Saturday 30 April 2022

HITLER COMMITED SUICIDE ALONG WITH HER WIFE EVA BRAUN

 


HITLER COMMITED SUICIDE ALONG 

WITH HER WIFE  EVA BRAUN




ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்திற்கு பிபிசி அறிவித்தது எப்படி?


1945ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி மாலை. லண்டன் மேற்கில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள ரீடிங் பகுதியில் தன் பணியில் இருந்தார் கார்ல் லேமான்.

பெர்லினை சோவியத் படைகள் சூழ்ந்துவிட, ஜெர்மனி உடனான போரும் அதன் இறுதி நிலைகளை அடைந்தது.24 வயதான கார்ல், ஜெர்மனி அரசின் ரேடியோ ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் அதற்கு தயாராக இருக்குமாறும் ரேடியோவில் கூறப்பட்டது."ஹிட்லர் இறந்துவிட்டார் என்று அறிவித்தபோது புனிதமான இசை இசைக்கப்பட்டது" என்று கார்ல் நினைவு கூர்ந்தார். "ரஷ்ய கம்யூனிச முறையான போல்ஸேவிசத்தை எதிர்த்து ஹிட்லர் போராடி வீழ்ந்தார் என்று சோகமாக அறிவிக்கப்பட்டது" என்கிறார் அவர்.யூதர்களை அதிகளவில் நாஜிக்கள் துன்புறுத்த, அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜெர்மனியில் இருந்து பிரிட்டனுக்கு கார்லும் அவரது சகோதரரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவரது தந்தை ஜெர்மனி நாட்டு யூதராவார்.

"என் வாழ்வை சீரழித்த ஹிட்லரின் மரணச் செய்தியை கேட்டதும் நிம்மதியாக உணர்ந்தேன்" என்று கூறுகிறார் கார்ல்.


இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, பிபிசியின் கண்காணிப்புக் குழுவில் பணிபுரிந்து வந்தார் கார்ல்.ஜெர்மனி மற்றும் அதன் கூட்டாளி நாடுகளில் ஒலிபரப்பப்படும் ரேடியோ நிகழ்வுகளை கேட்டு, மொழிபெயர்த்து பிரிட்டன் அரசாங்கத்திடம் கூறுவதுதான் கண்காணிப்புக் குழுவின் பிரதாக நோக்கம்.

"ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற அறிவிப்பை பிரிட்டனில் முதலில் கேட்டது நாங்கள்தான்" என்று கூறுகிறார் கார்ல்.

"எங்கள் கட்டடத்தில் இருந்த அனைவரும் உற்சாகமடைந்தனர். அது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தோம். ஜெர்மனிக்கு எதிரான போர் முடிவுக்கு வருகிறது என்று அர்த்தம்." ஹிட்லர் உயிரிழந்ததில் சந்தேகம் இல்லை என்றாலும், அவர் தன்னை தானே கொலை செய்து கொண்டார் என்பது பின்புதான் தெரிய வந்தது.

ஏப்ரல் 15 - 16 ஜெர்மன் படைகள் மீது சக்திவாய்ந்த பீரங்கித் தாக்குதலை சோவியத் படைகள் நிகழ்த்தியது.


ஏப்ரல் 21 பெர்லினின் புறநகர் பகுதிகளில் புகுந்த செம்படை, அதனை கைப்பற்றியது.

ஏப்ரல் 27 ஜெர்மனிய ராணுவத்தை வெற்றிகரமாக பிரித்து, எல்பெ நதி அருகே அமெரிக்கா மற்றும் சோவியத் படைகள் சந்தித்துக் கொண்டன.

ஏப்ரல் 29 ஹிட்லரும் ஈவா பிரவுனும், ரைக் சேன்ஸலரி தலைமையகத்தின் அடியில் இருந்த பதுங்கு குழியில் திருமணம் செய்து கொண்டனர்.

ஏப்ரல் 30 ஹிட்லரும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர். பின்பு, அவரது உடல்கள் எரிக்கப்பட்டன.

மே 1 ஹிட்லரின் மரணமடைந்ததாக ஜெர்மன் ரேடியோ அறிவித்தது

மே 7 ஜெர்மனி நிபந்தனையற்று சரணடைந்ததையடுத்து, ஆறு ஆண்டுகளாக ஐரோப்பியாவில் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது.


"அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், ஹிட்லர் உயிரிழந்துவிட்டதாக ஜெர்மனியர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்."ஹிட்லர் இறந்ததாக ஜெர்மனியர்கள் அறிவித்ததை உடனடியாக மொழிபெயர்த்தார் ஜெர்மன் கண்காணிப்புக்குழுவில் இருந்த எர்ன்ஸ்ட் கொம்பிரிஜ்.

"அவர் அதனை சிறு காகிதத்தில் எழுதினார். அவர் செய்த மோசமான விஷயம் அதுதான். ஏனெனில் அவர் கையெழுத்து மிகவும் மோசமாக இருந்ததாக" கூறுகிறார் எர்ன்ஸ்டினுடன் பணி புரிந்தவர்.பின்பு, அரசாங்கத்துக்கு இச்செய்தியை தெரியப்படுத்த லன்டனில் உள்ள கேபினட் அலுவலகத்தை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார் எர்ன்ஸ்ட்.

பிபிசி செய்தி அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்பு இச்செய்தி உலகம் முழுவதும் ஒலிபரப்பப்பட்டது.தற்போது 97 வயதாகும் கார்ல், இச்செய்தியை கேட்ட உலக மக்கள் உற்சாகமடைந்ததாக நினைவு கூர்கிறார்.ஹிட்லர் இறந்தபோது, கவர்ஷம் பார்க்கில் இருந்த பிபிசி கண்காணிப்புக்குழுவில் 1000 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.ஜெர்மன் பிரிவில் இருந்த 40 பேரில், நாஜி துன்புறுத்தலால் தப்பித்து வந்த யூதர்கள், சமதர்மவாதிகள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் பலர் இருந்தனர்.


அவர்கள் அனைவரும் ஹிட்லரின் மரண செய்தியை கேட்டு மகிழ்ந்ததாக கார்ல் தெரிவித்தார்.ஹிட்லரை மொழி பெயர்ப்பது மிகவும் கடினமானது என்கிறார் கார்ல்.

அவர் ஒரு மோசமான எழுத்தாளர். அதனை ஜெர்மன் மொழியில் படித்தால் அவரது உரைகள் ஈர்க்கக்கூடியதாக இருக்காது. ஆனால், அவர் அதனை பேசும் போது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அவர் அவரது பேச்சு திறனை நம்பியிருந்தார்


 வெளிச்சத்திற்கு வந்த ஹிட்லரின் மரண ரகசியம்... 

ஹிட்லரின் பற்களில் செய்த ஆராய்ச்சியால் விலகிய மர்மம்! 

 உலக வரலாற்றில் ஹிட்லருக்கு என்று எப்போதும் முக்கியமான இடம் இருக்கிறது. ஏனெனில் அவரின் சிந்தனைகள் மற்றும் திட்டங்கள் உலகெங்கிலும் கிளர்ச்சிகளையும், போர்களையும் ஏற்படுத்தின. பல போராட்டங்களுக்குப் பிறகு 1945, ஏப்ரல் 30 ஆம் தேதி ஹிட்லர் தனது மரணத்தை தானே தீர்மானத்துக் கொண்டார். ஹிட்லரின் மரணம் உறுதி செய்யப்பட்டதாக இருந்தாலும் அதனைச் சுற்றி பல மர்மங்களும், வதந்திகளும் இன்றுவரை நிலவி வருகிறது. ஹிட்லர் கொலை செய்யப்பட்டதாக, அவர் சிறைபிடிக்கப் பட்டதாக, இறந்தது ஹிட்லரே அல்ல, அவர் நீர்மூழ்கிக் கப்பலில் தப்பித்து விட்டதாக பல கதைகள் கூறப்படுகின்றன. இந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் ஆராய்ச்சி ஒன்று செய்யப்பட்டது. அதன் முடிவுக்ளை இந்த பதிவில் பார்க்கலாம். 


 ஹிட்லரின் மரணம் பிரெஞ்சு விஞ்ஞானிகள் அடால்ஃப் ஹிட்லரின் பற்களின் துண்டுகளை பகுப்பாய்வு செய்து, சயனைடு எடுத்து தலையில் சுட்டுக்கொண்டதால்தான் 1945 இல் அவர் இறந்தார் என்பதை நிரூபித்துள்ளார்கள். சமீபத்தில் ஐரோப்பிய மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, இந்த மாபெரும் சர்வாதிகாரியின் பற்கள் மற்றும் மண்டை ஓட்டின் அறிவியல் பகுப்பாய்வு மூலம் அடோல்ஃப் ஹிட்லரின் மரணம் குறித்த சதி கோட்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர முயல்கிறது. ஹிட்லரின் முடிவுக்கான காரணம் ஏப்ரல் 1945 இன் பிற்பகுதியில், சோவியத் படைகள் பெர்லினில் நுழைந்தபோது, ஹிட்லர் தனது தற்கொலைக்கு திட்டமிட்டார், இதில் எஸ்எஸ் வழங்கிய சயனைட் மாத்திரைகளை அவரது அல்சேஷியன், ப்ளாண்டி மீது சோதிப்பது மற்றும் இறுதி உயில் மற்றும் சாசனத்தை ஆணையிடுவது என்ற முக்கிய முடிவுகளையும் எடுத்தார். 


இரண்டு நாட்களுக்கு முன்பு, முசோலினி இராணுவத்தினரால்சுடப்பட்டார், பின்னர் இத்தாலியின் மிலனில் உள்ள ஒரு புறநகர் சதுக்கத்தில் பஅந்த அனைவரின் முன்னிலையிலும் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டார். இதேபோன்ற நிலை தனக்கு நேருவதை தவிர்க்க முடியாததாகத் ஹிட்லருக்குத் தோன்றியது. ஹிட்லரின் பிணம் 1945 ஏப்ரல் 30 ஆம் தேதி, ஹிட்லர் மற்றும் அவரது புதிய மனைவி ஈவா பிரவுன் ஆகியோரின் உடல்கள் பதுங்கு குழியில் காணப்பட்டன, ஹிட்லரின் தலையில் தோட்டா துளை இருந்தது. ஹிட்லரின் உடல் ரஷ்யப் படையினரால் கைப்பற்றப்பட்டது. 


 மீண்டும் உடற்கூறாய்வு பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ரஷ்யாவின் FSB இரகசிய சேவை மற்றும் ரஷ்ய அரசு காப்பகங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஹிட்லரது மண்டை ஓடு மற்றும் அவரது பற்களை ஆய்வு செய்ய அனுமதி வழங்கின. மண்டை ஓட்டின் இடது பக்கத்தில் ஒரு துளை இருந்தது, அந்த துளை புல்லட் காயத்துடன் ஒத்துப்போனது, விளிம்புகளைச் சுற்றி இருந்த கருப்பு கரியும் இதனை உறுதிசெய்தது. விஞ்ஞானிகள் மண்டையில் இருந்து மாதிரிகள் எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும், ஆய்வில் இவை குறிப்பிட்டது, ஹிட்லரின் மரணத்திற்கு ஒரு வருடம் முன்பு எடுக்கப்பட்ட மண்டை ஓட்டின் ரேடியோகிராஃபிகளுடன் அதன் வடிவம் முற்றிலும் ஒத்துப்போனது. பற்களின் ஆய்வு ஆய்வில் வெளியிடப்பட்ட பற்களின் படங்கள் பெரும்பாலும் உலோகத்தால் செய்யப்பட்ட தாடையைக் காட்டுகின்றன. "அவர் இறக்கும் தருணத்தில்," ஹிட்லருக்கு நான்கு பற்கள் மட்டுமே இருந்தன "என்று அவர்கள் அறிக்கையில் எழுதினர். அடிவாரத்தில் பழுப்பு நிறமாகவும், வெள்ளை டார்ட்டர் வைப்புகளுடன் இருந்துள்ளன. ஹிட்லர் ஒரு சைவ உணவு உண்பவர் என்று அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்ட கூற்றை இந்த பகுப்பாய்வு உறுதிப்படுத்தியது. சயனைடு எடுத்துக்கொண்டாரா? துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு அவர் சயனைடு எடுத்துக்கொண்டாரா என்பதை உறுதியாக நிரூபிக்க முடியவில்லை. அவரது செயற்கை பற்களில் நீல நிற படிவுகள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள், அவரது போலி பற்களுக்கும் சயனைட்டுக்கும் இடையே சில இரசாயன எதிர்வினைகள் இறக்கும் தருணத்தில், அவரது இறுதிச் சடங்கின் போது,​​அல்லது எஞ்சியவை புதைக்கப்பட்ட போது நடந்திருக்கலாம் என்று கூறினார்கள். 


 ஹிட்லர் அந்த பதுங்கு குழியில் இறந்ததும், அவர் தப்பிக்கவில்லை என்பதன் இதன் மூலம் உறுதிசெய்யப்பட்டது. ஆனால் சயனைடு எடுத்துக்கொண்டவர் எதற்கு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார் என்ற கேள்விக்கான பதில் மர்மமாகவே உள்ளது. இரண்டில் எதனால் அவர் இறந்தார் என்பதை உறுதிசெய்வது மேலும் மாதிரிகள் கிடைக்காமல் சாத்தியமில்லை என்று ஆராய்ச்சியாளார்கள் கூறுகிறார்கள்.








No comments:

Post a Comment