Tuesday 11 July 2017

WIKI LEAKS - JULIAN PAUL ASSANGE


WIKI LEAKS - JULIAN PAUL ASSANGE




ஜூலியன் பவுல் அசாஞ்சு (Julian Paul Assange, பிறப்பு: 1971) என்பவர் ஆத்திரேலிய ஊடகவியலாளரும்[4], வெளியீட்டாளரும்[5] ஆவார். விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விக்கிலீக்சைத் தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல், கணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார்.

அசாஞ்சு 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தைத் தொடங்கினார். இவர், ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலானா இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதை அடுத்து, உலக அளவில் பெரும் கவனிப்புக்குள்ளானார். இவர், பல நாட்டு அரசுகளின் கண்டனத்துக்குள்ளாகியிருந்த அதே வேளையில், உலக அளவில் மனித உரிமை ஆர்வலரிடையே பிரபலம் பெற்றார். பல ஊடக விருதுகளைப் பெற்றுள்ளார்.


அசாஞ்சு பல நாடுகளில் வசித்து வந்துள்ளார். தாம் எப்போதும் பயணித்தபடியே உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நவம்பர் 2010 இல் சுவீடன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்திப் பன்னாட்டுப் பிடியாணையை பிறப்பித்தது. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை மறுத்த அசாஞ்சு, இது விக்கிக்கசிவுகளினால் பாதிக்கப்பட்டோரால் புனையப்பட்ட வழக்கு என்று கூறினார். 


இருப்பினும் 2010 டிசம்பர் 7ஆம் திகதி இவர் இலண்டனில் போலீசாரிடம் சரணடைந்தபோது கைது செய்யப்பட்டார்[6]. டிசம்பர் 14 ,2010 அன்று இவர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதிலும் இரண்டு நாள் கழித்தே 16 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.[7][8]
என்னை வலை வீசி பிடித்து அழிக்கும் முயற்சியை அமெரிக்க அதிபர் ஒபாமா உடனடியாக கைவிட வேண்டும் என்று விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கூறினார். விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்(41), இணையதளத்தில் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தினார். 


இதனால், அசாஞ்ச் மீது அமெரிக்கா கடும் கோபம் கொண்டது. இதற்கிடையே, சுவீடனில் 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ்ச் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், அசாஞ்ச் கடந்த ஜூன் 19ம் தேதி, லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். அவருக்கு அந்நாடு அரசியல் அடைக்கலம் தந்துள்ளது. இந்நிலையில் அசாஞ்ச் நேற்று தூதரகத்தின் பால்கனியில் இருந்தபடி வெளியில் நின்றிருந்த பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சரியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

என்னை வலை வீசி பிடித்து அழிக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும். விக்கிலீக்ஸ் ஆனாலும் சரி, நியூயார்க் டைம்ஸ் ஆனாலும் சரி. உண்மையான தகவலை வெளியிடும் மீடியா மீது தொடுக்கப்படும் அடக்குமுறையை அமெரிக்கா நிறுத்த வேண்டும். ஈக்வடார் அரசு, அந்நாட்டு மக்கள், நீதிக்காக போராடும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அசாஞ்ச் கூறினார்.
அசாஞ்சை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என சுவீடன் உறுதியளித்தால் இப்பிரச்னையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வு கிடைக்கும் என்று அசாஞ்சுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment