Sunday 3 June 2018

THE MAN WHO WALKED FIRSTLY IN SPACE ON 1965 JUNE 3





THE MAN WHO WALKED FIRSTLY
 IN SPACE ON 1965 JUNE 3






ஜெமினி திட்டம் (Project Gemini) என்பது நாசாவின் இரண்டாவது மனித விண்வெளிப்பறப்புத் திட்டம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் திட்டமான இது, 1961-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1966-ஆம் ஆண்டில் நிறைவுபெற்றது. மெர்க்குரித் திட்டம் மற்றும் அப்பல்லோ திட்டங்களுக்கு இடையே இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. ஜெமினி விண்கலமானது இரண்டு விண்வெளி வீரர்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 1965-லிருந்து 1966-வரை பத்து பணிக்குழுக்கள் புவி தாழ்வட்டப்பாதையில் சென்று வந்தனர். சோவியத் ஒன்றியத்துடனான பனிப்போர் விண்வெளிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா முன்னிலை பெறுவதற்கு இத்திட்டம் வழிவகுத்தது.

அப்பல்லோ திட்டத்தின் குறிக்கோளான - நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்கத்துக்குத் - தேவையான விண்பறப்புத் தொழில்நுட்பங்களைக் கட்டமைத்து மேம்படுத்துவதே ஜெமினி திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். நிலவுக்கு சென்று திரும்பும் அளவுக்கு அதிக காலம் விண்ணில் இருப்பதையும், விண்கலத்துக்கு வெளியில் பணிபுரிவதையும், விண்ணிலேயே இருவேறு விண்கலங்களை பொருத்தி இணைத்தல் தொழில்நுட்பத்தையும் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தி மேம்படுத்தினர். இவ்வாறு அடிப்படையான தொழில்நுட்பங்களையும் செயல்முறைகளையும் மேம்படுத்திய பின்னர், அப்பல்லோ திட்டம் அதன் முக்கிய குறிக்கோளில் முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றிகரமாக செயல்படுத்த வழிவகை ஏற்பட்டது.

எட்வேர்ட் வைட் விண்வெளியில் நடக்கும் போது எடுக்கப்பட்ட படம்


எட்வர்ட் ஹிகின்ஸ் வைட் (Edward Higgins White, II; நவம்பர் 14, 1930 – ஜனவரி 27, 1967) அமெரிக்க வான்படையின் பணியாளரும் நாசா விண்வெளி வீரரும் ஆவார். ஜூன் 3 1965 ஆம் ஆண்டில் விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். அப்பல்லோ 1 திட்டத்தில் இணைந்து பயிற்சி பெறும் போது கொல்லப்பட்டார்.

எட்வேர்ட் வைட் 1962 இல் நாசாவினால் இரண்டாவது கட்ட விண்வெளிப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டார். ஜெமினி திட்டத்தில் இணைந்து ஜெமினி 4 விண்கலத்தைத் தனியே செலுத்தி ஜூன் 3, 1965 இல் 21 நிபமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவர் பின்னர் ஜெமினி 7 விண்கலத்துக்கான பக்கபல (backup) விமானியாக இருந்தார். அப்பல்லோ திட்டத்தில் இணைந்து பணியாற்றினார்.

மறைவு

அப்பல்லோ 1 விண்வெளி வீரர்கள்

புளோரிடாவில் கென்னடி விண்வெளி மையத்தில் அப்பல்லோ 1 விண்கலப் பயணத்துக்கான பயிற்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் தனது சகாக்களான வேர்ஜில் கிறிசம், ரொஜர் சஃபி ஆகியோருடன் சேர்த்து கொல்லப்பட்டார்

No comments:

Post a Comment