ICE RAIN KILLED 92 ,
IN BANGALADESH 1986 APRIL 14
உலகில் அதிக எடையான ஆலங்கட்டி மழை 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி பங்களாதேஷ் நாட்டின் Gopalganj மாவட்டத்தில் பெய்தது. 1 கிலோகிராமிலும் அதிகமான எடையில் பனிக்கட்டியாக பெய்த இந்த மழையின் காரணமாக 92 பேர் மரணமடைந்தனர்
ஆலங்கட்டி மழை (hail) வானத்திலிருந்து விழும் திடநிலைப் பொழிவாகும். பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி என்கிறோம். இவை 5 மற்றும் 200 மில்லி மீட்டர்கள் (0.20 மற்றும் 7.87 அங்குலம்) விட்டமுடையவையாக உள்ளன. வானிலை அறிக்கைகளில் (மெடார்) 5 மிமீ (0.20 அங்குலம்) க்கும் மேலுள்ளவை GR என்றும் சிறிய ஆலங்கட்டிகளும் பனிக்கற்களும் GS என்றும் குறிப்பிடப்படுகின்றன. பெரும்பான்மையான இடிமழைகளில் ஆலங்கட்டிகள் அடங்கியிருக்கும். இது இடி மேகங்களில் உருவாகின்றது. இவ்வாறு உருவாக சூடான காற்று இடி மேகங்களுடன் விரைவாக மேலெழுகையும் குறைந்த உயரத்திலேயே குளிர்விக்கும் தன்மையும் தேவையாகும். இவை அடிக்கடி நிலப்பகுதிகளின் உள்புறங்களில் புவியின் இடைப்பட்ட உயரங்களிலும் வெப்ப மண்டலங்களில் உயர்ந்த உயரங்களிலும் ஏற்படுகின்றன.
வானத்திலிருந்து பனி மழை பெய்வதற்கு "சூடோமோனாஸ் சிரஞ்சி" என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும் என சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன[1] வானிலை செயற்கைக் கோள்களின் மூலமும் வானிலை ரேடார் ஒளிப்படங்களிலிருந்தும் ஆலங்கட்டி மழை வாய்ப்புள்ள மேகங்களை கண்டறியலாம். அளவில் பெரிதான ஆலங்கட்டிகள் மிக விரைவாக கீழே விழுகின்றன. இவற்றின் விரைவு உருகும் தன்மை, காற்றுடன் உரசல், மழையுடனான மற்றும் பிற ஆலங்கட்டிகளுடனான தாக்கம் ஆகியனவற்றால் குறைக்கப்படுகிறது. மனிதர்களுக்கும் சொத்துக்களுக்கும், குறிப்பாக பயிர்வகைகளுக்கு, சேதம் விளைவிக்கின்ற அளவிலான ஆலங்கட்டி மழைக்கான முன்னறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
- மணித்தியாலத்திற்கு 0.10 அங்குலத்திற்கும் குறைவாக பெய்கின்ற மழை இலகு மழைவீழ்ச்சியாகவும், மணித்தியாலத்திற்கு 0.30 அங்குலத்திற்கும் அதிகமாகப் பெய்கின்ற மழை கன மழைவீழ்ச்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றது.
- மழைத்துளிகள் அளவில் வேறுபடுகின்றன. அவை 0.02 அங்குலத்திலிருந்து 0.031 அங்குலம் வரையான விட்ட அளவினைக் கொண்டவையாகும்.
- கன மழைத்துளிகளின் வேகம் மணித்தியாலத்திற்கு 22 மைல்களுக்கும் அதிகமாகும்.
- மழையிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தற்சமயம் பயன்படுத்துகின்ற குடைகள், ஆரம்ப காலங்களில் வெயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கே கண்டுபிடிக்கப்பட்டதாம்.
- உலகில் அதிகளவில் மழைவீழ்ச்சி கிடைக்கின்ற நகரம் இந்தியாவின் சீறாபூஞ்சி ஆகும். இங்கே வருடாந்தம் 26,460 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.
- உலகில் அதிக எடையான ஆலங்கட்டி மழை 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி பங்களாதேஷ் நாட்டின் Gopalganj மாவட்டத்தில் பெய்தது. 1 கிலோகிராமிலும் அதிகமான எடையில் பனிக்கட்டியாக பெய்த இந்த மழையின் காரணமாக 92 பேர் மரணமடைந்தனர்.
- ஐக்கிய அமெரிக்காவின், ஒகியோ மாநில வின்ஸ்பேர்க் நகரில் வருடாந்தம் ஜூலை மாதம் 29ம் திகதி நிச்சயமாக மழை பெய்கின்ற ஒரு நாளாகும். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அதிசயம் நிகழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
- சாதாரண மழையின் அமிலத்தன்மை pH 5.6 ஆகும். இதனைவிடவும் pH மட்டம் குறைவடைகின்றபோது அது அமில மழையாகும். pH மட்டம் 5.5 ஆன மழையானது பக்றீரியாக்களைக் கொல்கின்றது, ஆனால் pH மட்டம் 4.5 ஆன மழையானது பூச்சிகள், மீன்கள், ஈரூடகவாழிகள் ஆகியவற்றினைக் கொல்கின்றது.
- பொட்ஸ்வானா நாட்டின் நாணயம் "Pula" ஆகும். செட்ஸ்வானா மொழியில் "Pula" என்பதன் அர்த்தம் "மழை" என்பதாகும். ஏனெனில் பொட்ஸ்வானா நாட்டில் மழை என்பது மிக அரிதான ஒன்றாகும்.
No comments:
Post a Comment