RUDRAIYA`S GIRAMATHU ATHIYAAYAM
ருத்ரய்யா அவள் அப்படித்தான் படத்துக்கு பிறகு அடுத்து கிராமத்து அத்தியாயம் என்கிற படமெடுத்தார்.
கிராமத்து அத்தியாயம் படத்துக்கு கமல் பேசப்பட்டார். ஆனால் நடிக்கவில்லை. சந்திரஹாசன் நடித்தார். கமல் ரோலில் ஜெயபாரதி என்கிற இயக்குனரை நடிக்க வைத்தார். அதுவும் ஒத்துவராமல் பின் ஒரு புதுமுகம் நடித்தார்.
கிராமத்து அத்தியாயம் சரியா போகலை...படம் ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி போற மாதிரியே இருக்கும். படம் தோல்வி. ருத்ரய்யா நேரே கமலிடம் போனார். நீ தான் கால்ஷீட் தரவேண்டும் என்றார்.
கமல் ரொம்ப இழுத்து கடைசியில் கதை கேட்டு சம்மதித்தார். முதல் நாள் ஷுட்டிங். கஷ்டப்பட்டு ஒரு தயாரிப்பாளரை ஏற்பாடு செய்திருந்தார் ருத்ரய்யா. அப்போது கமலுக்கு உடைகள் வாணி கமல் தான். எல்லா கமல் படங்களுக்கும் காஸ்ட்யூமர் வாணி தான். கமல் கிட்ட பிடிச்சது என்னன்னா அவர் யாரை மனைவியா ஏத்துக்கிறாரோ அவங்க தான் கமல் பட காஸ்ட்யூமர் கூட. ரெண்டு போஸ்டிங்..
கமல் பட மீதல் நாள் ஷூட்டிங்குக்கு பெரிய சூட்கேஸ்களில் துணிகளோடு இறங்கினார் வாணி. கமல் மேக்கப் போட போக ருத்ரய்யா முதல் ஷாட்டுக்கு தயாராக்க வேலைகளை தொடர்ந்தார். ஷாட் ரெடியானதும் கமல் அழைக்கப்பட கமல் ஜிகுஜிகுவென ஷர்ட் அணிந்து வந்திருக்கிறார். ஷர்ட்டை பார்த்ததும் டென்ஷனானார் ருத்ரய்யா. அசிஸ்டண்ட்டை கூப்பிட்டு 'நான் செலக்ட் செய்த சட்டை எங்கய்யா?' என சத்தம் போட கமல் ஓடிவந்திருக்கிறார். ர 'இந்த சட்டை ஒத்துவராது. அவன் ஏழை வாலிபன். இந்த மாதிரி ஒஸ்தி சட்டை அணிய மாட்டான்' என ருத்ரய்யா சொன்னதும் கமல் நேரே வாணியிடம் போய் சொல்ல அவ்வளவு தான்.வாணிக்கு வந்தது கோபம். சூட்கேசை மூடி காரில் டிக்கியில் ஏற்ற கமல் பின்னாலேயே ஓடி சமாதானப்படுத்தி இருக்கிறார். பதிலே சொல்லாமல் கார் விருட்டென கிளம்ப கையை பிசைகிறார் கமல்.
ருத்ரய்யா கமலிடம் பேச கமலோ ஒன்றும் பேசாமல் வேறொரு காரில் செல்கிறார். ருத்ரய்யாவுக்கு தன் நிலைமை புரிந்து போகிறது. கமலின் வீட்டுக்கு போன் போட்டு 'பரவாயில்லை. அதே காஸ்ட்யூமில் ஷுட்டிங் தொடங்கலாம்' என்கிறார் அழாத குறையாக. இந்த வாய்ப்புக்காக நாயாய் பேயாய் அலைந்தது அவருக்கே தெரியும்.
கமலோ இந்த படத்தை ட்ராப் செய்வோம். வேறு ஒரு படம் பின்னாளில் செய்யலாம் என போனை வைக்கிறார். ருத்ரய்யா இடிந்து உட்கார்ந்தார்.
அடுத்து அவர் சாகும் வரை அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. கஷ்டப்பட்டு இறந்தும் போனார்....
கேரக்டருக்கு ஏற்ற ஒரு சட்டை போட சொனதால் தன் வாழ்வையே துறந்த கலைஞன் வாழ்ந்த திரையுலகம் தமிழ் திரையுலகம்...
No comments:
Post a Comment