Prince Azam.

4       My grave should be dug in a dense forest. When I am buried, my face should remain uncovered. Do not bury my face in the earth. I want to present myself to Allah with a naked face. I am told, whoever goes to the supreme court on high with a naked face will have his sins forgiven.

5       My coffin should be made of thick Khaddar. Do not place a costly shawl on the corpse. The route of my funeral should not be showered with flowers. No one should be permitted to place any flowers on my body. No music should be played or sung, I hate music.

6       No tomb should be built for me. Only a chabootra or a platform may be erected.

7       I have not been able to pay the salaries of my soldiers and my personal servants for several months. I bequeath that after my death at least my personal servants be paid in full, even as the treasury is empty. Niamat Ali has served me very faithfully : he has cleaned my body and has never let my bed remain dirty.

8       No mausoleum should be raised in my memory. No stone with my name should be placed at my grave. There should be no trees planted near the grave. A sinner like me does not deserve the protection of a shady tree !

9       My son, Azam, has the authority to rule from the throne of Delhi. Kam Baksh should be entrusted with governance of Bijapur and Golconda states.

10     Allah should not make anyone an emperor. The most unfortunate person is he who becomes one. My sins should not be mentioned in any social gathering. The story of my life should not be told to anyone.

Translated from a history article published by Sh Ajmer Singh, MA,

No comments:

Post a Comment