WOMAN IN WORLD HISTORY
உலக வரலாற்றில் பெண்களின் நிலை இப்படித்தான் காலங்காலமாக இருந்து வருகிறது.
ஏதோ நான் வேண்டுமென்றே எழுதுவதாக நினைக்க வேண்டாம்.
உலக வரலாற்றில் பெண்கள்
பெண்களை தனிப்பிரிவாக, வேறுபட்டவர்களாக, தாழ்ந்தவர்களாக குறிப்பிட்டதன் மூலம் ஆண்கள், பெண்களை மனித இனத்தின் வரலாற்றில் முதலாவது மற்றும் மிகப்பெரிய ஒதுக்கப்பட்ட பிரிவினராக ஆக்கினர். ஆனால், ஆண்களின் எல்லா விவகாரங்களிலிருந்தும் பெண்களை முற்றாக விலக்குவது அசாத்தியமாகும். வேறு எந்த கீழ்ப்படுத்தப்பட்ட வர்க்கமோ, சாதியோ அல்லது சிறுபான்மையினரோ பெண்களைப் போல் தம்மை ஒடுக்குவோருடன் அவ்வளவு நெருக்கமாக ஒருங்கிணைந்து வாழ வில்லை.
ஆதிக்க கலாசாரத்தின் ஆண்கள் அவர்களைத் தமது இல்லங்களினுள்ளும், சமையலறைகளிலும், படுக்கைகளிலும் அனுமதிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு நெருக்கமாக உள்ளவர்களின் மீது கட்டுப்பாடு செலுத்த வேண்டுமென்றால், பெண்களை இழிநிலைக்குத் தாழ்த்துவதற்கு அவர்களே இணக்கம் தெரிவிக்கும் படி தூண்டுவதன் மூலமாக மட்டுமே செய்ய இயலும். பெண்கள் தாழ்ந்தவர்களாக இல்லாததால், பெண்கள் ஆண்களுக்கு இரண்டாந்தரமானவர்களே என்று விளக்குவதற்கும், வலியுறுத்துவதற்கும் மத, சமூக, உயிரியல் மற்றும் மிகவும் சமீபகாலமாக உளவியல் சித்தாந்தம் ஆகியவை சம்பந்தமான வெளியீடுகளைக் (நூல்களை)கொண்டு தாக்குதல் நடத்தவேண்டியிருந்தது. தாங்கள் தாழ்ந்தவர்கள் என்று பெண்களை நம்பச் செய்வதற்கு இந்தப் போதனை, ஜாக்கிரதையான நாட்டுப்புறக் கதைகள், கேலி செய்யும் கூற்றுக்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் சம்பந்தமான இலக்கியங்களுக்கு பெண்களின் உடம்பைவிட மேலான பொருள் வேறு எதுவாக இருக்கமுடியும்? தன்னம்பிக்கையின், தன்னைப் பற்றிய உணர்வின் அடிப்படையான நிலைக்களத்தை அழிப்பதன் மூலம் பாலியல் பழியையும், உடல்ரீதியான அருவருப்பையும் அவர்கள்மீது சுமத்துவது மூலம் ஆண்கள் பெண்களின் பாதுகாப்பற்ற நிலைமைகளையும், சார்புத்தன்மையையும் உறுதிப்படுத்த முடிந்தது.
ஒவ்வொரு கலாச்சாரத்தின் மிகவும் மந்தமான ஆண் கூட பெண்களின் அறிவாற்றலைப் பற்றிக் கொண்டிருந்த மிக மிகத் தாழ்ந்த அபிப்பிராயம் காலப்போக்கில் சிறிதும் குறைந்ததற்கான அடையாளம் எதுவும் காணப்பட வில்லை. அதற்கு மாறாக, பெண்களுக்கு எதிரான பரவலான பாலியல் தாக்குதல் குறையத் தொடங்கிய போது, பெண்களின் உடல்கள் எவ்வாறு பலவீனமானவை என்று கருதப்பட்டதோ அதுபோன்றே அவர்களது மூளைகளும் பலவீனமானவை என்ற மற்றொரு மோசமான கட்டுக்கதையைத் தோற்றுவித்துப் பரப்பியது. இது புதிய கருத்து ஒன்றுமில்லை. ஏனெனில், பெண்கள் உடல் ரீதியான பாத்திரங்களாக மட்டுமே படைக்கப் பட்டுள்ளனர்... அடைகாக்கும் கருவிக்கு எத்தகைய சிந்தனை சக்தியும் கிடையாது என்ற நம்பிக்கைக்கு உரமூட்டுவதும் அதனுடைய தர்க்கரீதியான பின்முடிவுமேயாகும்.
ஏதோ நான் வேண்டுமென்றே எழுதுவதாக நினைக்க வேண்டாம். உலக வரலாற்றில் பெண்களின் நிலை இப்படித்தான் காலங்காலமாக இருந்து வருகிறது.
No comments:
Post a Comment