SRIVIDYA , LEGEND ACTRESS BORN 1953 JULY 24 - OCTOBER 19, 2006.
Srividya,BORN 24 JULY 1953-OCTOBER 19,2006
Srividya, also known as Sreevidya, was an Indian film actress who appeared in films in the Malayalam, Tamil, Telugu, Kannada and Hindi film industries for 40 years. In the latter part of her career, she concentrated on Malayalam films.[1] Her portrayals as a mother in many films were highly acclaimed. In addition to acting, she occasionally worked as a playback singer as well. Srividya's personal life was full of tragedies. In 2006, she died of spine cancer, aged 53.
Early life[edit source]
Srividya was born on 24 July 1953 at Chennai, Tamil Nadu, India to Tamil film comedian Krishnamurthy and Carnatic classical singer M. L. Vasanthakumari. She had a brother, Sankararaman. Her mother tongue is Tamil. Her father had to stop acting in the year when she was born because of a disease which affected his facial muscles. Her family fell into financial crisis. Her mother worked long hours to meet the family's financial needs. Srividya once reportedly said that her mother didn't even have time to breastfeed her. Srividya debuted in acting at a very early age. When her parent's marriage faced problems due to financial difficulties, Srividya's youth was blighted. She got a marriage proposal from a scientist based in the U.S., but the marriage did not materialize due to financial problems faced by her family.[citation needed]
Acting career[edit source]
Srividya launched her career as a child artist in the 1966 Tamil film Thiruvarutchelvar (1966) alongside legendary actor Sivaji Ganesan. Later she entered Malayalam films with a dance scene in Kumara Sambhavam (1969), directed by P.Subramanyan and in Telugu film Tata Manavadu (1972) directed by Dasari Narayana Rao. However, her first major role was that of a college student falling in love with her professor in the 1971 Tamil film Nootrukku Nooru, directed by K. Balachander. Her first film as heroine was Delhi to Madras (1972) in which she was paired opposite Jaishankar. In mid-1970s, she became busy in the Tamil film industry. She acted in films such as Velli Vizha, Sollathaan Ninaikkiren and Apoorva Raagangal, all directed by K. Balachander. She was Rajinikanth's first heroine in Apoorva Raagangal (1975).[2]
She started acting in Malayalam in 1969. Her first movie was Chattambikkavala directed by N.Sankaran Nair, in which she acted as the heroine opposite to Sathyan. She gained public attention in Chenda, directed by A. Vincent. Among the south Indian language movies she acted in, the maximum number of movies was in Malayalam (1969 to 2003) - see full list here[3]
Her role as Amba from the mythological story (adapted film) from the Mahabarath, Amba Ambika Ambalika 1976, has been appreciated. Source : https://www.abcmalayalam.net/1976/3783/amba-ambika-ambalika
Playback singing[edit source]
Srividya was a playback singer as well. She first sang for films in the Tamil film Amaran and then for Malayalam film Ayalathe Sundari.[4] She later sang in several films, such as Oru Painkilikkadha and Nakshathra tharattu.
She was an expert classical vocalist as well. She used to sing in functions such as the Soorya Festival.
Personal life[edit source]
Srividya acted in Apoorva Raagangal opposite Kamal Haasan which virtually changed her life. In the film she acted as lover of Kamal Haasan. She fell in love with Kamal Haasan during the making of the film. They had the support of their families, but they broke up. Their relationship was the inspiration of a Malayalam film Thirakkatha as well, released in 2008.[5]
Later she fell in love with George Thomas, an assistant director in her Malayalam film Teekkanal. She married him on 9 January 1976 despite opposition from her family.[5] As George wished, she was baptised before the marriage. She wanted to stay as a housewife, but had to return to acting, when George forced her to, citing financial issues. She soon realised that she made a wrong decision in marrying him. Her life became miserable and the marriage ended in divorce in 1980. After her divorce she continued acting in movies (mainly Malayalam). During this period she fell in love with film director Bharathan who made many films with her as the female lead. But they couldn't continue the relationship and eventually Bharathan married KPAC Lalitha. The divorce with George Thomas was followed by a prolonged legal battle to settle financial issues between the two. The case went up to the Supreme Court of India, where she won the final decision.[citation needed] After the divorce, she left Chennai and settled in Thiruvananthapuram.[5]
Death[edit source]
In 2003, she underwent a biopsy test following physical problems and was tested positive for breast cancer. She underwent treatment for three years .Two months before her death on October 19, 2006, Ms. Srividya had executed a will and entrusted Mr. Ganesh Kumar, cine actor and MLA, to register a charitable society to ‘start a music and dance school for efficient students who could not get ample opportunities due to lack of money or to give away scholarship to such students to continue their studies and to extend financial assistance to deserving ailing artistes.’
“I am bequeathing all my properties except some payments mentioned elsewhere in this bill. An appropriate body with eminent persons, registered under Charitable Societies Act should be formed and the realised value of all my assets should be transferred as a nucleus fund,” she said in the will entrusting Mr. Ganesh Kumar to register the society.
She had also left Rs 5 lakh each to her brother’s children and Rs One lakh each to her servants in the will, executed on August 17, 2006.. In October 2006, she underwent chemotherapy, but cancer had already spread throughout her body. She died on 19 October 2006.[citation need
நடிகை ஸ்ரீ வித்யா மரணம்
கேன்சர் நோய் வந்தும் உதவி வேண்டாத நடிகை !...
மரணப் படுக்கையிலும் வசதியற்றவர்களுக்கு உயில் எழுதிய உன்னதம் !...
கடைசி ஆசையையும் நிறைவேற்றாத கேரள அரசியல் வாதியின் மெத்தனம் !...
============
திரைப்படத் துறையில் தங்களது அழகிய முகத்தாலும், மந்தகாச மேனியாலும், கொஞ்சும் குரலாலும், குறையில்லாத நடிப்பாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு, கவர்ந்து, தங்கள் வசம் இழுத்துக் கொள்பவர்கள் நடிகைகள். இவை அனைத்தும் ஒன்றாகப் பெற்று கலைத் துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் மிகச் சிலரே. அதில் ஸ்ரீவித்யாவிற்கு அப்படிச் சில பேர்களில் நம் மனதில் தனி இடம் கொடுத்து நிச்சயம் போற்றப்பட வேண்டிய ஒரு சிறந்த நடிகைதான் ஸ்ரீவித்யா.
சகல அம்சங்களுடனும் நம் தமிழ்த்திரை உலகில் மட்டுமில்லாமல் தென்னக திரைஉலகம் முழுமையுமே ஆக்கிரமித்து தன் விஸ்வரூப நடிப்பால் வியாபித்து சகல ரசிகர்களையும் தனக்கென சம்பாதித்து வைத்திருந்த ஸ்ரீவித்யா நாடு தழுவிய பட்டங்களையும் பரிசுகளையும் கூட விட்டு வைக்கவில்லை என்பதும் உண்மை. தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று ””பாரத நாட்டுக் கலைச்செல்வி “”யின் செல்லப் பிள்ளையாகவே வலம் வந்தவர்.
ஆனால் விதியின் வசமான அவரின் 35 வயதைத் தாண்டிய வாழ்க்கை அவரின் முந்தைய குதூகல நிலையிலிருந்து அவரை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது. அமைதியான வாழ்க்கையையும் அழகிய மேனியையும் அற்புதக் குரலையும் சின்னாபின்னப் படுத்தி சீரழித்துச் சிரித்தது. அவரின் அன்பான ரசிகர்களை அழவைத்துப் பார்த்து ரசித்தது.
மேலும் தன் கடுமையான உழைப்பால் சேர்த்த செல்வத்தை தன் காலத்திலேயும், தனக்குப் பின்பாகவும் தன் விருப்பப் படி செலவழிக்க முடியாத அவல நிலையையும் அவருக்கு ஏற்படுத்தியது. குழந்தை மனமும், கொடை உள்ளமும், நடிப்புப் புலமையும், கொண்டு நடிப்பு தேசத்தில் மஹாராணியாக வலம் வந்த அவருக்கு என்ன நேர்ந்தது? அதற்க்கு யார் யார் எதுவெல்லாம் காரணம் என்பது பற்றிய உண்மைகளையும் அதன் பின்னணியை பார்க்கலாம்.!
1970 தொட்டு 2000 வரை சுமார் 30 ஆண்டுகளாக தனது மிகத் துல்லியமான தேர்ந்த நடிப்பாலும், அழகு வதனத்தாலும், பேசும் விழிகளாலும், தென்னகத்திரை உலகையே தன் வசப்படுத்தி ரசிகர்களை மெய் மறக்க வைத்திருந்த நடிகை ஸ்ரீவித்யா, கர்னாடக இசையை தன் தேன் குரலால் உலகம் முழுவதும் பரப்பிய தேவகானக் குயில்
திருமதி எம்.எல்.வசந்தகுமாரிக்கும், பல குரல் வேந்தனாய்த் திகழ்ந்த திரு விகடம் கிருஷ்ன மூர்த்திக்கும் 1953ல் செல்வ மகளாய்ப் பிறந்து. செல்ல மகளாயும் திகழ்ந்தவர்
சென்னையில், மிகப் பிரசித்தமான மைலாப்பூர் பகுதியில் ப்ரம்மாண்டமான தனது இல்லத்தில் வசதியுடன் இளம் பருவ வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பிறந்து வளர்ந்த சமயங்களிலெல்லாம் இவரின் வீட்டைச் சுற்றிலும் ,அதே பகுதியிலும் பிரபலமான கலைஞர்களும், பல முக்கியப் பிரமுகர்களும் வசித்து வந்ததால் இவரின் இளம் பருவம் தொட்டே கலை ஞானமும், அதை ஊக்குவிக்கும் நபர்களின், உறவும் நட்பும் நிறையவே கிடைத்து வந்தன.
நாட்டியப் பேரொளி பத்மினி சகோதரிகள் இவரின் எதிர்வீட்டில் வசித்ததால் எப்போதும் அவரின் தத்துப்பிள்ளை போன்றே வளர்க்கப்பட்டார். 4 தாய்களின் செல்லப்பிள்ளை எண்றும் இவரைக் கூறலாம். {போட்டோ} அப்படியாக அவரின் கலை ஆர்வமும் வளர்க்கப்பட்டது. கபடமற்ற குணமும் நகைச்சுவை உணர்வும் எதையும் தீர்க்கமாய் உணரும் தன்மையும் இவரை சிறு பிராயம் தொட்டே தனித்து சிறப்பாகக் காட்டியது.
வித்தி என்று செல்லமாக அழைக்கப்பட்ட வித்யா தன் பெயருக்குத் தகுந்தார்ப் போன்றே சகல கல்வி கேள்விகளில் சிறந்து அந்தக் கலைமகளான ஸ்ரீவித்யாவைப் போன்றே விளங்கினார். தாய் எம்.எல்.வியோ மனோகரமான இசையால் பொருளீட்டும் தன லட்சுமியாகத் திகழ்ந்தார். நாளொரு கலையும் பொழுதொரு அரவணைப்புமாய் தன் படிப்புக்கும் பாதிப்பில்லாமல் கலைப் பயிற்ச்சியுடன் சிறுமிப் பருவம் கடந்து குமரிப் பருவத்தை எட்டினார் ஸ்ரீவித்யா. தன் தாயின் இசையும். தந்தையின் விகடமும், தனது பரதமும், என்று பாரதம் முழுக்க பிரபலங்களின் பாராட்டுக்களுடன் வலம் வந்தார்கள். {போட்டோ}
இவர் தனது கல்வியில் மெட்ரிக்குலேசன் படிப்பை முடிக்கும் சமயம் சிறப்பான கலைதாகத்தையும் கலா மேதமையையும் கண்ட பலரின் யோசனைப்படி இவர் நாட்டியம் மற்றும் நடிப்புத் துறைக்குள் அடி எடுத்து வைத்தார். சகல கலைகளிலும் பயிற்சியும் தேற்சியும் பெற்று கலைமகளின் திருவருட்ச் செல்வியாகத் திகழ்ந்த இவருக்கு பக்தி இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவருள் செல்வர் என்ற அற்புதப் படைப்பே சிறப்பாக நாட்டியமாடி நடிக்கும் வாய்ப்பை முதல் முதலாக வழங்கியது.
அதன்மூலம் வெற்றி என்ற மூன்றெழுத்தைப் பெற்ற இவருக்கு அடுத்ததாக அமைந்த வாய்ப்போ நடிகர் ரவிச்சந்திரன் செல்வி ஜெயலலிதாவுடனான மூன்றெழுத்து திரைப்படம். பிறகு தொடங்கியது திரைப்படத் துறையிலான இவரது புலிப் பாய்ச்சலான வேகம்.
துவக்க காலத்திலேயே இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் போன்றோரின் மூலமான அற்புத வாய்ப்புகள் நிறையக் கிடைத்ததால் இவரின் திறமையும் பட்டை தீட்டிய வைரமாய் மின்னியது. காலம் செல்லச் செல்ல தென்னக மொழிப் படங்கள் அத்தனையிலுமே இவரின் கலையாதிக்கம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது.
புகழின் உச்சிக்குச் சென்ற ஸ்ரீவித்யா தனக்கென ஒரு துணையைத் தேடும் முயற்சியில் இறங்கினார். அங்குதான் அவரின் கபடமற்ற, எதையும் நல்லதாகவே நம்பும் குழந்தை மனம் அவரை ஏமாற்றி மன வாழ்க்கையில் குப்புறத் தள்ளியது. கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் என்பவரை தான் திருமணம் செய்வதாகவே தீர்மானித்து விட்டதாக தன் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கூறியபோது அவர்கள் அதிர்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும் அவரைப் பார்த்தனர்.
காரணம், ஆச்சாரமான பிரபல இந்துக் குடும்பத்தில் பிறந்துவிட்ட நிலையில் கொஞ்சமும் தொடர்பே இல்லாத ஒரு நபரைத் துணையாகத் தேர்ந்தெடுத்தது எப்படி என்று குழப்பமடைந்து அவரிடம் மறு பரிசீலனை செய்யும் படிக்கேட்க அவரோ தன் முடிவில் மிகத் தீர்மானமாக இருந்துவிட்டார். விதியின் விளையாட்டை வெறும் மனிதர்களா மாற்றிவிட முடியும்?
கடுமையான பல எதிர்ப்புகளை எல்லாம் மீறி நடந்து முடிந்தது இவர்களின் திருமணம் அதுவும் பின் நாளில் இவருக்குப் பல வழிகளில் தொல்லைகளை வழங்கும் வகையான கிறிஸ்டியன் சிரியன் என்ற கிறித்துவ முறைப்படி மும்பையில்.1978ல் நடந்தது. கணவர் ஜார்ஜ் தாமஸ் நடிகர் திலகம் சிவாஜிகனேசன் நடித்த தீபம் உட்பட சில படங்களைத் தயாரித்தவர்.
9 வருட காலம் வரை மட்டுமே போராட்டத்துடன் ஓடிய இவர்களின் தாம்பத்ய வாழ்க்கை ஒரு கட்டத்தில் 1987ல் சோகமான பிரிவில் முடிந்தது. தன் கணவனுக்கு எதனால் தன் மீது காதல் ஏற்ப்பட்டது? ஏன் பிரிந்து செல்ல முடிவெடுத்தார்? ஏன் திருமணத்தை மும்பையில் சிரியன் கத்தோலிக்க முறையில் நடத்தினார்? என்றெல்லாம் பதிலே கிடைக்காத கேள்வியின் நாயகனாக தன் கணவன் அமைந்ததையும் ””இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை தான் திருமணம் என்ற பெயரில் நடத்தி முடித்ததையும் எண்ணி மனம் வாடினார் ஸ்ரீவித்யா. {பாடல்}
இவரின் மண முறிவுக்குப் பிறகு முன்னாள் கணவனுடனான ப்ரச்சனைகள் விச்வரூபம் எடுத்தன. அவற்ரை சமாளிக்க முடியாமல் தனி மனுஷியாய்த் தள்ளாடித் தவித்தார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்களை மாஜிக் கணவரோ தன் பெயருக்கு மாற்றம் செய்யத் துடித்தார். அதற்க்காகப் பல வருடங்கள் கோர்ட்டுக்கு ஸ்ரீவித்யாவை அலைய வைத்தார் ஜார்ஜ். இந்தத் தீராத தொடர் போராட்டத்துக்கு இடையிலும் எண்ணற்ற படங்கள், திறமைக்குச் சவால் விட்ட எதிர்பாராத கதாபாத்திரங்கள், வேறு வேறு மொழிகளில் என்று சுற்றிச் சுழன்று புயலாய் நடிப்பில் சாதித்தார் ஸ்ரீவித்யா. நவரசங்களையும் அருவியாய்க் கொட்டும் அழகிய விழிகள் இவரின் அற்புத நடிப்புக்கு இலக்கணம் வகுத்தன.
புதிய புதிய கதாபாத்திரங்களின் மீதான அதீத மோகமும், வெற்றியும், புகழும் வழங்கிய உற்சாகம் அவரின் களைப்பை உணரவே விடாமல் தொடர்ந்து உழைக்க வைத்தது. அத்துடன் ஜார்ஜை விட்டு விலகிய வித்யா தன் தாய் தந்தையுடன் சென்னை ஸ்ரீராம் நகரில் ஒரு அடுக்கு மாடிக் குடிஇருப்பில் வசிக்கத் தொடங்கினார்.
காலம் விரைந்து ஓடியது. கூடவே இவரின் மீதான காலனின் மறைமுகத் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருந்தன. இதனிடயே 1990 அக்டோபரில் தன் அன்புக்கும் பாசத்துக்கும் வழி காட்டலுக்குமாக இருந்த தன் தாயும் உலகப் புகழ் கர்னாடக இசைப் பாடகியுமான இசைக்குயில் திருமதி எம்.எல்.வசந்தகுமாரியை காலனிடம் பறி கொடுத்தார் வித்யா.
நலமில்லாத தன் தாய்க்கு உடனிருந்தே உதவிய தன் உழைப்பு வீணாகிப் போனது கண்டு மனம் நொந்தார்.
{போட்டோ} தன் திருமணத் தோல்விக்குப் பிறகான மற்றுமொரு சம்மட்டி அடியாக விழுந்தது இந்த இழப்பு நிறைவேறாமல் போன குடும்ப வாழ்க்கையின் சோகத்தை மறக்க மேலும் மேலும் நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் ஸ்ரீவித்யா.
அப்பாவிக் குழந்தை மனம் என்றாலும் துவக்கம் முதலே ஆன்மீக ஈடுபாட்டால் மனம் பக்குவப்பட்டுப் போனதால் இவரை பல படங்கள் பல பண்பட்ட கதாபாத்திரங்கள் மூலம் உச்சாணிக்குக் கொண்டு போயின
ஒரு கட்டத்தில் தன் உடலில் சில சில மாற்றங்கள் ஏற்படுவதையும், அதனால் தனக்கு மிகவும் அசொவ்கரியங்களும், வலியும், சோர்வும். பசியின்மையும் உள்ளதையும் அறிந்து குழப்பமடைந்தார். ஆனாலும் அவற்றுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க விடாமல் விதி தடுத்துவிட்டது.
மிகக் கடுமையான பாதிப்பை உணர வந்த சமயம் மருத்துவர்களைப் பார்த்து பரிசோதித்த போது அவருக்கு வந்துள்ளது புற்றுநோய் என்றும் தற்போது அதன் தீவிரம் மிக எல்லை மீறி விட்டதாகவும் கூறிக் கைவிரித்து விட்டார்கள். சினிமாவில் தான் இதுவரை நடித்திருந்த அத்தனை சோக கதாபாத்திரந்களும் தற்போது தனக்குள்ளேயே குடியிருப்பதாய் உணர்ந்தார்.
அந்நிலையில் தற்போது தனக்கான முக்கிய உறவும் தன்னைப் பற்றி மிக அக்கறை கொள்ளும் ஒரே ஜீவனாயும் இருந்த தந்தை விகடம் கிருஷ்ணமூர்த்தியையும் காலம் கருணையற்று 2001ல் பறித்துக்கொண்டது. சோதனைமேல் சோதனையாக காலம் கொடுத்த சம்மட்டி அடிகளால் கலங்கித் தவித்தார்.
தந்தை அமரர் விகடம் கிருஷ்ணமூர்த்தியின் அளவு கடந்த நகைச்சுவை உணர்வு தன்னிடமும் அப்படியே குடிகொண்டிருந்தாலும், இக்கொடிய நோய் தாக்கிவிட்ட நிலையில் அதுவும்கூட தனது மன நிம்மதிக்கு கைகொடுக்க முடியவில்லை. தனது மரண வேதனையை வேறு யாரும் கண்டுகொள்ளா வண்ணம் தன் மனதுக்குள்ளேயே வைத்துக் கலங்கிக் கண்ணீர் வடித்து துடித்துத் துவண்டார்.
அற்புதமான அழகிய ஓவியத்தை அற்பமான கறையான் மெல்ல மெல்ல அரித்து அலங்கோலப்படுத்தியது போல அவரின் அழகிய மேனி குரூரப் படுத்தப்பட்டு விட்டது. தனது இந்த கோரமான நிலை கண்டு தனது உறவுகளும் மற்றவர்களும் பரிதாபப்படவோ கவலைப்படவோ, உதவவோ எண்ணிவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே அவர் சென்னையை விட்டு தனது நாட்களை கேரளத்தில் கழிக்க முடிவெடுத்தார்.
தனிமையும் ஏகாந்தமும் மட்டுமே தன் நோய் தீர்க்கும் உன்னத மருந்து என்றும் தீர்மானித்தார். இவ்வாறான தனிமையே அவருக்கு தன் வாழ்க்கைக்குப் பிறகான பயனுள்ள செயல்பாடுகள் குறித்து சிந்தித்து செயல்படத் தூண்டின. அதே சமயம் தன் நெருங்கிய உறவுகளற்ற அந்த சூழல் அவருக்கு பல இக்கட்டுகளையும் பின்னால் ஏற்படுத்தியது.
ஒரு சூழ்நிலைக் கைதியின் நிலையையும் அவருக்கு வழங்கியது. பிறகு ஒரு கட்டத்தில் அவரால் ரகசியமாக தன் சுய முடிவின் படி உருவாக்கப்பட்டதாய் கூறப்படுகிறது ஓர் ஒப்பற்ற உயில். அது என்ன சொல்கிறது . பிறகு பார்ப்போம்.
காலங்கள்கடந்தன. அவர் மேனியின் கோலங்களும் மெல்ல, மெல்ல மாறின. பாசத்தைக் கொட்டிக்கொட்டி வளர்த்த பெற்றோரின் இழப்பும் தன்னை முழுமையாய் நேசித்தவர்களின் பிரிவும் அவரை விரக்தியின் உச்சத்துக்கே கொண்டு சென்று விட்டன. தான் வாழ விரும்பிய கணவர் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளுடனான அழகான வாழ்க்கையை. தங்கையாய் காதலியாய் மனைவியாய் தாயாய் அண்ணியாய், பாட்டியாய் என்று ஒரு பெண்ணின் சகல பரினாம வளர்ச்சிகளையும் இவர் தனக்குக் கிடைத்த திரைக் கதாபாத்திரங்களீன் மூலமாக மட்டுமே வாழ்ந்து பார்க்க முடிந்தது.
பிறகு ஒரு கட்டத்தில் உடலும் மனமும் சோர்ந்து வாழ்வே விரக்தி யான சமயத்தில் மீண்டும் தீர்ப்பு மூலம் கிடைத்தது ஸ்ரீவித்யாவுக்கான சொத்துக்கள். தன்னைச் சுற்றிய சில சொந்தங்களும் தன்னை விட்டுப்போய் மணவாழ்வும் பொய்யாகி எல்லாம் சூன்யமான நிலையில் தனக்கச் சொந்தமான திரண்ட சொத்துக்களை என்ன செய்வது என்ற தீவிர யோசனையில் ஆழ்ந்தார் ஸ்ரீவித்யா.
கலைகளின் மீது அளவற்ற தாகம் கொண்டிருந்த தனக்கு அதே துறையில் ஈடுபட்டிருந்த தன் பெற்றோரின் உதவி கிடைத்ததால் மட்டுமே பிரகாசிக்க முடிந்தது என்பதையும், அதற்கான பொருளாதாரம் அவர்கள் மூலமே கிடைத்தது என்பதையும் நன்கு உணர்ந்த ஸ்ரீவித்யா அவ்வாறு வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்டவர்களின் வளமான எதிர்காலம் கருதி ஒரு சிறப்பான முடிவை எடுத்தார்
அதன் படி தனக்கான சொத்து முழுமைக்குமான உயிலை எழுதினார்.அந்த உயிலின் படி பல கோடி ரூபாய் மதிப்புக்கான தனது அசையும் மற்றும் அசையாச்சொத்துக்களையும் தன் வங்கிக் கணக்கில் உள்ள இருப்புத் தொகைகளையும் காட்டி இவைகளில் விற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் விற்று ரொக்கத் தொகையுடன் கூட்டி மொத்தத்தையும் ஒரு ட்ரஸ்ட்டின் மூலமாக வங்கியில் டெபாசிட் செய்யும் படியும்
அந்தத்தொகை பெரும்பாலும் தான் விரும்பியுள்ளபடி இசை மற்றும் நடனம் கற்பிக்கும் பள்ளிகளில் அவற்றில் அதிகத்திறமையும் அதே சமயம் வசதியற்றும் உள்ள மாணவர்களைச் சேர்த்து பயிற்சி அளிக்க வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
2006ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் அவரால் கையொப்பமிடப்பட்டுள்ள இந்த உயிலில் மேற்கூறிய செயல்பாடுகள் அனைத்துமே கேரள மானிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வழுத்தக்கோட்டில் தாகூர் நகரில் வசிக்கும்திரு கே.பி.கணேஷ்குமார் மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கே.பி.கனேஷ் குமார்தான் சில நாட்கள் முன்புவரை கேரளா மானில கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் அமைச்சராகப்பணியாற்றி வந்தவர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
தற்போது தனது மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக ப்ரச்சனையில் ஈடுபட்டு கைகலப்பாகி மீடியாக்களில் பரபரப்பாகிவிட்ட கேரள எம்.எல்.ஏ தான் இந்த கே.பி.கனேஷ் என்பவர்.
சொந்தத் தந்தையையே எதிர்த்து கட்சி நடத்தியவர். தன் தந்தையை ஏமாற்றி குடும்பச் சொத்து அனைத்தயும் பிடுங்கிக் கொண்டவர். தன் பதவிக்காக அடிக்கடி பல கட்சிகள் மாறியவர். சொந்த மனைவியை விட்டு விட்டு தன் மகனின் நண்பனாய் இருந்தவனின் தாயையே சேர்த்துக்கொண்டு குடும்பமும் மும்மாளமுமாய் இருந்து வந்தவர். அதனால் தன் அரசியல் வாழ்க்கயே தற்போது ஆட்டம் கண்டு போய் இருப்பவர்.
இவ்வளவு கபட நோக்கமும் செயல்பாடுகளும் கொண்ட ஒரு நபரை நம்பி எப்படி ஸ்ரீவித்யா அவரது முழுப்பொறுப்பில் இந்த உயில் பொறுப்பை ஒப்படைத்தார், இந்த நிர்ப்பந்தம் அவருக்கு எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது என்பதெல்லால் புரியாத புதிராகவே உள்ளன.
எவ்வளவோ முறைகள் யார் யாரையோ சந்தித்து முறையிட்டும் வேண்டியும் இதுவரை இம்மி அளவும் உயிலின் படியான நடவடிக்கைகள் ஊசி அளவும் நகரவே இல்லை. திரைத்துறை சார்பான தற்போதய தமிழக முதல்வரின் மேலான தலையீட்டால் இந்த மேன்மையான ஸ்ரீவித்யாவின் வாழ்நாள் ஆசை நிறைவேற்றப்பட வேண்டும் என்று வரின் குடும்பத்தார் கண்ணீர் மல்க வேண்டுகின்றார்கள்
மனிதர்கள் பொது வாழ்வில் எப்படிப்பட்ட பிரபலங்களாக இருந்தாலும் அவர்களது தனிப்பட்ட வாழ்வில் கணவன் மனைவி பிள்ளைகள், உடல்நலம், ஆயுள், பொருளாதாரம், போன்றாவையின் அமைப்போ காலத்தால் மிக மிக ரகசியமாகவே தீர்மானிக்கப் படுகின்றன என்பதற்கு ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை ஓர் உதாரணம்.
http://tamizarvaralaru.blogspot.in/2013/04/blog-post_7093.html
No comments:
Post a Comment