Saturday 12 March 2022

M.V.RAJAMMA BIOGRAPHY

 


M.V.RAJAMMA BIOGRAPHY



எம். வி. ராஜம்மா (M. V. Rajammaகன்னடம்ಎಂ. ವಿ. ರಾಜಮ್ಮInvoke:Category handler|main}}; 10 மார்ச் 1921 – 23 ஏப்ரல் 1999)[1] பழம்பெரும் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகையாவார். கன்னட நாடகம், திரைத்துறையில் பங்காற்றிய ராஜம்மாவுக்கு யயாதி முதல் தமிழ்த் திரைப்படமாகும். இரண்டாவது தமிழ்த் திரைப்படமாக உத்தம புத்திரனில் பி. யு. சின்னப்பாவுடன் கதாநாயகியாக நடித்தார். பின்னாளில் அன்னை வேடங்களில் நடித்த இவர், ஏறத்தாழ 50 ஆண்டுகள் காலத்திற்கு திரையுலகில் பங்காற்றினார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் ராஜம்மா. பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போதே பங்களூரில் இவரது பெற்றோர்கள் குடியேறினர். பங்களூர் ஆரிய பாலகி வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார். வாய்ப்பாட்டும், ஆர்மோனியமும் இசைக்க முறைப்படி கற்றுக் கொண்டார்.[3] எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இவருக்குத் திருமணம் முடிந்தது. கணவர் நாடக நடிகர். திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் சம்சார நௌகா திரைப்படம் கன்னடத்தில் 1935 ஆம் ஆண்டில் தயாரான போது அதில் நடிக்க ராஜம்மாவின் கணவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது ராஜம்மாவைக் கண்ட தயாரிப்பாளர் ராஜம்மாவையும் அப்படத்தில் விதவைப் பெண் கிரிஜாவாக நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். சென்னையில் ஒத்திகைகள் நடந்த போது, ராஜம்மாவின் நடிப்பைப் பார்த்த இயக்குநர் எச். எல். என். சிம்ஹா அப்படத்தின் கதாநாயகியாக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு கதாநாயகி சரளாவாக நடிக்க ராஜம்மா புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டார். படமும் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. இதன் பின்னர் தெலுங்கு கிருஷ்ண ஜரசந்தா, தமிழில் யயாதி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.[3]

யயாதிக்குப் பின்னர் உத்தம புத்திரன் (1940) திரைப்படத்தில் பி. யு. சின்னப்பாவுடன் கதாநாயகியாக நடித்தார். இப்படமும் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.[3] தொடர்ந்து குமாஸ்தாவின் பெண் (1941) படத்தில் நடித்தார். ஜெமினியின் மதனகாமராஜன் (1941) திரைப்படத்தில் அமைச்சரின் மனைவியாக நடித்தார். இப்படத்தில் இவர் பாடிய கை கொடுப்பேன் அம்மா என்ற பாடல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கே. சுப்பிரமணியம் இயக்கிய அனந்த சயனம், மற்றும் கன்னட பிரகலாதா, தெலுங்கு மாயாலோகம், தெலுங்கு பக்த வேமனாவிஜயலட்சுமி (1946), ஞானசௌந்தரி (1948) ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.


நடித்த சில திரைப்படங்களின் பட்டியல்[தொகு]


ஆண்டுதிரைப்படம்மொழிகுறிப்புகள்
1935சம்சார நௌகாகன்னடம்கதாநாயகி
1938யயாதிதமிழ்
1940உத்தம புத்திரன்தமிழ்
1941குமாஸ்தாவின் பெண்தமிழ்
1941மதனகாமராஜன்தமிழ்
1942அனந்த சயனம்தமிழ்
1942பக்த பிரகலாதாதெலுங்கு
1943ராதா ரமணாகன்னடம்
1946அர்த்தனாரிதமிழ்
1946விஜயலட்சுமிதமிழ்
1947யோகி வேமணாதெலுங்கு
1948ஞானசௌந்தரிதமிழ்
1948கோகுலதாசிதமிழ்
1949வேலைக்காரிதமிழ்
1949லைலா மஜ்னுதமிழ்
1950பாரிஜாதம்தமிழ்
1950ராஜ விக்கிரமாதமிழ்
1952தாய் உள்ளம்தமிழ்
1952புயல்தமிழ்
1952ஜமீன்தார்தமிழ்
1953உலகம்தமிழ்
1954கார்கோட்டைதமிழ்
1954இத்தரு பெல்லலுதெலுங்கு
1955மொதல தேடிகன்னடம்
1955நம்பேக்காகன்னடம்
1957தங்கமலை ரகசியம்தமிழ்
1957ரத்தினகிரி ரகசியகன்னடம்
1957மணாளனே மங்கையின் பாக்கியம்தமிழ்
1958ஸ்கூல் மாஸ்டர்கன்னடம்
1958எங்கள் குடும்பம் பெரிசுதமிழ்
1959பாகப்பிரிவினைதமிழ்
1959அப்பா ஆ உதுகிகன்னடம்
1960குழந்தைகள் கண்ட குடியரசுதமிழ்
1960மக்கள ராஜியகன்னடம்
1960கைராசிதமிழ்
1961தாயில்லா பிள்ளைதமிழ்
1961பாவமன்னிப்புதமிழ்ஜெமினி கணேசனின் தாயார்
1962படித்தால் மட்டும் போதுமாதமிழ்
1962தாயிய கருலுகன்னடம்
1962தெய்வத்தின் தெய்வம்தமிழ்
1962தர்மம் தலைகாக்கும், ஆடிப்பெருக்குதமிழ்
1962காளி கோபுராகன்னடம்
1962காளி மெடலுகன்னடம்
1962பந்த பாசம்தமிழ்
1963பணத்தோட்டம்கன்னடம்
1963குங்குமம்தமிழ்
1965பெண் மனம்தமிழ்
1964சின்னாட கோம்பேகன்னடம்
1964வேட்டைக்காரன்தமிழ்
1964கர்ணன்தமிழ்
1965தாயின் கருணைதமிழ்
1965வாழ்க்கைப் படகுதமிழ்
1966யெம்மே தம்மன்னகன்னடம்
1966எங்க பாப்பாதமிழ்
1970சிறீ கிருஷ்ணதேவராயாகன்னடம்
1970தேடிவந்த மாப்பிள்ளைதமிழ்

No comments:

Post a Comment