Tuesday 29 March 2022

CHENNAI FILM INSTITUTE

 


CHENNAI   FILM INSTITUTE



தேவதாஸ் கனகாலா என்கிற தெலுங்கு நடிகர் புனா ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்தவர். இவரது வகுப்புத்தோழர்கள் தாம் சத்ருக்கன் சொன்ஹா, அமிதாப் மனைவி ஜெயபாதுரி போன்றோர்.

இவருக்கு சென்னையில் அதேப்போல ஒரு நடிப்புப்பயிற்சி கல்லூரியில் பயிற்சியாளர் வேலை கிடைத்தது. 73ல் தொடங்கப்பட்ட சௌத் இன்டியன் பிலிம் சேம்பர் இன்ஸ்ட்டிடியூட் Institute of SIFCC தொடங்கிய போது அதில் பெரிய இயக்குனர்கள் பங்கெடுத்தனர். இவரது மனைவி லக்ஷ்மி தான் பிரின்சிபல். முதல் பேட்ஜில் ரஜினிகாந்த், நடராஜ்..இரண்டாவது பேட்ஜில் 74ல் ராஜேந்திரபிரசாத், மூன்றாவது பேட்ஜ் பற்றி தெரியவில்லை. நான்காவது பேட்ஜ் 76ல் சுதாகர், பானுச்சந்தர், 77ல் ஐந்தாவது பேட்ஜில் சிரஞ்சீவி என எல்லோருக்கும் நடிப்புப்பயிற்சி கொடுத்தவர் இவரின் மனைவி லக்ஷ்மி. முதல் பேட்ஜ்க்கு தேவதாஸ் அதாவது 73, 74ல் மட்டும் பயிற்சி கொடுத்துவிட்டு 75ல் ராஜினாமா செய்து விட்டார். பொறுப்பு சேம்பர் மூடும் 78 வரை லக்ஷ்மி தேவதாஸே பயிற்சியாளர்.

புல்லையா, பாலச்சந்தர், எல்.வி.பிரசாத், கே.விஸ்வநாத், பாப்பு போன்றோரின் வகுப்புகள் மூலம் அதிலுள்ள மாணவர்களுக்கு நடிப்பு அவ்வப்போது டெஸ்ட் செய்யப்பட்டது. காலை முதல் மாலை வரை உள்ள வகுப்புகளில் நடிப்பு, யோகா, நீச்சல், குதிரையேற்றம், சண்டைப்பயிற்சி என எல்லாம் சொல்லிக்கொடுக்கப்பட்டன.



மாணவர்களுக்கு பலன் இருந்ததோ இல்லையோ பாலச்சந்தருக்கு இயக்குனராக மிகப்பெரிய பலன் இருந்தது. அரங்கேற்றம் வென்றதும் அவள் ஒரு தொடர்கதை எடுத்த போது நாடகங்கள் மூலமே புதுமுக நடிகர்கள் கிடைத்தார்கள். 'எர்ணாகுளம் ஜங்ஷன்' என்கிற படம் மூலம் துணை நடிகை சுஜாதாவை நாயகியாக்கினார். விஜயகுமார், சோமன், ஜெய்கணேஷ் எல்லோரும் நாடகங்களிலிருந்து வந்தார்கள்.

முதன்முதலில் சிவாஜிராவ் என்கிற நடிகரை செலக்ட் செய்த போது தான் கே.நட்ராஜ் என்கிற நடிகரும் கிடைத்தார். சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்தின் சில கிம்முக்குகளை வைத்து 'மூன்று முடிச்சு' எடுத்த போது ரஜினிக்கு கிடைத்த வரவேற்பு அதீதமாக இருந்தது. பின் அவர் புதுமுகங்கள் எடுக்க திரைப்பட கல்லூரி நோக்கி சென்றார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தை அந்துலேனிகதா என எடுத்த போது அவருக்கு கமல் செய்த கோபால் பாத்திரத்துக்கு திரைப்படக்கல்லூரி நோக்கியே சென்றார். அங்கு அவர் பிரசாத் பாபு, ஜி.வி.நாராயண ராவ், பிரதீப் சக்தி என மூன்று பேரை தேர்ந்தெடுத்தார். பிரசாத் பாபுவுக்கு சுஜாதா ரோலில் நடித்த ஜெயப்ரதாவின் காதலன் ரோல் தரப்பட்டது. இந்த பிரசாத் பாபு யார் என்றால் 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் கமலுக்கு அண்ணனாக மனோரமாவின் கணவராக வாய் பேசாதவராக வருவாரே அவர் தான். இவரது மகன் ஸ்ரீகர் 'இளவரசி' சீரியலில் நடித்தவர். மருமகள் அதே சீரியல் நடிகை சந்தோஷி.

பிரதீப் சக்திக்கு கண்டக்டர் ரோல் தரப்பட்டது. படத்தின் க்ளைமேக்ஸ் பிரதீப்சக்தி-ஜெயப்ரதா கான்வெர்சேஷனில் முடியும். பின் தமிழில் சரியான வாய்ப்பு இல்லாமல் நாடகங்களில் நடித்த பிரதீப் சக்தியை மணிரத்னம் நாயகன் மூலம் கமலோடு மோத விட்டு மிகப்பெரிய ஓப்பனிங் செய்து கொடுத்தார். பிரதீப் சக்தி பின் பல மொழி நடிகரானார். அமெரிக்காவில் ரெஸ்ட்டாரண்ட் தொடங்கி அங்கு போய் வாழ்ந்து மறைந்தார்

ஜி.வி.நாராயணராவ் ரஜினியின் பேட்ச் மேட். இவர் கமலின் கடவுள் அமைத்து வைத்த மேடை பாடலை தெலுங்கில் தாலி கட்டும் சுப வேளா எனப் பாடி நடித்தார். அது அவரை பெரிய இடத்துக்கு கொண்டு போனது. தமிழில் நூல்வேலி உள்பட மேலும் சில படங்களில் நடித்தார் நாராயணராவ். நிழல் நிஜமாகிறது படத்தின் தெலுங்குப்பதிப்பில் ஷோபாவுக்கு வாழ்வு கொடுக்கும் அனுமந்து ரோலில் நாராயணராவ் நடித்தார். கமல் ரோலில் ரஜினி நடித்தார். சிலக்கம்மா செப்பிந்தி என்கிற அப்படத்தின் ஷுட்டிங்கினிடையில் ரஜினியையும், நாராயணராவையும் ஒரு இளைஞர் வாய்ப்புக்காக வந்து சந்தித்தனர். அன்று நாராயணராவின் தகப்பனார் தயாரிப்பாளராகவும் இருந்தார். சிவசங்கர வரப்ரசாத் என்கிற அந்த இளைஞரிடம் திரைப்படக்கல்லூரியில் சேரச்சொல்லி அட்வைஸ் செய்தார் நாராயணராவ். வரப்ரசாத் இரண்டாம் ஆண்டு கோர்ஸ் முடிக்கும்முன்பாகவே பல படங்களில் ஒப்பந்தாமானார். பாலச்சந்தர் தன் அவர்கள் பட தெலுங்குப்பதிப்பான இதி கத காது படத்துக்கு ரஜினியில் ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். அவர் தான் சிரஞ்சீவி.

சிரஞ்சீவி திரைப்படக்கல்லூரியில் படித்த போது அன்று அவருடன் சுதாகர், ஹரிப்ரசாத் போன்ற இளைஞர்கள் படித்தனர். மூவரும் சென்னையில் ஒரே அறையில் தங்கி இருந்து படித்தனர். சுதாகருக்கு முதலில் கிழக்கே போகும் ரயில் மூலம் வாய்ப்பு வந்தது. அடுத்த ஐந்து வருடங்கள் தமிழில் நடித்தார் அவர். ஹரிப்ரசாத் தாசரி நாராயணராவின் மூலம் சிவரஞ்சனி என்கிற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அவள் ஒரு மேனகை எனப்பாடி தமிழுக்கும் வந்தார் அவர்.

பாலச்சந்தர் ரஜினியை செலக்ட் செய்யும் காலத்தில் அவரோடு படித்த பெண் தான் ஹேமா சௌத்ரி. ஹேமா சௌத்ரியை தனது மன்மத லீலை படம் மூலம் அறிமுகப்படுத்தினார் கே.பி. இதே கல்லூரியில் தேவன், ஸ்ரீனிவாசன், பானுச்சந்தர் போன்றோர் படித்தனர். ஒரு படத்தில் நடித்துவிட்டு வாய்ப்பின்றி இருந்த பானுச்சந்தரை அழைத்து 81ல் வாய்ப்பு கொடுத்தார் கே.பி. படம் அடவாலு மீக்கு ஜோஹருலு. 

இதோடு தில்லுமுல்லு எடுக்கும் காலகட்டத்தில் சேம்பர் மொழிவாரியாக தனித்தனியாக பிரியவே கல்லூரி மூடப்பட்டது.  ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் அடையாறு திரைப்படக்கல்லூரியை தொடங்கி இதிலிருந்த அலுவலர்கள் லக்ஷ்மி தேவதாஸ் உள்பட அங்கே பணி கொடுத்தார். தமிழ்நாடு மாணவர்கள் மட்டுமே இருந்த அந்த கல்லூரியில் தான் ரகுவரன், ராம்கி, சுஹாசினி, அருண்பாண்டியன், சுபலேகா சுதாகர் போன்றோர் படித்து வெளிவந்தனர். 

பாலச்சந்தர் அதன் பின் புதுமுகங்களை எடுக்க கல்லூரி நோக்கிப்போக தைரியப்படவும் இல்லை....

சேம்பர் ஆஃப் காமர்ஸ் கல்லூரியின் பியூட்டி என்னன்னா அடையாறு கல்லூரியில் படித்தவர்ககை விட சேம்பர் ஆஃப் கிமர்ஸ் பள்ளியில் படித்தவர்கள் இன்றும் நடித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது தான்...

#செல்வன் 

பி.கு: தேவதாஸ்-லக்ஷ்மி தம்பதியின் மகன் தான் சிறுத்தை படத்தில் மனைவியை வில்லன் வீட்டிற்கு அனுப்பிவிட்டு அழும் போலீஸ்காரராக நடித்த தெலுங்கு நடிகர் ராஜீவ் கனகாலா...


No comments:

Post a Comment